IMK 9

Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் 9

வேந்தனின் கண்கள் அவனையறியாதே தமிழினியை அணு அணுவாய் ரசித்தது.

தமிழினிக்கு தன்னையே தொடரும் வேந்தனின் பார்வையை கண்டு முழி பிதுங்கியதுடன், அவன் குடும்பத்தின் பார்வையும் அவள் மேல் விழுவது போல இருக்க, அந்த இடத்தில் நிற்பதற்கு ஒவ்வாமை ஏற்பட்டதுடன் அசௌகரியமாகவும் இருந்தது.

அந்த இடத்தை விட்டு அகன்றுவிட தமிழினியின் மனம் உத்தரவு இட, அவள் தோழி மேகாவோ சூழ்நிலை புரியாமல், பூர்ணிமாவிற்கு துணைக்கு அவளை விட்டு விட்டு தாயிற்கு உதவுவதற்கு சென்று விட்டாள்.

பூர்ணிமாவிற்கு இதுவே முதல் முறை பெண்பார்க்கும் நிகழ்வு என்பதால் ஒரு வித தயக்கத்துடனும், பயத்துடனும் நின்று இருந்தாள்.

இசையரசனின் பார்வை அவளின் பயத்தை ரசித்தபடியே அவளையே மொய்த்தது.

இசையரசனும், வேந்தனும் வந்த வேலையை சரியாக பார்த்தார்கள். அதாவது பெண் பார்க்க என்று வந்து பெண்ணை மட்டும் பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.

பட்டுப்புடவையணிந்து, மீதமான அலங்காரங்களுடன் கைகளில் வளையல் குலுங்க வந்து நின்ற பூர்ணிமா வை பார்த்தவுடன் இசையரசனுக்கு பிடித்துவிட்டது. அதனால் அவனின் பார்வை அவனின் சரிபாதியாகப்போகிறவள் என்கின்ற தோணியில் உரிமை பார்வையாக இருந்தது.

அவனின் உரிமைப் பார்வையில் தலையை குனிந்து பதட்டமாகவே நின்று கொண்டு இருந்தாள் பூர்ணிமா.

தமிழினிக்கு வேந்தனின் பார்வை தன்னை விட்டு அகலாமல் இருப்பதைக் கண்டு தவிப்பாகியது.

அவளை பொறுத்தவரை அவனின் காதல் கைகூடவே வாய்ப்பு இல்லை. அவளுக்கும் அவனின் மீது பிடிப்பு என்பது ஏற்பட போவதில்லை.அவளின் தந்தையும் அதற்கு அவர் உயிர் போனாலும் விட மாட்டார்.

மேகா அவளின் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரையிலான தோழி. மேகா வீட்டில் தண்ணி குடிப்பது கூட தன் குடும்பதுக்கு கௌரவ குறைச்சல் என்று நினைக்க கூடியவர் அவளின் தந்தை. இன்று வரையிலுமே மேகாவீட்டில் தண்ணி கூட குடித்து இல்லை.

அப்படி ஆச்சாரம் பார்ப்பார் தியாகராஜா குருக்கள். அப்படி பட்டவர் எந்த சூழ்நிலையிலும் சாதி குறைந்த ஒருவனை தன் மணாளனாக தேர்ந்து எடுக்க மாட்டார். அவளுக்கும் வேந்தனுக்கும் திருமணம் என்ற ஒன்றே சாத்தியம் இல்லாதது. அப்படி சாத்தியம் இல்லாத ஒன்றிற்காக ஒருவன் மினக்கெடுவதே நேரவிரயம்.

அதுவும் அவளுக்கும் வேந்தனை இரண்டு வருடங்களாக தெரியும். அவன் எந்த பெண்ணிடமும் நின்று வழிந்து பேசமாட்டான்.எல்லாப் பயணிகளையும் சமமாக நடத்துவான். அவனின் பார்வை கூட யாரின் மேலும் தப்பாக பதிந்தது பார்த்ததில்லை. அப்படி ஒரு கண்ணியமானவன் காதல் என்ற பெயரில் தன் பின்னால் சுற்றி, ஏமாந்து வாழ்க்கையை தொலைத்து விடுவானோ என்று அழுத்தம் கூடியது.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

சீதாவிற்கு தன் வீட்டுக்கு வரப்போகும் இரு பெண்களும் ரதியாக இருக்க போகிறார்கள் என்று பெருமை பட்டுக்கொண்டு இருந்தார். அவருக்கு சாதி பேதம் எல்லாம் இல்லை எல்லாம் மனித இனம் என்ற நல்ல எண்ணம் கொண்டவர்.

லிங்கமும், சந்துருவும் அடிக்கடி தமிழினியை பார்ப்பதும் தங்களுக்குள் குசு குசுப்பதுமாக இருந்தார்கள்.

அவர்களுக்கு அவளின் தோற்றமே ஐயர் பெண் என்று கூற இந்த திருமணம் சாத்தியமாகுமா என்றே விவாதம்.

லிங்கத்திற்கு தன் பெறாமகன் ஆசைப்பட்டு விட்டால் நடத்தாமல் ஓயமாட்டேன் என்பது போலவும், சந்துருவுக்கு இதனால் வீட்டின் நிம்மதி குலைந்து விடுமோ என்பதுமே விவாதமாக இருந்தது

இப்படி ஒரு ஒருத்தரும் ஒரு ஒரு மனநிலையில் இருக்க,

பூர்ணிமாவின் பதற்றத்தை கூட்டும் வண்ணம் அமுதன்” பொண்ணுக்கு பாடத் தெரியுமா?” என்று பகிடியாய் கேட்டு வைத்தான்.

பூர்ணிமாவிற்கு பாடவெல்லாம் சுட்டுப்போட்டாலும் வராது. அந்த பயத்துடன் வந்தவர்களை பார்க்க, அவர்கள் பார்வை புன்சிரிப்புடன் அவள் மேல் இருந்தது.

தன் கை நடுக்கத்தையும், இதழ்கள் நடுங்குவதையும் மறைத்து, தனக்கு தானே தைரியத்தை ஊட்டி “எனக்கு பாட்டு எல்லாம் பாட தெரியாது” என திக்கி திணறி சொன்னாள்.

“அண்ணா உங்கள் வருங்கால மனைவிக்கு பேச வரும். நான் கூட அண்ணி ஊமையாக இருந்தால் எப்படி அண்ணி, கொழுந்தன் சண்டை போடுறது என்று பயந்திட்டேன்” என்று போலி ஆச்சரியத்துடன் இசையரசனுக்கு சொல்வது போல எல்லோருக்கும் சொன்னான்.

“தமிழினி நல்ல பாடுவா, வேணுமென்றால் அவளை பாட சொல்லி கேளுங்க” என்று ஸ்னாக்ஸ் தட்டுடன் வந்த மேகா சொல்ல,

தமிழினி பாடுவாள் என்றவுடன் விழிகளை ஆச்சரியத்தில் விரித்த வேந்தன் அவள் வாய் மொழிமூலம் ஒரு பாட்டை கேட்க வேண்டும் எனும் ஆவல் உருவாகியது.

சீதா சிரித்தபடி, நின்று கொண்டுருந்த பூர்ணிமாவையும், தமிழினியையும் கண்டு “பாட எல்லாம் வேண்டாம் டா அவன் நக்கலுக்கு கேட்க்கிறான். நீங்க இரண்டு பேரும் இங்கே வந்து இருங்கம்மா” என தனக்கு பக்கத்தில் வெற்றிடமாக இருந்த இருக்கையை காண்பித்தார்.

பூர்ணிமா போய் சீதா பக்கத்தில் இருக்க, பூர்ணிமாவிற்கு அருகில் தமிழினியும் இருந்து கொண்டாள்.

பூர்ணிமாவை விசாரிப்பதுடன் தமிழினியையும் விசாரிக்கும் நோக்குடன் சீதா, ” படிப்பெல்லாம் எப்படி போகுதும்மா” என பேச்சை வளர்க்க பார்க்க,

திறந்த வாய் மூடாமல் இருக்கும் தமிழினிக்கு சீதாவிடம் பேச முடியவில்லை. அவரின் பேச்சில் தன்னுடன் கதைக்கும் ஆர்வம் இருப்பது முழுமையாகவே தெரிந்தது.

அவள் அந்த அவஸ்தையுடன் பேருக்கு ஒரு பதிலைச் சொல்லி சமாளித்துக் கொண்டு “மேகா நீ இங்கே இரு, இவங்க உனக்கு உறவாக போகிறவங்க” என்று தன தோழியை அந்த இடத்தில் இருத்திவிட்டு, ஹாலிலே நிற்காமல் மெதுவாக கழண்டு முன் பக்கம் உள்ள தோட்டத்துக்கு போனாள்.

அவளின் முகத்தில் பெரும் யோசனை கோடுகள். அவளிற்கு இந்த பிரச்சனையை அப்பாவிடம் கொண்டு சென்றால் படிக்கும் படிப்பு பாதியிலே பறிபோய்விடும். வேந்தனிடம் கதைத்து புரிய வைப்போம் என்று நினைத்தாலும்,அவன் பார்வை அவளை விட்டு விடுவது போல இல்லை.

எப்படி திடீரென்று இப்படி ஒரு எண்ணம் என்றும் அவளுக்கு புரியாமல் மூளை குழம்பித் தவித்தது.

அவள் அந்த யோசனையில் மரத்தில் இருக்கும் இலைகளை எல்லாம் ஒன்று ஒன்றாக பிய்த்துக் கீழே போட்டுக்கொண்டு இருக்க, “அடியேய் என்ற மல்லிகை” என்று கத்தியபடி மேகா ஓடிவந்தாள்.

இலையை பிய்ப்பதை நிறுத்திய தமிழினி, வந்த தோழியை இழுத்து கட்டிக்கொண்டு அமைதியாக நின்று இருந்தாள்.

அவளின் முதுகை தடவி விட்ட மேகா, “பொறுமையாய் உன் சூழ்நிலையை அவரிட்ட எடுத்து சொல்லு. அவரை பார்க்க நல்லவர் போல இருக்கு சொன்னால் புரிந்து கொள்வார்” என்று சொல்ல,

“அவரிடம் ஒரு தீவிரம் இருக்கிறது போல இருக்கு, நான் விரும்பாவிட்டாலும் என் பின்னால் ஒருத்தர் சுத்துறார் என்று தெரிந்தாலே அப்பா என் படிப்புக்கு முழுக்கு போட்டு, என் அத்தானுக்கு கன்னிகா தானம் பண்ணிடுவார்,” என்று கண்கள் கலங்கியபடி சொல்ல,

“அப்படியெல்லாம் நடக்காது” என்று அவளை அமைதிப்படுத்த பார்க்க,

“படிப்பு பற்றி கூட எனக்கு கவலையில்லை, ஏற்கனவே அத்தானுக்கும் எனக்கும் எட்டாம் பொருத்தம் இதில் அவருடன் கல்யாணம் என்றால் என் வாழ்க்கை எதை நோக்கிப் போகும் என்றே தெரியலை” எனக் கவலைப் பட

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

தமிழினியின் அத்தானுக்கு வயது என்னவோ முப்பது என்றாலும், பெண்கள் வீட்டில் ஆண்களுக்கு கீழேயிருந்து சமைத்துப்போட்டு வீட்டை மட்டும் பராமரித்தால் போதும் படிப்பு எல்லாம் எதற்கு என்று கேட்க்கும் பழங்கால வர்க்கம்.

தமிழினிக்கு அந்த ஆணாதிக்கமே பிடிக்காது. இருவருக்கும் எப்பொழுதும் முட்டிக்கொள்ளும். அப்படியானவனிடமிருந்து தப்பித்து கொள்ளவே படிப்பை தெரிந்தேடுத்தாள் தமிழினி. இன்னும் இரண்டு வருடம் நிம்மதியாக இருக்கலாம் என்று எண்ணியவளுக்கு இப்பொழுது தலையிடியாக வேந்தன் குறுக்கே வந்துவிட்டான்.

“பேசாமல் நான் இந்த ஊரில் இருந்து எங்கேயாவது எஸ்கேப் ஆகிடவா” என்று புதிதாக தோன்றிய ஐடியாவுடன் தமிழினி கேட்க,

“அதுக்கு உன் தியாகு ஓம் என்றுவாரா” என்று சிரித்தபடி கேட்டாள் மேகா.

தியாகராஜா.. தமிழினி படிக்க போகிறேன் என்று கெஞ்ச மகள் மேல் உள்ள அளப்பரிய நம்பிக்கையினாலும், பாசத்தாலும் சரி என்றவர், மகளுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தாலும் தங்கள் வீட்டிலிருந்து போறது என்றால் மட்டும் போகட்டும் இல்லாட்டி வீட்டில் இருக்கட்டும் என்றே சம்மதிக்க, அதன் பின்பே தமிழினி வவுனியா யூனிவெர்சிட்டியை தெரிவுசெய்தாள்.

“வாய்ப்பு இல்லை..” என்று உதடு பிதுக்கி சொன்னவள், “பேசாமல் நம் கண்டக்டரை வேற பொண்னோட கோர்த்து விடுவோமா ” என்று கேட்க,

“அப்படி யாரை கோர்த்து விட போறாய்” என்று சிரிப்புடன் கேட்க,

“உன்னை தானடி” என்று தமிழினி சிரியசாக சொல்ல,

“அடி வேண்டுவாய்,நீ, நான் என்ன ஒன்று கொடுத்தால் ஒன்று இலவசமா” எனக் கோபப்பட்டு சிரித்துக் கொண்டு இருந்தவளைக் கண்டு அடிக்க துரத்த, தமிழினி தோழியின் கைகளில் மாட்டு பாடாமல் ஓடினாள்.

கொஞ்ச நேரம் ஓடிவிட்டு, களைத்தபின் விருப்ப பட்டே மேகாவின் கைகளிலே பிடிபட்டவள் அவள் இரண்டு செல்ல அடிகளை போட்ட பின், ” இன்னைக்கு உன் அக்காவின் கல்யாணம் உறுதி ஆகுது நீ அந்த ஹப்பினசை என்ஜோய் பண்ணு, நான் எல்லாம் ட்ராகன் பட ஹீரோ போல எந்த பிரச்சனை வந்தாலும் தூசு போல தட்டிட்டு ஓடிட்டே இருப்பேன், நம்மளை எல்லாம் யாரும் ஒரு விசயத்தில் பிடிக்காமல் சிக்க வைக்க முடியாது. இந்த கண் டாக்டர் எல்லாம் எம்மாத்திரம். நானே அவரை துண்டை காணவில்லை துணியை காணவில்லை என்று ஓட விட்டுடுவேன். என் விதியில் இந்த ஜென்மத்தில் அந்த பம்பர மண்டையன் தான் புருசன் என்றால் மாற்றவா முடியும்” என்று பொசிட்டிவிட்டியாக கதைத்தாள்.

தமிழினி சொன்னதில் அந்த பம்பர மண்டயனாக அவளின் அத்தானை நினைத்த மேகாவிற்கு இரண்டுமே நன்றாக ஒத்துப்போவது போல இருக்க, மலர்ந்த சிரிப்பு ஒன்று இதழ்களில் உதயமாகியது.