Nenjil Therikuthu Panithuli -18

அத்தியாயம் -18

அடுத்த நாள் காலையில் விஷயம் தெரிந்து விஷால் பதறியடித்து ஹாஸ்பிடலுக்கு வர ரித்திகாவின் முகம் உறக்கமின்மையால் விழிகள் சிவந்து, உள்வாங்கி முகமே ஓவென்றிருந்தது. ஊரிலிருந்து வந்ததும் ரெஸ்ட் எடுக்காமல் நரேஷின் இறப்பிற்கு போய்விட்டு, அதனை பிறகு பீச் போயிட்டு வந்தது, அதையும் தாண்டி பொட்டு உறக்கமில்லாமல் இரவெல்லாம் ஹாஸ்பிடல் வராண்டாவில் மனஉளைச்சலோடு அமர்ந்திருந்து, ஜெட்லாக் எல்லாம் சேர்ந்து அவளை மிகவும் களைப்படைய வைத்திருந்தது. 

“குழந்தைக்கு உடம்பு சரியில்லைன்னு தெரிஞ்சதும் எனக்கு போன் பண்றதுக்கு என்ன ? நீ மட்டும் தனியா இரவெல்லாம் இங்கே அல்லாடிட்டு இருந்திருக்கே. அப்படி என்ன பிடிவாதம் உனக்கு… ? என்று பிலுபிலுவென்று பிடித்துக்கொண்டான் விஷால்.

அவனை சமாதானப்படுத்த முயன்று தோற்றுபோனவள்,”ஹரே பாபா நான் செய்தது தவறு தான், இனி இப்படி நடக்காது போதுமா. நேற்று விட இப்போ ஓகே அனாயாவுக்கு. ரெண்டு நாள் அப்செர்வேஷனில் இருக்கணும்னு சொல்லி இருக்காங்க…”

அவளை முறைத்துவிட்டு, வார்டின் உள்ளே சென்று அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்த குழந்தையின் பட்டு சிகையை அன்புடன் வருடி அவள் நெற்றியில் தன் இதழ்களை பதித்து சில நொடிகள் அவளின் அழகு முகத்தையே பார்த்துக்கொண்டிருந்துவிட்டு வெளியே வந்தான். 

“சரி நீ வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுத்திட்டு வா, நான் இங்கே இருக்கேன்…” என்றான் கட்டளையாக. 

“இல்லை விஷால்…”என்று மறுத்து பேச வாயெடுத்தவள் அவனின் விஷ்வமுத்திரர் பார்வைக்கு பேச வந்ததை அப்படியே அடக்கிக்கொன்சு சம்மதமாக தலையை உருட்டினாள். 

அவளை அனுப்பிவிட்டு மீண்டும் குழந்தையின் அருகில் அமர்ந்தவன் நிவேதாவுக்கு குறுஞ்செய்தி அனுப்பினான். 

ரித்திகா வீடு வந்து சேரும் முன்னரே நிவேதா வெளியே காத்திருந்தாள். அவளை பார்த்ததும் ரித்திகாவின் முகம் மலர, நிவேதாவின் முகமோ நேர்மையான உணர்வில் இருந்தது. 

அவளின் முகபாவனையே சொல்லியது விஷால் விஷயத்தை சொல்லியிருக்கிறான் என. அமைதியாக வீட்டின் கதவை திறந்து உள்ளே செல்ல நிவேதா பின்தொடர்ந்தாள். 

“உன் மனசில் என்னதாண்டி நினைச்சுக்கிட்டு இருக்கே, உனக்கு யாருமில்லைன்னு நினைச்சுக்கிட்டு தனியாகவே எல்லாத்தையும் செய்யறதா இருந்தால் எங்களை விட்ரு. இனிமே நாங்க யாரோ, நீ யாரோ. நான் எல்லோரிடமும் சொல்லிடறேன்…”என்று கோபத்தோடு வெளியே செல்ல முற்பட ரித்திகா அவளின் கையை பிடித்து நிறுத்தினாள். 

“சாரி, சாரி ,சாரி உங்களை தொல்லை செய்ய கூடாதுன்னு நினைச்சது தப்பு தான், கன்னத்தில் போட்டுக்கவா. இனி ஒரு முறை இப்படியெல்லாம் செய்யமாட்டேன். சரி வா நான் காஃபீ போடறேன், உட்கார்…”என்றவளை முறைத்தாள் மற்றவள். 

“நீ ஒரு ஆணியையும் புடுங்க வேண்டாம், முதலில் போய் குளி. நான் காஃபீ போடறேன்…”என்று சமையலறையை நோக்கி சென்றவளை நிறுத்தினாள்.

“ஆமாம் உனக்கு காஃபீயெல்லாம் போட தெரியுமா ? பார்த்தும்மா என் மேலே இருக்கிற கோபத்தில் சர்க்கரைக்கு பதில் உப்பை அல்லி போட்டுட்டு போறே…” என்றாள் நமுட்டு சிரிப்புடன். 

அவளுக்கு உதட்டை இழுத்து இளித்து காட்டிவிட்டு,”உன் காமெடிக்கு நாளைக்கு சிரிக்கிறேன், இப்போ நான் போகட்டுமா… ? என்றவள் விடு விடுவென்று சமயலறைக்குள் சென்றாள்.

“ஆத்தாடி மேடம் செம சூடா இருக்காங்க …” என்று சிரித்தபடி தன்னறைக்கு சென்று குளிக்க சென்றாள்.

துண்டை எடுத்துக்கொண்டு ஷவரின் அடியில் நின்றவளுக்கு சில்லென்ற தண்ணீர் சுகமாய் அவள் தலை வழியாக தேகத்தில் இறங்க இதமாக விழி மூட, முதல் நாளிரவு பாக்கியம் ஆன்ட்டியை சந்தித்த ஆனந்த அதிர்ச்சி அவளுள் மிச்சமிருந்தது. 

“ஆன்ட்டி நீங்களா ? நான் ரித்திகா. என்னை ஞாபகமில்லையா உங்களுக்கு… ? 

“ஹ்ம்ம் இப்போ நினைவு வந்துடிச்சி. கார்த்திக்கின் காலேஜ் ஜூனியர் தானே நீ, வீட்டுக்கு கூட வந்திருக்கே. முகம் ஞாபமிருக்கு, ஆனால் பெயர் தான் மறந்து போய்டிச்சி. அது சரி இந்நேரத்தில் நீ என்ன இங்கே இருக்கே ? என்றவர் அங்கிருந்த பீடியாட்ரிக் வார்டு போர்டை பார்த்துவிட்டு அவளிடம் திரும்பினார். 

“இது குழந்தைகள் வார்டாச்சே, உன் குழந்தைக்கு உடம்பு ஏதும் சரியில்லையா ? என்றார் பதட்டத்துடன். 

“ஆமாம்மா திடீர்னு வைரல் பீவர் வந்துடிச்சி, சரி நீங்க என்ன இந்நேரத்தில். வீட்டில் யாருக்கும் உடம்பு சுகமில்லையா…? பதிலுக்கு விசாரித்தாள்.

“வேற யாருக்கும் இல்லை, எனக்கே தான். திடீர்னு மயங்கிட்டேன், ட்ரிப்ஸ் ஏற்றி இப்போ உன்னிடம் பேசிட்டு இருக்கேன். அங்கிள் பணம் கட்டிட்டு வர போயிருக்கார். நீ சொல்லு நீ மட்டும் இங்கே தனியா இருக்கே ? குழந்தை இருக்குன்னா உன் கணவர் எங்கே ? என்றபடி அவள் கழுத்தை ஆராய்ந்தார். 

அதில் தாலி என்ற வஸ்து இல்லை என்றதும் அதை பற்றி விசாரிக்காமல்,”ஏன் திடீர்னு வைரல் பீவர் ? டாக்டரிடம் விசாரிச்சியா என்ன காரணம்ன்னு… ? என்று இங்கிதத்துடன் பேச்சை திசை திருப்பினார். 

“காலநிலை மாற்றத்தால் ஜூரம்னு சொன்னாங்க. அதுமட்டுமில்லை சாயங்காலம் பீச்சில் விளையாடிட்டு, ஐஸ்க்ரீம் சாப்பிட்டாள். எல்லாம் சேர்ந்து அதுங்க வேலையை காட்டுதுங்க, ப்ச் …”

“காலநிலை மாற்றம்ன்னா புரியலையே… ? 

“ஓ சாரி ஆன்ட்டி, நான் விஷயத்தை முழுசா சொல்லலை பாருங்க …”என்றவள் அவரிடம் எதையும் மறைக்க தோன்றாமல் எல்லாவற்றையும் கூற கூற பாக்கியத்தின் இதயத்தில் பாரம் ஏறியது. 

‘இந்த கடவுளுக்கு கருணையே இல்லையா? நல்ல நல்ல பிள்ளைகளை இப்படியா சோதிப்பது. கார்த்திக், ரித்திகா போல இன்னும் எத்தனை எத்தனையோ பிள்ளைகள் வாழ்க்கையில் துன்பங்களை அனுபவிக்கிறாங்களோ. போதும் கடவுளே நீ சோதிப்பது…’ என்று மனது மன்றாடியது.

“சரி நானும் உனக்கு துணையா இங்கேயே இருக்கேன்…”என ரித்திகா பதறினாள். 

“அதெல்லாம் வேண்டாம் ஆன்ட்டி, இப்போ தான் நீங்க உடல்நிலை தேறி வந்திருக்கீங்க, வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுங்க. நான் பார்த்துக்கிறேன், எனக்கொன்றும் பிரச்சினையில்லை…”

“ஆனால் உன்னுடன் யாருமில்லையே, நான் கார்த்திக்கை அனுப்பி வைக்கட்டும்மா …” என மேலும் பதறி போனாள். 

“ப்ளீஸ் ஆன்ட்டி, இது எனக்கு புதிதில்லை, எனக்காக யாரையும் தொல்லை செய்யாதீங்க…”

“சரி நான் யாரையும் தொல்லை செய்யலை, நீ குழந்தை குணமானவுடன் நம் வீட்டுக்கு அழைச்சிட்டு வா, கார்த்திக் பார்த்தால் மிகவும் சந்தோஷபடுவான். என்ன வருவே தானே…? 

“கண்டிப்பா ஆன்ட்டி, இவ்வளவு ஆசையா அழைக்கறீங்க வராமல் இருப்பேனா? ரெண்டு மாசம் இங்கு தான் இருப்பேன். அதனால் கண்டிப்பா வருவேன். நீங்களும் நேரமிருக்கும் பொழுது வீட்டுக்கு வாங்க…”என்று அழைக்க பாக்கியம் அகமகிழ்ந்து போனார். 

தேவராஜனும் வந்துவிட அவருக்கு ரித்திகாவை அறிமுகம் செய்து வைக்க அவரும் சற்று நேரம் அவளிடம் பேசிவிட்டு மனைவியை அழைத்துக்கொண்டு புறப்பட்டுவிட்டார். மனைவியை தோளோடு அவர் அணைத்து சென்ற விதமே அவள் மனதில் அவர் மீது மதிப்பும், மரியாதையையும் ஏற்படுத்தியது. 

கல்லூரியில் படிக்கும் பொழுது அவள் கார்த்திக்கிற்கு இரண்டு வருட ஜூனியர்.  அவள் கணக்கு பிரிவை தேர்ந்தெடுத்திருந்தாள்.  முதன் முதலாக அந்த கல்லூரியில் காலடி எடுத்து வைத்தபொழுது ராகிங் என்ற பெயரில் அவளை சில மாணவர்கள் வறுத்தெடுத்தார்கள். ப்ளஸ் டூ முடித்துவிட்டு கல்லூரிக்கு போகிறோம் என்பது சந்தோஷமாக இருந்தாலும் உள்ளுக்குள் அவளுள் புரியாத பயம் ஒன்று ஊறிக்கொண்டே இருந்தது. அதற்கு காரணம் கல்லூரியில் நடக்கும் ராகிங்கில் ஒரு சில மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொள்வது தான். அந்த மாதிரி நிறைய செய்திகளிலும், செவி வழியாகவும் கேள்விப்பட்டிருக்கிறாள்.

அவள் பயந்தது போலவே முட்டி போடு, இல்லாத நீரில் நீச்சலடி, ஒரு மாணவனை காட்டி முத்தமிட்டுவிட்டு வா என்று கட்டளையிட முதல் இரண்டை செய்தவள் மூன்றாம் கட்டளைக்கு அடிபணிய மறுத்தாள். 

இப்போ நீ செய்யலேன்னா இந்த வருடம் முழுக்க நீ நிம்மதியா படிக்க விடாமல் செய்திடுவோம் என்பதால் வேறு வழி அவர்கள் கை காட்டிய மாணவனை நோக்கி நடந்தாள். நல்ல உயரமாக, அழகாக உடையணிந்து பார்ப்பதுக்கும் கண்ணுக்கு குளிர்ச்சியாக பைக்கில் வந்து ஸ்டைலாக வந்து இறங்கியவனை காட்ட ரித்திகாவுக்கு ஒரு விதத்தில் நிம்மதியாக இருந்தது. சில சமயம் முத்தமிடு என்று புல் வெட்டுகிறவன், கூர்க்கா என்று கூட கைகாட்டுவார்கள் என்று கேள்விப்பட்டிருந்தாள். 

அந்த பைக் வாலாவை நெருங்கி, தயங்கி தயங்கி அழைக்க அவனோ ரித்திகாவை புரியாமல் பார்த்தான். 

“என்ன வேண்டும் சொல்லுங்க…”என்றான் மரியாதையுடன்.

அதுவே அவளுக்கு யானை பலத்தை கொடுக்க,சட்டென்று அவன் கன்னத்தில் முத்தமிட அவனோ திகைத்து போனான். அதே சமயம் கோபமும் துளிர் விட ஆரம்பித்திருந்தது அவன் முகத்தில். 

“ஐம் சாரி , சாரி , அதோ அவங்க தான் உங்களை கிஸ் பண்ண சொன்னாங்க, இல்லையென்றால் படிக்க விடமாட்டாங்களாம்…”என்று தயங்கி தயங்கி கண்ணீருடன் சொல்லி முடிக்க காற்று போன பலூன் மாதிரி அவனின் கோபம் சட்டென்று வடிந்தது.

முகம் கனிய,”கம் வித் மீ …”என்று அவளின் கையை பிடித்தபடி ராகிங் செய்துக்கொண்டிருந்த மாணவர்களை நெருங்க, அவர்களோ பயந்து போய் எழுந்தார்கள். 

“சாரி கார்த்திக், நாங்க சும்மா மிரட்டினோம், இந்த பொண்ணு நிஜமாகவே செய்திடிச்சி …”என்று பல்டி அடிக்க அவர்களை முறைத்தான்.

“இனி ஒரு முறை நீ ராகிங் செய்தீங்க, அப்புறம் டிஸ்மிஸ் லெட்டர் உங்க வீட்டுக்கு போகும், மைண்ட் இட்…” என்றான் உறுமலாக. 

அவனின் தந்தை தேவராஜன் அந்த கல்லூரியில் ஒன் ஆப் த பார்ட்னர். பார்ட்னருடய மகன், போதத்திற்கு படிப்பிலும் சரி, குணத்திலும் சரி மிகவும் உயர்ந்த இடத்தில் இருப்பவன். அதனாலேயே அவனிடம் யாரும் வாலாட்ட மாட்டார்கள். ராகிங் செய்த மாணவர்கள் கல்லெறிந்த காக்காய் கூட்டம் போல பறந்துவிட அவளிடம் திரும்பினான்.

“இனி உங்களை யாரும் தொல்லை செய்ய மாட்டாங்க, நீங்க நிம்மதியா போங்க…” என்றான். 

அவனுக்கு நன்றி சொல்லிவிட்டு,”தேங்க்ஸ் கார்த்திக், இந்த உதவியை நான் மறக்கவே மாட்டேன். அண்ட் பை த பை ஐ ம்  ரித்திகா ஈஸ்வரன்…”என்றவள் சட்டென்று அவனின் கையை பற்றி அவன் புறங்கையில் முத்தமிட்டுவிட்டாள். 

“இது நானாக கொடுத்தது…” என்று மோன புன்னகையை சிந்திவிட்டு சிட்டாக பறந்து போனாள். 

அவள் கொஞ்சம் கூட தயங்காமல் தன் பெயரை சொல்லி அழைத்ததுமில்லாமல், மீண்டும் கையில் முத்தமிட்டுவிட்டு அவள் பெயரையும் பிகு செய்யாமல் சொல்லிவிட்டு சென்றது அவனுக்கு விநோதமாகவும், ஆச்சர்யமாகவும் இருந்தது. இந்த காலத்து பெண்கள் தைரியசாலி தான் என்று நினைத்துக்கொண்டான். 

அதன் பிறகு ஒரு நாள் துணிக்கடையில் கார்த்திக்கை அவன் தாயுடன் சந்தித்தாள். அவளை அவன் தாய்க்கு அறிமுகப்படுத்தி வைக்க, பெரியவரோ கொஞ்சமும் பந்தா செய்யாமல் மிகவும் இலகுவாக பேசி சிரித்தார். 

நாட்கள் பறந்தோட முதலாமான்னு நிறைவு நாள் நெருங்க நெருங்க அவளுக்குள் இனி கார்த்திக்கை பார்க்க முடியாதோ என்ற ஏக்கம் துளிர் விட ஆரம்பித்தது. அவளுக்கு அவனை பார்த்த முதல் நாளிலேயே அவன் மீது நல்ல அபிப்ராய விதை ஊன்றப்பட்டது. அது நாளைடைவில் பார்வைகளின் பரிமாற்றம் என்னும் தண்ணீர் பாய்ச்ச துளிர் விட்டு செடியாக வளர்ந்துக்கொண்டிருந்தது. அவனை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் போல தோன்றும். ஆனால் அவனருகில் சென்று பேச மனதில் தைரியம் இருக்காது. 

ஆனால் அவனோ கல்லூரியில் அவளை பார்த்தால் சினேகமாக சிரித்துவிட்டு செல்வான். இவளின் பார்வையையும், அவனின் சினேக சிரிப்பையும் கண்டுக்கொண்ட தோழி,”கார்த்திக் சாரை காதலிக்கிறாயா…” என்று விசாரித்தாள். 

இவள் தான் தன் மனதிலிருந்த உணர்வுகளுக்கும், ஆசைகளும் பெயரிடவில்லையே. அதனால் அதற்கு எப்படி பதில் சொல்ல முடியும்…