6.ரணம் ஆற ❣️நீயே மருந்தாய் 🌿

நண்பனின் விருப்பம்

ஒரு பேஷன் ஷோவை நடத்துவது என்பது சாதாரண விஷயம் இல்லை.. கண நேரத்தில் வந்து போகும் அழகிகள் அணியும் ஆடையை வடிவமைக்க பலர் தங்கள் உழைப்பை முதலீடு செய்திருப்பர்.

என்ன தான் உழைப்பை முழுவதுமாக கொட்டி இருந்தாலும்,, அதை சரியாக பார்வையாளர்களிடம் சேர்க்க வேண்டும்..

சரியாக திட்டமிடாவிட்டால் பேஷன் ஷோ, கொஞ்சம் சிக்கலானதாகவும் விலை உயர்ந்ததாகவும் மாறி விடும்.

முதலில் பேஷன் ஷோவுக்கான இடத்
தேர்வுசெய்யும் இடம் மிக முக்கியம். அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு இடமளிக்கும் அளவுக்கு பெரியதாக இருக்க வேண்டும், ஆனாலும் வாடகை விலை அதிகமாக இருக்க வேண்டுமா,, குறைவாக இருக்க வேண்டுமா என்பது  பேஷன் ஷோ நடத்தும் நிறுவனம் பொறுத்தது.

நிகழ்வில் இசை இயக்க உரிமம் வாங்க வேண்டுமா என்று கண்டுபிடிக்க வேண்டும், தேவைப்பட்டால், நிகழ்வுக்கு முன்பு அதை வாங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
.
உள்ளூர் ஆடை வடிவமைப்பாளரைத் தொடர்பு கொண்டு  பேஷன் ஷோவில் அவர்கள் வடிவமைப்புகளைக் காட்ட விரும்புகிறீர்களா என்று அவர்களிடம் கேட்க வேண்டும்.
பொதுவாக பல வடிவமைப்பாளர்கள் தங்கள் வடிவமைப்புகளை வெளிப்படுத்தும் வாய்ப்பை விரும்புகிறார்கள். அன்றாட உடைகளை வெளிப்படுத்தும் நிகழ்வுகளை விட உள்ளூர் வடிவமைப்பாளர்கள் ஈடுபடும் நிகழ்வுகளில் கலந்துகொள்வதில் மக்கள் அதிக ஆர்வத்துடன் இருப்பார்கள்

ஒரு மாதிரி(மாடல்ஸ் )யை தேர்வு செய்வதில் மிகுந்த அக்கறை வேண்டும்.. ஒரு தொழில்முறை மாதிரியை பணியமர்த்த அவ்வளவாக  பணம் செலவழிக்க தேவையில்லை. விளம்பரங்களை உருவாக்கி ஆடிஷன்களை நடத்தினாலே போதுமானது.

பேஷன் டிசைனர்களுக்கு அவர்கள் விரும்பினால் ஆடிஷனில் கலந்து கொள்ள வாய்ப்பு கொடுத்து, ஒருவேளை அவர்கள் தங்கள் வடிவமைப்புகளை நிரூபிக்க ஒரு குறிப்பிட்ட நபரை நினைப்பார்கள்.

ஒப்பனை மற்றும் சிகையலங்கார நிபுணர்களைத் சரியாக தெரிவு செய்வது இன்னொரு சவால்..
குறைந்த செலவு பேஷன் ஷோக்கு  தொழில்முறை ஹேர்ஸ்டைலிஸ்டுகள் மற்றும் பிரபல ஒப்பனைகளைத் தேடத் தேவையில்லை. ஒப்பனை மற்றும் சிகையலங்கார நிபுணர்,ஒரு உள்ளூர் கல்லூரி மாணவர்களாக இருந்தாலே போதுமானது,,இந்த செயலில் சேர அவர்கள்  மகிழ்ச்சியாக இருப்பார்கள், அவர்களின் திறமைகளை நாம் ஊக்குவித்ததாகவும் இருக்கும்.

கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் ஷோக்கான நுழைவு கட்டணம்.நிர்ணயிக்கும் விலை நிகழ்ச்சி நடைபெறும் வகையைப் பொறுத்தது. நிகழ்ச்சி தொண்டுக்காக இருந்தால், மக்கள் டிக்கெட்டுக்கு வழக்கத்தை விட அதிகமாக செலுத்த தயாராக இருக்கலாம்.

இன்றைய தலைமுறையினர் ஆடை மற்றும் மாடலிங் துறையில்  ஆர்வம் என்றாலும்   பார்வையாளர்கள் இல்லையென்றால் பேஷன் ஷோவை நடத்த முடியாது. பேஷன் ஷோவை நன்றாக விளம்பரப்படுத்த வேண்டும்..

நிறைய அழைப்புகளை அனுப்பி, உறவினர்கள், நண்பர்கள், வீட்டு பக்கம் உள்ளோர், நண்பர்களின் நண்பர்கள் என, ஏற்கனவே வாடகைக்கு எடுத்த இடத்தை நிரப்ப வேண்டும்..

See More  🎵 இசை 6 🎶

எந்த செயலுக்கும் ஒரு முன் முயற்சி மிக முக்கியம்.. அதுவும் பேஷன் ஷோக்கு ஒத்திகை முதுகெலும்பு போன்றது.

எல்லா மாடல்களிலும் பயிற்சி செய்து ,அவர்களை  உண்மையான நிகழ்ச்சி நடக்கும்போது என்ன செய்ய வேண்டும் என்று கற்று தர வேண்டும்.
அனுபவம் உள்ளவர்கள் கூட சில நேரத்தில் தவறு செய்வது உண்டு..

நடைமுறையில், யாராவது நிகழ்ச்சியைக் குழப்பிவிடுவது குறைவு. மேடை ஒத்திகைகள் உண்மையான மேடையில் இருக்க வேண்டியதில்லை

பேஷன் ஷோ  இடத்தில் இருக்கைகளை சுற்றி கேட்வாக் ஏற்பாடு செய்ய வேண்டும். இது ஒரு உயர்ந்த தளமாக இருக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் அது நாற்காலிகளால் சூழப்பட்ட தரையின் ஒரு பகுதியையும் வரிசைப்படுத்தக்கூடும். பல பேஷன் ஷோக்களை ஒழுங்கமைக்க எளிதானது கேட்வாக்.

விளக்குகள் மற்றும் அலங்காரங்களை அமைக்கவும். அதிகப்படியான வெளிச்சம் மற்றும் அலங்காரங்கள் மக்களை ஆடைகளிலிருந்து திசைதிருப்பிவிடும் என்பதால் இதை எளிமையாக வைத்திக்க வேண்டும்.

பேஷன் ஷோவில் உதவக்கூடிய நபர்களின் நட்பு மிக முக்கியம். எல்லாம் சீராக இயங்குவதை உறுதிசெய்ய மக்கள் டிக்கெட்டுகளையும் திரைக்குப் பின்னாலும்  விற்க வேண்டும்.

இதில் மாதிரிகளுக்கு அலங்காரம் செய்து விடுவது மட்டும் தான் நிறுவனத்தில் உள்ளோர் வேலை…. மற்ற விஷயங்கள் அனைத்தும் நிகழ்ச்சி ஒருங்கமைப்பாளர் தான் செய்ய வேண்டும்..

என்னடா சம்மந்தமே இல்லாமல் பேஷன் ஷோ கிளாஸ் எடுக்கறேன்னு குழப்பாமா இருக்கா..அட என்னப்பா நீங்க உங்களுக்கு முன்னாடி தானா அரசு முகில் கூட பேசிட்டு இருக்கா…

அட என்ன  நீங்க……உங்களுக்கு இன்னும்  நியாபகம் வரலையா,,, முகிலன், அரசுவை பேஷன் ஷோக்கு வர சொன்னது இன்னுமா நினைவுக்கு வரல…

எல்லாத்தையும் மறந்தா எப்படி மக்களே…. கொஞ்சமே கொஞ்சம் நியாபகம் இருந்தா தானா எனக்கு அடுத்து என்னனு சொல்ல வசதியா இருக்கும்..

சரி
சரி
இப்படி நீங்க கட்டையா தூங்குவீங்கனு எனக்கு எப்படி தெரியும்… கோபபடக்கூடாது.. போதும் போதும் நிறுத்திகுவோம்…

கொஞ்சம் எல்லாரும் மேல பாருங்க,,, பிளாஷ் பேக் சொல்ல மேல தான் பக்கோணும்…. ஜாங்கரி வேணுமோ, முறுக்கு வேணுமோ, இல்லை கொசு வத்தி சுருள் வேணுமோ யாருக்கு எது வேணுமோ சுத்துங்க

ஆஆஆஆ வந்தாச்சு வந்தாச்சு,
எங்க எங்க,, அதோ அதே சிமெண்ட் பென்ச் தான் அதே பட்டமரத்தை விட்டு விலகல அவனோட கண்கள் ,நம்ம அரசு
எல்லாத்தையும் நெனச்சி வேதனைல வெந்துட்டு இருக்கும் போது, முகில்கிட்ட இருந்து கால் வந்தது.

முகில்  நம்ம பாவையை சைட் அடிச்சிட்டு திரும்பி போகும் போது,, அதாங்க அரசு கிருத்திக் கிட்ட பேசிட்டு இருந்த கேப்லா,அவனுக்கு அவனோட
நண்பன் சந்துருக்கிட்ட இருந்து அழைப்பு வரவே பேசி முடித்தான். நண்பனுக்கும், நண்பனின் நண்பனுக்கும் என்ட்ரி பாஸ் ரெடி ஆகிடுச்சு அதுவும் முக்கிய மனிதர்க்கான நுழைவு சீட்டு என்றும் எடுத்துரைக்க அதையே அவன் அரசுவிடம் சொல்லினான்..

See More  என் நித்திய சுவாசம் நீ - 12

ஆனால் அரசு அன்று அவன் கிளம்பி போன பின் நடந்த அத்தனையும் சொல்லி சொல்லவோன்னா வேதனை அடைய,அப்போது முகில் அவனிடம் ஏதோ சொல்லி இருக்க வேண்டும்..

அடர்ந்த வனத்தில் கும்மிருட்டில் கண்களுக்கு தெரியும் மின்மினி பூச்சு போன்று இருந்தது  அரசின்  நம்பிக்கை, முகில் சொன்ன வார்த்தையில் பட்டுப்போன மரம் துளிர் விடும் நினைவு மனதில் எழுந்தது..

வீட்டில் சிவாவின் விஷயம் தெரியாமல் பார்த்து கொண்டான் அரசு.. ஆனால் சாதாரணமாக இருக்க தான் முடியவில்லை.. வீட்டிற்கு வருவதை முடிந்த அளவு தவிர்த்தான்.

எப்படியோ நெட்டி முறித்து அந்த மாதத்தை ஓட்டி விட்டான்.

சென்னை,

அனைத்து விதமான மனிதர்களையும் ஒருங்கே அரவணைத்த மாநகரம்.. இந்த ஊர் அனைத்திற்கும் பெயர் போனது.
பிழைக்க வழி இல்லாமல் வருபவர்களை பந்தாடி, வலுவான அடித்தளத்துடன் முன்னேறியவர்கள் பலர்…

இந்த நகரத்தில் பெரிய மனிதர்கள் என்று போற்றப்படும் அனைவருமே ஒரு காலத்தில் ஒரு வேலை உணவு கூட இல்லாமல் தவித்தவர்களே..

சரி நம் அரசு சென்னைக்கு வர ஏன் இவ்வளவு ஆர்வம் கொண்டான் என்பதை  நாம் அறிந்து கொள்ள வேண்டும் இல்லையா..

அன்று கிருத்திக் சொல்லிய நிகழ்வு மற்றும் கையில் இருந்த புகைப்படம் இரண்டும் அரசிற்கு ஒரு விஷயத்தை வெட்ட வெளிச்சமாக்கியது.
அது சிவகார்த்திகேயன், அர்த்தநாதிஷ்வரனாக மாறியது..

இந்த நிகழ்வை யாராலும் மாற்ற முடியாது… இயற்கை அமைத்த அனைத்து திட்டங்களுக்கும் நாம் கட்டுப்பட்டே ஆக வேண்டும்.

அந்த நேரம் தான் முகிலிடம் இருந்து அழைப்பு வரவே, இருப்பதை அனைத்தும் அவனிடம் கொட்டியவன், தன் ஆதங்கத்தை சொல்ல தொடங்கினான்.

“வீட்டுக்கு மூத்த பிள்ளையா இருந்து என்ன டா நா பண்ண,, என் சந்தோசத்தை மட்டும் பாத்துட்டு என் தங்கச்சியை பாக்காம அவ கஷ்டத்தை புரிஞ்சிக்காம,, நெனச்சாலே எனக்கு கேவலமா இருக்கு,, சரி அவ தான் பொண்ணு,, அவளோட உணர்வுகள் நமக்கு புரியாது சீக்கிரம்..

என் தம்பி….. என் தம்பியை கூட நா கவனிக்காம விட்டுட்டண்டா…. அவனோட பழக்க வழக்கங்கள் மாறி இருக்கு,, ஆனா நான் தான் அதை கவனிக்கல, சச்சே எவ்ளோ மோசமான பிறவிடா நான்,,

என் மேலே அவ்வளோ பாசமும்,, அக்கறையுமா இருந்த என் தோழியை நா மதிக்கல,,, என் குடும்பத்தை நா கண்டுக்கல,, என் சந்தோசம் முக்கியம்னு இருந்த சுயநலவாதி நா,,, ஆனாலும் அந்த சந்தோசமாவது என் குடும்பத்துக்கு கிடைச்சதா,, குடும்பம் மானத்தையே வாங்கிட்டேனே,, ஊருக்கே நாட்டாமை சொல்ற என் குடும்பத்தை பஞ்சாத்துல நிக்க வச்சிட்டா, என்னால முடியலடா,, இதுக்கு மேலே என் குடும்பத்தை நா கஷ்டப்பட விட மாட்டேன்…

See More  எழிலி 8

என் ஆச்சிக்கு மட்டும் இது தெரிஞ்ச நொறுங்கி போய்டுவாங்க,,,, தன்னோட பேரன் இப்படி யாருக்கும் சொல்லாம எங்கயோ போய்ட்டான்னு தெரிஞ்சா என்…. என் ஆச்சி, அய்யோ சொல்லவே கஷ்டமா இருக்குடா,,, கடவுளே கதின்னு இருக்காள் என் தங்கச்சி,, கடவுளாவே மாறி போன என் தம்பி,,”

கதறி கதறி அழுதான் அந்த ஆண்மகன்..
ஆண்கள் அழுதால் அசிங்கம் என்று சொல்லும் சமூகமே,,, அவனுக்கும் உணர்வு உண்டு,,, உடலால் பலம் கொண்ட ஆண் வர்க்கத்தின் மனம் மிக மிக மென்மையானது.. நீங்கள் அறிவீர்களா

பாருங்கள் எங்கு எங்கள் அரசின் மனம் இந்த அளவு மேன்மை கொண்டது என்று.

இல்லாத உறவுக்கு
என்னென்ன பேரோ

நாடோடி பாட்டுக்கு
தாய்தந்தை யாரோ

விதியோடு நான்
ஆடும் விளையாட்டு பாரு

வெளையாத காட்டுக்கு
வெத போட்டதாரு

தலை எழுத்தென்ன என்
மொதல் எழுத்தென்ன

தலை எழுத்தென்ன மொதல்
எழுத்தென்ன சொல்லுங்களேன்

மனதால் வலு கொண்ட பெண்மையும், உடலால் வலு கொண்ட அண்மையில் இணைந்து நடைத்திய அரசாங்கம் வரலாற்றில் பல உண்டு.

இவை அனைத்தையும் கேட்டு கொண்ட முகில் பாவை பற்றி சொல்லும் விஷயத்தை மட்டும் மிக உன்னிப்பாக கவனித்தான்.. ஏன் அவள் கஷ்டப்படுகிறாள்.. எதற்கு வேதனை படுகிறாள் என்று இமை பொழுதில் அலசி ஆராய்ந்து மனது.

ஒரு கணம் மனதை சமன் செய்தவன்,, சிவகார்த்திகேயன் கல்லூரி நோக்கி வண்டியை விட்டான்.. அரசுவை கடினப்பட்டு தேற்றியவன்,,,பேச துவங்கினான்.

“அரசு என் நண்பன் ஒரு முறை சொல்லி இருக்கான் டா,, பேஷன் ஷோலா நிறைய திறமையானவங்க இருக்காங்க,, ஆனா அவங்க யார்னு தெரியுமா “

கேள்வியாக பார்த்தான் அரசு, “குடும்பத்தால் கைவிட பட்ட, நீ சொன்னாயே அந்த இறைவனும், இறைவிகளும் தான், ஆண்கள் உடல் வாகு ஆனால் பெண்கள் உணர்வு என்று அவங்களால அந்த துறைல நெறைய சாதிக்க முடியும், நீ என்கூட சென்னைவா,, என் நண்பங்கிட்ட சொல்லி உன் தம்பியை தேடும் வழி பார்ப்போம் “
இதனால் தான்  அரசு அவசர அவசரமா சென்னை போக ஆசைப்பட்டது.

இங்க இப்படி நடக்கட்டும்… நம்ம அரசுவை இப்படி புலம்ப விட்டாலே இளமதி அவள் என்ன ஆனாள்,, இப்போ என்ன பன்றான்னு பாப்போம் வாங்க “

இப்போவே போகணுமா,, கொஞ்சம் அவளை தேட வேண்டி இருக்கு.. தேடிட்டு அவளை பத்தி சொல்ற,,

சரியா…

சரியா….

சரினு சொல்லுங்கப்பா

அரசு வருவான் 👣