ANI 15
Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் 15
வீட்டு உரிமையாளர் மகன், மகளை பார்க்க போகிறேன் என்று சொன்னதை கேட்டதில் இருந்து தன் மகளையும், பேரப்பிள்ளைகளையும் பார்க்க ஏக்கம் கொண்டு, லலிதாவிடம் “எப்படா வாராய்” என்றார்.
“உங்கள் மாப்பிளையை இன்னும் வேலையிலிருந்து ரிலீஸ் பண்ணுறான் இல்லை அந்த வெள்ளைக்காரன். நான் பேக்கிங் முதற்கொண்டு எல்லாம் முடிச்சிட்டேன். இவர் லீவு ஓகே என்றால் நாளைக்கு கிளம்பியிடுவோம்.” என்றாள் மகிழ்வுடன் லலிதா.
அவளுக்கும் தந்தையை பார்க்க போகும் மகிழ்ச்சி எல்லையில்லாமல் இருந்தது.
தாய் இறக்கும் பொழுது அவசர கதியில் இரண்டு கிழமைக்கு மட்டுமே லீவு கிடைக்க, திருமணம் ஆகிய பின் தாயை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது.
அந்த இரண்டு கிழமை மட்டுமே தந்தையுடனும் தாய் போன துக்கத்தில் அழுகையுடனே நாட்கள் போய்விட்டது.
தாயின் இறப்பை ஏற்று இப்பொழுது தான் அப்பாவும் மகளும் கொஞ்சம் கொஞ்சமாக கடந்து வந்து கொண்டு இருக்க, அந்த நேரத்தில் இசையரசனின் திருமணம் என்பது தந்தையுடன் மகிழ்ச்சியாக நாட்களை கடத்த ஒரு வாய்ப்பு தான்.
அவள் அதற்காக தந்தையை கூட்டிக்கொண்டு நாடு முழுதும் சுற்றவேண்டும். அவருக்கு பிடித்தது எல்லாம் வேண்டிக்கொடுக்க வேண்டும் என இரண்டு மாத லீவு போட்டு இருந்தாள்.
கூடிய நாட்கள் லீவு என்பதால் தான் அவள் கணவனுக்கும் லீவு கொடுக்க பஞ்சிப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
எங்கே மகளுக்கு டிக்கெட் கிடைக்காமல் போய் வரமுடியாமல் போய்விடுமோ என எண்ணமிட்ட லிங்கம் “நான்கு பேருக்கு உடனே டிக்கெட் கிடைக்குமா?” என்று தன் சந்தேகத்தைகேட்க,
“அதெல்லாம் போட்டுட்டேன் நான் எப்படியும் தம்பியோட கல்யாணத்துக்கு நாத்தனார் முடிச்சு போட வந்துடுவேன். இவர் இப்பவும் லீவு கேட்க அவர் முதலாளியை பார்க்க தான் போயிருக்கிறார். அவருக்கு கிடைக்காட்டி நீ வீட்டிலேயே இரு ராசா என்று நான் என் பிள்ளைகளை கூட்டிட்டு கிளம்பிடுவேன்” என்றார் லலிதா
கணவனை தனியே விட்டு விட்டு இரண்டு மாதகாலம் ஊரிலேயே தங்கினால் அத்தான் பாவமென எண்ணி “அக்கா.. அத்தான் பாவம்” என்று வேந்தன் சொல்ல,
அப்பொழுது கதவை திறந்து உள்ளே வந்த லலிதாவின் கணவன் சுந்தர் “எதுக்கு நான் பாவமாம் உன் தம்பிக்கு” என்று கேட்க,
“உங்களுக்கு லீவு கிடைக்காட்டில் இங்கேயிருந்து சாப்பாட்டுக்கு சிங்கி அடிக்கணுமே அதுக்கு பரிதாப படுகிறான்” என்று லலிதா சொல்ல,
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
“என்னை கடவுள் கைவிடலை லீவ் கிடைச்சிட்டு, சோ நான் ஊருக்கு வந்து விதம் விதமாக கட்டுவேன்” என்று ஊர் சாப்பாடுகளுக்கு ஏங்கிப்போய்யிருந்தவர் சொல்ல,
வீடியோவில் வேந்தனின் முகத்தை கண்டு, “மச்சான் நான் வந்தால் தொதல், காரம் சுண்டல், தேன்முறுக்கு எல்லாம் வேண்டித் தரணும்” என்று சொல்ல,
வெளிநாட்டில் இருந்து கொண்டு பல லடசம் சம்பாதிக்கும் ஒருத்தர் கேட்க்கும் சாப்பிட்டு வகைகளை கேட்டு அமுதன் சிரித்து “மாமா இதெல்லாம் சாப்பாடா உங்களுக்கு” என்று கேட்க,
“இதெல்லாம் எங்கே தேடினாலும் கிடைக்காதுடா.. சொல்லும் பொழுதே நாக்கு உறுது பார்” என்று அவர் சப்புகொட்டிக்கொண்டே சொல்ல,
“சரி நீங்க முதல் கிளம்பி வாங்க.. அக்கா வேற நாங்களே வீட்டுக்கு வருவதற்கு வான் புக் பண்ணிட்டோம் நீங்கள் கல்யாண வேலையே பாருங்க என்று சொல்லிட்டாள்” என்று வேந்தன் சொல்ல,
“நாங்களும் முதலே வெளிக்கிடுவோம் என்று தான் பார்த்தோம். லீவ் தாறதுக்கு இழுத்து அடிச்சிட்டான் அந்த வெள்ளைக்காரன். இப்ப கல்யாணத்துக்கு இரண்டு நாளைக்கு முதல் வருவோம் அப்ப உங்கள் எல்லோருக்கும் கல்யாண வேலை தலைக்கு மேல் இருக்கும் ” என்று சொல்ல
அவர் தங்களுடைய சூழ்நிலையை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு பக்குவமாக செயல் பட்டவரை கண்டு புன்னகை அரும்பியது.
“சரியாக்கா இவன் இங்கே என்னத்தையோ அளக்கணுமாம். பிறகு வீடு வேற பார்க்கனும். இப்ப வைக்கிறோம் ” என்று சொல்லிய வேந்தன் கைபேசியை அணைத்தான்.
அமுதனுக்கு சுட்டு எரிக்கும் சூரியன் எல்லாம் கண்ணனுக்கு தெரியவில்லை. வவுனியா பஸ் ஸ்டாண்டில் உணவுகள் வேண்டும் பொழுதே அளப்பதற்கு அளவு கோலையும் வேண்டிக்கொண்டே வந்து இருந்தான்.
அதனால் லிங்கத்தையும், வீட்டு உரிமையாளரையும் மரத்தின் நிழலில் இருக்க விட்டு விட்டு வேந்தனுடன் சேர்த்து அந்த நிலத்தில் எங்கே என்ன செய்வது என்று அளந்து கொண்டான்.
அவன் அளந்து குறிப்புக்கள் எடுத்த பின், நிலத்தின் உரிமையாளர் சொன்ன அவர் வீட்டுக்கு சென்றார்கள்.
ஐந்து நிமிட நடக்கும் தூரத்திலே அமைந்து இருந்தது.
வீட்டுடன் சேர்ந்த சிறி காணியில் மாதுளை, வாழை என்று சுத்திவர காணப்பட வீட்டின் வளவில் காலை எடுத்து வைக்கும் பொழுதே குளிர்ச்சியாக இருந்தது.
வீட்டின் அமைப்பை பார்க்கும் பொழுது நான்கு அறைகளும், ஒரு பெரிய சமையலறையும், விசாலமான ஹாலும் அதற்கு தேவையான தளபாடங்கள் என வீடு அருமையாகவே இருந்தது.
லிங்கத்துக்கு மட்டுமல்ல வேந்தனுக்கும் அந்த வீடு பிடித்துப்போய்விட, பெரியப்பாவிற்கு காசு பத்தாமல் வந்தால் லோன் எடுத்து தம்பிக்கு கொடுப்பது என்று முடிவு செய்தான்.
அமுதனுக்கு வீடு வேண்டும் எண்ணமில்லாமல் சும்மா பார்த்துவிட்டு வருவோம் என்ற எண்ணத்துடனே வந்தான்.
அவனுக்கும் வீடு பிடித்து இருந்தாலும் யாரின் காசிலும் வேண்ட வேண்டாம் என்ற முடிவில் இருந்தவனுக்கு, லிங்கம் வீட்டின் விலையை உரிமையாளரிடம் பேசத் தொடங்க, “வேண்டவே வேண்டாம் நான் வாடகை வீட்டிலேயே இருந்து கொள்கிறேன்” என்று மறுத்தான்.
அதற்கு லிங்கம் “உன் பண்ணை உன் காசிலே தொடங்க வேண்டும்.எல்லாமே உன் பணமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுறாய். உன் குடும்பத்திடம் கடனாக வேண்டிய காசையும் திருப்பிக்கொடுக்கனும் என்பதில் ஒரு லாஜிக் இருக்கு. நான் உனக்கு பண்ணை வைக்க மிச்ச காசை தரேன் பேங்க் கடன் எல்லாம் வேண்டாம் என்னும் பொழுது, உங்களிடம் வேண்டினால் கடன் கொடுக்கோணுமே என்ற எண்ணம் தோன்றாது. தொழிலும் வேகமாக வளர மாட்டேன். இதுவே பேங்க்கில் கடன் வேண்டினால் கடனை முடிக்கனுமே என்ற உத்வேகத்துடன் இன்னும் கூட உழைப்பேன் என்றாய்.. அது சரியாக பட்டிச்சு.. வீடு அப்படியில்லை நீ உன் உழைப்பால் வேண்டுவதற்கு ஒரு ஐந்து வருடமாவது ஆகும். அது மட்டும் என் பிள்ளைகள் வாடகை வீட்டில் வாழுறது எனக்கு பிடிக்கலை. என்காசு வாங்கில் சும்மா தான் கிடக்கு. அதை வீடு வேண்டுறதுக்கு யூஸ் பண்ணு” என்று அழுத்தத்துடன் சொன்னார்.
அமுதனுக்கு பெரியப்பாவின் காசில் வீடு வேண்டுவதற்கு சற்றும் விருப்பம் இல்லமல் தன் அண்ணா என்ன சொல்கிறான் என்று என்ன அண்ணா செய்யலாம் என்று வேந்தனிடம் கேட்டான்.
“இப்படி நமக்கு பிடிச்சது போல வீடு அமையிறது கஷ்டம். அதுவும் இது உன் நிலத்துக்கு பக்கத்திலேயே இருக்கு நீ நடந்தே போகலாம். விட வேண்டாம் வேண்டிப் போட்டுடலாம்.முழுக்காசையும் இப்ப பெரியப்பா கொடுக்கட்டும் . நானும் பேங்க் லோன் போட்டுத் தாரேன். அதை பெரியப்பாவிற்கு கொடுக்கலாம்” என்றான் வேந்தன்.
“நான் உங்களிடம் காசு கேட்டேனாடா” என்று லிங்கம் கேட்க,
“அக்கா சொன்னது போல நீங்கள் மூன்று பேருக்கும் சமமாக தானே கொடுக்கணும். எனக்கு மட்டும் கூட தந்தால் நல்லா இருக்காது பெரியப்பா” என்று அமுதன் தயங்க,
“நீங்கள் நான் லோன் போட்டு தரும் காசை வேண்டுறது என்றால் மேலே பேசுங்க இல்லை வேண்டாம்” என்றான் வேந்தனும்,
தன் மகனுக்கு தான் வேண்டிக்கொடுக்க கூடாதா என எண்ணியவர், “ஏன்டா..” என லிங்கம் குரல் இறங்கிக் கேட்க,
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
“வேண்டாம் பெரியப்பா.. இது ஏதோ உங்களை பார்க்கிறதுக்குகாக உங்களிடம் இருக்கும் சொத்தை எல்லாம் நாங்கள் வேண்டுற மாதிரி இருக்கு” என்று மற்றவரின் கண்ணோட்டத்தில் பார்த்து, வேந்தனும் மறுத்தான்.
“நான் ஒன்னும் நீங்கள் என்னை பார்க்கிறதுக்காக தரலை. என் பிள்ளைகளுக்கு என்னட்ட இருக்கிறதை பிரிச்சு கொடுக்கணும் என்று நானாத் தானேடா தாறேன்” என்றவரை கண்டு,
இன்னுமே கதைத்தால் அவர் மனம் நோவர் என்று எண்ணமிட்ட வேந்தன் “சரி பெரியப்பா..” என்று இறங்கி வந்தான்.
அமுதன் அப்பொழுதும் மறுக்க, அவனிடம் கண்ணைக்காட்டிய வேந்தன் ஒத்துக்கொள்ளுமாறு வாயை அசைக்க, அண்ணா வேறு ஏதோ யோசித்து விட்டான் என்று கண்ட அமுதனும் சரியென இறங்கி வந்தான்.
லிங்கம் ,வீட்டு உரிமையாளரிடம் கதையில் பிசியாக இருக்கும் நேரத்தில், ஏன் சம்மதித்தாய் எனக் அமுதன் கோபமாக கேட்க, ” நான் லோன் எடுத்து அவருக்கு தெரியாமல் இன்னுமொரு அக்கௌன்ட் திறந்து அவர் பெயரில் போட்டு விடுறேன்” என்றான் வேந்தன்.
“ஓ..” என்றவனுக்கு வேந்தனிடமும் லிங்கத்திடமும் வேண்டிய கடனையும் சேர்த்து கொடுக்கும் எண்ணத்துடன் சரி என்றான்.
அப்பொழுது அங்கே வந்த லிங்கம்” டேய் அந்த அறையில் நல்ல காத்து வருதுடா எனக்கு அந்த அறையை தந்திடனும்” என்று சொல்ல,
அவர் இங்கேயே தங்கும் முடிவுக்கு வந்துவிட்டதை எண்ணி “பெரியப்பா என்ன..” என்று வேந்தன் கேட்க,
“நான் இவன் கூட வந்திடுவேன்டா.. சின்னப்பிள்ளைகளை எப்படி தனியே விட முடியும்” என்று கேட்டார் லிங்கம் .
அமுதன் தன் சந்தோசத்தை அவரை இறுக்கி அணைத்து, கன்னத்தில் முத்தமிட்டு தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள,
“விடுடா எலும்பு எல்லாம் நோகுது” என்று அமுதனின் கையிலே அடித்து அவனை அணைப்பிலிருந்து விடுவிக்குமாறு சொல்ல,
அமுதன் அவருக்கு நோகாதவறு இடுப்பை கட்டிக்கொண்டு தன் மகிழ்ச்சியை விரிந்த புன்னைகையால் வெளிப்படுத்தினான்.
“ஓ நீங்கள் இருக்க தான் சொந்தமாக வீடு வேண்டுறீங்களா?” என்று பெரியப்பவை சீண்டினான் வேந்தன்.
“போடா இவங்க கூட அனுபவம் உள்ள ஒருத்தர் வீட்டிலிருந்தால் உதவியாக இருக்கும்” என்று சொன்னார் லிங்கம்.
“பெரியப்பா இப்ப வீட்டை வேண்டுறோம் அண்ணாட கல்யாணம் முடிஞ்ச பிறகு இரண்டு சிங்கள் பசங்களும் இங்கே மாறிடுவோம்” என்றவன் மேலும்,
“என்னால் ஒருத்தன் பண்ணுற ரொமான்ஸ்சையே பார்க்க முடியலை. இதில் இன்னுமொருத்தனும் சேர்ந்தால் நானே வயிறு எரிஞ்சு செத்துப்போயிடுவேன்” என்று வேந்தனை பார்த்து கண்ணை சிமிட்டியபடி சொல்ல,
எனக்கு தமிழ் மேல் காதல் ஆசை, மோகம் என்றால் அதை நாங்கள் தங்கியிருந்த அறையில் காட்டியிருக்கனும்..
திருமணமாகாத பெண் பிள்ளைகள் இருந்தால் மட்டுமா பார்த்து இருக்கனும்.. ஆண் பிள்ளைக்கும் தப்பான எடுத்துக்காட்டாக இருக்க கூடாதே…
இப்ப அண்ணாக்கும் கல்யாணம் ஆகப்போகுது. புது மணத்தம்பதிகளை பார்த்து இருங்க என்று சொன்னால் நல்லாயிருக்காது.
திருமண மகாத பையன் வீட்டில் இருக்கும் பொழுது இரண்டு ஜோடியுமே கொஞ்சம் அடங்கியிருக்கணும்.
நாமே அவனை தூண்டிவிட்டு தப்பு செய்ய வைத்த மாதிரி ஆகக்கூடாது. அதுக்கு கொஞ்ச நாட்களுக்கு இங்கேயே இருக்க சொல்லுவோம். அவனுக்கும் இங்கே இருந்தால் போய் வரும் அலுப்பு இல்லை என எண்ணமிட்டபடியே “இரண்டு பேரும் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவீங்க” என்று முக்கிய சந்தேகத்தை வேந்தன் கேட்டான்.
இருவருக்குமே சமைக்க தெரியாதே என்று எண்ணமிட்ட அமுதன் பெரியப்பவை பார்க்க, “அக்கா வந்திடுவாள் தானேடா.. வரமாட்டேன் என்று சொன்னால் குண்டு காட்டாக தூக்கிட்டு வந்திடலாம்” என்றார் லிங்கம்.
சபாஷ் என்ற அமுதன் வேந்தனை பார்த்து இப்ப ஓகேயா என்று கேட்க “என்னமோ பண்ணித் தொலைங்க” என்ற வேந்தனுக்கும் இந்த முடிவு சரியாக தான் பட்டது.
அதனால் நிலத்துடன் சேர்த்து வீட்டுக்கும் பதிவுசெய்ய உடனடியாக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
நாளைக்கு அவர்கள் ஆவணங்களுடன் வந்து கையொப்பமிட்டால் உறுதி பதிவாகி வர மூன்று கிழமைகள் ஆகும் என்று அறிந்தார்கள்.
அமுதனுக்கு அதை கேட்டவுடன் முகம் சோர்ந்து போக,
“என்னடா..” எனக் கேட்ட லிங்கத்தை, “உறுதி கொண்டுபோய் கொடுத்தால் தானே பேங்க் லோன் கிடைக்கும் அது மட்டும் என்ன செய்யிறது” எனக் கேட்டான்.
அவன் மூன்று கிழமைக்கே காத்திருக்க முடியாமல் தவிக்கிறான் எனக் கண்டு, தன்னிடம் இப்பொழுது இசையரசனுக்கு கொடுக்க என்ற காசு மட்டுமே இருக்க அதையும் எடுத்துக்கலாம் என நினைத்த லிங்கம் “உனக்கு காசு தானே வேண்டும் நான் ஏற்பாடு பண்ணுறேன். மூஞ்சியை தொங்க போடாதே” என்ற லிங்கம் வேந்தனை பார்த்தார்.
வேந்தனிடம் லிங்கம் என் பாங்கில் அறுபது லட்சம் இருக்கு இப்ப வீட்டுக்கு நாற்பது லட்சம் எடுத்தால் மிகுதி இருபது இருக்கு அதை இசையரசனுக்கு ஏதும் இடமாகவோ பொருளாகவோ வேண்டிக்கொடுத்துவிடலாம் என்று சொல்லியவர் அமுதன் பணத்துக்கு என்று நிற்கும் பொழுது அதையும் தூக்கி கொடுக்கவே விரும்பினார்.
அவனுக்கு பேங்க் லோன் கிடைத்தவுடன் இசையரசனுக்கு கொடுக்கலாம். அதனாலேயே வேந்தனை பார்த்தார்.
“பார்த்துக்கலாம் பெரியப்பா” என்ற வேந்தனுக்கும் லோன் போட்டால் வர நாள் எடுக்குமே அந்த இருபது லட்சம் அமுதன் வைத்து இருக்கும் பிளானை முற்று முழுதாக செயற்படுத்த போதாதே என்ன செய்யலாம் என யோசித்தவனுக்கு மண்டையில் ஒன்றும் தோன்றவில்லை.
அந்த நில உரிமையாளரிடம் கேட்டே நிலத்தை உழுவதற்கும், அங்கே ஆடுமாடுகள் வெய்யில் இல்லாமல் இருப்பதற்கு டென்ட் போல அமைப்பதற்கு மேசன் ஒருவரையும் கைகாட்ட அங்கேயே சென்று பேசி வந்தார்கள்.
எல்லாம் நன்றாக முடிய ஒரு பார்க்கில் மூன்று பேருமாக ஐஸ் ஒன்றை வேண்டி உண்டு கொண்டு அமர்ந்தவர்கள் அடுத்து என்ன என்று வேந்தன் அமுதனிடம் கேட்க,
பெரியப்பா இருங்க, என்று லிங்கத்திடம் சொன்ன அமுதன், “முதலில் என்ன என்ன செய்யணும் என்று பிளான் போடுவோம். வடிவேல் சார் சொல்லியிருக்கார் என்ன செய்யிறது என்றாலும் பிளான் பண்ணிப் பண்ணனும் என்று என்ற அமுதன் கையில் கொப்பி பேனா ஒன்றும் இல்லாததால் தன்னுடைய போனில் நோட்பட் எடுத்து நாம மேசனிடம் கொடுக்க, என்ன என்ன வேண்டணும் என்றவன் லிங்கமும் சொல்ல, வேந்தனிடமும் கேட்டு தானும் யோசித்து எழுதினான்.
“நிலத்துக்கு பூசைக்கு என்ன வழி” என்று அமுதன் கேட்க,
“வாங்க வவுனியாவுக்கு போன பின் ஒரு யோசியாரை பார்ப்போம்” என்று லிங்கம் சொல்ல,
சரி என்றவர்கள் வந்தது போல கிளிநொச்சியில் இருந்து பஸ்சை எடுத்து மீண்டும் வவுனியாவுக்கு வந்தவர்கள் முதலில் ஒரு யோசியாரை பார்க்க, அவர் இசையரசனின் திருமண நாள் தான் தொழில் தொடங்க அருமையோ அருமை என்று திரும்ப திரும்ப சொல்ல,
என்ன செய்வது என்று அறியாதவர்கள், லிங்கத்தையே ஆலோசனைக்கு பார்க்க, “அது தான் விடியவில் இருந்து நல்ல நேரம் தானே மூன்று பேர் மட்டும், அண்ணாக்கு பால் வைச்சிட்டு போயிட்டு வரலாம்” என்றார்.
“எங்களை தேட மாட்டாங்களா நான்கு மணித்தியாலங்கள் பெரியப்பா” என்று சொன்ன வேந்தனை கண்டு,
“அவன் தொழில் என்று முதல் முதலாக ஆரம்பிக்க போகிறண்டா.. அதுக்கு எதுக்கு தடங்கல் சொல்லிக்கிட்டு, சமாளிச்சுக்கலாம்” என்றார் லிங்கம்.
அவர்கள் கைவசமே தியாகராஜா குருக்கள் இருக்க அவரிடம் சென்று பேசினார்கள்.
அவரை சிவகாமி நன்றாக வைத்துச் செய்துவிட்டார். அதனால் எந்த குழப்பங்களும் செய்யாமல் இருந்தவர் வீட்டுக்கு மருமகனுடன் வந்த அவர் உறவுகளையும் முகத்தை திருப்பாமல் வரவேற்று பேசினார்.
அவர் அது மனமுகர்ந்து செய்யாமல் கடமைக்கு செய்கிறார் என்று தெரிந்தாலும், இவ்வளவு இறங்கி வந்ததே பெரிய விசயம் என்பதால் மேற்கொண்டு நிலப்பூசைக்கு என்ன வேண்ட வேண்டும் என்று கேட்டு கொண்டு வந்தார்கள்.
வீட்டுக்கு வெளியே வந்த அமுதன் “அண்ணா புலியாக உறுமிக்கொண்டு இருந்தவர் பூனையாக மாறிட்டார்” என்று சொல்ல,
“எல்லாம் சிவகாமியின் வேலையாய் இருக்கும். நல்லா பேயோட்டி விட்டு இருக்கிறா” என்றார் லிங்கமும்,
“தேவி அம்மாவும் இங்கே இருந்து இருந்தால் நன்றாக இருக்கும் எதுக்கு புருசனும் பொண்டாட்டியும் யாழ்ப்பாணத்துக்கு போய்விட்டினமோ தெரியலை” என்று கவலைப்பட,
தன் கணவனின் கண்ணில் தமிழினி தேவையில்லாமல் படவேண்டாம் என்ற நோக்கத்துடனனே, தன் கணவனும், தம்பியும் சேர்ந்து இருந்தால் வில்லங்கம் என்று, தன் தம்பியையும் விட்டு தனியே சென்று இருந்தார் தேவி.
“சரி அதை விடுடா இப்ப நான்கு மணித்தியாலம் கல்யாண வீட்டில் இருந்து எப்படி எஸ் ஆகிறது அதை சொல்லு” என்று கேட்டான் அமுதன்.
“என்னை கேட்டால் எனக்கு எப்படி தெரியும். நீ தானே சப்பிரைஸ் என்று சாகடித்தாய் நீயே சொல்லு.. நீ யாருக்கும் சொல்லாட்டியும் நான் அண்ணாக்கிட்டே சொல்லப்போகிறேன் அவனை மட்டும் விட்டுட்டு எல்லாம் செய்ய ஒரு மாதிரி இருக்கு” என்றான்.
“அவன் அம்மா பிள்ளை உடனே போய் வத்தி வைச்சு காரியத்தை கெடுதிடுவண்டா” என்று லிங்கம் சொல்ல,
“ஒரு மாசம் தான் அண்ணா நான் அதுக்கு இடையில், மாடு ஆடு, கோழி வாத்து என்று கொஞ்சமாக வேண்டிட்டு காய்கறிகளும் கொஞ்சம் போட்டுடுவேன், அதுக்கு பிறகு எல்லோரையும் கூட்டிட்டு வந்து காட்டினால் அவங்க மகிழ்ச்சி இரட்டிப்பாகும்” என்று அமுதன் சொன்னான்.
அமுதனுக்கு தாய் தந்தையிடம் தரிசில் நிலத்தை காட்டாமல், ஏதாவது சின்னதாக வேனும், தன் உழைப்பில் ஒன்றை செய்துவிட்டு காட்ட வேண்டும் என்று இருந்தது.
வேந்தனுக்கு தாய் இரண்டு தரம் போன் பண்ணி இன்னுமா உங்கள் வேலை முடியலை என்று கேட்டு இருந்தார்.
தமிழினியும் யூனிவெர்சிடியில் இருந்து சாப்பிடும் நேரம் போன் பண்ணி சாப்பிட்டாச்சா என்று அக்கறையாக விசாரிச்சு விட்டு, அவன் அண்ணாவின் திருமனவேலையாக அலைவது தெரிந்தவள் அப்பொழுது என்ன வேலை செய்கிறான் என்று அறிவதற்காக என்ன வேலை செய்யிறீங்க என்று கேட்க எல்லோரிடமும் பொய்யை மட்டுமே சொல்லி சமாளிச்சு இருந்தான்.
அவனுக்கு சரளமாக பொய்யெல்லாம் வாராது. சிறுவயதில் இருந்து தாய் உண்மை தான் பேசணும். நீ ஒரு பொய் சொன்னால் அதை மறைக்க ஆயிரம் பொய் சொல்ல வேண்டி வரும் அதுக்கு நீ உண்மையை சொல்லி விட்டாய் என்றால் உனக்கு தண்டனைகள் கிடைத்தாலும் ,பிரச்சனைகள் அந்த இடத்திலே முடிந்துவிடும். என்று கண்டித்து சொல்லி வளர்த்து இருக்க என்ன நடந்தாலும் சிறுபிள்ளை போல அம்மாவிடமும் அப்பாவிடமும் சொல்லி விடுவான்.
அவன் வீட்டுக்கு தெரியாமல் மறைத்தது என்றால் தமிழனி விடயம் மட்டுமே..அதுக்கே அவனுக்கு நாக்கு தள்ளிவிட்டது.
இதில் அமுதனுடன் சேர்ந்து இவ்வளவு பெரிய உண்மையை தாயிடமும், தாரத்திடமும் எப்படி மறைப்பான்.
“உன் வேலையை ஆரம்பித்து பண்ணையை சீக்கிரம் திறந்து தொலைடா என்னால் ஒரு நாளே தாக்கு பிடிக்க முடியலை” எனக் புலம்பிய வேந்தனை கண்டு,
லிங்கமும், அமுதனும் வாய்விட்டு சத்தமாக சிரித்தார்கள்.
லிங்கத்துக்கு இப்படி சிறுபையனுடன் சேர்ந்து வீட்டுக்கு தெரியாமல் ஒரு காரியத்தை செய்வது புது அனுபவமாக இருந்தது.
“போடா..” எனத் தம்பியை செல்லமாக திட்டினான் வேந்தன்.
“என் வண்டி ஏதோ மக்கர் பண்ணுது அதை தூக்கிட்டு இப்ப என்னால் ஒரு இடமும் அசைய முடியாது. நீதான் நாளைக்கு இரும்புக்கடைக்கு போய், மாட்டு கொட்டில் போட இரும்புக் கம்பி வேண்ட சொன்னாரே கொத்தனார் அதுக்கு என்னை கூட்டி போகணும்” என்றவன் ஒரு கடையை குறிப்பிட்டு இந்த கடையில் வேண்டுவம் மலிவாக, தரமாக இருக்கும்” என்றான்.
“நான் போய் மண்ணுக்கும் சீமெந்துக்கும் என் கூட படிச்ச பெடியன்ர கடையில் சொல்லி விடுறேன். எனக்கு இன்னுமொரு வேலையும் இருக்கு அதையும் பார்க்கணும்” என்ற அமுதன் கண்டு,
“வா மிச்சம் அவன் பார்த்துப்பான். நாம இரும்புக்கடைக்கும், அந்த மரவேலை செய்யிற ஆசாரிக்கிட்டையும் போய் நாளைக்கு வர சொல்லிட்டு வீட்டுக்கு போவோம்” என்ற லிங்கம் துண்டை எடுத்து தோளில் போட்டுவிட்டு கிளம்ப , பெரியப்பாவையும் கூட்டிக்கொண்டு இசையரசனின் கல்யாண வேலையில் மிகுதியை பார்க்க போக,
அமுதன் தன் நண்பன் ஒருவனுடன் மோட்டார் வண்டியை கடன் வேண்டவே சென்றான்.
நண்பர்களுக்கும் வண்டி கடன் வேண்டுவது எல்லாம் சகயம் என்பதால் இன்றைக்கு ஒரு நாளைக்கு அனுவை வீட்டில் விடவே கடன் வேண்ட முடிவு செய்தான்.
பெரிய அப்டேட் போட்டு இருக்கிறேன் மறக்காமல் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்1