ANI 14

Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் 14

அவரை நிலத்தின் உரிமையாளருக்கு கேட்க்காத தொலைவுக்கு கூட்டிவர, வேந்தனின் பின்னே அமுதனும் வந்தான்.

லிங்கம் இப்பொழுது தவில் வாசிக்க கூட போவது இல்லை. வீட்டில் அவரை ரெஸ்ட் எடுக்குமாறு வலியுறுத்திய பிறகு ஓய்வாக வீட்டிலே தான் இருக்கிறார். அப்படியிருக்க அவரின் கைகளிலே இவ்வளவு பணம் புழங்குவதை கண்டு அமுதனுக்கும் வேந்தனுக்கு தோன்றிய அதே கேள்வி தொக்கி நின்றது.

“எப்படி பெரியப்பா இவ்வளவு பணம் உங்களிடம்” எனக் மெதுவாக கேட்டான் வேந்தன்.

“என் பொண்ணு கல்யாணம் ஆகிய இந்த எட்டுவருசத்தில் போட்ட காசுடா.. பொம்பிளை பிள்ளை என்ற படியால் அம்மா அப்பாவை பார்க்கும் கடமை தனக்கு இல்லையா என்று பிடிவாதம் பிடிச்சு போட ஆரம்பிச்சா.. எனக்கும் உன் பெரியம்மாவிற்கும் நான் உழைச்சு கொண்டு வருவதே போதுமாக இருந்திச்சு. நான் லலியின் காசை எடுத்து உருப்படியான காரியம் ஏதும் செய்யணும் என்று தொடுறது இல்லை. இப்ப அது வட்டி குட்டி எல்லாம் போட்டு நிறையவே இருக்கு. அதை எடுத்து என் பிள்ளைக்கு கொடுக்க போகிறேன் ” என்றார் லிங்கம்.

“அக்காண்டா காசை எடுத்து எங்களுக்கு தந்தால் அக்கா ஏதும் சொல்ல போறாள். அவள் குளிரையும் வெய்யிலையும் பொருட்படுத்தாமல், பிள்ளைகளையும் வீட்டிலே விட்டுட்டு வேலைக்கு போய் உங்களுக்கு என்று கொடுத்த காசை எங்களுக்கு தூக்கி கொடுத்தால் என்ன சொல்லுவாள்” என்று வேந்தன் கேட்டான்.

“இரு அவளிடமே கேட்கிறேன்” என்று அவர் மகள் லலிதாவிற்கு போனை போட்டவர், லலிதா போனை எடுத்த கையுடன் ” லலிம்மா நீ அப்பாக்கு கொடுத்த காசில் வேந்தனுக்கோ, அமுதனுக்கோ கொடுத்தால் வருத்த படுவியம்மா?” என்று சாதாரணமாகவே கேட்டார்.

அப்பொழுது தான் நித்திரை கொண்டு பெட்டில் இருந்து எழும்பியிருந்த லலிதா, பெட்டில் இருந்து எழுந்து கொள்ளும் பொழுதே தந்தை போன் செய்ய, உடம்புக்கு எதுவுமோ என்றே பதறி அருகில் மேசையில் இருந்த போனை எடுத்தாள். போனை எடுத்தவுடன் அப்பா கேட்ட கேள்வியில் அவருக்கு ஒன்றுமில்லை என்று கண்டவள், திரும்ப பெட்டில் ரிலாக்சாக அமர்ந்த படி “யார் அப்பா இப்படி லூசுக்கேள்வியை கேட்க சொன்னது” என்று கொட்டாவி ஒன்றை விட்டபடியே கடுப்புடன் கேட்டாள்.

போனை வேந்தன் பக்கம் திரும்பிய லிங்கம்,”எல்லாம் உன் இரண்டாவது தம்பி அரைலூசு தான்” என்று வேந்தனை பங்கம் செய்தார்.

“கல்யாணம் கட்டினால் லூசு எல்லாம் குணமாகிடும் என்று சொல்வாங்களே, இவனுக்கு முத்திட்டு போல, பாவம் தமிழ்” என்று தமிழினிக்காக பரிதாபப்பட்டவளை கண்டு,

வேந்தன் முறைக்க, “என்ன லந்தா நான் உன் அக்காடா கண்ணு முழியை தோண்டி காக்கைக்கு போட்டுடுவேன்” என்று லலிதாவும் வேந்தனை மிரட்டினாள்.

“அக்கா..” என்ற வேந்தன் பல்லைக்கடிக்க,

“உன் மேல் நான் கோபம் என்னுடன் கதைக்காதே” என்று லலிதா முகத்தை அவனுக்கு கட்டாதவாறு திருப்ப,

வேந்தனின் கல்யாணத்திற்கு தான் நாத்தனார் முடிச்சு போடவில்லை என்று திருமணம் ஆனதிலிருந்து அவனுடன் சண்டையே போட்டுக்கொண்டு இருந்தாள்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

“நீங்கள் அண்ணாட கல்யாணத்துக்கு வரும் பொழுது தமிழினி கழுத்தில் இருக்கிற தாலியை கழட்டி உங்களை நாத்தனார் முடிச்சு போட விடுறேன் என்று சொல்லிட்டேன்” என்று அவனும் அவளை சமாதானம் பண்ணுவதற்காக சொன்னதை இப்பொழுதும் சொல்ல,

“நீ பிராடு.. நீ கதைக்காதே” என்றவள்,அமுதனை கண்டு “ஹாய்டா அனு எக்ஸாம் போய்யாச்சா, நீயாவது நான் வந்தபிற்பாடு கல்யாணம் கட்டு.. இல்லைவெளுத்திடுவேன்” என்று அமுதனை மிரட்ட, அமுதன் நல்ல பிள்ளையாக நான் நீங்கள் இல்லாமல் கல்யாணம் கட்ட மாட்டேன் அக்கா” என்று லலிதாவிற்கு உத்தரவாதம் கொடுத்தான்.

“ம்..” என்றவள் வேந்தனுக்கு அருகில் தன் தந்தையின் முகம் போனில் தெரிய, “அப்பா.. இப்ப எதுக்கு இவன் மண்டை லூசு மாதிரி வேலை செய்யுது.. அதை சொல்லுங்க” என்று கேட்டாள்.

“அமுதனுக்கு நிலம் பார்க்க வந்தோம். வீடும் இருக்காம் பிடிச்சு இருந்தால் நான் வேண்டித்தாறேன் என்று சொல்ல உன் இரண்டாவது நோம்பி கதைக்கிறான்” என்றார் லலிதா எப்படி முகத்தை திருப்பினாலோ அப்படி வேந்தனை கண்டு முகத்தை சுழித்தபடி,

அவள் சும்மாவே என் மேலே கோபத்தில் இருக்கிறாள். இப்ப போய் அவள் கிட்ட நேக்கா என்னை போட்டு கொடுத்திட்டு முக திருப்பல் வேறா.. அப்பாவும் பிள்ளையும் இந்த விசயத்தில் ஒரே மாதிரி என்று எண்ண மிட்ட வேந்தன் அக்காவை பார்த்து அசட்டு சிரிப்பை ஒன்றை உதித்து சமாளிக்க பார்க்க,

லலிதாவின் முகம் சீரியஸ் ஆக மாறி “இந்த கேள்வி நான் உங்களுக்கு ஆம்பிள்ளை பிள்ளையாக பிறந்து இருந்தால் வந்து இருக்காது. என்னிடம் உரிமையாகவே அண்ணா எனக்கு இதுக்கு காசு தேவைப்படுது உன்னால் உதவ முடிந்தால் உதவு என்று கேட்டு இருப்பாங்க. நான் பெண்.. இன்னொரு வீட்டுக்கு வாழ போய்விட்டேன். இப்ப நான் கொடுத்தால் உரிமையில்லை. என் காசை எடுத்தால் பிரச்சனை என்று பயம்..

எனக்கு அவங்களும் கூட பிறந்த தம்பிகள் போலத் தானே.. எனக்கு அவங்களை பற்றி நல்லா தெரியும் கொடுக்கிற காசை வீண் பண்ண மாட்டாங்க.. அப்படியிருக்கும் பொழுது அவங்களுக்கு அது பயன் படுகின்றது எனும் பொழுது சந்தோசம் தான்” என்றவள், தொடர்ந்து,

“அப்பா அமுதனுக்கு செய்யிறதில் ஒன்றும் இல்லை. எனக்கு அவன் மேல் முழு நம்பிக்கை இருக்கு. அவன் எப்படியும் ஜெயித்துவிடுவான். நீங்கள் வீட்டை பார்த்து பிடிச்சு இருந்தால் கூட குறைய ஆனாலும் வேண்டி கொடுத்திடுங்க, காசு பத்தாமல் வந்தால் என்கிட்ட சொல்லுங்க” என்றவள் மேலும் “அப்பா அந்த நிலத்திலேயா நிற்கிறீங்க காட்டுங்க பார்ப்போம்” என்று ஆவலாக கேட்டாள்.

சமதரையாக புற்கள்மொய்த்துப்போய் இருந்த நிலத்தை லிங்கம் லலிதாவிற்கு போனின் மூலம் காட்ட “என்னப்பா வெறும் நிலமாக இருக்கு எல்லாம் நாங்களா செய்யோணும்” என்று லலிதா லிங்கத்திடம் கேட்க,

தாய் தந்தை வைக்காத நம்பிக்கையை தன் உடன்பிறவா சகோதரி தன் மேல் வைத்து இருக்கிறாள் என அவளின் பேச்சில் உணர்ச்சிவசப்பட்டு நின்று இருந்த அமுதன், தன்னை நிலைப்படுத்திக்கொண்டு “அக்கா இப்ப தான் பிளானை நமக்கு ஏற்றது போல போட வசதியாக இருக்கும். இது புல்லு மட்டும் தான் முளைச்சு இருக்கு… கீழே நல்ல செம்மண் தான் இரண்டு மூன்று முறை உழுதால் நமக்கு விபசாயம் பார்க்கிற நிலமாக மாற்றிடலாம். இதில் கொஞ்ச நிலத்தை எடுத்து அனுஷாவிற்கு பிடித்த பெட்சை வளர்ப்போம். நான் நிலத்தை பார்க்காவிட்டாலும் எல்லா சாமானும் எங்கே எங்கே கிடைக்கும், எங்கே மலிவு முதற்கொண்டு பார்த்து வைச்சிட்டேன். நாளைக்கே வேலையை ஆரம்பிக்கணும்” என்று உற்சாகமாக சொன்னவனை இப்பொழுது வேந்தன் அருகில் நின்று முறைத்தான்.

அவனை கண்ட அமுதன் “என்னடா..” என்று கேட்க, “நிலம் தான் ஓகே ஆகிடுச்சு இல்லை அண்ணாட கல்யாணம் முடிய மிச்சத்தை பார்” என்று சொல்ல,

“போடா எனக்கு எல்லாம் உடனே செய்யவேண்டும் போல இருக்கு. அந்தளவிற்கு எல்லாம் பிளான் போட்டு வைச்சு இருக்கேன்” என்று ஆர்வமாக சொல்ல,

“விடு வேந்தா, அவன் இந்த நிலம் வேண்டணும் என்று நிறைய நாளாக பார்த்துக்கொண்டு இருந்தான் தானே.. நிலம் கிடைச்சவுடன், அடுத்து என்ன என்று அவன் மூளை யோசிக்குது” என்று அமுதனை புரிந்து லலிதா சொல்ல,

“யா…. நிறைய நாள் கனவு இப்ப நிறைவேறிடிச்சு அமுதன் ஹாப்பி” என்று அமுதனின் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓட சொன்னான்.

“சரி நீ நிலத்தை பார்த்து என்ன என்ன செய்யனும் என்று பார், அப்பாட்ட போனை கொடு ” என்றவள் அமுதன் லிங்கத்திடம் போனைக் கொடுக்க, “வேந்தனின் பொண்டாட்டிக்கு நகை வேண்டிக் கொடுத்து விட்டிங்க, இசையரசனுக்கும் ஏதும் கொடுத்திடுங்க” என்றாள்.

சகோதரர்களில் பிரிவினை பார்க்காமல் சொன்னவளை கண்டு, மேன்மக்கள் எப்பொழுதுமே மேன்மக்கள் தான் என்று வேந்தன் அக்காவை பார்க்க,

லிங்கத்திற்கும் மகளை நல்லமுறையில் வளர்த்து இருக்கிறேன் என்று பெருமை பொங்க அமுதனையும், வேந்தனையும் பார்த்து எப்படி என் பொண்ணு என்று பெருமை பட்டார்.