IMK 12

Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் 12

வேந்தனும் சீதாவும், இசையரசனுக்கும் பூர்ணிமாவிற்கும் நடக்க இருக்கும் திருமணத்திற்கு புடவை வேண்டலாம் எனச்சொல்லி வவுனியா டவுனுக்கு புடவைக்கடை ஒன்றிற்கு வந்து இருந்தார்கள்.

வேந்தன் தமிழினியை கண்டே இரண்டு மாதத்தை கடந்து இருந்தது.

வேந்தன் தன் காதலை குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக கொஞ்ச நாளைக்கு ஒத்திவைத்து விட்டான்.

வீட்டில் நடக்க இருக்கும் முதல் திருமணம் என்பதால் வேலையும் அதிகளாவே இருக்க, தமிழினி நெஞ்சின் ஓரத்தில் இருந்து சுரண்டிக் கொண்டு இருந்தாலும், திருமண வேலைகளில் தந்தைக்கு துணையிருக்க வேண்டி அவருடன் ஓடுபட்டுக் கொண்டு இருந்தவன், இன்று தாய் புடவை கடைக்கு அழைக்க அவருடன் வந்து இருந்தான்.

அவர்கள் இருவரும் புடவை பார்த்துக்கொண்டு இருக்க, “எனக்கு புடவையெல்லாம் வேண்டாம் சுடிதார் வேண்டணும்” எனத் தமிழினியின் பிடிவாத குரல் அவர்களை திரும்பி பார்க்க தூண்டியது.

அவள் தங்களுக்கு சற்று அருகில் புதிய ஆண் மகனுடன் நின்று இருந்தாள். அவள் நின்ற தோரணையே பிடிக்காமல் நின்று இருப்பதாக பட்டது.

“பெண்ணா அடக்க ஒடுக்கமாக இருப்பதற்கு சேலை தான் வேண்டணும். எனக்கு சுடிதார் போட்ட பிடிக்காது என்று தெரிந்தும், என்னை கூட்டிட்டு வந்து சுடிதார் வேண்டணுமா, உனக்கு சுடிதார் வேண்ட என்றால் காசே கொடுக்க மாட்டேன்” என்று பக்கத்தில் நின்றவனும் பல்லை கடித்துக்கொண்டே கூறினான்.

அவன் ஜெயகுமாரன். தமிழினியின் அப்பாவின் சொந்த அக்காவின் பையன். தமிழினிக்கு பேசிவைக்கப்பட்டவன்.

தன் தந்தையுடன் புடவை கடைக்கு வெளிக்கிட்டவளை, நல்லவன் மாதிரி இடையில் வந்து நான் கூட்டிட்டு போய் அவளுக்கு வேண்டிக்கொடுகின்றேன் என்று அழைத்துக்கொண்டு வந்துவிட்டு இப்பொழுது சேலை தான் என்று சொன்னால் அவளும் என்ன செய்வாள்.

யூனிவர்சிட்டி விழா ஒன்றிற்காக தோழிகளாக சேர்ந்து சுடிதார் என்று முடிவு செய்து இருந்தார்கள்.அதை குழப்புவது போல் அவள் மட்டும் சேலை அணிந்தால் தோழிகள் கோபப் படமாட்டார்களா என அவள் அத்தான் எனப்பட்டவனுக்கு எடுத்து சொன்னாலும் புடவை தான் என்று அவனும் விடாப்பிடியாக அடம் பிடித்தான்.

“அத்தான் உங்களுக்கு சொன்னால் புரியாதா? எனக்கு சுடிதார் தான் வேணும் ” என அவளும் குரலை உயர்த்தி மல்லுக்கு நிற்க,

“உனக்கு ஆம்பிளை சொன்னால் ஓம் என்று கேட்க தெரியாதா? , என்ன பழக்கம் எதிர்த்து எதிர்த்து கதைக்கிறது. இதுக்கு தான் மாமாவிற்கு உன்னை யூனிவெர்சிட்டி எல்லாம் வேண்டாம் வீட்டில் கிடக்கட்டும் என்று சொன்னேன் கேட்டாரா.இப்ப பார் கல்யாணம் பண்ணபோறவனிடம் வாயாடுறாய். கல்யாணம் நடக்கட்டும் உன்னை வைக்க வேண்டிய இடத்தில் வைக்கிறேன்” என்று பொது இடம் என்றும் பாராமல் தமிழினியை கடிந்து பேசினான்.

வேந்தனுக்கு அவனை போட்டுச் சாத்த வேண்டும் போல இருந்தது.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

தமிழினியின் குடும்பத்தை பற்றி அக்குவேறு ஆணிவேராக விசாரித்து தெரிந்து கொண்டான். அதில் அவனுக்கு பிடிக்காதது இந்த அத்தான் எனும் பாத்திரம் தான். அவளுக்கு திருமணம் பேசி வைத்து இருக்கிறார்கள் என்றாலும் நிச்சயம் எல்லாம் ஆகவில்லை என்று தெரியும் பொழுது வானத்திலே பறந்தான்.

அவன் தெரிந்து கொண்டதில் முக்கியமான இன்னுமொன்று தமிழினியின் அப்பா ஆச்சாரம் பார்ப்பவர் என்றாலும், நல்ல மனிதர் அவரின் நல்ல மனதே மேகா தமிழினியின் நட்பு தொடர்வதற்கு காரணம் என்றும் நன்கு அறிந்து கொண்டான்.

அவரிடம் பேசும் வாய்ப்பையும் தமிழினியும், அருண்மொழியும் உருவாக்கி தந்து இருந்தார்கள்.

தன் பிள்ளைகளை அடிபடாமல் காத்ததற்காக, கோவில் முடிந்தபின் நன்றி உரைத்து இருந்தார்.அதில் அவரிடம் சாதி வெறி எல்லாம் தெரியவில்லை. ஒரு சாந்தமான முக பாவம். அது அவனை கவர்ந்தது என்றால் மிகையில்லை.

தமிழினி மட்டும் அத்தானை திருமணம் செய்தால் அவளுக்கு கிடைக்கும் வாழ்க்கை நரக வாழ்க்கையாக இருக்கும் என வெளியில் நின்று பார்க்கும் அவனுக்கே தெரியும் பொழுது அனுபவ அறிவில் ஆட்களை புரிந்து கொள்ள கூடியயவர் தியாகராஜா. அப்படியானவர் இன்னுமே 40 காலங்களிலே இருக்கும் ஒருத்தனை, தன் பாச மகளுக்கு வரனை தெரிவு செய்தார் என்று புரியாமல் அவர்களை பார்த்தான்.

சீதா தான் போட்டு இருந்த சுடிதாரை குனிந்து பார்த்தார். அவரும் மூன்று வளர்ந்த ஆண்மகனின் அம்மா தான் ஆனால் தன் குடும்பத்தில் இருந்த யாருமே கட்டுப்பாடு விதித்ததில்லை.

ஆடை சுகந்திரம் என்ற ஒன்று பெண்களுக்கும் இருக்கிறது தானே.., சில நேரம் பாவாடை சட்டை கூட போடுவார் அது அவரின் விருப்பம். அப்படி இத்தனை காலம் வாழ்ந்து விட்டவருக்கு ஒரு 20வயது பெண் சுடிதார் போட என்ன தடை வந்துவிட போகின்றது என்று தோன்றியது.

அந்த நிமிடம் தன் கணவன் தமிழினியை பற்றி இனி வேந்தனிடம் பேசி அவனின் மனதில் ஆசையை வளர்க்க கூடாது என எச்சரித்ததை மீறி “இவாவை எப்படியும் கல்யாணம் பண்ணிடு வேந்தா.. இல்லை இவன் அந்த பெண்ணின் கலகலப்பையே இல்லாமல் பண்ணிவிடுவான்” என அனுதாபம் கலந்து தமிழினியை பார்த்த வாறு கூறினார்.

தமிழினி வீட்டை மீறி எல்லாம் வரமாட்டாள் அப்படியிருக்க, அந்த வல்லூரிடம் இருந்து தன்னவளை காக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் எப்படி என்று தான் தெரியலை. அவன் அந்த யோசனையில் நின்று இருக்க,

தன் தந்தையை குறை சொன்ன கோபத்துடன்,”எனக்கு உடுப்பே வேணாம் நான் வீட்டுக்கு போகிறேன்” என்று கிளம்ப போனவளை கண்டு,

“என்னடி திமிரா” என அவளின் பின் கத்தினான் ஜெயகுமாரன்.

அவனுக்கு பொது இடம் என்பதோ, எல்லோரும் பார்க்கிறார்கள் என்ற எண்ணமோ துளி கூட இல்லை. எங்கு இருந்தாலும் தமிழினி தன் சொல் கேட்டு அடங்கி நடக்க வேண்டும் என்பது மட்டுமே, அவள் அவனின் சொல்லை மீறி கிளம்புகிறேன் என்றதும் அவனுள் இருக்கும் அரக்க குணம் வெளியே எட்டிப்பார்த்தது.

கடையில் நின்று இருந்தவர்களின் பார்வை எல்லாம் அவர்கள் மேல் பதிந்து இருக்க, சிலரில் பார்வையில் பரிதாபம் மேலோங்கி இருக்க தமிழினிக்கு தான் சங்கடம் ஆகியது.

இனி இவனுடன் இந்த ஜென்மத்தில் வெளியில் கிளம்பி வரக்கூடாது எனத் தீர்மானம் செய்தவள்,அந்த இடத்தில் இருந்து வேக எட்டுக்களை வைத்து புறப்பட தயாரானாள்.

பக்கவாட்டில் இருந்து “நில்லும்மா.. தமிழ்” என சீதா கூப்பிட,

நடந்து கொண்டு இருந்தவள் கால்கள் அப்படியே நின்று விட்டது. நிச்சயமாக அந்த இடத்தில் சீதாவை எதிர்பார்க்கவில்லை. மெதுவாக தலையை திருப்பி அவரை பார்க்க அவரின் பார்வையும் அவளை பரிதாபத்துடனே நோக்க,

அருகில் நின்று இருந்தவனின் பார்வை அவளை கூர்மையுடன் நோக்க, அவளுக்கு பூமிக்குள் புதைந்து விட மாட்டோமா என்றே தோன்றியது.

அவனை விரும்ப தொடங்க விட்டாலும், அவனின் பார்வையில் இருக்கும் ஏதோ ஒன்று அவளுக்கு பிடித்து தொலைத்தது. அதனால் தான் அவனை கண்டாலே தலை தெறிக்க ஓடிக்கொண்டு இருக்கிறாள். அப்படியிருக்க இப்படி அவனின் முன் நிக்கும் நிலையே கசந்தது.

அங்கே நிற்காமல் தமிழினி வேகமாக செல்ல எத்தனிக்க,

“நீ போய் சுடிதார் எடும்மா.. நான் காசு கொடுக்கிறேன்” என்று சீதா சொல்ல,

“இல்லை வேணாம்..” என்று தமிழினி மறுக்க,

அங்கே நின்று கொண்டுருந்த ஜெயகுமாரனை கண்டு முறைத்த படியே, ஆத்திரம் மேலோங்க, “போய் எடு எவன் என்ன சொல்லுறான் என்று நான் பாக்கிறேன்” என்று சொன்னான்.

இந்த உரிமையான அதட்டல் தான் என்பதினால் என புரிந்த தமிழினிக்கு பக் என்று ஆனது. அதுவும் ஜெயகுமாரனை வெட்டவா? குத்தவா? என பார்வையால் பஸ்பம் ஆக்க, ‘போச்சு, இவனுக்கு டவுட் வந்திட்டு இவன் திரும்ப என்னை டாச்சர் பண்ண போறான்’ என நொந்தபடி நின்று இருந்தாள். அவளுக்கு ஜெயகுமாரனை விட வேந்தன் தான் அபாயகரமாக தெரிந்தான்.

அதனால் அவனிடம் இருந்து எந்த வித உதவியையோ பொருளையே பெறக்கூடாது என பிடிவாதமாக நிற்க,

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

“இது அண்ணியோட தங்கச்சியின் பிரண்ட் என்பதினால் தான்”என அவள் உடை வேண்ட வேண்டும் என்பதினால், வேந்தனும் இழுத்து பிடித்த பொறுமையுடன் சொன்னான்.