ANI 13
Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் 13
நிலத்தை பார்த்தவர்களுக்கு, அந்த நிலம் விவசாயம் செய்யக்கூடியதாக இருப்பதோடு கால்நடை வளர்ப்பையும் மேற்கொள்ள கூடியதாக பெருசாகவே இருந்தது.
தண்ணிக்கும் பெரிய கிணறும், மின்சார வசதியும் செய்து காணி முழுவதையும் முள்வேலியும் போட்டு அடைத்து பாதுகாப்பானதாக இருப்பதே அமுதனுக்கு அந்த நிலத்தை பிடிக்க போதுமானதாக இருந்தது.
“நீ விபசாயமும் பார்த்து கால்நடையும் வளர்க்கனுமென்றால் இரண்டுக்கும் இடையில் பெருசா வேலி போடணுமேடா” என்று நிலத்தை ஆராய்ந்த படி கேட்ட வேந்தனை கண்டு,
மண் எப்படியிருக்கிறது இந்த மண்ணில் எந்த விதை போட்டால் நன்றாக இருக்கும் என்று மண்ணை எடுத்து ஆராய்ந்து கொண்டு இருந்த அமுதன் “எனக்கு இந்த பண்ணையை சின்ன பிள்ளைகள் வந்து பார்க்கிற மாதிரி வடிவாக செய்யணும் என்று ஆசை, அதாவது பூ மரம் வளர்த்தால் அவங்களே பூவை பறிப்பது போல, காய்கறியென்றால் அவங்களே பறிக்கிறது மாதிரி, கிளிக்கு அவங்க சாப்பாடு கொடுக்கிற மாதிரி செய்ய வேண்டும்” என்று ஆசைப்பட்டானோ அதை தன் கனவுகள் நனவாவப்போவதை நினைத்து மகிழ்ச்சியில் சொல்லியவன் மேலும் “கால்நடை கழிவுகளை எப்படி விபசாயத்துக்கு உரமாக்கலாம்” என்று அவன் யோசித்து வைத்து இருப்பதை சொல்ல,
தாங்கள் விளையாட்டு பிள்ளை என்று எண்ணியவன் தன் பண்ணைக்காக நிறைய யோசித்து வைத்து இருப்பதை கண்டு அவனின் பேச்சு லிங்கத்துக்கும், வேந்தனுக்கு ஆச்சர்யம் ஊட்டியது.
“நீ காய்கறி தோட்டம் போட்டால் வருவதற்கு கொஞ்ச காலம் ஆகுமே” என்று வேந்தன் கேட்க,
“முதலில் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும் அதுக்கு தான் கால் நடை வளர்ப்பு இருக்கே கோழி, மாடு என்று அதில் வருவதை எடுத்து தான் சமாளிக்கனும்” என்று சொன்னான்.
அவன் எல்லாத்துக்கும் தக்க பதிலை வைத்து இருப்பதே இதை பற்றி நன்கு தெரிந்து கொண்டு இருக்கிறான் என்று சொல்லியது.
அந்த இடத்தின் உரிமையாளர் அமுதனின் பேச்சில் கவரப்பட்டவர் சின்ன பையன் வளர்ந்து வருவதற்கு அந்த நிலத்தை கேட்க பேரமே பேசாமல் அமுதனுக்கு உடனேயே கொடுக்க சம்மதித்தார்.
அவரிடமே இருப்பதற்கு வாடகைக்கு வீடு வேண்டும் என்று கேட்க, “தம்பி என் வீட்டையே வேண்டுங்க, நல்ல பெரிய வீடு அதையும் விற்கிறதுக்கு தான் போட்டு இருக்கிறேன்” என்ற தகவலை சொன்னார்.
எல்லாத்தையும் விற்றுவிட்டு என்ன செய்ய போகிறார் என்பது போல பார்த்த வேந்தன் நிலத்தின் உரிமையாளரிடம் “என்ன ஐயா.. எல்லாத்தையும் வித்திட்டு எங்கே போக போறீங்க” என்று கேட்டான்.
“மகனும் ,மகளும் வெளிநாட்டில் தம்பி… இப்ப என் பொண்டாட்டியும் நானும் ஒண்டிக்கட்டையாக தனியே இருக்கிறோம். முதல் மகன் கூப்பிடும் பொழுது நான் என்ற மண்ணை விட்டு வரமாட்டேன் என்று சொன்னேன்.
இப்ப என்னாலும் தனிய ஒன்றும் செய்ய முடியிறது இல்லை. யாருக்கும் குத்தகைக்கு விடுவோம் என்றால் அவங்க நிலத்தை வீணாக்கிபோடுவங்களோ என்று அதுக்கும் மனம் வரமாட்டேன் என்றது. அதனால் தான் சும்மாவே போட்டு வைச்சு இருக்கேன்.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
இவ்வளவு நாளும் என்கூட இருந்த மனுசிக்கு இப்ப பேரப்பிள்ளைகள் கூட இருக்கணும் என்று ஆசை வந்திட்டு. மகனும் எதுக்கு அனாதை மாதிரி தனியே இருந்து அல்லாடுறீங்க இங்கே வாங்க என்று கேட்டுட்டு இருந்தான். மருமக பிள்ளையும் தங்கமான குணமுள்ள பிள்ளைதான் அது வேற நான் உங்களை பார்க்க மாட்டேன் என்று வரமாட்டேன் என்று சொல்லுறிங்களா என்று அழுகுது. பேரப்பிள்ளைகளும் வாங்களேன் தாத்தா என்று கெஞ்சுதுகள் அது தான் நானும் சம்மதிச்சிட்டேன். அது தான் பிள்ளைகள் இரண்டும் சேர்ந்து போன்சர் பண்ணி கூப்பிடுதுகள். அங்கேயே போய் இருக்க போகிறோம். போறதுக்கு முதல் இதை யெல்லாம் வித்துடுவோம் என்று பார்க்கிறேன். அங்கே போயிட்டு ஒண்ணுமே பண்ண முடியாது தானே”என்றார்.
“அங்கே இருக்க முடியாட்டி இங்கே வந்து இருக்கிறதுக்கு உங்களுக்கு வீடு வேண்டாமா?” என்று அமுதன் கேட்க,
“இன்னும் ஒரு வீடும் வளவும் இருக்கு தம்பி.. அங்கே தான் நானும் என் பொண்டாட்டியும் இப்ப இருக்கிறோம். நாங்கள் போக எப்படியும் மூன்று நான்கு மாசம் ஆகும். அதுக்கு பிறகு அந்த வீட்டை வாடகைக்கு கொடுத்திட்டு தான் போக போறோம்” என்றார்.
மனைவிக்கு மட்டுமல்ல அவரின் குரலில் கூட பிள்ளைகளிடமும், பேரப்பிள்ளைகளிடம் செல்லப் போகும் குதூகலம் தெரிந்தது.
“நான் இந்த இடத்தை வேண்டுறதுக்கே என் வீட்டில் கடன் தான் வேண்டியிருக்கிறேன் அதையே கொஞ்சம் கொஞ்சமாக திருப்பி கொடுக்கணும். இதில் வீடுமென்றால் என்கிட்டே வீடு வேண்டுற அளவுக்கு எல்லாம் காசு இல்லை. நீங்கள் எனக்கு வாடகைக்கே வீடு காட்டுங்க” என்று அமுதன் கேட்க,
“அப்ப நாங்கள் இருக்கிற வீட்டை நாங்கள் போன பின் எடுங்க தம்பி” என்று அந்த உரிமையாளர் சொல்ல,
“அது மட்டும் எனக்கு இருக்க வீடு வேண்டுமே” என்று தயங்கினான் அமுதன்.
என்னத்தையோ யோசித்து கணக்கு போட்ட லிங்கம் “நீங்கள் விக்கிறதுக்கு வைத்து இருக்கிற வீட்டை வந்து பார்க்கிறோம் தம்பி. பிடிச்சு இருந்தால் வேணடுறோம் “என்றார்
தன் உழைப்பிலேயே வீடு வேண்ட ஆசைப்பட்டவனுக்கு, பெரியப்பா என்றாலும் வேண்டிக்கொடுப்பதில் விருப்பம் இல்லாமல் “பெரியப்பா காசு இல்லை” என்று அமுதன் இழுக்க,
“நான் தரேண்டா” என்று சொன்ன லிங்கத்தை கண்டு வேந்தனுக்கு தான் திகைப்பாகியது.
ஏற்கனவே தன் திருமணத்தின் பொழுது தமிழினிக்கு கொடுத்த நகைகளே இருபது லட்சம் வரும் என்று கணித்து இருந்தான். அதன் பணத்தை கொடுப்போம் என்று பார்த்தால் அவனின் சேமிப்பு மொத்தமும் அமுதனிடம் கொடுத்து விட்டான்.
இப்பொழுது அவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் அவன் லோன் தான் போட்டாகணும். அப்படியிருந்தும் பணத்தை தருகிறேன் என்றவனை அது நான் என் மகளுக்கு கொடுத்தது என்று முடித்துவிட்டார்.
இப்பொழுது வீடும் என்றால் குறைந்தது 30லட்சம் ஆவது வேண்டும். அப்பொழுது தான் ஒரு அறையுள்ள வீட்டையே கட்ட முடியும். அப்படியிருக்க அந்த பெரியவர் பெரிய வீடு எனும் பொழுது இன்னும் எத்தனை லட்சத்தை விழுங்குமோ அவ்வளவு பணம் இவர் கையில் எப்படி என்பது போல பார்த்தான்.