IMK 15
Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் 15
தமிழினி மோட்டார் வண்டியில் இருந்து கொண்டு, ஜெயகுமாரனுக்கு தெரியக்கூடாது என நினைத்து அழும் விழிகளை இடை இடையே புறங்கையினால் துடைத்துக் கொண்டு வரத் தான் ஜெய்குமாருக்கு ஒரு விசயம் தலையில் சம்மட்டியால் அடித்தது போல உறைத்தது.
அது என்னவென்றால் தான் இதுக்கு மேலும் வார்த்தைகளை அள்ளிவீசும் பொழுது தட்டிவிட்டு போய் விடும் தமிழினி, வேந்தனின் ஒற்றை வார்த்தைக்காக விடாமல் கண்ணீர் சொறிவது, தமிழினியின் கண்ணீரும் அவனுக்கு புதிது.
அவள் எல்லாத்தையும் சிரித்தபடியே கடந்தும், அதிகமாக வாயாடியும் தான் பார்த்து இருக்கிறான்.
ஒருத்தரின் சிறு வார்த்தை பிரயோகமும் நெஞ்சின் ஆழம் வரை சென்று வலிக்கிறது என்றால் அவர் நம் மனதின் எத்தகைய இடத்தில் குடியிருக்க வேண்டும். அது தந்தைக்கும், சகோதரனுக்கும் மேலான இடமாக இருக்க வேண்டும். அதுவும் வேந்தன் ஆண்மகன் எனும் பொழுது நிச்சயமாக காதல் என்றே பொருள் படக்கூடியது.
காதலாக இருக்குமோ எனச் சந்தேகம் தோன்றியதும், தமிழினியிடம் கேட்டு தெளிவு படுத்த எண்ணி, அருகில் யாருமற்ற ஒரு இடத்தில் மோட்டார் வண்டியை நிறுத்தி, ஸ்டாண்ட் போட்டவன், “இறங்கு உன்னுடன் கதைக்கணும்” என்றான் சீரியசாக,
அவளும் கீழே இறங்கியபின், தானும் இறங்கி நின்றவன் அவளின் முகத்தை பார்த்தபடி, “உனக்கு அவரை முதலிலே தெரியுமா? என்ற கேள்வியை தமிழினியை நோக்கி வீசினான்.
அவளும் அவனுக்கு உண்மையான பதில் அளிக்காவிட்டால் தேவையில்லாத சந்தேகங்கள் தோன்றும் என,”என் பஸ் கண்டக்டர், இரண்டு வருடமாக அவரை அடிக்கடி பார்ப்பேன்,மேகாவின் அக்காவிற்கு இவரின் அண்ணாவை தான் பேசியிருக்கிறாங்கள் ” என்று சொல்ல,
அவளை கூர்ந்து நோக்கியபடியே ,”உனக்கு அவரின் மீது ஏதும் அபிப்பிராயமா?” என்று கேட்க,
தமிழினிக்கும் வேந்தனின் மீது தோன்றும் உணர்வுக்கு பெயர் வைக்க தெரியாமல் தான் சுற்றிக்கொண்டு இருக்கிறாள்.
அவன் வேண்டவே வேண்டாம் என்று ஒரு மனம் சொல்ல, இன்னொரு மனமோ அவன் தன் வாழ்க்கைக்குள் வந்தால் தன் மிகுதி வாழ்க்கை சந்தோசமாக போகும் என்று சொல்ல அவள் இரண்டுக்கும் நடுவே இருந்து தடுமாறிக்கொண்டு இருக்கிறாள்.
அதுவும் கொஞ்ச நாட்களாக தந்தைக்கும் அவனுக்கும் இடையில் இருந்து போராடிக்கொண்டு இருக்கிறாள். அவன் கிடைத்தால் தந்தையின் உறவை முற்றாக உதறவேண்டும். அது இன்னும் வலித்தது அதனால் நிலையாக ஒரு முடிவு எடுக்க முடியாமல் இருக்கிறாள்.
அப்படியிருக்க ஒன்றும் இல்லை என்று ஜெயகுமாரனிடம் அடித்துச் சொல்ல முடியவில்லை. அதனால் பதில் சொல்லாமல் தடுமாறிக் கொண்டு இருக்க,அவளின் தயக்கம் எதையோ உணர்த்த “மாமா ஒத்துக்க மாட்டார் தமிழ்” என்றான் அழுத்தமாக,
வேந்தனால் தன் மனம் சதிராட தொடங்கி விட்டது என்று தெரிந்தும் அப்பா சம்மதிக்க மாட்டார் என்பதினால் தானே அவளும் கமுக்கமாக இருக்கிறாள்.அதனால் தெரியும் என்பது போல கண்ணீர் பொங்க தலையை ஆட்டினாள்.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
இவ்வளவு நாளும் அவளுடன் ஏட்டிக்கு போட்டியாக நிற்பவனுக்கு, அவளின் கண்ணீரை கண்டவுடன் கல்லுக்குள் ஈரமாக, “சரி விடு.. என்ன நடக்குது என்று பொறுத்து இருந்து பார்ப்போம். எல்லாம் விதிப் படி தானே நடக்கும்” என்று சமாதானமாக சொன்னவன் தொடர்ந்து,” சரி வண்டியில் ஏறு” என்று தான் ஏறி தமிழினியையும் ஏற்றிக்கொண்டு மோட்டார் வண்டியை எடுத்தான்.
தன் மனைவியாக வரித்துக்கொண்டவளுக்கு, தன்னை விட இன்னொருத்தன் மீது மனது இலயிக்கிறது எனும் பொழுது அவனின் மனதும் காயப்படுகிறது தான். அதுக்காக அவளின் முழுவிருப்பம் இன்றி அவளை திருமணம் செய்ய பிறந்ததில் இருந்து பழகிய பாசம் விடவில்லை. அதனால் அவனின் மனதை அதுக்கு தகுந்தது போல் தயார்படுத்த வேண்டும் என்று எண்ணினான்.
அந்த சிந்தையிலே வண்டியை ஒட்டிக் கொண்டு இருந்தான்.
குறுகிய வீதியிலிருந்து மெயின் றோட்டுக்கு வந்த லாரிக் காரனுக்கு இவர்களின் வண்டி கண்ணுக்கு தெரியவில்லை என்பதினால் ஒரே ஒரு அடிதான். அதில் ஜெயகுமாரன் வண்டியின் சக்கரத்தில் சிக்கிக் கொள்ள, மோட்டார் வண்டியில் பின்னுக்கு இருந்த தமிழினி தூக்கி எறியப்பட்டு வீதியின் ஓரத்தில் விழுந்ததினால் அடிகள் பல பட்டு இருந்தாலும் மயிரிழையில் உயிர் தப்பினாள்.
வீதியால் சென்றவர்கள் ஐயோ எனச் சத்தமிட்டபடி ஓடிவருவதற்கு இடையில், அந்த கோரவிபத்து சில நொடிகளில் தன் ஜாலங்களை காட்டிவிட்டு, ஒரு உயிரை பலி கொண்டு சென்றுவிட்டது.
ஒரு உயிரற்ற சடலத்தையும், ஒரு உயிர் இருப்பதையே மறந்து இருந்த பாவையையும், ஏற்றிக்கொண்டு அம்புலன்ஸ் விரைந்து ஹோச்பிடலை அடைய, இரண்டு வீட்டு பெற்றோர்களும் விஷயம் அறிந்து ஓடிவந்து போன உயிருக்கு கதறிக்கொண்டு இருந்தார்கள்.
மகன் இறந்து, தமிழினி மட்டும் தப்ப மகனை பறிகொடுத்த துக்கத்துடன் சுயநினைவின்றி இருந்த தியாகராஜாவின் அக்கா வார்த்தைகளை கொடுவாளாக கோர்த்து, தமிழினியை கூட்டிக்கொண்டு போய் தன் பையனை சாகடித்து விட்டாள் எனச் சாடி, மண்ணை அள்ளி தூற்றி என ஹோச்பிடலையே இரண்டாக்கி விட்டார்.
போகும் பொழுது தன் அண்ணாவிடம் இறந்த வீட்டுக்கு கூட நீயும் உன் குடும்பமும் வரக்கூடாது என்று கட்டளையுடன் செல்ல,
தன் கூட பிறந்த அக்காவை இதயம் துடிக்க பார்த்துக்கொண்டு இருந்தார் தியாகராஜா.
அவருக்கு பேசுவதற்க்கோ, செய்வதற்கோ ஒன்றுமே இல்லாதது போல மனம் சூனியமாக காட்சியளிக்க, தமக்கை பேசுவதை கேட்டுக்கொண்டு சிலையாக நின்றுவிட்டார்.
ஆனால் தன் மருமகனின் இறுதிக்கிரிகைக்கு சென்றே தீருவேன் என்ற உறுதி மட்டும் கண்ணில் தெரிய உள்ளே உயிருக்கு போராடும் மகளுக்காக காத்து இருந்தார்.
தமிழினியை சிறப்பு சிகிச்சையில் சேர்த்த பின் தீவிர சிகிச்சைக்கு பின்னே அவளுக்கு சுயநினைவு திரும்பியது.
தியாகராஜா மகளின் உயிருக்கு ஆபத்து இல்லை எனும் செய்தி கேட்ட பின்னே மூச்சையே ஒழுங்காக சுவாசித்தார். அது மட்டும் அவர் யாருடனும் பேச வில்லை.
அருண்மொழியிடம் தமிழினியின் உடமைகளை கையளித்து விட அதில் இருந்த தொலைபேசி நிறுத்தாமல் அழைக்க அது மேகா என அறிந்த அருண்மொழி அழுகையுடன் விபத்தை பகிர்ந்து கொண்டான்.
அவளும் அடித்து பிடித்து வந்துகொண்டு இருக்கவே, இசையரசன் போன் செய்ய அவர்களுக்கும் தகவல் பரிமாறப்பட்டது.