ANI 7

Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் 7

தமிழினியின் தாய், தம்பி, தேவி மூன்று பேருமே அவர்கள் வீட்டுக்கே போகவேண்டிய சூழ்நிலை.

சுடுதண்ணி கூட சொந்தமாக வைத்துக்குடிக்க தெரியாத தியாகராஜாவிற்கு காய்ச்சல் என்று ஒரு காரணமே சிவகாமியின் அத்தியவசத்தை உணர போதுமாய் இருக்க, தன் தீட்டு, கொள்கையென்ற வறட்டு கௌரவத்தை கைவிட்டு, உறவினரை கொண்டு சிவகாமியை வீட்டுக்கு அழைத்தார்.

சிவகாமி தன் வீட்டுக்கு கிளம்ப, அருண்மொழி போக வேண்டாம் என்று தடுத்துப்பார்த்தான்.

கட்டையில் போற வயது வந்த பின் புருசனை தனியே கஷ்டப்பட விட்டுட்டாள் என்ற பெயர் தனக்கு வேண்டாம் என்று சொல்ல பிறகு எப்படி சீதாவாலும் சந்துரு குடும்பத்தாராலும் மறிக்க முடியும்.

தேவிக்கும் என்ன ஆசைப்பட்டு இங்கே வந்தாரோ.. அது சில நாட்களிலே தமிழினியின் முகத்தின் மலர்ச்சியில் தெரிய , சிவகாமி வெளிக்கிட அவரும் சிவகாமியுடன் போக தயாராகிவிட்டார்.

தியாகராஜா ஏதும் பிரச்சனை செய்தால் தயங்காமல் வீட்டுக்கு வரவேண்டும் என்ற சீதாவின் கோரிக்கையில் சரியென தலையசைத்த சிவகாமி தன் வீட்டுக்கு கிளம்பிவிட்டார்.

அமுதனுக்கு நாட்கள் நத்தைவேகத்தில் கடப்பது போலவே இருந்தது.

அதுவும் வேந்தன் தமிழினியை கண்ணைக்காட்டி அறைக்குள் வா என்று கூப்பிடுவதும் அதற்கு தலையை ஆட்டி முடியாது போடா என தமிழினி விரட்டுவதும், இருவரும் தனியே அமர்ந்து சீண்டிக்கொண்டும், சிணுங்கிக்கொண்டும் என்று புதுமண தம்பதிகளாக நடந்துகொள்ள அந்த நாடகத்தை சிங்கிள் பையனாக இருந்துகொண்டு அமுதனால் பார்க்க முடியவில்லை.

‘இதுக்கு தானேடா நானும் மிங்கில் ஆகிறேன் என்று சொன்னேன். இப்ப ஒரு பச்ச புள்ளைக்கு கண்ணு பொங்க வைக்கிறீங்களேடா’ எனப் வேந்தனுக்கு சில சாபங்களும், சீதாக்கு பல திட்டுகளும் என மனதுக்குள் புகைந்த படி இருந்தான்.

இதையெல்லாம் பெரிய அண்ணாவிடம் சொல்லிப்புலம்புவோம் என்றால் கொடுமையிலும் கொடுமையாக அங்கே இசையரசனோ திருமணத்தில் பொழுது என்ன கலர் நெய்ல் போலிஷ் போடுவது என்று வெட்டிப்பேச்சு மணிக்கணக்காக போய்க்கொண்டு இருந்தது.

“டேய் அது மேக்கப் போடுற பொண்ணோட வேலைடா.. அவ பார்ப்பா” என்று கத்த வேண்டும் போல இருக்கும்.

இப்படி பல புலம்பல்களுடன் அமுதனின் நாட்கள் சென்று கொண்டு இருந்தது.


தன்னுடைய காதலி பக்கத்துக்கு வீட்டில் கண்ணுக்கு எட்டும் தூரத்தில் இருந்தாலும் பார்க்க தடைவிதிக்கப்பட்டு விட்டது.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

எல்லாம் அவன் கல்யாணத்துக்கு பிள்ளையோட தான் வருவேன் என்று சொன்னாதன் பலனை இப்பொழுது அனுபவித்தான்.

அவனும் நிறைய தில்லாலங்கடி வேலை பார்த்தாலும், வாசலை தண்டி காலை வைக்கும் பொழுது “சார் எங்கிட்டு போறீங்க என்று எங்கேயிருந்தாவது ஒரு குரல் தொடரும் அப்படியொரு கண்காணிப்பு பிறகு எங்கே போவது அவனும் அனுவை பார்க்க மாட்டோமா என்று ஏங்கியே போய்விட்டான்.

அனுஷா சிப்ஸ் பாக்கெட் சாப்பிட்டு படி ஏதோ ஒரு பாடத்தை படித்துக்கொண்டு இருந்தாள்.

சிப்ஸ் எடுப்பதற்கு மட்டுமே கை அசைந்ததே ஒழிய பாடப்புத்தகத்தில் ஒரு பக்கமும் புரட்டுவது போல தெரியவில்லை.

மோட்டார் வண்டியில் வெளியே போவது போல் தாய்க்கு போக்கு காட்டி, மோட்டார் வண்டியை சந்தியிலே நிறுத்திவிட்டு காதலியை பார்ப்பதற்காக திருட்டு தனமாக வந்திருந்தான் அமுதன்.

காதலியை பார்க்க போகும் ஆசையில் வந்தவனுக்கு இக்காட்சி பட்டுத் தொலைக்க,

“ஏன்டி அனு நீ என்ன சிட்டி ரோபோவா? முன் பக்கத்தையே பார்த்துக் கொண்டிருந்தால் புத்தகத்தில் உள்ள எல்லாம் மூளையில் பதிந்து விடும் என்பதற்கு, அதை புரட்டி படிக்கணும். அப்பத்தான் மண்டைக்குள் ஏறும்” எனத் திட்ட,

அவனை கண்டு உவகை பொங்கினாலும்,”போடா அம்மா படி, படி என்று ஆக்கினை படுத்துவது பத்தாதுக்கு நீ வேற வந்துட்டாய் எனக்கு தூக்கம் தூக்கமாக வருது. அதுதான் ஒரு சேஞ்சுக்கு சாப்பிட்டுக் கொண்டே படிப்போம் என்று எடுத்தேன்” எனச் சொல்லியபடிஅங்கே மேசையிலிருந்த சிப்ஸ் பேக்கெட்டில் இருந்து இன்னும் ஒரு சிப்சை எடுத்து வாயிற்குள் போட்டாள்.

மேசையிலிருந்து சிப்ஸ் பக்கெட்டை அப்புறப்படுத்தி தூரமாக வைத்தவன் “நீ கொஞ்சமாவது படி..டி நான் அதில் கேள்வி கேட்பேன். அதுக்கு ஒழுங்காக பதிலைச் சொன்னால் உனக்கு கொத்து ரொட்டி வேண்டி தருவேன்” என்று அவளுக்கு ஆசை காட்டினான்.

உணவு பிரியமானவளுக்கு கொத்து ஆசையில் அனுஷாவும் கொஞ்சம் படிக்க, கொத்து வேண்டியே அமுதனின் பக்கெட் மணி கரைந்தது.