ANI 5
Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் 5
உடனடியாக காதலியை கரம் பிடிக்கும் கனவு கண்டு இருந்தவன் இப்படி இரண்டு வருடத்தின் பின் கல்யாணம் என்றால் என்ன செய்வான்.
அனுவிற்கும் தங்களுக்கு திருமண வயது வந்துவிட்டது தானே இந்த இடைவெளி வேண்டாம் என்பது மாதிரி தோன்றியது ஆனால் பெரியவர்கள் சொல்லும் பொழுது எப்படி மறுப்பது என்பது போல நின்று இருந்தாள்.
தனக்கு மட்டும் தான் அவள் மேல் ஈர்ப்பு என்று பேசாமல் இருந்தவனுக்கு அவளுக்கும் தன்னை பிடிக்கும் என்று தெரியும் பொழுது எப்படி இருக்க முடியும்.
“அப்ப அவ எங்கள் பிள்ளையோட தான் கல்யாணம் காட்டுவா பரவாயில்லையா?” என்று நக்கலாக கேட்டான் அமுதன்.
“டேய்..” என அதட்டினார் சீதா.
லிங்கமும் அவனுக்கு திட்ட அதையெல்லாம் காதில் வேண்டாதவன் எனக்கு எப்ப கல்யாணம் என்ற ரேஞ்சிலே தாயை பார்த்துக்கொண்டு நின்றான்.
உமாவிற்கு முதலில் இருந்தே இரண்டு வருடம் எல்லாம் சரியாக வராது என்ற எண்ணத்தில் இருந்தவருக்கு அமுதனின் பேச்சில் புன்னகை.
சந்துரு “சீதா அவன் ஒரு அவசரக்குடுக்கை இவன் எல்லாம் இரண்டு வருசம் காத்திருக்க மாட்டான். நீங்கள் இரண்டு வருடம் காத்திருக்கணும் என்று சொன்னால் இரண்டும் இருக்காது.நம்ம விட்டு மரியாதையை காப்பாத்தனும் என்றால் உடனே கல்யாணத்தை வை ” என்றார்.
அமுதனுக்கு இருத்திரெண்டு வயது. அனுஷா இன்னும் பள்ளிப்படிப்பையே முடிக்காத பெண் என நினைத்த சீதா “சின்ன பிள்ளைங்க..” என்று தயங்க,
“அவங்க ஒருத்தர் மேல ஒருத்தர் நிறைய அன்பு வைச்சு இருக்கிறாங்க.. அவங்க இரண்டு பேரையும் எதுக்கு பிரிச்சு வைக்கணும். அவங்களே வாழ்க்கையை முட்டி மோதி கத்துக்கட்டும்.” என்று உமா சொன்னார்.
“உனக்கு உன் பேரப்பிள்ளையோட தான் சின்னமகனுக்கு கல்யாணம் செய்யணும் என்று விருப்பப்பட்டால் மட்டும் கல்யாணத்தை இரண்டு வருடம் தள்ளி வை” என்று சந்துரு மீண்டும் சொல்ல,
“அம்மா.. நம்ம வேலை கடலில் பிடிச்சு தள்ளுறது தான் அவங்களே நீந்தி கை சேரட்டுமே..” என்று தன் பங்குக்கு இசையரசன் சொல்ல,
எல்லோருக்குமே கல்யாணத்தை இப்பொழுது நடத்த தான் விருப்பம் என்று அவர்கள் முகத்தில் தெரிந்தது.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
முக்கியமாக இப்பொழுது கல்யாணம் வேண்டாம் என்று இருந்த இசையரசனுக்கு கூட தம்பியின் குணத்தில் நம்பிக்கையில்லாமல் இப்ப கல்யாணம் செய்து வைத்தால் குடும்ப மானமாவது தப்பிக்கும் என்று நினைத்தான்.
பூர்ணிமா, தமிழினிக்கு கூட தங்களுடன் இந்த குடும்பத்தில் இன்னொருத்தியும் வரப்போகிறாள் என்ற சந்தோசம் அவர்களின் புன்னகை பூத்த முகத்தில் தெரிந்தது.
சீதா செய்வது அறியாமல் லிங்கத்தை பார்க்க, “இவன் ஒரு கோளாறு பிடிச்சவன் அதனால் சந்துரு சொல்வது போலவே செய்வோம்” என்றார்.
“அடுக்கடுக்காக கல்யாணம் என்றால் எப்படிங்க” என்று சீதா சந்துருவை பார்த்து கேட்டார்.
இந்த காரணமெல்லாம் சப்பைக்கட்டு என்று அறியாதவனா அமுதன்..
“எனக்கு பெருசாக எல்லாம் கல்யாணம் வேண்டாம். நான் ரெஜிஸ்டர் பண்ணிட்டு இங்கே வைத்து தாலியை கட்டி முடிச்சிடுவேன். நீங்கள் என் கல்யாணத்துக்கு செலவளிக்கிற காசை எங்க கிட்ட கொடுங்க. அதை நாங்கள் பண்ணை வைக்க யூஸ் பண்ணுறோம்” என தெளிவாக யோசித்து சொன்னான்.
ஒரு ஆறுமாசத்துக்கு முதலே விவசாய நிலம் வேண்டுவதற்கு என்று எல்லோருமாக சேர்ந்து பாரிய தொகையை அவனுக்கு ஒதுக்கியிருந்தார்கள்.
அமுதனும் தான் தலையெடுத்த பின் அந்த காசு எல்லாத்தையும் திரும்ப தந்துவிடுவேன் என்று சொல்லியே எல்லோரிடமும் காசை புரட்டினான்.
அந்த காசே என்ன நிலைமையில் இருக்கிறது என்று சீதாவிற்கு தெரியவில்லை. இப்பொழுது பண்ணை என்று வரும் பொழுது இன்னுமே காசின் தேவை அதிகரிக்கும். சின்னப்பிள்ளைகளை நம்பி அவ்வளவு பெரிய பொறுப்பையும், தொகையையும் கொடுத்தால் எப்படி நிர்வகிப்பார் என்று பயந்தார்.
அவர்கள் ஒன்றும் வழிவழியாய் வந்த செல்வந்தர்கள் இல்லையே.. எல்லாம் அவர்களாக உழைத்து சம்பாதித்து சிறுக சிறுக சேர்த்த பணம். நிச்சயமாக பணப்பற்றாக்குறை என்ற ஒன்று வந்தே தீரும். அப்பொழுது லோன், கடன் என்று வரும் பொழுது உள்ளதும் இல்லாமல் போய்விடுமோ என்றும் அதிகமாக பயந்தார்.
அப்படி யொரு நிலை வரும் பொழுது தங்களுடன் சேர்ந்து அனுவும் கஷ்டப்பட நேரும். சிறு வயதிலிருந்து கஷடத்தை மட்டும் பார்த்துவளர்ந்த பெண் திருமணம் முடிந்த பின்னாவது சந்தோசத்தை பார்க்கவேண்டும். அவளுக்கு இன்னுமே கஷடத்தை திருமண பரிசாக கையளிக்க கொஞ்சம் கூட உடன் பாடு இல்லை.
அதனால் முதலில் அமுதன் தலையெடுக்கட்டும். அவனின் ஆசை கொஞ்சமாவது நிறைவேறி தொழிலில் கால் ஊன்றிய பின்பே அமுதனுக்கு திருமணம் செய்வது என்று முடிவெடுத்து இருந்தார் சீதா.
அப்படி முடிவெடுத்து காத்திருந்தவருக்கு உடனே திருமணம் என்பது சிறிதுவும் விருப்பமில்லை.
அதனால் தன் முடிவை சொல்லாமல் மௌனத்தையே கடைபிடித்தார்.