IMK 11
Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் 11
சந்துரு வேந்தனிடம் நடந்ததை முழுமையாக கேட்டு அறிந்தவர் தமிழினி மேல் பிழையிருப்பதாக தெரியவில்லை. மகன் தான் உண்மை தெரியாமல் தமிழினியை மனத்தில் வடித்துவிட்டது புரிந்தது.
மகன் மேலும் முற்று முழுதாக பிழை சொல்ல முடியாது. தமிழினி போல் கலகலப்பான பெண்களைப் எந்த ஆண்மகனுக்கு பிடிக்காது.
தமிழினி அழகி என்றாலும் அழகை மட்டும் பார்த்துக் காதலிக்கும் பையன் வேந்தன் இல்லை. தமிழினி தன் குரலினாலும் பேசினாலும் வசீகரித்து விட்டாள்.
“விடுப்பா அவ உன் மனைவியாக வர விதியில்லை போல” என சமாதானப் படுத்த,
வேந்தனுக்கு குறுகிய காலம் என்றாலும் இதயத்தின் ஆழத்தில் நங்குரமிட்டு அமர்ந்திருந்தவளை தூக்கி ஏறிய வேண்டும் எனும் நினைவில் இதயமே சுக்கு நூறாக சிதறுவது போல இருந்தது.
அவனுக்கு இன்னுமொருத்தனுக்கு நிச்சயிக்க பட்டு இருப்பவளை தன்னவளாக ஆக்க அவனின் நியாய மனது ஒத்துக்கொள்ள விட்டாலும், காதல் மனது இன்னும் திருமணம் முடியவில்லை தானே தனக்கு இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளது போல எடுத்துச் சொன்னது.
அது தப்பு எனினும் வேந்தனுக்கு எந்த சூழ்நிலையிலும் தமிழினியை இன்னுமொருத்தனுக்கு ஆல்வா மாதிரி தூக்கி கொடுக்க முடியாது. என்பதால்
அவளை மனைவியாக அடைவதற்கு குறுக்கு வழியில் செல்லாமல் ஏதும் நேர் வழியில் அவளை மனைவியாக அடைய முடியுமா என்று யோசித்தான்.
முக்கியமாக தமிழினியை விட்டுப் பிடிக்க முடிவு செய்தான்.
அவளை தன்னை காதலிக்குமாறு நிர்பந்திக்கவோ, கட்டாயப்படுத்தவோ அவனுக்கு பிரியம் இல்லை. அவளாக தன் காதலை உணர்ந்து வர வேண்டும். அவள் மட்டும் வேந்தன் தான் தன் இணை என்று உறுதியாக முடிவெடுத்து விட்டால், எவ்வளவு பெரிய பிரச்சனைகள் வந்தாலும் சமாளித்து தன்னவளை கரம் பிடித்துவிடலாம் என நினைத்தான்.
அதை தந்தையிடம் கூற முடியாததால், அவன் அவர் சொல்லும் சமாதானங்களுக்கு தலையை அசைத்து கேட்டுக் கொள்ளுவது போல பாவனை காட்டினான்.
அவனால் தன் குடும்பத்தின் மகிழ்ச்சி கெடுவதையும் அவன் விரும்பவில்லை.
அப்பொழுது அங்கே வந்த தமிழ்.. தந்தை மற்றும் தனையனின் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள்.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
வேந்தனின் முகம் வாடியிருந்தது.
அவனின் முகவாடலில், அந்த வாட்டத்தின் காரணி தான் எனும் பொழுது குற்ற உணர்வாகி, நடை தயங்கியது.
சந்துரு நிமிர்வது போல இருக்க, அவர்களை நிமிர்ந்து பார்க்க முடியாமையால், தலையை கவிழ்த்த படி அவர்களை கடந்து கோவிலுக்கு சென்று விட்டாள் தமிழினி.
அவளுக்கு இது இத்தோடு முடிவது தான் நல்லதாக பட்டது.
இன்னும் இழுக்க இழுக்க வேந்தனுக்கு நம்பிக்கை வேர் விட தொடங்கிவிடும் அது தான் தனக்கு தெரிந்த வழியில் முளையிலே கிள்ளி எறிந்து விட்டாள்.
தமிழினிக்கு தன் தந்தையின் மீது அளப்பரிய மரியாதையும், தன்னலமற்ற அன்பும் நிறைய இருப்பதால் தான் அவரின் அச்சாரம் என்ற வார்த்தைக்கு அடிபணிந்து இன்னும் கடைபிடித்துக்கொண்டு இருக்கிறாள்.
அப்படி பட்டவளுக்கு காதல் என்று ஒன்று உருவானால் தன் தந்தையின் பாசத்தை முழுதாக இழக்க வேண்டும். அது அவளிற்கு முடியாது. அவரை மீறும் துணிச்சலும் இல்லை.
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்று பழமொழி இருக்க, வேந்தன் தன் காதலை தனக்குள் புகுத்திவிடும் அபாயம் இருந்ததால் அந்த காதலை கத்தரிக்கவே விரும்பினாள்.
நினைத்ததை செய்தும் முடித்து விட்டாள் எனினும் காரியம் நன்றாக முடிந்த திருப்தி வராமல், அவளின் பார்வை அடிக்கடி வேந்தனின் பக்கமே சென்றது.
வேந்தனை சந்துரு கோவிலுக்குள் கூட்டிக்கொண்டு வரவும், கோவிலின் வசந்த மண்டபத்தின் அம்மனுக்கு அலங்காரம் முடிந்து பூசை தொடங்க ஆயத்தம் நடந்தது.
இசையரசனும், அமுதனும் முதலிலே தன்னுடைய தவிலுடனும் நாதஸ்வரத்துடனும் வசதியாக அமர்ந்து இருந்தார்கள்.
வேந்தனும், சந்துருவும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் பெரிய சால்வை ஒன்றை விரித்து, அதில் சப்பண கால் போட்டு அமர்ந்தவர்கள், ஒலிபெருக்கியில் தங்கள் வாத்தியங்களின் சத்தம் சரியாக கேட்குமாறு மாற்றி அமைத்தார்கள்.
வசந்த மண்டப பூசை நடக்கும் மட்டும், மெல்லிய இசையையே முழங்கிக்கொண்டு இருந்தவர்கள் சாமி தூக்கி வெளி வாசலுக்கு வந்தபின், சினிமா பாடல்களை வாசிக்க தொடங்கிவிட்டார்கள்.
அதுவும் சாமியை நிற்பாட்டி வைத்து இடையிடையே சந்துரு குடும்பத்தின் கச்சேரியும் நடைபெற பத்தர்கள் அதை உற்சாகத்துடன் கண்டு கழித்தார்கள்.
கோவிலை சுத்தம் செய்து கொண்டு இருந்த தமிழினிக்கு “சின்னஞ் சிறு கிளியே” என்ற பொன்னியின் செல்வன் படத்தில் வந்த பாடல் ஒலிபெருக்கியின் வாயிலாக கேட்க, அது தமிழினிக்கு மிக விருப்பமான பாடல்
“அம்மா எனக்கு பிடிச்ச பாட்டு நான் போய் கேட்டுட்டு ஓடி வாரேன்” என்று தன் தாய் சிவகாமியின் பதிலைக்கூட கேட்க்காமல் வெளியே ஓடி வந்து பார்த்தாள்.
வெளியே மேளக்காரர்களை சுற்றி சனம் நின்று கொண்டு இருக்க, அவர்களை மீறி அவளுக்கு உள்ளே ஒன்றும் தெரியவில்லை அதனால் அவள் எக்கி எக்கி பார்த்து ஏமாற்றமாக நின்று இருக்க,
சாமியின் அருகே நின்று இருந்த தியாகராஜா மகளை கவனித்தவர், அந்த இடத்திற்கு வந்து “என் கூட வாடா” என அழைத்து அவளுக்கு நன்கு தெரியும் படியான ஒரு இடத்தில் நிற்க வைத்தார்.
அந்த இடம் வேந்தனுக்கு மிக அருகாமை அவள் மூச்சு விட்டால் கூட வேந்தனுக்கு தெரியும் படியான இடம்.
அதிலே தன் தம்பி அருண்மொழியும் நின்று இருக்க, அவளை தம்பியுடன் நிற்பாட்டிவிட்டு மீண்டும் போய் சாமிக்கு அருகிலேயே நின்று கொண்டார்.
தமிழினி வேந்தன் தான் அந்த பாடலை வாசித்துக்கொண்டு இருக்கிறான் எனக் கண்டு, அவனின் இன்னுமொரு பரிமாணத்தில் மெய் உருகியது.
அவனின் விரல்கள் நாதஸ்வரத்தில் நர்த்தனம் ஆடுவது மட்டுமே அவளுக்கு தெரிந்தது. அதில் இருந்து எப்படி இப்படி ஒரு இசையென அவள் ஆர்வத்துடன் பார்த்து இருக்க, அடுத்த பாடலாக சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி என்று பாடல் இசைக்க தொடங்கியது.
“அக்கா இந்த அண்ணாக்கு என்னிடம் என்ன சேதி சொல்லணும்” என்று அருண்மொழி கேட்க,
“நீயே போய் கேட்டுட்டு வா” எனத் தான் ரசித்துக்கொண்டு இருந்ததை குழப்பிய கடுப்பில் சொல்ல,
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
தன்னவளின் குரல் வேந்தனின் காதில் தேன் எனப் பாய்ந்து சென்றது.
“அவர் சிவகாமி மகன் என்று என்னை தானே கேட்டார். அப்ப நான் போய்க் கேட்க்கிறேன்” என்று அடாவடியாக முன்னோக்கி காலை வைத்தவனை கண்டு, கடுப்பாகிய தமிழினி ” அந்த பாட்டில் உன்னை சேரும் நாள் பார்த்து சொல்லடி என்றும் வருது தானே, உனக்கும் அவருக்கும் எப்ப கல்யாணம் என்று திகதியைசொல்லிட்டு வா” என சிரித்துக் கொண்டு சொன்னாள்.
“என்னது அவருக்கும் எனக்கும் கல்யாணமா, உவ்வே” என வாந்தியெடுப்பது போல சைகை செய்ய,
“இப்ப ஆம்பிளையும் ஆம்பிளையும் கல்யாணம் செய்யலாம்னு சட்டம் வந்திட்டு, நீ பயப்படாமல் போ அக்கா உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்” என்று ஊக்க படுத்தியவளின் கையை கண்டு,
அவனும் ஜோக்காக”போடியக்கா…, சிவகாமி பொம்பிளை பிள்ளையை லவ் பண்ணுறேன் என்று சொன்னாலே விளக்குமாறு எடுத்து அடிக்கும், இதில் ஆம்பிளையா வாய்ப்பே இல்லை” என்றான்.
“உனக்கு லவ் எல்லாம் செட் ஆகாதுடா, நீ கோவிலில் மணியடிக்க மட்டும் தான் லாயக்கு” என்று நக்கல் பண்ணி சிரித்தாள்.
அவனின் அத்தானும் அவனை அப்படி சொல்லித் தான் நக்கல் செய்வான். அருண்மொழிக்கு மந்திரங்களை பாடமாக்கு என்று தகப்பன் சொல்லும் பொழுது எல்லாம் நித்திரை கண்ணைச் சொக்கும். அதனால் அவன் இன்னும் குட்டி பூசாரி கூட ஆகவில்லை. தந்தைக்கு கோவிலில் கூட மாட உதவிகள் செய்பவன். கோவிலின் மணியை மட்டுமே அடிப்பான் அதைக் கொண்டே இந்த கேலி.
“உன் டைரியில் குறிச்சு வை, இன்னும் நான்கு வருடத்தில் உலகத்தில் உள்ள எல்லா மந்திர, தந்திரங்களையும் கற்று உன் பம்பர மண்டையனிலும் பார்க்க பெரிய குருக்களாக ஆகலை. நான் தியாகராஜா பிள்ளை இல்லைடி” எனச் சபதம் செய்தான்.
“நீ முதல் A /L எக்ஸாமுக்கு படிக்கிற வழியை பார் அருண். அவன் ஒரு டுபாக்கூர். அவனுக்கு எல்லோரும் தன்னை தூக்கி வைச்சு பேசணும் என்று உன்னை மட்டம் தட்டுது பிசாசு” என்று தன் வருங்கால கணவனாக வரப் போகிறவனை கழுவி ஊற்றினாள்.
இருவரும் பாடல் இசைத்து முடிந்தும் அந்த இடத்தை விட்டு அசையாமல் நின்று வாயடித்து கொண்டு இருப்பதைக் கண்ட வேந்தன்,சாமியை தூக்கிக் கொண்டு வரும் பொழுது அவர்களை இருவரையும் இடித்து விடும் நிலையில் இருக்க,
அதை உணராமல் நின்று கதைத்து கொண்டு இருந்தார்கள்.
“தமிழ், அருண் இரண்டு பேரும் தள்ளிப்போங்க சாமி இடிக்க போகுது” என அவர்கள் இருவரையும் தள்ளிகொண்டு வந்து மதில் ஓரமாக பத்திரமாக நிற்க வைத்தான் வேந்தன்.
அருண் வேந்தனை நன்றியாக பார்க்க, தமிழினி தந்தையை பார்த்தாள்.
தியாகராஜாவும் தன் பிள்ளைகள் வழியில் நிற்பதை கவனித்தவர் சாமி கிட்ட வரும் பொழுது விலகி விடுவார்கள் என்று பார்க்க அவர்கள் சுற்று புறத்தையே மறந்து கதைத்துக் கொண்டு இருந்தார்கள். வேந்தன் மட்டும் பத்திரமாக அழைத்துக்கொண்டு போகாவிடில் இருவரில் ஒருவருக்கு நிச்சயம் பெரிய காயம் ஏற்படாவிடினும் சிறு கீறல் ஆவது ஏற்பட்டு இருக்கும்.
அவர் இருவரையும் முறைத்தபடியே சாமியுடன் சென்று கொண்டு இருந்தார்.
வீட்டுக்கு போய் இரண்டு பேருக்கும் நல்ல மண்டக படியிருக்கும் என்று தெரிந்தது.