IMK 6
Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் 6
தமிழினி பஸ் சீட்டில் அமர்ந்து இருந்தாள்.
அவள் மடியில் வேந்தனின் முகயாடையில் ஒரு இரண்டு வயது மகன் பெருவிரலை சூப்பியபடி ஒய்யாரமாக விற்று இருக்க, தமிழினியின் அருகிலே ஒரு நான்கு வயதுப் பெண்குழந்தை கையில் லொலி பாப்புடன் வேந்தனை பார்த்து சிரித்துக் கொண்டு இருந்தது.
அந்த பெண் குழந்தையின் சிரிப்புக்கு பதில் சிரிப்பு சிரித்தபடி பஸ்சில் உள்ளவர்களிடம் “டிக்கெட்.. டிக்கெட்..” எனக் கேட்டபடி, பஸ்சில் உள்ள மேல் கம்பியை பிடித்தபடி வேந்தன் வந்து கொண்டு இருக்க, தன் அருகில் வந்து கொண்டு இருந்த கணவனைக் கண்டு தமிழினி முகத்தை திருப்பினாள்.
இரவு தன்னுடைய தீராத மோகத்திற்கு வடிகாலாக தன் உடலை பரிசளித்து, இருவருக்குமான காதல் லீலைகள் அடங்கிய பின் தன்னுடைய நெஞ்சத்தையை மஞ்சம் ஆக்கி அதில் உறங்கியவள்,
விடிய எழும்பும் பொழுது கன்னத்தில் முத்தமிட்டு, தன் தலை முடியை கலைத்து என விளையாடியவள், வேலைக்கு வரும் பொழுது அவன் கொடுத்த உதட்டு முத்தத்திற்கு மயங்கி, கிறங்கியவள் இப்பொழுது முகத்தை திருப்ப, வேந்தனின் கண்கள் சிரித்தது.
எல்லோருக்கும் டிக்கெட் கொடுத்து பஸ் நகர தொடங்கியவுடன் அவளின் அருகில் வந்து அவளை இடிப்பது போல அமர்ந்தவன், மகனை தன் மடிக்கு மாற்றி, அவளை பார்த்து கண்ணை சிமிட்ட, அவள் தாடையை தோளில் இடித்து நொடிக்க, ‘என் ராங்கிக்கு இன்னும் கோபம் போகலை போல’ என எண்ணியவன் பஸ்சில் உள்ளவர்கள் யாரும் அறியாத வண்ணம் அவள் காதுக்கருகில் இரகசியம் பேசுவது போல வந்தவன் தன் உதட்டை அவளின் கன்னத்தில் மென்மையாக யாரும் அறியாமல் உதட்டை பதித்து “கோபம் போயாச்சா” எனக் மெதுவாக கேட்க,
கன்னத்தில் இருந்த அவனின் எச்சிலை துடைத்து விட்டவள், கண்களால்அவனை பஸ்பமாக்க,
அவளின் கோபம் இன்னும் இறங்காமல் இருப்பதைக் கண்ட வேந்தன், “வீட்டுக்கு போடி வந்து சமாதானப்படுத்துறேன்” என்க,
‘வீட்டுக்கு போனால் கணவன் பேசியே மயக்கிவிடுவான்’ என எண்ணியவள். “நான் எதுக்கு உன் வீட்டுக்கு வரணும், நான் என் பிள்ளைகளை கூட்டிட்டு அம்மா வீட்டுக்கு போறேன். அங்கே தான் ஒரு மாதத்திற்கு நிற்கப்போறேன்,நீ போய் உன் வீட்டில் தனியாக கிட” எனக் தமிழும் கொதிக்க,
குழந்தைகள் பிறந்தபொழுது கூட தன்னை விட்டு போகமாட்டேன் என்று தன்னுடன் இருந்தவள் இப்பொழுது ஒரு மாதம் இருக்க போகிறேன் என்று சொல்ல,”அம்மா வீட்டுக்கா.. ஒரு மாதமா.. ” என சுருதியை கூட்டி கேட்டான் வேந்தன்.
வயது கூடியவனை மரியாதையாக பேசவேண்டும் என்ற எண்ணப்பாடே இல்லாமல் “ஆமாண்டா ..” என அவளும் அதே சத்தத்தில் பதிலளிக்க..
பஸ்சில் ஆட்கள் தங்கள் சத்தத்தில் திரும்பி பார்ப்பதைக் கண்ட வேந்தன், சத்தத்தை குறைத்து, “அடியேய் எனக்கு வேலை யிருக்கு நீங்கள் மட்டும் அந்த வெளியூரில் நடக்கும் கோவிலுக்கு அப்பா, அம்மா கூட போய்விட்டு வா என்றதுக்கா மூட்டை முடிச்சை கட்டிட்டு உன் அம்மா வீட்டுக்கு கிளம்பி விட்டாய்” என பல்லை கடித்த படி கேட்க,
“ஆமா நீ எங்களோட கோவிலுக்கு வராமல் வேலையை கட்டிட்டு அழு, நான் என் அம்மா வீட்டுக்கு நடையை கட்டுகிறேன்” என்று அவளும் சொல்ல,
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
வெளியூரில் நடக்கும் கோவில் திருவிழாவில்,தேர் திருவிழாவிற்கு மட்டும் ஓடர் வர குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் எல்லோரும் செல்ல, அவனுக்கு லீவு தர மாட்டேன் என்று மேலிடம் செல்லி விட்டது. அதனால் தமிழினியை குழந்தைகளை கூட்டிட்டு செல்லுமாறு சொல்லிவிட்டு அவன் வேலைக்கு வந்துவிட்டான். அவனின் ராங்கி அவன் வரமாட்டேன் என்று சொன்ன கோபத்துடன் தாய் வீட்டுக்கு கிளம்பி நிற்கிறாள். அவன் அவளை சமாதான படுத்த விளைய,
அவனின் பேச்சுக்கு சமாதானம் ஆகாதவள், அவனை பஸ் சீட்டிலிருந்து “போடா..” எனத் சீற்றத்துடன் தள்ளிவிட, சீட்டின் அரும் பொட்டில் இருந்தே மனைவியுடன் கதைத்து கொண்டு இருந்தவன் சீட்டிலிருந்து கீழே விழப் பார்க்க, அந்த கோபத்துடன் “என்னடி..” என்று கத்தியபடி எழுந்தவனுக்கு ,அவன் அப்பொழுது தன்னுடைய அறையில் இருப்பதும் தான் கண்டது ஒன்றும் நிய காட்சி யல்ல கனவு காட்சி எனப் அப்பொழுது தான் புலப்பட்டது.
தன் குடும்பமே சேர்ந்து நேற்று தமிழினியை மனைவி என்ற ஸ்தானத்தில் பேச மனம் அதையே சிந்தித்தபடி இருந்ததினால் தோன்றிய கனவு என்று புரிந்தது.
திரும்ப படுக்க மனம் இன்றி தலையணையை கட்டிலில் சாய்த்தபடி கண்ணை மூடி யோசித்தவனுக்கு, அந்த காட்சி தன் கண்ணுக்கு முன்னால் திரும்பவும் தத்துரூபமாக தோன்றி மறைய, அதை மீட்டிப்பாத்தவனுக்கு தமிழினி மேல் கோபம் எல்லாம் வரவில்லை.
அங்கே இருவருக்குமான அந்நியோன்யமும், தான் வரமாட்டேன் என்று சொன்னதால் உண்டான கோபமுமே தெரிந்தது. அங்கே பிடித்தமின்மை என்பதோ அவளை வேந்தனுக்கு பிடிக்காது என்பதோ கொஞ்சமும் தெரியவில்லை.
இவ்வளவு நாளும் தமிழினியை பொருட்படுத்தாதவன், இன்று அவளைப் பற்றி சிந்தித்தான்.
அவனுடைய பஸ்சில் தான் இரண்டு வருட காலமாக வருகிறாள். அவளின் வகுப்பின் நேரத்திற்க்கு ஏற்றபடி வரும் நேரமும் போகும் நேரமும் மாறும். அதனால் சில நாட்களில் காணுவான்.சில நாட்கள் காணமாட்டான்.
வருபவள் யன்னல் சீட்டுக்கு அருகில் தான் போய் இருப்பாள். அவள் இருக்கும் பொழுது யன்னல் கதவு முழுதாக திறந்து இருக்கும். அவன் கூட சில நேரம் நினைப்பான். ‘வயதுப் பெண்கள் முடி கலையாமல் தானே யூனிவெர்சிட்டிக்கு போக விரும்புவார்கள் இவ என்ன பாப்பரப்பா என முடி கலைந்த படி யூனிவெர்சிட்டிக்கு போகிறா’ என நினைப்பதுண்டு. அப்படி அவள் உலகில் சந்தோசமாக வலம் வருபவள் தன்னையும் சந்தோசமாக வைத்துக்கொள்வாள்.அதில் அவனுக்கு துளியும் ஐயம் இல்லை.
அவளை மனைவியாக கனவில் கண்டவனுக்கு, அவள் மேல் காதல் பிறந்து விட்டதா எனக் கேட்டால் தெரியவில்லை.
வீட்டிலிருப்பவர்களுக்கும் அவளை பிடித்து இருக்க, அவனுக்கு அவள் மேல் பிடித்தம் தோன்றினாலும், சாதி என்ற அரக்கன் இருவருக்கும் இடையே இருக்க, கல்யாணம் என்பது சாத்தியமா என யோசித்தான்.
பிராமண குடும்பத்தில் பிறந்த ஒரு பெண்ணை ஒரு மேளம் அடிக்கும் குடும்பத்தில் உள்ள பையனுக்கு கல்யாணம் செய்து தருவார்களா என்றால் நிச்சயம் இல்லை.
இன்னுமே இந்த சாதி பார்த்து கல்யாணம் செய்வது என்பது ஓய்வது போல இல்லை.
அவர்கள் குடும்ப பழக்க வழக்கங்களுடன் எங்கள் குடும்ப பழக்கங்கள் ஒத்து வருமா என்று கேட்டால் இரு வீட்டிலும் மரக்கறி தான் உண்பது தவிர மிகுதி ஒன்றுமே ஒத்துப் போகாது. இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடக்குமா என யோசித்தவனுக்கு அது சாத்தியப்படாத ஒன்றாகவும்,அவனுக்கு மனைவியாக கனவில் வந்தவள் நியத்தில் வரவே முடியாது என்பதும் புரிபட்டது.
ஏதோ தன்னுடைய பொருள் களவு போனது போல முகத்தை சோகமாக வைத்தபடி இருந்தவனுக்கு,
கண்ட கனவின் தாக்கம் அவனை விட்டு போக மாட்டேன் என்று அடம்பிடித்தது.அவன் மனம் வேறு தமிழினி மனைவியாக வந்தால் நன்றாக இருக்கும் என்பது போல வேந்தனுக்கு எதிராக சதி செய்ய,
உடலும் அப்பொழுது தான் தன் பிரியமானவளின் உடலை சுகித்து விட்டு வந்தது போல், உடம்பின் செல்களும் அவளைக் கேட்டு அடம் பிடிக்க, அவனிற்கு தான் உடலுடனும், மனதுடனும் போராட வழி தெரியாமல் திண்டாடினான்.
அவனின் மூளைக்கு சூழ்நிலைகள் புரிந்தாலும் மனது தமிழினியை மனைவியாக கேட்டது.