வெண்தாமரைப் பதி மெல்லியலே

அத்தியாயம் – ஏழு

ரவி பாரதி தன் போனில் மாதங்கி டான்ஸ் ஸ்கூல் மேனேஜரிடம் பேசுவதும், பின் சுற்றிப் பார்ப்பத்தையும் கண்டவனுக்கு மிகுந்தக் கோபம் வந்தது. மேனேஜரிடம் ஃபோன் செய்ய டயல் செய்த போது, சூர்யா வாட்ச்மேனிடம் விசாரிப்பதுத் திரையில் தெரிய, கவனமாகப் பார்த்தான்.

நேராக மேனேஜர், மாதங்கி இருவரும் இருக்குமிடத்திற்கு செல்வதும், மாதங்கியோடுப் பேசுவதையும் கண்டு, சிறு எரிச்சலோடு அதைப் பார்த்தான். அவர்கள் பேசியது என்ன என்று தெரியாவிட்டாலும், முடிவில் சூர்யா போனை வாங்கிப் பார்த்ததைக் கண்டு சிறு  நிம்மதி அடைந்தான்.

அத்தோடு மாதங்கிக் கிளம்பவும் ரவியும் இதைப் பற்றி மேற்கொண்டு சூர்யாவிடம் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை. ஆனால் அவன் மனதில் மாதங்கி வந்து சென்றதன் பின்னணி என்னவாக இருக்கும் என்ற சிந்தனை ஓடிக் கொண்டே இருந்தது.

மாதங்கிக்கோ இன்னும் சற்று நேரம் பேசியிருந்தால், டான்ஸ் ஸ்கூல் மேனேஜரிடம் சில விஷயங்கள் கிடைத்து இருக்குமே. சூர்யாவின் வரவினால் அது தடைப்பட்டு விட்டதே என்று தோன்றியது. அலுவலகத்தில் எடிட்டர் வேறு ஆர்டிகிள் பற்றிக் கேட்டுக் கொண்டே இருந்தார்.

மாதங்கி தனக்கு உறுதியாகத் தெரியாத விஷயத்தை எழுதக் கூடாது என்பதில் தீர்மானமாக இருந்தாள். பின் மிகவும் யோசித்து, அந்த டான்ஸ் புரோகிராம், அதை நடத்தும் பள்ளி, அதில் கலந்துக் கொண்ட பிரபலங்கள் , அவர்களின் அபிப்ராயங்கள் எல்லாம் சேர்த்து ஒரு ஆர்டிகிள் எழுதி, எடிட்டருக்கு மெயில் செய்தாள்.

அதைத் தவிர யாருக்கும் தெரியாமல் அவள் வேறு ஒரு வேலையும் செய்து இருந்தாள்.

ஆனால் யாருக்குத் தெரியக் கூடாதோ அவனுக்குத் தெரியும் என்பதோடு, அவன் அனுமதியில் தான் இவள் ரகசியமாக செய்த வேலையும் நடந்து இருக்கிறது என்பதை மாதங்கி தான் அறியவில்லை.

இரண்டு மணி நேரம் கழித்து, எடிட்டர் அவளை அழைக்க அவர் அறைக்குச் சென்றாள்.

“என்ன மாதங்கி இது? அந்த ஸ்கூல் நடத்துற ரவிபாரதி வைரல் ஆகணும்ன்னு தானே உங்கக் கிட்டே சொன்னேன். இப்போ நீங்க எழுதி இருக்கிற ஆர்டிகிள் அவங்க ஸ்கூலுக்கு விளம்பரம் கொடுக்கிற மாதிரி இருக்கு?’

“உங்களுக்கு என்ன மாதிரி வைரல் ஆகணும்?”

“அங்கே நீங்க என்னப் பார்த்தீங்க?”

“திருநங்கைகள் டான்ஸ் புரோகிராம் பண்ணினாங்க”

“எஸ். அதையே கேள்வியாக் கேட்டு ஆர்டிகிள் எழுதி இருக்கலாமே? “

“எப்படி?”

“அந்த ஸ்கூல் நடத்துகிறவருக்கு இதில் என்ன மோடிவ் இருக்கு? அவர்களை வைத்து வேறு எதுவும் இல்லீகல் வேலைகள் செய்யரறா ? இந்த மாதிரி எழுதினால் தான் வைரல் ஆகும்”

“சர், வைரல்னா நெகட்டிவ் ஸைட் மட்டும் கிடையாது. பாசிட்டிவ் விஷயங்களும் வைரல் தான் ஆகும். நீங்க என்கிட்ட அதைத் தெளிவா சொல்லலை. அதோட தேவையில்லாமல் எதுக்கு நெகட்டிவ் வைரல் கொடுக்கணும்?”

“அது பத்திரிகை இஷ்டம். எங்களுக்கு எப்படி வேணுமோ அப்படித் தான் உங்க ரிவ்யுஸ் இருக்கணும்”

“அப்படி ஒரு வேலை இதுவரை நான் செய்தது இல்லை. அது எனக்குத் தேவையும் இல்லை. ”

“மாதங்கி , நாங்க சொல்றத செய்யறதுக்குத் தான் உங்களுக்குச் சம்பளம் கொடுக்கிறோம். உங்க இஷ்டப்படி நடந்துக்கிறதுக்கு இல்லை”

“ட்ரூ சர். அதுக்காக என் மனசுக்கு ஒத்துவராத வேலை செய்ய என்னால் முடியாது”

“இதில் என்ன இருக்கு? அப்படித் தான் நடக்குதுன்னு உறுதியா எழுத சொல்லலை. சந்தேகமா எழுதுங்க. இதுதான் வைரல் ஆகும். உறுதிப்படுத்தப் பட்ட விஷயம்னா அது ரிப்போர்ட் ஆகி, அடுத்தப் பிராசஸ்க்குப் போயிடும். “

“இதனால் நம்ம பத்திரிகைக்கு என்ன லாபம்?”

“சர்குலேஷன் ஜாஸ்தி ஆகும்? அதை விளம்பரத்திலே போட்டா நமக்கு ஸ்பான்ஸர் கிடைப்பாங்க “

“நீங்க சொன்ன மாதிரி இல்லாமலே இதைச் செய்ய முடியும்?”

“எப்படி?

“கடைசி வரிகளில் என்ன எழுதி இருக்கேன்னுப் பாருங்க”

எடிட்டர் மீண்டும் அந்த வரிகளை வாசித்தார்.

“இது வைரல் ஆகும்ன்னு நினைக்கரீங்களா ?”

“எஸ் சர்.”

“எப்படிச் சொல்றீங்க?”

“கடைசியில் நான் முடித்து இருக்கிற கேள்வியால், மற்ற மீடியா அதை மிஸ்டர் ரவி பாரதிக் கிட்டேக் கேள்வியாக கேட்பாங்க. அப்போ அவர் கோபப்படாமல் நிதானமாப் பதில் சொன்னால் ஓகே. ஆனால் நான் பார்த்த வரைக்கும் அதை அவங்க கொஞ்சம் கோபமாத் தான் ஹாண்டில் பண்ணுவாங்க. அதுவே வைரல் ஆகிடும்”

மாதங்கிக்கு இப்படிச் செய்வதில் இஷ்டம் இல்லை தான். ஆனால் இரட்டையர்களின் மீடியா மீதான வெறுப்பு அவளைச் சீண்டியது என்று கூறலாம். அப்படிச் சீண்டுவதால் பழைய சம்பவங்கள் கிளரப் பட்டு உண்மை வெளி வர வாய்ப்பாக இருக்கும் என்றும் எண்ணினாள். ஆனால் இதை நேரடியாகக் கூறினால் இரட்டையர்களும் ஒத்துக் கொள்ளப் போவதில்லை. அதே சமயம் இவர்கள் எடிட்டரும் அதைத் தடுக்கத் தான் பார்ப்பார் என்றே தோன்றியது.

அரை குறை மனதோடுதான் இந்த ஆர்டிகிள் அப்ரூவ் செய்து பிரிண்டிங் செக்ஷனுக்கு அனுப்பி வைத்தார் எடிட்டர். மாதங்கியும் ப்ரூஃப் ரீடிங், பிரிண்டிங் எல்லாவற்றிலும் இணைந்து தன் கட்டுரை வெளி வருவதை எதிர்பார்த்துக் காத்து இருந்தாள்.

ஒரு வாரம் சென்று இருக்க, அன்றைய அவர்கள் வார இதழில் “பிரபல நடன இயக்குனர் ரவி பாரதி நடத்தும் நடனப் பள்ளியின் துணிச்சலான முயற்சி “ என்ற தலைப்பில் அவளின் கட்டுரை வெளிவந்து இருந்தது.

இந்தக் கட்டுரைக்கு இரட்டையர்களின் பதிலை எதிர்பார்த்து மாதங்கிக் காத்து இருக்க, பாரதியின் வீட்டிலோ பூகம்பம் வெடிக்கத் தயாராக இருந்தது.

அனுராதா தலையில் கை வைத்து இருக்க , சூர்யாவின் முகமோ கோபத்தில் இறுகி இருந்தது.  அவ்வீட்டின் தலைவர் ராமநாதனோ இங்கும் அங்கும் நடை பயின்று கொண்டிருந்தார். அவரின் நடையிலே அவரின் கோபம் தெரிந்தது.

அனுராதா, சூர்யா இருவரும் அமர்ந்து இருந்த சோபா எதிரில், டீபாய் மேல் கிடந்த மேகஸினில் அட்டைப் படம் பாரதி நாட்டியப் பள்ளியின் முகப்புப் பக்கம் போட்டோ போடப்பட்டு இருந்தது. அதற்கே அப்பாவும் , பிள்ளையும்  காலையில் இருந்து வீட்டின் ஹாலை அளந்து கொண்டு இருக்கின்றனர். 

அனுராதா இவர்களைப் பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. தன் இன்னொரு மகனைப் பற்றியே அவரின் கவலை இருந்தது. அவன் கண்ணில் இந்த பத்திரிகைப் பட்டால் , அவனின் கோபம் எந்த அளவிற்கு இருக்கும் என்று தெரியாது.

இங்கே இருக்கும் இருவரையும் ஒரு வார்த்தையில் அடக்கி விடுவார் அனுராதா.  ஆனால் அவரின் வார்த்தைக்கும் அடங்காதவன் அவன்.

இவர்கள் மூவரின் யாரின் வரவிற்காக காத்து இருந்தார்களோ , அவன் வெளியில் இருந்து வீட்டிற்குள் வந்தான். மூவரின் முகங்களைக் கண்டு, என்ன என்பது போல பார்க்க, அவனிடத்தில் காட்டக் கூடாது என்று நினைத்தாலும், அனுராதாவின் பார்வை மேகஸின் பக்கம் சென்று விட்டது.

அவரின் பார்வையைத்  தொடர்ந்தவன் பத்திரிகையைப் பார்த்தவன்,

“என்ன விஷயம் ? “ என்று சூர்யாவைக் கேட்டான்.

“அது நீ சொன்ன மாதிரி அந்த ரிப்போர்ட்டர் என்னை ஏமாத்திட்டாங்க ? போட்டோஸ் எல்லாம் டெலீட் பண்ணியும், இன்னிக்கு இஷ்யுலே நம்ம டான்ஸ் ஸ்கூல் போட்டோ வந்துருக்கு. ரொம்ப சாரிடா. நான் கேர்லெஸ்சா இருந்துட்டேன்”

“டேய், வெறும் கவர் பேஜ் பார்த்துட்டுத் தான் ஆளுக்கு ஒரு பக்கம் மூஞ்சை வச்சுட்டு இருக்கீங்களா? உள்ளே ஆர்டிகிள் படிக்கலையா ?”

மூவரும் அவன் ரியாக்சன் பார்த்து திகைத்தனர். இதற்கு முன் இப்படிப் பத்திரிகையில் சில முறை வந்த போது அவன் குதித்த குதி என்ன? இப்போது இப்படி இருப்பதன் காரணம் புரியாமல் குழம்பினார்.

சூர்யா முதலில் சுதாரித்தவன் “ உனக்கு இந்த நியூஸ் ஏற்கனவே தெரியுமா?” என்று கேட்டான்.

‘எஸ். தெரியும்”

“அப்போ அன்னிக்கு அந்தப் பொண்ணை அப்படிக் கத்தின?”

“அன்னிக்கு அவ நோக்கம் நோட்டம் விடறது. அதனால் அதை முறியடித்து அனுப்பி விடச் சொன்னேன்”

“இப்போ மட்டும் ?”

“என் பெர்சனல் தெரிஞ்சுக்க விரும்பினா விரட்டி விட்டுருப்பேன். நம்ம ஸ்கூல் பற்றி தெரிஞ்சுக்க நினைச்சாங்க , அதற்கு ஒத்துழைப்புக் கொடுத்தேன்.”

“அப்போ நீ அவங்களுக்கு இன்டர்வியூ கொடுத்து இருக்கியா?”

“நான் இல்லை. நம்ம ஸ்கூல் ஸ்டூடண்ட்ஸ்.” என மூவரும் அவனை ஆச்சரியமாகப் பார்த்தனர்.

சூர்யா கேள்வியோடுப் பார்க்க, ரவி

“நம்ம ஸ்கூல் ஸ்டூடண்ட்ஸ் சிலர் கிட்டே சின்ன சின்னக் கேள்விகள் கேட்டுப் பதில் வாங்கியிருக்காங்க. அது எனக்கு முன்னாடியேத் தெரியும்” என்றான்.

“நீ எப்படி அலோவ் பண்ணின?”

“அவங்க பேரண்ட்ஸ் கிட்டேப் பேசியிருக்காங்க. அவங்க தங்கள் பிள்ளைகளுக்கு பெருமை சேர்க்கும் விஷயம்னு என்கிட்டக் கேட்டாங்க. இதில் நான் மறுக்க முடியாதே. அதனால் என்னைப் பற்றி எதுவும் சொல்ல வேண்டாம். மற்றபடி உங்கள் விருப்பம். பிள்ளைகள் போட்டோஸ் போடக் கூடாதுனு மட்டும் சொல்லி வைத்தேன்”

“இவ்ளோ நடந்து இருக்கு. நீ ஏன் எங்கக் கிட்டே சொல்லலை?”

ரவி அவனைக் கூர்ந்துப் பார்த்து “நீ மட்டும் அவங்க நம்ம ஸ்கூலுக்கே வந்து நோட்டம் விட்டதைச் சொன்னயா?” எனக் கேட்க,

சூர்யா “அது எப்படி உனக்குத் தெரியும்? “ எனப் பதற்றதுடன் கேட்டான்.

“உன் போனில் ஸ்டோர் ஆகும் அதே சிசி டிவிக் காட்சிகள் என் போனிலும் ஸ்டோர் ஆகும் அதை மறந்துட்டப் போல்”

“சாரி. நீ தேவையில்லாமல் டென்ஷன் ஆக வேண்டாம்ன்னு தான் சொல்லலை. அதோட அங்கே போட்டோஸ் எதுவும் எடுக்கலை. அதனால் தான் நான் அப்படியே விட்டுட்டேன்”

“மாதங்கி அப்படியே விடக் கூடியவங்களா இருக்கலாம். ஆனால் அவள் வேலைப் பார்க்கிற பத்திரிகை எடிட்டர் விட்டுடுவார்ன்னு எப்படி நினைச்ச? “

“ம். நான் அதை யோசிக்காமல் இல்லை. ஆனால் மாதங்கிக் கொஞ்சம் வித்தியாசமானவங்கன்னு நினைச்சேன்” என்று உரையாடல் ரவி, சூர்யாவிற்கு இடையே மட்டும் இருக்க, ராமநாதன்

“இங்கே என்ன நடக்குதுன்னு ரெண்டு பேரும் சொல்றீங்களா?” என்று அழுத்தத்துடன் கேட்டார். ராமநாதன் சற்று முன் கோபி தான். ரவிக்கும் அவருக்கும் ஒத்து வராது தான். ஆனால் நேருக்கு நேர் கோபமாகப் பேசிக் கொள்ள மாட்டார்கள். பெரும்பாலும் அனுராதா மூலம் தான் அவரின் கோபம் தெரியவரும். அதற்கான பதில் சூர்யா மூலம் அவருக்குக் கூறப்படும். மற்றபடி சேர்ந்து உணவருந்தும் போது மற்ற சமயங்களில்  எல்லாம் சாதாரணமாகவே இருப்பார். இது போன்று அழுத்தமாகக் கேட்டால் மூவருமே நேரடியாகப் பதில் கூறி விடுவார்கள்.

அவர் கேள்வியில் இருவரும் ஒருவரையொருவர் பார்த்து விட்டு, மாதங்கி பற்றி சொல்லி முடித்தார்கள்.

“ரவி, மீண்டும் தேவையில்லாமல் எந்த காஸிப்பிலும் மாட்டிக் கொள்ளாதே. அது எல்லோரையும் மிகவும் அழுத்தும்.  பார்த்துக் கொள் “ என்றவர், தன் மனைவியைப் பார்க்க , அனுராதா வேகமாக

“அப்படி எல்லாம் ஒன்றும் நடக்காது. இது முன்னாடி நடந்தப் பிரச்சினைப் போல் இல்லை. “ என்று கூறினார்.

“அப்படி இருந்தால் சரிதான்” என்றவர் தன் அறைக்குச் செல்ல, மூவரும் ஹாலில் அமர்ந்தார்கள்.

சூர்யா அந்த பத்திரிகை எடுத்துக் கட்டுரையைப் படித்துக் கொண்டிருந்தவன், கடைசியில் “அடக் கடவுளே. இது வாலுப் போச்சு. கத்தி வந்தக் கதையாக விட்டதே” எனவும் , ரவி வேகமாக அதை வாங்கிப் பார்த்தவன்,

“இவளை  என்ன செய்வது “ என்று வாய்க்குள் முனகினான்.

-தொடரும் –