IMK 16
Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் 16
மேகா வீட்டுக்காரர்கள், சந்துரு வீட்டுக்காரர்கள் எல்லாம் ஹோச்பிடலுக்கு வந்தாலும் தமிழினி அவசர சிகிச்சை பகுதியில் அனுமதித்து இருக்க, பார்க்க யாருக்குமே அனுமதியில்லை.
மேகா குடும்பத்துக்கு துணையிருப்பது போல, சந்துரு குடும்பமும் அங்கேயே தங்கிவிட்டது.
வேந்தன் தமிழினியை பார்க்காமல் அங்கே இருந்து நகருவதாக இல்லாமல் அவசர சிகிச்சை பகுதியில் உள்ள ஒரு இருக்கையை பிடித்து அமர்ந்து விட்டான்.
அவனுக்கு அருகிலேயே தியாகராஜா கலங்கிப்போய் அமர்ந்து இருந்தாலும், இருவருக்குமே உள்ளே இருப்பவள் எந்த பாதிப்பும் இல்லாமல் மீண்டு வந்துடனும் என்ற வேண்டுதலுடன் அவசர சிகிச்சை பகுதியை வெறித்திருந்தவர்களுக்கு, அருகில் உள்ளவரை கவனிக்கும் எண்ணம் கூட இல்லை.
சிவகாமியின் பக்கத்தில் மேகாவின் குடும்பம் அமர்ந்து ஆறுதல் வார்த்தைகளை கூறிக்கொண்டு இருக்க, அவர்களுடன் சீதாவும் தன் குடும்பம் போல சேர்ந்து கொண்டார்.
அருண் மொழி அங்கே ஓரமாக கண்ணீர் வழியும் கண்களுடன் நின்று இருக்க, அமுதன் ஹாய் ப்ரோ நான் அமுதன் என்று அவனை அறிமுகம் செய்துவிட்டு அவனுடன் நின்று கொண்டான்.
இப்படி எல்லோரும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஆறுதலாக இருக்க, அங்கே இருப்பவர்களுக்கு சிறிது உணவு ஆவது ஈயவேண்டுமே என்று இசையரசன் டீயை வேண்டினால் தியாகராஜா குடும்பம் குடிக்க மாட்டார்கள் இதுவே கை படாமல் மெஷினில் செய்த உணவாக சோடாவையும் பிஸ்கட்டையும் வேண்டி வர, அமுதன் மட்டுமே கொஞ்சம் பிஸ்கட் சாப்பிட்டான்.
தியாகராஜாவிற்கும், சிவகாமிக்கும், வேந்தனுக்கும் வேண்டிய உணவுகள் குப்பை தொட்டிக்குள் தான் சென்றது.
தமிழினிக்கு சுயநினைவு வந்து அவள் உயிருக்கு பாதிப்புகள் இல்லை என எல்லா பரிசோதனைகளும் செய்ய என ஐந்து மணித்தியாலங்கள்கடந்த பின்னே, அவளை நோர்மல் வாட்டுக்கு மாற்றினார்கள்.
நோர்மல் வாட்டுக்கு மாற்றிய பின்பு,தமிழினியின் தாய் மட்டுமே அவளுடன் இருக்க அனுமதியளிக்கப்பட்டது.
பார்வையாளர் நேரத்திற்கு மட்டுமே நோயாளியை பார்க்க அனுமதிப்போம் என்று அங்கே இருந்த தாதி சொல்லிவிட,அந்த நேரத்திற்காக மற்றவர்கள் காத்திக்கிடக்க வேண்டிய நிலை.
தமிழின் தாய் கதவை திறந்து கொண்டு உள்ளே செல்ல,தமிழினியின் உடம்பில் சில கீறல்களுடனும், சில கட்டுக்களுடனும் ஹாஸ்பிடல் மெத்தை உள்வாங்கியிருந்தது.
தமிழினியின் தாய் மகள் அரும் தப்பில் தப்பிவிட்டாள் என்பதை இன்னுமே நம்ப முடியாமல் அவளின் அடிபடாத இடங்களை உணர்ச்சி குவியலோடு கண்ணீருடன் தடவி பார்த்தார்.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
அவரின் தடவலில் உடலை அசைத்து கண்ணை முழித்து பார்த்தாள்.
கையினை அசைத்தால் சேலைன் ஏறும் கை வலியெடுக்க கூடும் என்று எண்ணி,அவளின் சேலைன் ஏறும் கையினை பற்றி ஆடாமல் பிடித்தவர் “பார்த்துடா ஆட்டதை, சேலைன் ஏறுது” என்று சொன்னார்.
தாயைக் கண்டு புன்னகைக்க முயற்சித்தாள் தமிழினி.
மகளின் உதடு பிரியாத புன்னகையில் “உனக்கு ரொம்ப வலிக்குதுடா, சரியாகிடும்டா” என அவளின் அடிபட்ட இடங்களில் அவளுக்கு வலிக்காதவாறு மெதுவாக தடவிக் கொடுக்க,
“அத்தான் எப்படி இருக்கிறார்? அவருக்கு ஓகேயா” எனக் திக்கி திணறி, நடந்தது ஏதும் அறியாமல் கேட்க, சிவகாமிக்கு கண்கள் பொங்கிவிட்டது.
சிவகாமி விம்மியபடி, “அவன் நம்மளை எல்லாம் தவிக்க விட்டுட்டுட்டு போயிட்டான்டி” என ஹாஸ்பிடல் என்பதனையும் மறந்து நெஞ்சில் அடித்த படி அழுதார்.
“என்ன?” என படுத்து இருந்தவள் சட்ரென்று எழும்பி உட்கார்ந்து விட்டாள். அவளின் உடலில் அங்கங்கே வலி உயிர் போனாலும், அதிர்ச்சியில் அவளின் கண்களில் இருந்தும் கண்ணீர் சுரக்க, நம்ப முடியா தன்னமையோடு தாயை வெறித்தாள்.
தமிழினியிடம் இந்த தகவலை சொல்லியிருக்க கூடாதோ என சொல்லிய பின்பே அவரின் மூளை இடித்துரைக்க, தன் அழுகையை புடவை தலைப்பை வாயில் வைத்துக்கொண்டு கட்டுப்படுத்த முயன்றார்.
அவரால் முடியாமல் கேவிக்கொண்டும் கண்ணீரை சொரிந்து கொண்டும் தமிழினியை பார்க்க, அவளின் பார்வை இப்பொழுது சுவருக்கு தாவி அங்கே வெறித்துக்கொண்டு இருந்தது.
‘இன்று தான் தன்னுடன் வழக்கடாமல் தன்மையாக கதைத்தான். அது அந்த ஆண்டவனுக்கு பொறுக்க வில்லையா? உடனே தன்னிடம் அழைத்துக்கொண்டு விட்டாரே, தன் அத்தை ஒற்றை மகனை பறிகொடுத்துவிட்டு எப்படி இனி வாழுவார், இடிந்து போய்விட மாட்டாரா? ‘ தனக்குள் மருகி கொண்டு இருந்தவள்,
“அத்தை எப்படிம்மா தாங்குவாங்க” என்று தாயிடம் அழுகையுடன் கேட்டாள்.
அவளின் அத்தை தாங்க முடியாத பாரத்துடன் தமிழினியை நோக்கி சொல் அம்புகளையும் விட்டுச் சென்றதை சொன்னார் சிவகாமி.
தமிழினிக்கு அத்தையின் மீது கோபம் எல்லாம் வராவிடினும், என்னுடன் வராவிடின் தப்பியிருப்பாரோ என ஒரு வித அழுத்தம் மனத்தை கொன்றது. அதை தாயிடம் இருந்து மறைத்தவள் மௌனத்தை கடைப்பிடித்தாள்.
சிவகாமிக்கு அவரின் நத்தனாரை பற்றி தெரியாதா? அவர் தமிழினியை தன் அன்னையின் மறு பதிப்பாக பார்ப்பவர், அப்படி பட்டவர் மகனை இழந்ததால் ஆரம்ப கட்ட அதிர்ச்சியில் விடு பட்ட வார்த்தைகள் அவை. அதனால் அதை பெருசு படுத்த கூடாது என எண்ணினார். அதை மகளுக்கும் சொல்லி புரிய வைக்க முயற்சித்தார்.
இப்படியே தாயும் மகளுக்குமாக அழுகை, ஆறுதல் என நேரம் பறக்க, பார்வையாளர் நேரம் வர எல்லோரும் கூட்டாக உள்ளே வந்தார்கள்.
மேகா குடும்பத்துடன், சந்துரு குடும்பமும் இருக்க அவர்களை தமிழினி எதிர் பார்க்க வில்லை. தாய் மேகா குடும்பம் வெளியே காத்துருக்கிறார்கள் என்று சொல்லும் பொழுது மேகாவின் குடும்பத்தை மட்டுமே நினைவில் கொண்டாள்.
சீதாவிற்கு அவளின் அடிபட்ட தோற்றத்தை பார்த்து கண்ணீர் அரும்பிவிட்டது. மேகாவும் நண்பியின் கையை போய் பிடித்துக்கொண்டு ஆறுதலாக நின்று கொண்டாள்.எல்லோருமே கட்டிலை சுற்றிக்கொண்டு நின்றாலும் தமிழினியின் பார்வை என்னவோ வேந்தனிடம் அடிக்கடி சென்று வந்தது.
அதுவும் வேந்தனை கண்டதும் தமிழினியின் கண்களுக்கு ஒளி வந்தது போல் ஒரு பிரகாசம். அவன் பேசி சென்றது மனதிலே உறுத்திக்கொண்டு இருந்தாலும் அவனை கண்டவுடன் தமிழினியின் மனம் அவனின் ஆறுதல் வார்த்தைகளுக்காக ஏங்கியது.
அதுவும் தன்னாலோ இப்படியெல்லாம் ஆகிவிட்டது என்று அவளின் மனது அழுது கொண்டு இருக்க, அவன் சொன்னால் அந்த எண்ணம் அடங்காதா என்று காத்திருந்தாள்.
வேந்தன் தமிழினியின் தோற்றத்தை எங்கங்கே அடிபட்டு இருக்கிறது என்ற தவிப்பில் அவனின் லேசர் பார்வையினால் ஆராய்ந்தான்.
உடம்பில் எண்ணற்ற சிறு காயங்களும், கையெழும்பு மட்டும் உடைந்ததின் அடையாளமாக கட்டுப்போட்டு இருந்தது. முகத்திலும் ஒன்று இரண்டு காயங்கள் தென்பட்டாலும் தலையை கெல்மேட் காப்பாற்றியிருக்க அடிகள் பலமில்லை. இதெல்லாம் ஒன்றுமேயில்லை எல்லாமே மாறிவிடும் அவள் பிழைத்து வந்ததே போதும் என்ற நினைப்பில் பார்த்துக்கொண்டு நின்றான்.
பெண்ணவளின் கண்களின் கண்ணீர் துளிகள் காய்ந்து போய் இருந்ததுடன், கண்ணீர் இப்பவோ அப்பாவோ என விழிகளில் தேங்கியிருக்க வேந்தனை கண்டவுடன் கண்கள் உடைப்பு எடுத்தது போல் வெளியே பாய்ந்தது.
எல்லோருமே அவள் உயிர்பிழைத்து வந்து தங்களை பார்த்தத்தினால் அழுகிறாள் என எண்ணி ஆறுதல் கூற,
அந்த கண்ணீருக்கு சொந்தக்காரன் ஆகிய வேந்தன்அவளை சுற்றியே எல்லோரும் நின்று இருக்க தான் அவளிடம் தனித்து பேசி ஒரு ஆறுதல் மொழியையும் இப்பொழுது கொடுக்க முடியாதே என்று தயங்கி நின்றான்.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
எல்லோருமே அவளின் நலனை கேட்டு அவளை சமாதான படுத்த முயற்சி செய்ய தமிழினியும் வேந்தனை தவிப்பாக பார்த்தவாறே அவர்களுக்கு ஏற்றவாறு பதில் உரைத்தாள்.
கட்டிலை சுற்றி ஆட்கள் கூடியிருக்க, அங்கே வந்த தாதி ஒருவர் “அவங்களுக்கு ஒன்றும் இல்லை, கொஞ்ச நாளில் இந்த காயம் எல்லாம் மாயமாக போய்விடும், அதுக்கு பிறகு பழைய மாதிரி வந்திடுவாங்க, நீங்கள் எல்லாம் அழுது அந்த சின்னப்பிள்ளைக்கு பயம் கட்டாதிங்க, ” என்று சொன்னவர், அவளுக்கு ஏறிக்கொண்டு இருந்த சேலைன் சரியாக இறங்குகிறதா என்று செக் பண்ணிவிட்டு, “எதுக்கு இவ்வளவு பேரும் கூட்டமாக நிக்கிறிங்க அந்த பெண்ணுக்கு காத்து வர வேண்டாமா, எல்லோரும் வெளியே போங்க ” என்று கடிந்து கட்டிலை சுற்றி நின்றவர் எல்லோரையும் வெளியேற்றினார்.
எல்லோருமே வெளியே செல்ல, வேந்தன் மட்டும் அவளிடம் ஒற்றை வார்த்தையாவது பேசிவிட்டு செல்லலாம் என்று தேங்கினான்.
எல்லோருமே வெளியே சென்று விட்டது உறுதியானவுடன்,சேலைன் ஏறிக்கொண்டு இருந்த கையை வலிக்காமல் பற்றி தன் உள்ளங்கையில் வைத்து அழுத்தியவன், “உனக்கு ஒண்ணுமில்லைடி” என்று ஆறுதல் கூற,
“இனி நீங்க சொன்னது போல நல்லாவே அனுபவிக்க போகிறேன்” என்று கண்கள் கலங்க சொல்ல,
“உன்னை அப்படி தனியே எல்லாம் அனுபவிக்க விடமாட்டேண்டி என்ன கஷ்டம் வந்தாலும் நானும் உன்கூட சேர்ந்து அனுபவிக்கிறேன்” என்று வேந்தனும் சொல்ல ,
“எங்க அத்தை..என்னை” என்று தமிழினி மீண்டும் கண்ணீருடன் ஆரம்பிக்க,
“அவங்களை விடு… இப்படி பெத்த பையனை இடையில் வாரிக் கொடுத்தால் எந்த தாயால் சும்மா இருக்க முடியும், அது தான் யோசிக்காமல் வார்த்தையை விட்டு இருப்பாங்க, நீ மட்டும் அவர்கள் முன் போய் நில்லேன், நீயாவது உயிருடன் இருக்கிறாய் என்று சந்தோசம் தான் படுவாங்க” என்று ஆறுதல் மொழி கூறினான்.