• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

நான் பெண்ணியவாதியல்ல.. - மனோஜா

பெமினிசம் என்ற வார்த்தையில் தான் எத்தனை பிரச்சினைகள்? பெண்கள் பிடித்த உடைகள் போட்டால் பெண்ணியவாதி, சுயமாக சிந்தித்து நடந்தால் பெண்ணியவாதி..அது இது என ஒவ்வொன்றுக்கும் பெண்ணியவாதி என்ற கேட்கமாலே பட்டம் கொடுப்பார்கள்.

நான் முதுகலை அரசு கல்லூரியில் படிக்கும் போது ஒரு பெண் பேராசிரியர் இருந்தார். அவர் என்றால் பல மாணவிகளுக்கு கொள்ளைப் பிரியம். அன்பான ஆசிரியை. சொல்லப்போனால் பலர் அவரை அம்மா என்று பிரியத்துடன் அழைப்பார்கள். எனக்கும் மிகவும் பிடித்தவர். மாணவிகளின் நலத்துக்காக ஆதரவு கொடுப்பவர். தமிழ் இலக்கியம் என்பதால் காதல் , திருமணம் என்பது பொதுவாகப் பேசப்படும் விஷயங்கள்.

என்னோடு படித்தவர்களில் திருமணமானவர்கள் சிலர் இருந்தனர். பலர் திருமணமாகதவர்கள். காதலில் இருப்பவர்கள், என்னைப் போன்று முரட்டு சிங்கில்ஸ்ம் இப்படி சிலரும் இருந்தனர்.

ஒரு நாள் இப்படித்தான் திருமணம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அந்த ஆசிரியர்

“கல்யாணம் ஆனால் புருஷன் எப்ப கூப்பிட்டாலும் போகனும். பெமினிசம் பேசிட்டு இருக்க கூடாது. இல்லைனா நம்மள விட்டு வேற ஒருத்தியை தேடிட்டுப் போயிடுவான்.”

இதைக் கேட்டதும் எனக்குத் தலை முதல் கால் வரை அதிர்ந்தது. அவர் வாயிலிருந்து இப்படி ஒரு வார்த்தையை நான் எதிர்பார்க்கவில்லை.

எனக்கு பக்கத்தில் இருக்கும் தோழி ஒருவர் “இவங்க
சொல்றத கேளு. அந்த ஸ்டேஜை தாண்டி போயிடாத.” என்றார். இதற்கு அர்த்தம் நீ பெண்ணியம் பேசலாம். ஆனால் இதுதான் வாழ்க்கையோட எதார்த்தம். ரொம்ப யோசிக்காத. கல்யாணம் செய்த பிறகு அதை யோசிக்கக் கூடாது.

அந்த ஆசிரியை எவ்வளவு எனக்கு பிடித்தமானவராக இருந்தாலும் இந்த விஷயம் மனதில் இன்னும் நெருஞ்சி முள்ளாக உறுத்திக் கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் அவர் கலெக்டரை விட அதிக சம்பளம் வாங்கும் ஆசிரியர்.

“பெண்களுக்கு கன்செண்ட் என்ற ஒன்று கிடையாதா? நீ வெற்றிகரமாக திருமணத்தை எடுத்துச் செல்ல வேண்டுமெனில் கணவன் என்ன சொல்கிறானோ அதை மறுக்காமல் செய். உன் வாழ்வு அப்போதுதான் சிறக்கும் என்ற கற்பிதத்தை எப்படி புகுத்துகிறார்கள்.

நான் இளங்கலை படித்தது வேறு ஒரு கல்லூரி. அந்த கல்லூரி மாணவர்களுக்கு என்று ‘கன்பெசன்’ பக்கம் சமூக வலைதளத்தில் இருக்கிறது. அதில் ஒரு பெண் கூறியிருந்தார்.

“என்னுடைய அப்பா என் விருப்பத்தை மீறி எதுவும் செய்ய மாட்டார். ஆனால் என் அம்மா என்று வருகையில் அவர் வேறு மாதிரி. என் அம்மா என்னிடம் சொல்லி அழுவார். எனக்குப் பிடிக்கவில்லை என்றாலும் உன்னோட அப்பா தொடுவார். மேரிட்டல் ரேப் என்பதை அவர் பல வருடங்கள் தாங்கி வாழ்ந்து வந்திருக்கிறார். என் அம்மாவை அவர் நடத்துவது பிடிக்கவில்லை.”

இந்த கன்பெசனுக்கு நிறைய ஆசாமிகள் “உன்னோட பெத்தவங்க வாழ்க்கையில் கருத்து சொல்லக் கூடாது. “ என்று அமோகமாக ஆதரவு அளித்தனர்.

பல கணவன்களுக்கு மனைவி என்பவள் தன்னுடைய வீட்டுத் தேவைகள், உடல் தேவைகளை கவனிக்கும் மற்றும் கோபத்தை குறைக்க உதவும் பஞ்சிங்க் பேக்குகள் இப்படித்தான் பயன்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

என்னைப் பொறுத்தவரையில் பெண்களை மனிதர்களாக நடந்துங்கள். அவர்களும் ஆண்களைப் போல் உணர்வும் உயிரும் கொண்ட ஜீவன்கள். மரத்திற்கே உணர்வு இருக்கும் போது மனித இனமான பெண்களுக்கு இருக்காதா? எல்லா உயிரும் சமம்தானே. பெண் என்பதால் எல்லாவற்றிருக்கும் தலையாட்ட வேண்டும் என்பதில் எனக்கு உடன் பாடில்லை. எந்த ஒரு உறவுமே ஒருவர் தன் துணை மீது வைக்கும் அன்பிலும் , மரியாதையிலும் நன்றாக நீடித்து வளரும். தன் துணையின் கருத்துகளை, தேவைகளை மதிக்காத எந்த உறவும் நீடிப்பது கடினம். நோ மீன்ஸ் நோ என்பதை ஆண்களும் உணர வேண்டும்.

நான் பெண்ணியவாதியல்ல...என் உரிமைகளைக் கேட்கும் மனித இனத்தில் ஒருவர். மைன்ட் வாய்ஸ்- நான் ஒரு ஏலியன்...

( பேக்ட் -மரபணு அறிவியல் படி பெண் உயிரினம் தான் முதலில் தோன்றியது. அதிலிருந்து பிரிந்த ஜீனின் மரபணு மாற்றத்தால் தோன்றியது ஆண். இனிமேல் தொடை கால் விலா எலும்புனு கதை விட்டா வம்பாதீங்க..நீ பையன் மாதிரி நடந்துக்கறனு சொன்னால் பையன் தான் என்னை மாதிரி நடக்குறாங்கனு சொல்லுங்க..)

இப்படிக்கு வம்புடன்
மனோஜா...
 

Attachments

  • eiHDEYM43219.jpg
    eiHDEYM43219.jpg
    220.8 KB · Views: 78

Nithya Mariappan

✍️
Writer
குடும்ப வாழ்க்கைய பொறுத்தவரைக்கும் ஃபெமினிசம்ங்கிறது கெட்ட வார்த்தை மாதிரினு நிறைய ஆண்கள் நினைக்குறாங்கம்மா... அது என்னவோ திருமணம் முடிஞ்சிட்டாலே நம்மளை ட்ரான்ஸ்பர் ஆப் ப்ராப்பர்டி மாதிரி அவங்களுக்குத் தாரை வார்த்த நினைப்பு... முதல்ல பெண்கள் தங்களோட உரிமைக்காக கொஞ்சமாச்சும் வாய திறந்து பேசணும்... பொம்மை மாதிரி ஒரு வாழ்க்கைய வாழுறதுக்கு உரிமைக்காக பேசி திமிரு பிடிச்சவனு பேர் வாங்குறது பெட்டர்...
 

New Episodes Thread

Top Bottom