உன்னுள் வசமானேன் …
⚠️ Copyright ©️ 2019 - 2026 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, without express written permission of the admin and the authors.
- legal team, ezhilanbunovels.com
அத்தியாயம் -21
சார்வியின் மனதில் இருப்பதை பற்றி யோசித்து குழம்பியவன் சட்டென்று போனை எடுத்து சம்மந்தப்பட்டவளுக்கே அழைத்தான்.
“சொல்லுங்க தனீஷ், இந்த நேரத்தில் கால் பண்ணியிருக்கீங்க…”
“பிசினஸ் விஷயமா போயிருக்கீங்க, இந்த நேரத்தில் டிஸ்டர்ப் பண்ணியதற்கு சாரி சார்வி…”
“ஹேய் அதெல்லாம் இல்லை, பிசினெஸ் விஷயமா வந்தது என்னவோ உண்மை தான், அதற்கு முன்னால் கொஞ்சம் ஊரை சுற்றி பார்த்துட்டு பிசினெஸ் வேலையை பார்க்கலாம்ன்னு தள்ளி வைச்சிருக்கோம். சரி சொல்லுங்க நேற்று என் ப்ரெண்ட்ஸை சந்திச்சீங்களாம்…”
“ஓ நியூஸ் வந்திருச்சா, ஹ்ம்ம் நேற்று போரடிச்சுதேன்னு பீச்சுக்கு போயிருந்தேன், அப்போ பார்த்தேன் எல்லோரையும். உண்மையில் ஹாப்பியா இருந்தது அவங்களிடம் பேசினது. சரி நீங்க மத்திய பிரதேஷ் தானே போயிருக்கீங்க, அங்கு கஜுராஹோ கோவிலுக்கு விசிட் செய்தீர்களா…”
“ஹ்ம்ம் மார்னிங் அங்கே தான் போனோம். லவ்லி தனீஷ். பார்க்க பார்க்க தெவிட்டலை. நாளைக்கு உஜ்ஜைன் போறோம். சரி நீங்க என்ன விஷயமா போன் செய்தீங்க அதை சொல்லவே இல்லையே…”
சார்வி கேட்டதும் சில நொடிகள் எதிர்முனையில் அமைதி நிலவியது.
“என்னாச்சு தனீஷ், ஏதும் பிரச்சினையா…?
“சேச்சே பிரச்சினை இல்லை, ஆனால் உங்களிடம் கொஞ்சம் பெர்சனலா பேசணும், எப்போ வர்றீங்க சென்னைக்கு…”
“எப்படியும் நாலு நாள் ஆயிடும். என்னிடம் பெர்ஸனலா பேச என்ன இருக்கு தனீஷ்…”
“அதை நேரில் சொல்றேனே, எனக்கு தேவையான சில பதில்கள் உங்களிடம் இருக்கு, அதை தெரிஞ்சிக்க விரும்பறேன்…”
WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright©️ezhilanbunovels.com.
“வாட் என்ன பேசறீங்கன்னு புரியலை, என்ன பதில்கள். கேள்வியே கேட்காமல் நேரடியா பதிலை தேடறீங்களே தனீஷ். ஸ்ட்ரேஞ்…”
“இருக்கலாம், எனக்கு என்ன பதில்கள் தேவையாக இருக்கும்ன்னு உங்களுக்கே தெரியும் பொழுது இதில் ஸ்ட்ரேஞ் என்ன இருக்கு. யோசிங்க, உங்களுக்கே புரியும். குட் நைட், ஸ்வீட் ட்ரீம்ஸ் …” என்று அமர்த்தலாக சொல்லிவிட்டு தொடர்பை துண்டிக்க சார்வி அதிர்ந்து போனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
‘என்ன பதில்களை எதிர்பார்க்கறார், ஒருவேளை நான் அவரை நேசிக்கிறது தெரிஞ்சு போச்சா. ஆனால் அனுஷா என் மனதை அவரிடம் சொல்லலைன்னு சொன்னாளே என்று யோசிக்கும் பொழுதே தனீஷ் அப்படி எதுவும் சொல்லவில்லையே என்றும் தோன்றியது. பின் ஏன் என்னிடம் இப்படி சொன்னார். ஒரு வேளை ஆரம்பத்திலிருந்து யோசித்து பார்த்திருப்பாரோ. ஆனால் அப்பொழுது கூட நான் காதல் என்ற வார்த்தையை எங்கேயும் உபயோகிக்கலையே. பார்க்கலாம் எப்படியிருந்தாலும் சென்னைக்கு திரும்பியபிறகு தான் சந்தித்து கேட்பார். அப்போ பார்த்துக்கலாம் என்று முடிவெடுத்த பிறகு மனதின் படபடப்பு அடங்கியது.
கட்டிலில் படுத்து விழிகளை மூட கஜுராஹோ கோவிலில் தனீஷுடன் கைகளை கோர்த்துக்கொண்டு சுற்றுவது போல கனவு வர திடுக்கிட்டு விழித்துக்கொண்டாள். கைபேசியில் நேரத்தை பார்க்க மணி நடுநிசி ஒன்றாகியிருந்தது. நெற்றியில் ஏசியையும் மீறி முத்து முத்தாக வியர்த்தியிருந்தது.
‘சே என்ன கனவு இது, மதியம் அவருடன் இந்த கோவிலில் சுற்றினால் எப்படி இருக்கும் என்று நினைத்ததால் அது கனவிலும் பிரதிபலித்து விட்டதா’
தண்ணீரை குடித்துவிட்டு மீண்டும் படுத்துக்கொள்ள, சில நொடிகள் அவளின் நினைவை தனீஷ் தான் ஆக்ரமித்துக்கொண்டிருந்தான். அவனை பற்றி நினைப்பது சுகமாக இருக்க, அப்படியே உறங்கிப்போனாள். விடியற்காலையிலே எழுந்து ரெடியாகி தந்தையுடன் விமானம் மூலமாக கஜுராஹோவிலிருந்து உஜ்ஜைன் தேவி அஹில்யாபாய் ஹோல்கர் இன்டெர்னஷனல் விமான நிலையத்தில் இறங்கி அங்கிருந்து கேப் மூலம் சதி தேவியின் ஷக்தி பீடத்திற்கு சென்றார்கள்.
மாதாவை வழிபட்டுவிட்டு அங்கிருந்த கோபுரத்தில் விளக்கேற்றிவிட்டு கோவிலை சுற்றி பார்த்துவிட்டு சில நொடிகள் அங்கு அமர்ந்துவிட்டு, அங்கிருந்து ஸ்ரீ மஹாகாளேஸ்வரர் கோவிலுக்கு புறப்பட்டனர். கோவிலுனுள் நுழையும் பொழுதே எதிரே பாண்ட் பாக்கெட்டில் கையை விட்டுக்கொண்டு சிரித்தபடி நின்றிருந்த தனீஷை கண்டு ஒரு நொடி இனிமையாக அதிர்ந்தாள்.
அடுத்த நொடி தலையை குலுக்கி சிரித்தபடி நகர எத்தனிக்க, அந்த உருவம் அவளின் கையை பிடித்து நிறுத்தியது. சார்வி மீண்டும் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள் உறக்கத்திலிருந்து. இம்முறையும் தான் கண்டது கனவு என்று புரிய வர தனீஷ் தன் மனதை எந்தளவு நிறைத்துக்கொண்டிருக்கிறான் புரிந்தது.
மீண்டும் தண்ணீரை குடித்துவிட்டு நேரத்தை பார்க்க மணி ஐந்து ஆகியிருந்தது. இந்த நேரத்தில் கண்ட கனவு பலிக்குமென்று சொல்வார்களே. ஆனால் தனீஷ் எப்படி உஜ்ஜைன் வர முடியும். ப்ச் கனவு என்றைக்கு பலிச்சிருக்கு. எல்லாம் கட்டு கதை. மனதில் அவரை பற்றியே நினைச்சிக்கிட்டிருப்பதால் கனவில் வர்றார். மற்றபடி கனவில் கண்டதெல்லாம் நிஜத்தில் நடப்பது சாத்தியமில்லாதது.
தலையை குலுக்கிக்கொண்டு, குளித்துவிட்டு ரெடியாகி தன் உடமைகளை பேக் செய்துக்கொண்டு கீழே இறங்கி வர, ஷரத்தும் தன் ரூமிலிருந்து வெளிப்பட்டார். ட்ரைவர் அவர்களின் பெட்டிகளை வண்டியில் ஏற்ற, இருவரும் ஏறி அமர்ந்ததும் வண்டி உஜ்ஜைன் நோக்கி பறந்தது.
“பிளைட்ல டிக்கெட் புக் பண்ணியிருக்கலாம் டாட், காரில் போனால் நீண்ட நேரம் பயணம் செய்யணுமே…”
“கஜுராஹோவில் ஏர்போர்ட் இருக்கு, ஆனால் உஜ்ஜைன்க்கு பிளைட் இல்லை. ஏதோ காரணத்தால் நிறுத்தி வைச்சிருக்காங்க தற்சமயம். ட்ரெயின் இருக்கு, பட் அது நமக்கு வசதியா இருக்காது. காரில் போவதே மேல். கொஞ்சம் நேரம் தூங்கு, உஜ்ஜைன் வந்ததும் எழுந்திரு…”என்றவர் கடையில் வாங்கிய நியூஸ் பேப்பரில் ஆழ்ந்துவிட சார்வி தந்தையின் தோளிலே சாய்ந்து விழிகளை மூடிக்கொண்டாள்.
விழிகளை மூடினாளே தவிர உறக்கமே அவளை தழுவவில்லை. மனது பூராவும் தனீஷின் நினைவுகளில் சுகமாக மூழ்கி களித்துக்கொண்டிருந்தது. அவன் மனதில் தானிருக்கிறோம் என்றதே சந்தோஷமாக இருந்தது. அதுவும் தனீஷ் பெர்சனலாக பேசணும் என்று சொன்னதே தேகத்தை புல்லரிக்க வைத்தது. என்னிடம் பெர்சனலாக பேச என்ன விஷயம் இருக்கும் என்பது அவளுள் ஒரு கெஸ் இருந்தது, ஒரு வேளை என்னை நேசிக்கிறாயா என்று தனீஷ் கேட்டுவிட்டால் என்ன பதில் சொல்வது ஆமாம் என்றா இல்லை என்றா.
ஆமாம் என்றால் சந்தோஷப்படுவாரா இல்லை என்றால் ஏமாந்துவிடுவாரா. இதை எப்படி புரிந்துக்கொள்வது. டாட் சொன்ன மாதிரி நான் முந்திரிக்கொட்டை மாதிரி பதில் சொல்லாமல் அவர் மனதில் என்ன இருக்குன்னு தெரிஞ்சிக்கிட்டு பதில் சொல்வது தான் சரியாக இருக்கும். ஒரு வேளை அவர் மனதில் நானிருந்தால் நிச்சயம் அவரால் அதை மறைத்து வைக்க முடியாது. நானில்லை என்றால் என்னிடம் இவ்வளவு தூரம் பேச வேண்டிய அவசியமுமில்லை.
நான் ஏன் இத்தனை குழப்பிக்கிறேன், அனுவிடம் சொன்னால் அவள் ஏதாவது ஐடியா கொடுப்பாளே என்றெண்ணியவள் தந்தையின் தோளிலிருந்து எழுந்து தன் கைபேசியை எடுத்தது அதில் அனுவிற்கு குறுந்செய்தி அனுப்பினாள்.
“என்னடா கண்ணா தூக்கம் வரலையா, எது என் செல்லத்தோட மூளையை தின்னுது…?
“ப்ச் நத்திங் சீரியஸ் டாட், நேற்று நைட் தனீஷ் போன் செய்திருந்தார், என்னிடம் பெர்சனலா பேசணும்ன்னு சொன்னார்…”
“என்னடா சொல்றே…?
“எஸ் டாட், என்னிடம் பெர்சனலாக பேச என்ன இருக்கும், ஒரு வேளை நான் நேசிக்கிறது அவருக்கு தெரிஞ்சு போச்சான்னு கொஞ்சம் பதட்டமா இருக்கு. அது மட்டுமில்லை என்னிடம் அதை பற்றி கேட்டால் அதாவது அவரிடம் நான் கலாட்டா செய்தது, ஹோட்டலில் அவரை பார்த்தது பற்றி கேட்டு அதற்கு என்ன அர்த்தம்ன்னு கேட்டால் என்ன பதில் சொல்றதுன்னு தெரியலை. அதான் அனுவுக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன் ஐடியா கேட்டு …”
“அடடா என் செல்லத்துக்கு எதுக்கு இப்படி ஒரு பதட்டம். தனீஷ் புத்திசாலி தான் போல. இதுவரைக்கும் யோசிக்காம இருந்தவர் இப்போ உன்னை பற்றி யோசிக்க ஆரம்பிச்சி கிட்டத்தட்ட நெருங்கிட்டாரே. ஹ்ம்ம் நான் ஏற்கனவே சொன்னது தான். எந்த சூழ்நிலையிலும் நாம் பதட்டப்பட கூடாது. நல்ல விஷயமோ, கெட்ட விஷயமோ எப்பொழுதுமே எதிராளியை பேச விட்டு அதிலிருந்தே நமக்கு தேவையான பாயிண்ட்ஸை எடுத்து பதிலாக கொடுக்கணும். அது தான் புத்திசாலித்தனம்.
உன் மனதில் தனீஷ் இருந்தாலும், அவர் மனதில் நீ இருக்கியான்னு முதலில் தெரிஞ்சிக்கணும். அதற்கு அவரை பேச விடு. அவர் மனதில் நீ இருந்தால் அதை அவரே ப்ரோபோஸ் பண்ணுவார். அதன் பிறகு நீ உன் பதிலை சொல். இப்படி இருந்தால் தான் எந்த சூழ்நிலையிலும் உங்களுக்குள் கருத்து வேறுபாடு வராது…”
“எப்படி டாட் இவ்வளவு ஆணித்தரமான சொல்றீங்க ….”
“சிம்பிள், ஒருத்தனுக்கு காதல் வருதுன்னு வைச்சிக்கோ, அவன் தனக்கு பிடித்த பெண்ணிடம் மனதை சொல்லும் பொழுது அவள் செய்த தவறுகளை பெரிதாக எடுத்துக்க மாட்டான், அவள் செய்த தவறுகளை சாதகமாக பார்ப்பான். ஆனால் அதே பெண்ணிடம் அவனுக்கு இருந்த காதல் போயிடிச்சு என்றால் எதையெல்லாம் சாதகமாக, சுலபமாக எடுத்துகிட்டானோ அதையெல்லாம் சந்தேக கண்ணோடு பார்க்க ஆரம்பிப்பான். அப்பொழுதே நான் நினைச்சேன் இப்படி தான் இருக்கும்ன்னு, நான் தான் முட்டாள் யோசிக்காமல் விட்டுட்டேன்னு சொல்ல ஆரம்பிப்பான்.
அதற்கு தான் சொல்றேன், இதுவே தனீஷ் யாரையும் காதலிக்காமல் நேரடியாக உன்னிடம் காதலை சொல்ல வந்தால் அப்பொழுது உன் மனதில் காதல் இருந்தாலும் நீயும் வெளியில் சொல்லலாம். ஆனால் பிரேக் அப் ஆன ஒருத்தனிடம் தட் மீன்ஸ் உன் சார்பாக அவன் முன்னாள் காதலி சண்டை போட்டுக்கொண்டு பிரிந்த பிறகு நீ அவனை காதலனாக அடையும் பொழுது சில சிக்கல்கள் நம்மையும் அறியாமல் ஏற்படும். சோ எதுவாக இருந்தாலும் தனீஷ் காதலை முதலில் சொல்லட்டும், அதன் பிறகு உன் முடிவை சொல்…” என்று முடிக்க சார்வி தந்தையின் கன்னத்தை கிள்ளி முத்தமிட்டாள் சந்தோஷத்துடன்.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
“அச்சோ டாட் நான் கூட அப்படி தான் நினைச்சேன், ஆனாலும் உள்ளுக்குள் சின்ன பயம். ரியலி ஐ ம் ரிலாக்ஸ் நவ், தேங்க் யூ டாட்…”என்றவள் தந்தையின் தோளில் சாய்ந்துக்கொண்டாள் நிம்மதியாக.
உஜ்ஜையனை அடையவே மதியம் ஒரு மணி ஆகிவிட மகா காளேஸ்வரர் கோவிலுக்குள் அனுமதி இல்லை என்பதால் நேரடியாக ரிசர்வ் செய்த வீட்டுக்கு சென்று சாப்பிட்டுவிட்டு ரெஸ்ட் எடுத்துவிட்டு மாலை சதி தேவி ஷக்தி பீடத்துக்கு சென்றார்கள். கனவில் வந்த மாதிரி இல்லாமல் நிதர்சனத்தில் வேறு மாதிரி நடக்க சார்விக்கு தன்னை நினைத்தே சிரிப்பாக இருந்தது. சோ கனவு என்றுமே பலிக்காது.
கோவிலுக்கு சென்று மாதாதேவியை வணங்கிவிட்டு அங்கிருந்த தீப கோபுரத்தில் தீபத்தை ஏற்றிவிட்டு சற்று நேரம் அமர்ந்துவிட்டு வீட்டுக்கு திரும்பினார்கள். அடுத்த நாள் காலை ஆறுமணிக்கே எழுந்து ரெடியாக ஆரம்பித்தாள். பதினோரு மணிக்குள் ஆர்த்தி நேரமும், கோவில் நேரமும் முடிந்துவிடும். மகாகாளேஸ்வரர் கோவிலின் டிரஸ் கோட் ட்ரடிஷனலாக இருக்கவேண்டும் என்று முதல் நாள் தந்தை சொல்லிவிட்டதால் தனக்கு புடவையையும், தந்தைக்கு வேட்டி சட்டையை ரெடி செய்து வைத்து விட்டிருந்தாள். புடவையை நேர்த்தியாக அணிந்து கூந்தலை தழைய பின்னி, முதல் நாள் கோவிலில் வாங்கி வைத்த பூவை வைத்துக்கொண்டு வர ஷரத்திற்கு மகளை கண்டதும் மனது நிறைந்து போனது.
‘ஓம் நமசிவாய, உன் சன்னதியில் காலை வைக்கும் சமயம் என் மகளின் பிரச்சினைகளையும், கவலைகளையும் நீக்கி அவளுக்கொரு நல்லது நடக்க அருள் புரியப்பா…’ என்று மனதில் வேண்டிக்கொண்டார்.
“ஓ டாட் செமையா இருக்கீங்க, உங்களை முதன் முதலில் வேட்டியில் பார்க்கிறேன்…”
“சரிடாம்மா கோவிலுக்கு போகலாமா, போனை சைலென்டில் போட்டுடுடா …” என்றவர் மகளை அழைத்துக்கொண்டு கிளம்பினார்.
கோவில் பக்கத்திலேயே வீட்டை எடுத்திருந்ததனால் விடியற்காலை இளங்காற்றில் கோவிலுக்கு நடந்து செல்வது மனதிற்கு இதமாக இருந்தது.
கோவிலுனுள் நுழையும் பொழுதே பெரிய சைஸ் விநாயகர் நர்த்தன கோலத்தில் காட்சியளிக்க ஆச்சர்யத்தில் விழிகள் விரிந்தது சார்விக்கு.
“வாவ் டாட் செம அழகு விநாயகர். இந்த மாதிரி விநாயகர் நம் வீட்டில் வாங்கி வைக்கணும், இதே மாதிரி விநாயகரின் விதவிதமான சிலைகளை சேகரிக்கணும். பார்க்கவே கொள்ளை அழகா இருக்கு…”
“அதுக்கென்ன கலெக்ட் பண்ணிட்டா போச்சு. இதுக்கே பிரமிச்சு போய்ட்டா எப்படி, இன்னும் உள்ளே போய் பார், நிறைய சிவன் சிலைகள் விதவிதமா இருக்கும். கிட்டத்தட்ட ஒரு கைலாய மலை போல இருக்கும். இங்கு சன்னதியில் சிவன் ஜோதிர்லிங்கமா காட்சியளிக்கிறார். கோவாவில் கூட இப்படி லிங்கத்தில் முகம் வரைந்து கும்பிடுவாங்க. வந்து பார் கண்கொள்ளா காட்சியாக இருக்கும், லெட்ஸ் கோ…” என்றவர் மகளின் தோளை அணைத்தபடி அழைத்துச் சென்றார்.
தந்தை சொன்ன மாதிரியே எங்கேயும் பெரிய பெரிய சிவன் சிலைகள், முனிவர்களின் சிலைகள், அரக்கர்களை அழிக்கும் சிவன் சிலைகள் என்று பார்க்க தெவிட்டாத காட்சிகளாக நிறைந்திருந்தது. சந்நதிக்கு சென்று ஜோதிர்லிங்க வடிவாக இருந்த சிவனை கண்குளிர தரிசித்து தன் வேண்டுதலை வைத்துவிட்டு வெளியே வந்து ஒவ்வொரு இடமாக நிதானமாக சுற்றிப்பார்த்தார்கள்.
“சூப்பரா இருக்கு டாட், எப்படி இத்தனை வருஷம் இந்த கோவில்களை நான் மிஸ் செய்தேன். உங்களை அலட்சியம் செய்த மாதிரியே கடவுள்களையும் அலட்சியம் செய்துட்டேனோ. நான் ரொம்ப மோசமானவளா டாட்…”
மகளின் கேள்விக்கு அவளின் கூந்தலை வருடிக்கொடுத்தார்.
“என்ன கண்ணா பேசறே, எல்லாவற்றிக்கும் ஒரு நேரம் வரணும்டா, திருப்பதிக்கு போகணும்ன்னா அந்த ஏழுமலையான் மனசு வைக்கணும். அது போல தான் ஒவ்வொரு கோவிலுக்கும். நீ இன்றைக்கு வந்து சிவனை தரிசிக்கணும்ன்னு இருக்கு. அதான் வந்திருக்கே. அதுக்கேண்டா உன்னையே நீ அக்யூஸ் செய்துக்கிறே.
சரிடா நான் இங்கே உட்கார்ந்து ரெஸ்ட் எடுக்கிறேன், நீ கோவிலை சுற்றி பார்த்துட்டு வா…”என்றவர் அங்கிருந்த படிக்கட்டில் அமர்ந்துக்கொள்ள சார்வி புடவை முந்தானையை தோள்வழியாக போர்த்தியபடி கோவிலை சுற்றிவர ஆரம்பித்தாள்.
ஒவ்வொரு சிவன் சிலையையும் நின்று நிதானமாக ரசித்துக்கொண்டிருக்க,”ஹலோ மேடம்…”என்று யாரோ அழைத்தார்கள்.
தன்னை யாரோ அழைக்கவும் கவனம் கலைந்து திரும்பி பார்த்துவிட்டு மீண்டும் சிவன் சிலை பக்கம் விழிகளை திருப்ப இனிதாக அதிர்ந்தாள் புன்னகையுடன் நின்றிருந்த தனீஷை கண்டு. ஒரு நொடி வார்த்தை வராமல் தடுமாற, அவனையே ஆச்சர்யமாக பார்த்துக்கொண்டிருந்தவள் முன் சொடக்கு போட்டான்.
அதற்குள் தன்னை சுதாரித்துக்கொண்டவள்,”வாட் எ சர்ப்ரைஸ், எப்படி வந்தீங்க தனீஷ், நான் இங்கே தான் இருக்கேன்னு உங்களுக்கு எப்படி தெரியும்…?
சார்வி இனிதாக படபடக்க, புன்னகை முகம் மாறாமலே கைகளை கட்டிக்கொண்டு நின்றிருந்தான் அவள் கேட்டு முடிக்கமட்டுமென்று.
“நீங்க தானே நேற்று சொன்னீங்க உஜ்ஜைன் போறதா, எப்படியும் இந்த கோயிலை பார்க்க வருவீங்கன்னு கெஸ் செய்து இங்கே வந்து காத்திருந்தேன். தட்ஸ் இட்…”
“ஓ, ஒரு வேளை இந்த கோவிலுக்கு நாங்க வரலைன்னா என்ன செய்வீங்க, அப்படியே காத்திருந்துட்டு கிளம்பியிருப்பீங்களா…? என்றாள் கேலியாக.
அவளின் கேலிக்கு சிரித்துவிட்டு,”சார் எங்கே, நீங்க மட்டும் இருக்கீங்க…?
“டாட் ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கார், நான் கோவிலை சுற்றி பார்க்கலாம்ன்னு வந்தேன். அதுசரி இவ்வளவு தூரம் என்னை தேடி வர வேண்டிய அவசியமென்ன தனீஷ். இல்லை சிவனை தரிசிக்க வந்தீங்களா…?
“ஹ்ம்ம் இரண்டும்ன்னு வைச்சிக்கங்களேன், என் எதிர்கால லைஃபை பார்த்துட்டு அப்படியே சிவனிடம் வேண்டுதலையும் வைச்சிட்டு போகலாம்ன்னு வந்தேன்…”
“பார்டன்…”
“உண்மையிலே புரியலையா…? என்றான் அவளை ஆழ நோக்கி.
தனீஷின் பார்வை அவளின் இதயத்தை குளிர வைத்தாலும் தந்தையின் அறிவுரை அவளின் புத்தியை அடக்கி நிதானம் கொள்ள வைத்தது.
“எதிர்பாராமல் வந்து தரிசனம் தரீங்க, என்னவோ எதிர்கால லைப் , வேண்டுதல்ன்னு சொல்றீங்க, போதத்திற்கு உண்மையிலே புரியலையான்னு கேட்கறீங்க. சாரி தனீஷ் நீங்க என்ன பேசறீங்க, எதைப்பற்றி பேசறீங்கன்னு கூட தெரியலை. கொஞ்சம் தெளிவா சொல்லுங்களேன். அதற்கு முன்னால் நீங்க எப்போ ஊரிலிருந்து கிளம்பினீங்க, பிகாஸ் என்னிடம் நேற்று நீங்க பேசும் பொழுது இரவு பத்துமணி. அதற்குள் எப்படி இங்கே வந்து நிற்கறீங்க…?
சார்வி சற்றும் பதட்டப்படாமல், மிகவும் நிதானமாக ஒவ்வொரு கேள்வியை கேட்கவும் தனீஷின் இதழ்களில் புன்னகை ஊறியது.
“நான் எப்படி வந்தேன், எத்தனை மணிக்கு வந்தேன் என்ற ஆராய்ச்சியெல்லாம் அப்புறம் செய்துக்கலாம். இப்போ நான் நேற்று கேட்ட கேள்விக்கு வர்றேன். நம்முடைய முதல் சந்திப்பு எதிர்பாரா ஒன்று, ஆனால் இரண்டாம் சந்திப்பு நீங்களாக ஏற்படுத்திக்கொண்டது. அது ஏனென்று தெரிஞ்சிக்கலாமா, அதே போல ஹோட்டலுக்கு என்னை பாலோ பண்ணி வந்தீங்கன்னு லாரா சொன்னாள். இதற்கெல்லாம் அர்த்தம் என்ன சார்வி. இதிலிருந்து நான் புரிந்துக்கொண்ட பதிலாக இருந்தால் நிச்சயம் சந்தோஷப்படுவேன்…”என்றான் ஓர் எதிர்பார்ப்புடன்.
இதை ஏற்கனவே எதிர்பார்த்திருந்ததால் தந்தையின் உபதேசத்தின் படி மனதை அடக்கி கவனத்துடன் பேச ஆரம்பித்தாள்.
“சாரி நீங்க என்ன எதிர்பார்த்து கேட்கறீங்கன்னு எனக்கு புரியலை. ஹாஸ்பிடலில் வந்து கலாட்டா செய்ததற்கு காரணம் முதல் நாள் நீங்க என் ஈகோவை டச் பண்ணிட்டு போனீங்க. அதற்கு உங்களை திருப்பி கலாய்க்கணும்ன்னு தோணுச்சு. அந்த நிமிஷத்திற்கு தோணியதை செய்தோம். அதன் பிறகு நீதுவின் பியான்சி க்ராண்ட் சோலாவில் அவளுக்கு அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்திருந்தார். அதற்கு வந்திருந்தோம். அப்போ நீங்க அங்கு லாராவோட வந்தீங்க சிம்பிள். இதுக்கு என்ன அர்த்தம் இருக்க போகுது. உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைச்சிடுச்சா, இதை கேட்கவா இவ்வளவு தூரம் வந்தீங்க. சோ வியர்ட் தனீஷ் …”
“மே பீ வியர்டா கூட இருக்கலாம். ஆனால் இந்த நிமிஷம் நான் உங்க முன்னால் நிற்பது விநோதமா இல்லை. இது என் ப்ராமிஸ், என் வாழ்க்கையை நான் இழந்துட கூடாதுன்னு நினைச்சி பல கிலோமீட்டர் பயணித்து வந்திருக்கேன். எஸ் சார்வி யூ ஆர் மை பார் எவர் லவ், யு ஆர் மை சன்ஷைன் ஆன் எ ரெய்னி டே…”
தனீஷ் அவன் மனதை வெளிப்படையாக கூற, சார்வியின் பல நாள் கனவு பலிக்கவும் எப்படி சந்தோஷத்தை வெளிப்படுத்துவது என்று தெரியாமல் இனிதாக உறைந்து நின்றாள்.
அவளின் கையை பிடித்து, புறங்கையில் அவன் இதழ்களை பதித்து,”இப் யூ பீல் கன்னெக்ட்டேட் எமோஷனல் வித் மீ அக்செப்ட் மை லவ், ஐ ம் வைய்ட்டிங் பார் யூ…” என்றவன் அவளை மேலிருந்து கீழாக பார்வையால் வருடிவிட்டு, “யூ லுக் ஸ்பிளெண்டிட்..”என்று கண்சிமிட்டிவிட்டு, பை …”என்று விடைபெற்று சென்றுவிட சார்வி பனிசிற்பமாக உறைந்து நின்றாள்.
