IMK 14
Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் 14
சீதாவின் உண்ணும் நாளங்களை தூண்டிவிட்டு அவரை சாப்பிட வைப்பதற்காகக் பிரியாணி பாசலை அவரின் முன் நீட்டி “அம்மா பிரியாணி நிறைய மரக்கறி போட்டு, இஞ்சி பூண்டு வாசத்தோட சுடசுட இருக்கு சாப்பிட்டு பாருங்க” என மீண்டும் இசையரசன் சொல்ல,
“அம்மா டீ வேண்டாம் என்றால் உங்களுக்கு பிடிச்ச எலுமிச்சை யூஸ் போட்டு தரவா?” என்று அமுதனும் விடாமல் கேட்டான்.
சீதா அமுதனை நக்கலாக பார்த்து, “உனக்கு உன் மண்டை நல்லா இருக்கிறது பிடிக்கலையா? சுட சுடத் தேனீர் அபிசேகம் தேவைப்படுது போல, கொண்டுவா.. மண்டையிலே கவித்துவிடுறேன்” எனக் கோபமாக சொல்ல,
‘ஆத்தி.. தாய்க்கிழவி முழுசா சந்திரமுகியாக மாறிட்டு’ என எண்ணியபடி நெஞ்சில் கையை வைத்தபடி பின்னால் போனான் அமுதன்.
சீதா தன்னுடைய பெரிய மகனையும் நக்கலாக பார்த்து உனக்கும் அதுதான் எனப் பார்வையால் மிரட்ட,
தங்களுடன் தோழி போல் பழகும் தாயின் குணம் போய் ருத்திரகாளியாக முறைக்கும் அவரின் அந்த அவதாரம் புதுமையாக தான் இருந்தது அதனால் தாயின் பார்வையில் ஜெர்க் ஆகி நின்றுவிட்டான்.
தங்களை பெத்த நல்லவர் எங்கே எனத் தந்தையை கண்களால் தேட, வீட்டினுள் வந்த மனைவியின் கோப முகத்தை கண்டவுடனே சந்துரு அந்த இடத்திலிருந்து யாருக்கும் சந்தேகம் வராமல் மாயமாகிவிட்டார்.
அப்பா உஷாரகி தான் மட்டும் தப்பித்துகொண்டு தங்களை மட்டும் தாயிடம் மாட்டி விட்டதை எண்ணி மெலிதாக புன்னகைத்தவன், தாயை எப்படி சமாதான படுத்த எனப் பெரியாப்பாவை பார்த்தான்.
லிங்கம் பட்டிமன்றத்து நடுவர் போல, கதிரையின் இரு மருகிலும் கையை போட்டு கூலாக அமர்ந்து இருந்தார்.
லிங்கத்தை சீதாவின் கோபத்தை அடக்க கூட்டிட்டு வர, சீதாவின் கோபத்தில் நியாயம் இருப்பதாக பட்ட லிங்கம் அவரை சமாதான படுத்த போகவில்லை. அவராக சமாதானம் ஆகி வரட்டும் என்று மௌனமே காத்தார்.
இசையரசன் தன் பெரியப்பாவை வெட்டவா? குத்தவா? எனப் பாசப்பார்வை பார்க்க, அவர்களின் பார்வையை சளைக்காமல் எதிர் கொண்ட லிங்கம், “ஏன்டா அவளே சுடுறா வெய்யிலில் வந்து இருக்கிறா, அவளை கொஞ்ச நேரம் நச்சு பண்ணாமல் விடுங்களேன்டா” என்று சொன்னவர், வேந்தனை பார்த்து, “உனக்கு எப்படி ஒரு பெண் பிள்ளையிடம் கதைக்கணும் என்று தெரியாதா?, என்ன பழக்கம் இது, நாவடக்கம் என்பது பேச்சில் இருக்கனும்” என்று வேந்தனையும் கண்டிக்க தவறவில்லை.
வேந்தன் தமிழினியை ஜெய்குமாருடன் கண்ட எரிச்சலில், நரம்பு இல்லா நாக்கை கொஞ்சம் கூடுதலாக பயன்படுத்திவிட்டான். அது அவனுக்கும் பிழை என்று நன்கு புரிகிறது.
சும்மாவே கண்ணாமூச்சி ஆடும் தமிழினி இனி அவனின் கண் முன்னால் வரும் சாத்தியமே இல்லை, அப்படியிருக்க எப்படி அவளிடம் சென்று மன்னிப்பு கேட்பது என்று தான் புரியாமல் தவித்துக்கொண்டு இருந்தான்.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
இதில் சீதா வேறு மோட்டார் வண்டியில் வரும் பொழுது முழுவதும் திட்டிக்கொண்டு வர, வீட்டுக்கு வந்த பின் கோபம் போய்விடும் அவரிடம் ஏதும் நல்ல ஐடியா கிடைத்தால் போய் தமிழினியிடம் மன்னிப்பு கேட்டு விடலாம் என எண்ணி இருந்தவனுக்கு, வீட்டுக்கு வந்த பின்னும் தாயின் கோபம் இறங்காமல் உச்சாணி கொப்பிலேயே இருக்க, யாரின் முகத்தையும் நிமிர்ந்து நோக்க முடியவில்லை.
வேந்தனை கண்டு இன்னும் கோபம் கனன்ற சீதா, வேந்தனை கண்களால் பொசுக்கியபடி, “இந்த தடியனை நல்லா கேளுங்க அண்ணா, ஒரு பெண் பிள்ளையிடம் ஒழுங்காக கதைக்க முடியாட்டில் வாயை பசை போட்டு ஒட்டி வைத்து இருக்கனும். அதை விட்டுட்டு வார்த்தையை விட்டு அந்த பிள்ளையை நோகடிச்சு அதில் சுகம் காணுகிறவன் எல்லாம் ஆம்பிளையா, இதே இந்த வீட்டில் ஒரு பெண் குழந்தை இருந்து இருந்தால் இப்படி கதைக்க வருமா? எல்லாம் இவங்க அப்பாவை சொல்லணும், அவர் தான் மூன்றையும் கண்டித்து வைக்காமல் செல்லம் கொடுத்தார், எங்கே அவர்” என்று சீதா கணவனை தேடினார்.
சீதா தன்னுடைய தலையை தான் திருகுவார் என்று சந்துரு எப்பொழுதோ ஓடித் தப்பித்து விட்டாரே, அவர் எப்படி அங்கே இருப்பார்.
தந்தையை காட்டி கொடுக்க மனம் இல்லாமல், “அவருக்கு ஏதோ முக்கியமான வேலை” என்று இசையரசன் மழுப்பலாக சொன்னான்.
அப்பொழுது தான் அமுதனுக்கு தந்தை அங்கே இல்லாததே தெரிந்தது.
அவனும் அக்கம் பக்கம் என்று சுற்றிப்பார்க்க ஒரு துணுக்கு பின்னால் தந்தையின் தலை தெரிய, அங்கே நின்று கொண்டு மாட்டிவிட்டுடாதே எனக் கெஞ்சிக்கொண்டு இருந்தார் சந்துரு.
‘நைனா நான் உனக்கு ஹெல்ப் பண்ண வந்தால் நீ என்னை மாட்டிவிட்டு தப்பிச்சிட்டியா.. இரு நேரம் கிடைக்கட்டும் உனக்கு விபூதி அடிக்கிறேன்’ எனக் கறுவிக்கொண்டு, அம்மாவிடம் மாட்டி விடுவோமா என்ற யோசனையில் இருந்தான்.
“பெரிய வேலை, மனுஷன் என்ற கோபத்துக்கு பயந்து துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓடியிருப்பார், எப்படியும் வீட்டுக்கு தானே வரணும் வரட்டும் ” என்று கணவனை தெரிந்து சொன்னார் சீதா.
சொல்லவா என துணுக்கு பின்னால் நின்ற தந்தையை கண்டு கண்களால் சிரித்தபடி அமுதன் வாயை அசைக்க, சந்துரு கையை தலைக்கு மேல் எடுத்து கும்பிட்டு ப்ளீஸ் எனக் வாயை மட்டும் அசைத்து, சத்தம் கேட்க்காமல் கெஞ்சினார்.
வேந்தனை பார்த்தால் பூமிக்குள் புதைந்தது போல் தலையை குனிந்து அமர்ந்து இருந்தான்.
இசையரசன் தாய் பிரியாணியை தலையில் கவிழ்த்தது போல் நினைத்துக், பயப்பிராந்தியில் நின்று இருந்தான்.
இந்த வீட்டில் கடைசியாக பிறந்தாலும் என் தைரியம் யாருக்கும் இல்லை என தன்னை தானே பெருமை பட்டுக்கொண்ட அமுதன், ஒரு பெருமூச்சை வெளியிட்டு, தைரியத்தை வரவழைத்து, “அம்மா அவன் தெரியாமல் கதைச்சிட்டான். அவனை கூட்டிட்டு போய் தமிழ் அண்ணியிடம் மன்னிப்பு கேட்க்கிறோம்” என்று தாயை பார்த்து குனிந்து சொன்னான்.
“அதை செய்யுங்கடா முதலில், உன் தம்பி மன்னிப்பு கேட்டு அந்த பிள்ளை மன்னிச்சா தான் அடுத்த வேளை சோறு உங்களுக்கு, இல்லை பட்டினி கிடங்க, மூணு கழுதைகளுக்கும், ஆம்பிளை திமிர் அதை அடக்கணும் , ” என்று பொரிந்த படி சமையலறைக்கு செல்ல,
வேந்தன் பேசியிருந்தாலும், அண்ணனும், தம்பியும் அவனுக்காக சப்போட்டாக இருப்பதை கண்ட லிங்கம் அவர்களை புன்சிரிப்புடன் பார்த்து இருந்தார்.
தாயின் கண்ணுக்கு முன்னால் நின்றால் இன்னும் திட்டு விழும் என்று எண்ணிய இசையரசன் தன் இரு தம்பியையும் கூட்டிட்டு வந்து போட்டிக்கோவில் நின்று தாயை எப்படி சமாதானப் படுத்தலாம் என யோசித்தான்.
வேந்தன் கைகளை மார்ப்புக்கு குறுக்கே கட்டியபடி சுவற்றில் சாய்ந்து நின்று கொண்டு இருந்தாலும், தமிழினியிடம் எப்படி மன்னிப்பு கேட்பது என்றே ஓடிக்கொண்டு இருந்தது.
வீட்டில் உண்ணும் சாப்பிட்டுக்கு உலை வைத்த வேந்தனை கொலைவெறியோடு முறைத்த அமுதன், ” அண்ணா பெரிய அண்ணி கிட்ட தமிழ் அண்ணி நம்பர் இருந்தால் வேண்டுங்க, பார்த்து பேசி அவங்க மன்னிக்காட்டில் இவனை காலில் விழ விட்டுடலாம்.” என்றான்.
இசையரசனுக்கும் அது தான் சரியாகபட்டது. அதனால் தன் வருங்கால மனைவியாக வரப்போகிற பூர்ணிமாவிற்கு அழைப்பை மேற்கொண்டான்.
முதல் இரண்டு தடவை போன் எடுத்தும் எடுக்காதவள் மூன்றாம் அழைப்பிலேயே கைத்தொலைபேசியை எடுத்து ” என்னங்க.. இங்கே மேகாவின் பிரண்ட் தமிழ் பைக்கில் போகும் பொழுது டிப்பர் காரன் வந்து மோதிட்டான். பைக் ஓடிட்டு போன அவள் அத்தான் ஸ்பாட்டிலே இறந்திட்டார், தமிழும் சுயநினைவில் இல்லையாம் என்று நியூஸ் வந்திருக்கு, நாங்கள் ஹாஸ்பிடல் போறோம் போயிட்டு என்ன ஏது என்று பார்த்திட்டு கோல் பண்ணவா ” என அந்த புறம் இருந்து பூர்ணிமா படபடப்புடன் சொல்ல,
இசையரசனுக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. உடம்பும் பதட்டத்தில் நடுங்குவது போல இருந்தது.
தன்னுடைய உடம்பை நிலைப்படுத்திக்கொண்டு, “எந்த ஹாஸ்பிடல்..” எனக் கேட்க, “பெரிய ஆஸ்பத்திரி தான்” என்று பூர்ணிமா சொல்ல, அங்கே காரின் சீட்டில் பக்கத்தில் அமர்ந்து இருந்த மேகாவின் கேவல் சத்தம் ஓயாமல் கேட்டுக்கொண்டு இருந்தது.
“சரி நாங்களும் வாரோம்” என்று சொல்லி கைபேசியை நிறுத்தி வைத்தான் இசையரசன்.
வேந்தனை அளவில்லாத ஒரு துயருடன் நோக்கினான் இசையரசன்.
தன்னையே கேள்வியாக பார்த்துக்கொண்டு இருந்த தம்பிகளை கண்டு, அவர்களிடம் ஒன்றையும் கூறாமல் தன்னை கொஞ்சம் சமாளித்து கொண்டவன், “ஒண்ணுமில்லை ஒருக்கா ஹாஸ்பிடல் போகணும், இரண்டு பேரும் காரை ரெடி பண்ணுங்க, நான் போய் அம்மாவையும், அப்பாவையும் கூட்டிட்டு வாரேன்” என்று வீட்டின் உள்ளே ஓடிச்சென்றவன், தாயிடம் விசயத்தை கூற அதிர்ந்துவிட்டார் அவர்,
இன்று தான் தன்னுடைய மகன் அந்த பெண்ணை பார்த்து அனுபவிப்பாய் என்று வாய் வார்த்தையால் சாபம் ஈட்டு விட்டு வர அதையே தாங்க முடியாமல் தவித்தவருக்கு, கொஞ்ச நேரத்திலேயே அவனுடைய சாபம் பலித்ததை நினைத்து தாயுள்ளம் கொண்ட சீதாவின் மனம் பதைபதைத்தது.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
அதுவும் நிச்சயம் ஆகியவன் இறந்துவிட்டான் என்றால் அந்த பெண்ணின், ராசி நட்சத்திரம் எல்லாம் பேசி, வார்த்தையினால் வதைத்து, தங்களின் மனதில் உள்ள வக்கிரங்களை எல்லாம் அந்த பெண் மீது கொட்ட போகும் சமுதாயத்தினை நினைத்து மனம் கலங்கினார்.
அவரின் நெஞ்சில் தன் கைக்குள் அந்த பெண்ணை வைத்து பத்திரப்படுத்தும் வைராக்கியம். யாரும் அந்த பெண்ணை பார்வையால் கூட தப்பாக பார்க்க கூடாது என்ற இறுமாப்பும் சேர்ந்து கொண்டது.
தமிழினியை தன் மருமகளாக போகிறாள் என்று சொந்தமாக எண்ணிக்கொண்டு இருந்தவருக்கு, பெத்த பையனே வார்த்தையை விட்டு விட்டான் என்று வைத்து செய்தவர், மற்றவர்களை தமிழினியின் அருகில் நெருங்க விட்டால் தங்களுடைய விஷ நாக்கால் அவளை வதைத்துவிடுவார் என எண்ணியவர், நேரத்தை கடத்த விரும்பாமல் “வாடா போகலாம்” என்று சீதா கிளம்ப ஆயத்தம் ஆக,
லிங்கமும் அவர்களுடன் இணைந்து கொண்டார்.
சந்துரு ஒரு தூண் மறைவிலேயே அவ்வளவு நேரமும் பதுங்கிக்கொண்டு இருந்தவர், இசையரசன் சொன்னதை கேட்டு ஒரு நிமிடம் திகைத்தே விட்டார்.
மனைவியின் மனது படும் பாடு புரிந்து, சீதா எழும்பி வாசலுக்கு நடக்க ஓடி வந்து சேர்ந்து கொண்டார்.
சீதாவின் கையை இறுகப்பற்றி நானும் உன்னுடன் இருக்கிறேன் என்று ஆதரவு அளிப்பதாக இருந்தது சந்துருவின் செய்கை. அவரை கண்டு ஒரு வறண்ட புன்னகையை சிந்திய சீதா மௌனமாகவே அவருடன் நடந்து வாசலுக்கு வந்தார்.
வாசலை தாண்டி படிக்கட்டின் அருகே வரும் பொழுது,
அங்கே வேந்தன் அமுதனை மட்டும் வண்டியை எடுக்க அனுப்பியவன் அந்த இடத்திலே நின்று கொண்டு இருக்க, இசையரசன் தாயிடம் சொன்னதை கேட்டுவிட்டவன் வெளியே பரிதவித்து கொண்டு நின்றான்.
சீதா மகனை சலனமற்ற ஒரு பார்வை பார்த்தார்.
அந்த பார்வையை கண்டு மனம் சுருக்கென்று தைத்த உணர்வு. அவன் வேண்டு மென்று பேசவில்லை, ஏதோ அவசரப்பட்டு வார்த்தையை விட்டு விட்டான். இப்பொழுது பட்டுக்கொண்டு இருக்கிறான்.
தமையன் சொன்னதை கேட்டதிலிருந்து, இப்பொழுது தன்னவள் என்ன நிலையில் இருக்கிறாளோ என்று மனதுக்குள் அழுதான் வேந்தன். அவனுக்கும் தாளவில்லை.
தாயும் தந்தையும் ஏறிய பின், லிங்கத்தை இசையரசன் பத்திரமாக ஏற்றி தானும் ஏறிக்கொள்ள, வேந்தனும் விரைந்து சென்று வாகனத்தில் ஏற வண்டி புறப்பட்டது.
எவ்வளவு துரிதமாக தமிழினியை சென்றடைகிறோமோ அவ்வளவுக்கு நல்லது என சீதாவின் மனது ஆருடம் கூற வண்டி ஒட்டிக்கொண்டு இருந்த அமுதனை கண்டு “கெதியா போ..” என்று உந்தி தள்ளினார்.
சீதா வைத்தியசாலையில் காலை வைக்கும் பொழுதே நேரம் கடந்து, எது நடக்க கூடாது என விரும்பினாரோ அது தியாகராஜாவின் அக்காவினால் நடந்து முடித்துவிட்டு இருந்தது.