IMK 8
Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் 8
வேந்தன் தமிழனியை காணாத பசலை நோயினால் பாதிக்கப்பட்டு சுற்றிக்கொண்டு இருந்தான். குரலில் ஒரு சுரத்தை என்பதே இல்லை. யார் என்ன கேட்டாலும் பதில்கள் சோர்ந்தே வந்தது.
அந்த அளவிற்கு அவனின் மாற்றம் இருக்க, இசையரசனுக்கும், அமுதனுக்கும் கூட வேந்தனை நினைத்து கவலை பிறந்தது.
அவர்கள் இருவருமே தமிழினியிடம் மன்னிப்பு கேட்க்காததன் பாதிப்பு என்று தான் நினைத்தார்கள்.
வேந்தன் பாதி நேர வேலையுடன் வந்தது தலைவலியால் என்பதாக வீட்டில் கூறியிருந்ததோடு, தமிழினிக்கு ஒரு கிழமை லீவு அதனால் அவளிடம் மன்னிப்பு கேட்க முடியவில்லை என்றும் சேர்த்தே கூறியிருந்தான்.
காதல் வந்துவிட்டால், பொய்யும் களவும் கூட வருமே அது வேந்தனின் சகோதரர்களுக்கு புரியவில்லை.
வேந்தனின் காதலில் தொபுக்கடீர் என்று ஒரு நாளிலே விழுந்து விட்டான் என்று அவர்களுக்கு எப்படி தெரியும்.
வேந்தனுக்கே ஒரு நாளில் ஒருத்தியை வாழ்நாள் முழுதும் நேசிக்கும் அளவு எப்படி மாறினேன் என்று குழம்பியே இருந்தான். அது ஒரு கனவினால் சாத்தியமா என்றால் இல்லை. அவளை கண்டு கொள்ளவில்லை என்று வெளியில் சொல்லிக்கொண்டு அவளை கவனித்து இருக்கிறான். அவள் இப்பொழுது சிறுக சிறுக மனதினுள் வந்து மொத்தமாக ஆக்கிரமித்து விட்டாள்.
வேந்தன் இப்படி சுற்றிக்கொண்டு இருக்க, இசையரசனுக்கு கல்யாணம் சரிவரும் போல இருந்தது.
காலையில் எழுந்தவுடனேயே வேந்தனின் அப்பா சந்துரு “பொண்ணும் படிச்ச பொண்ணு டீச்சர், பார்க்கவும் அம்சமாக இருக்கு, குறிப்பும் பொருந்தி வந்து இருக்கு, இன்னைக்கே நாள் நல்ல இருக்கு. பொண்ணை போய் ஒருக்கா நேரடியாக பார்த்திட்டு வருவோம் ” என்று சந்தோசமாக சொல்ல,
அதனை கேட்ட சீதாவிற்கும் தங்கள் வீட்டில் முதல் கல்யாணத்திற்க்கான சந்தோசம் வந்துவிட்டது. அவருக்கும் அந்த பெண் மூத்த மகனுக்கு பொருத்தமாக இருப்பாள் என்றே தோன்றியது.
இசையரசனிடமும் அந்த பெண் போட்டோவை காட்டி பிடித்து இருக்கிறதா என்று கேட்ட பின்பே,நேற்று ஜாதகம் பார்க்க ஜாதகமும் பொருந்தி வந்து இருக்க, விடியவே பெண்ணின் அப்பாவிடம் பேசிவிட்டார் சந்துரு.
அப்படி வீட்டில் எல்லோருமே இசையரசனுக்கு பார்த்து இருக்கும் பெண்ணை பற்றி பேசிக்கொண்டு இருக்க,
வேந்தன் எதிலும் தலையிடாமல் கேட்டு கொண்டு இருந்தான். அவனுக்குமே அண்ணாவுக்கு திருமணம் நடைபெறப்போவதை நினைத்து குதூகலம் பிறந்தாலும், மனதின் ஓரத்தில் தமிழினி பிராண்டிக் கொண்டு இருந்தாள்.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
எல்லோருமே மாலை நேரம் பொண்ணு பார்க்க என்று பெண் வீட்டுக்கு கிளம்பி வர, அங்கே வாசலிலே தமிழினி தன் தோழி மேகாவுடன் நின்று கொண்டு வருபவர்களுக்கு வணக்கம் சொல்லி விபூதி, சந்தனம் கொடுத்து உபசரித்துக் கொண்டு இருந்தாள்.
அவளை கண்டு வேந்தனுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
வேந்தனின் கண்கள் தமிழினியை மட்டுமே மொய்த்துக்கொண்டு இருந்தது.
மேகாவின் அக்கா பூர்ணிமா பொண்ணு என்பதால் வீட்டுக்காரியாக மேகா நின்று இருக்க அவளுடன் தமிழினியும் நின்று இருந்தாள். தமிழினிக்கும் வேந்தனை கண்டு சிறு திகைப்பு இருந்தாலும், வந்தவர்களை இன்முகமாகவே வரவேற்றாள்.
வந்தவர்களை வரவேற்று உட்க்கார சொன்ன மேகாவின் அப்பா சிதம்பரம் தன் குடும்பத்தை சந்துரு குடும்பத்திற்கு அறிமுகப் படுத்த, சந்துருவும் முதலில் லிங்கத்தை தன் அண்ணா என்று ஆரம்பித்து அமுதனை கடைசி மகன் என்றும் அறிமுகப் படுத்த
வேந்தன் மேகாவை கவனிக்காவிட்டாலும் ,மேகா வேந்தனை கவனித்து இந்த அண்ணா தானே நான்கு நாளைக்கு முதல் வந்து யூனிவர்சிட்டியில் தங்கச்சியை கேட்டது, இவருக்கு தங்கச்சியே இல்லை போல இருக்கே, அமுதன் என்று ஒரு தம்பி தான் இருக்கு, பிறகு எதற்கு யூனிவெர்சிட்டிக்கு முன்னால் நின்றார் என்பது போல பார்த்தாள்.
தமிழினி எல்லோருடனும் நட்பு பாராட்டுவதால் அவளுக்கு எல்லோரையும் தெரியும் என நினைத்து ” ஏன் தமிழ் நம்ம டிபார்மெண்டில் அமுதா என்று யாரும் படிக்கிறாங்களா?” என்று மெதுவாக தமிழினியின் காதை கடித்தாள்.
மேகாவிற்கே அவன் பொய் சொல்லி விசாரித்து இருக்கிறான் என்று புரிந்தாலும், வேறு யாரும் அமுதாவை தேடி வந்து இருப்பானோ என்று தான் விசாரித்தாள்.
தமிழினியும் ஏன் என்பது போல பார்க்க “அந்த அண்ணாவோட தங்கச்சி நம்ம டிபார்ட்மென்ட்” என்று வேந்தனை காட்ட,
அவளுக்கு தான் வேந்தனை இரண்டு வருடங்களாக தெரியுமே, “அது நம் கண் டாக்டர், அவருக்கு தங்கச்சியெல்லாம் இல்லை, ஒரு தடிமாட்டுத்தம்பி தான் இருக்கு அதுவும் அவருக்கு பக்கத்தில் இருந்து முறுக்கு தின்னுட்டு இருக்கே” எனச் சொல்ல,
அமுதனை தடிமாடு என்று சொன்னதுடன் மிக்சர் மாமா போல தமிழினி சொல்ல, அமுதனை பார்க்க அவன் வந்ததற்கு எல்லாத்தையும் சாப்பிடணும் என தீர்மானம் பண்ணியவன் போல சாப்பாட்டு தட்டிலேயே பார்வையை பதித்து இருந்தான்.
“கண் டாக்டரா ?” என மேகா கேள்வியாக கேட்க,
“என் பஸ் கான்டாக்டர்டி ஆனால் ஒழுங்கா பார்க்க மாட்டாரா, அது தான் நான் கண் டாக்டர் ஆக்கிவிட்டேன்” என்று சொல்லி தம்பியை கூட்டிக்கொண்டு வரும் பொழுது அவன் இளக்காரமாக பார்த்தான் என்பது போலவும் சொல்ல,
வேந்தனின் பார்வை தமிழினியை வட்டமிடுவதை கண்ட மேகா “அடியேய் அந்த அண்ணா உன்னை சைட் அடிக்கிறார் , அன்றைக்கும் உன்னை தேடித்தான் வந்து இருப்பார் போல” என்று தமிழினியை பார்த்து யோசனையாக கேட்க,
“என்னய்யா வாய்ப்பில்லையே” என வேந்தனை பார்க்க, வந்தவர்களுக்கு தேநீர் வழங்கப்பட்டு கொண்டு இருக்க, அவனின் பார்வை தேநீரில் இல்லாமல், தேனை உறிஞ்சும் வண்டாக அவளை உறிஞ்சிக்கொண்டு இருந்தது.
அவனின் காதல் சொட்டும் பார்வையில் திடுக்கிட்டவள், கண்களை விரித்துப் பார்க்க, அவளைக் கண்டு கண்ணை சிமிட்டினான் வேந்தன்.
அண்ணன், தம்பி மூன்று பேருமே ஒரு சோபாவில் அமர்ந்து இருக்க, அமுதன் நடுவில் அமர்ந்து இருந்தான்.
வந்ததில் இருந்து சைட்டால் இன்னுமொரு படம் ஓடுவதை கவனித்த இசையரசன், சாப்பிட்டு ராமனாக உண்டு கொண்டுருந்த அமுதனின் கையை சுரண்டி சைகை காட்ட,
அமுதனுக்கு புரியாமல் சாப்பிட விடாமல் தொல்லை செய்ததாக அண்ணனை முறைக்க, “அடேய் உன் மூஞ்சியை தட்டுக்குள் புதைக்காமல் நிமிர்ந்து பார்த்து தொலைடா” என அலுத்துக் கொள்ள,
சாப்பிட்டு தட்டைத் தூக்கி அங்கே இருந்த மேசையில் வைத்தவன், தன்னுடைய கையை சும்மா தட்டி விட்டு “இப்ப சொல்லு?” என சீரியஸ் மோடுக்கு போனதுபோல் கேட்டான்.
“எனக்கு பொண்ணு பார்க்க வந்திட்டு, இங்கே ஒருத்தன் தனக்கு பொண்டாட்டியை தேடிட்டான் போல” என வேந்தனையும் தமிழினியையும் சுற்றிக்காட்ட,
தமிழினியை உற்று நோக்கிய அமுதன், தமிழினி பற்களை கடித்தபடி வேந்தனை முறைத்துக்கொண்டு இருப்பது அப்பட்டமாய் தெரிய, அண்ணா அவங்களுக்கு எனக்கு அண்ணியாக வரும் யோகம் முகத்தில் தெரியுது” எனச் சொன்னான்.
“எனக்கு அந்த பொண்ணு கிட்ட இருந்து வேந்தனுக்கு செருப்பால் அடி விழப்போக போறமாதிரித் தான் தெரியுது” எனச் சொல்ல,
“டேய் அண்ணா, நான் அவங்களை என் அண்ணியாக பிஸ் பண்ணிட்டேன், இனி மாற மாட்டேன். நம் வேந்தன் அந்த பொண்ணுகிட்ட சாணியில் அடிவேண்டினாலும் அவங்க தான் அண்ணி” என்றவன், வேந்தனை சுரண்டி ” அவங்க என் அண்ணித்தானே” எனக் கேட்க,
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
“நூறு சதவீதம் என் ராங்கி தான் என் பொண்டாட்டி” என வேந்தனும் அழுத்தமாக, உறுதியாக கூற,
ராங்கியா என அதிர்ச்சியாகி “அவ செம வாய் என்று சொன்னியேடா” எனக் கேட்க,
தமிழினியின் உதடுகளை ஒரு மார்க்கமாக பார்த்தபடி, “எனக்கு அவ வாயை எப்படி அடைகிறது என்று தெரியும்” என்றான் இடைக்காக வேந்தன்.
அவன் பார்வையை கண்டு தமிழினி முகத்தை திருப்பினாள்.
வேந்தனின் அடல்ட் பேச்சில் அவ்வா என சொல்லி வாயை மூடி இசையரசனும், அமுதனும் அவனைப் பார்க்க,
“அம்மாக்கும், அப்பாக்கும் அவளை பிடிக்கும் தானே” எனத் தன் உடன்பிறப்புகளிடம் ஏதோ அவனுக்குத்தான் பெண் பார்க்க வந்ததுபோல் கேட்டான்.
பெரியவர்களை கவனிக்காது இவர்கள் மூன்று பேருமே தங்களுக்குள் கதைத்துக் கொண்டு இருந்தவர்கள், பெற்றோரை நோக்க அங்கே பெண் வீட்டுக் காரர்களிடம் ஏதோ கருத்து வேறுபாடு ஏற்பட்டு எல்லோருடைய முகமும் தீவிரமாக இருக்க,
“அப்பா என்ன?” எனக் இசையரசன் சத்தமாக கேட்க, “நீ மேளம் அடிக்க போறது பெண்ணோட அம்மாவிற்கு விருப்பம் இல்லையாம், உன்னை உன் வேலையை மட்டும் பார்க்கட்டுமே என்று சொல்லுறாங்க, உன் அப்பா அது தான் மௌனமாக இருக்கிறான், நீ என்ன சொல்கிறாய்” என லிங்கம் சொல்ல,
மகனின் திருமணம் எல்லாம் சரிவந்து விட்டது போல சந்தோசத்தில் இருந்த சீதாவின் முகமும் பதற்றத்தில் இருக்க,
அவனுக்கும் மேளம் அடிப்பது என்பது பிடித்த விசயமே அதை நிற்பாட்டிவிட்டு திருமணத்திற்கு எல்லாம் ஓம் என்று சொல்லும் எண்ணம் இல்லாமல், “சரி வெளிக்கிடுங்க வீட்டுக்கு கிளம்பலாம்” என்று எல்லோருக்கும் சொல்லி எழும்பி வீட்டுக்கு கிளம்ப போக,
எல்லோருமே ஆடிவிட்டார்கள்.சீதா இந்த சம்பந்தத்தை முடிந்துவிடும் என்று முழுமையாக நம்பியிருந்தார். அவருக்கு கண்கலங்கும் போல இருந்தது.
அவர்கள் வீட்டை விட்டு செல்ல போகிறார்கள் என எண்ணிய சிதம்பரம்,”இல்லை.. இல்லை.. கோபப்படாதையுங்க தம்பி,என்று இசையரசனை பார்த்து சொன்னவர் , “என் பொண்ணுக்கு இதில் பிரச்சனை இல்லைங்க, அவாவுக்கு உங்கள் பையனை பற்றி தெரிந்து தான் பிடிச்சுது “என சந்துருவை பார்த்துச் சொன்னார்.
பெண்ணுக்கு ஓகே என்றவுடன் தான் தன் கோபத்தை அடக்கி அமர்ந்தான் இசையரசன். அவன் அமரவும் மற்றவர்களும் அமர்ந்தார்கள்.சீதாவிற்கும் நிம்மதி பெருமூச்சு
அந்த சூழ்நிலை கனமாக இருந்தது.
சிதம்பரம் பக்கத்தில் இருந்த மனைவியை கண்டு “எதுக்கு தேவையில்லாதது கதைக்கணும்” என்று மனைவியை கடிந்தவர், மேகாவை பார்த்து அக்காவை கூட்டிட்டு வாம்மா எனச் சொல்ல, மேகாவுடன் தமிழினியும் கூடச் சென்று பூர்ணிமாவை கூட்டிக்கொண்டு வந்தார்கள்.
அந்த சூழ்நிலையின் கனம் பொறுக்காத அமுதன், தாயின் காதில் “அம்மா உங்க இரண்டாவது மருமகளும் இங்கே தான் இருக்கிறா, நல்லா ஐஸ் வைச்சு வையுங்க” என இரகசியம் பேச,
அவ்வளவு நேரமும் மௌனமாக இருந்த சீதா அந்த அமைதியை கிழித்து “யார்டா” என மேகாவையும், தமிழினியையும் ஆர்வமாக பார்த்தபடி கேட்க,
“அந்த பச்சை சூடிதார், நம்ம வேந்தனின் ராங்கி” என்று தமிழினி போட்டு இருந்த சுடிதாரை கொண்டு அடையாளம் காட்டி சொல்ல,
“தமிழினியா அது” என வியப்பை காட்டியவர்,இவ்வளவு நேரமும் யாரோ என்றவரின் பார்வை இப்பொழுது மகனின் மனம் கவர்ந்தவள் என்று ஊன்றிக் கவனித்தது.
தனக்கு தெரிந்ததை கணவனின் காதிலும் போட்டுவிட, அது லிங்கத்தையும் சென்றடைந்தது.
பூர்ணிமாவுடன் சேர்த்து,தமிழினியும் பார்த்தவர்களுக்கு இரு பெண்களுமே திருப்தியாக இருந்தது.
இப்படியாக தமிழினிக்கே தெரியாமல், ஒரு பெண்ணை பார்க்க என்று வந்து இரு பெண்களையும் சேர்த்துப் பெண்பார்த்து கொண்டார்கள்.