5.ரணம் ஆற ❣️நீயே மருந்தாய் 🌿

வேதனையின் உச்சம் 🔥

பரந்த அந்த விளையாட்டு திடலின் ஒரு ஓரம் பூபந்து விளையாட்டு திடலும், மறுபுறம் மட்டை பந்து திடலும் ஒரு ஓரம் இறகு பந்து  விளையாட்டு மைதானமும் இருந்தது.

மைதானத்தின் சுற்றிலும் பச்சை பசேல் என்று சுற்றுலும் இருக்கும் மரங்கள் பார்க்கவே   கண்களுக்கு குளுமையாக இருந்தது.ஆனால் அரசுவின் கண்களுக்கு பச்சை நிறம் தென்படவில்லை, அந்த குளுமையை அவன் மனம் உணரவில்லை மாறாக நெருப்பாக தகித்தது மனம்.

அந்த மைதானம் சுற்றி சுமார் நூறு மரங்களுக்கு மேலாக இருக்கும் .
வேம்பு, புன்னை,அகில், ஆல், அத்தி, இழுப்பை, இருவாட்சி, பூவரசு,அரசு என அனைத்து மரமும் இருந்தது.

ஆனால் பட்டுப்போன மாங்காய் மரம் ஒன்று மட்டும் அரசுவின் கண்களில் பட்டது.. ஏன் அதை அப்படி பார்க்கிறான் என்பதை அவன் மனம் மட்டுமே அறியும் .

நாவுக்கு அடிமதான் ஆரு வயசுல
பூவுக்கு அடிம பதினாரு வயசுல

நோவுக்கு அடிமதான் பாதி வயசுல..
சாவுக்கு அடிம அட நூரு வயசுல..

அடிமைகல பொறந்துவிட்டொம்
அத மட்டும் தான் மறந்துவிட்டொம்

அந்த பாசம் அன்பு கூட
சிரைவாசம் தானட.

காதலிக்க எனக்கு ஒரு யோகமில்லயே

ஆண்டவனே ஒனக்கும் அனுதாபமில்லயே

ராஜ்ஜியமும் இருக்கு அதில் ராணி இல்லயே

காசு பணம் இருக்கு ஒரு காதலில்லையே

சொல்ல எனக்கு வழி இல்லயே
சொல்லி முடிக்க மொழி இல்லயே

அழுதாலும் தொழுதாலும்
தெய்வம் பாக்கவில்லயே..

அரசு வீட்டார் நன்றாகவே பிரபலமான குடும்பம் என்பதால் அந்த பக்கம்(கல்லூரி ) இருப்பவர்கள் நேரடியாக திருநாவுக்கரசை அணுகினர்.சிவகார்த்திகேயன் கல்லூரியில் இருந்து அரசுக்கு அழைப்பு வந்த போது மறுபுறம் பேசிய சாராம்சம் இது தான்.

“மிஸ்டர் திருநாவுக்கரசு இருக்காரா “

அரசு ” நான் தான் சார் சொல்லுங்க”

“நாங்க சிவகார்த்திகேயன் காலேஜ்லேருந்து பேசறோம் சார் “

“சொல்லுங்க சார் என்ன விஷயம் “என்று பேசியவரே நாற்காலியில் நிமிர்ந்து அமர்ந்தான் “

“சார் கொஞ்சம் அவசரப்படாம நான் சொல்றத கேளுங்க “என்றார் அந்த பக்கம் பேசிய நபர்

“சார் என்னனு விஷயத்தை சொல்லுங்க,,,, “என்றான் நறுக்கு தெரிந்தார் போல.

“சார் போன வாரம் உங்க தம்பி,வீட்டுக்கு போகணும்னு விடுதில கேட்டு வந்தாரு,,, காரணம் கேட்ட விடுதி காப்பாளர் கிட்ட, ‘பாட்டிக்கு கொஞ்சம் முடியாம இருக்கு ‘அப்படினு சொன்னதால அனுப்பி வச்சோம். ரெண்டு நாளா வருவதா  சொன்னவரு இன்னும் வரல,, எப்போ அனுப்புவீங்க “என்று கேட்டது தான் தாமதம் அரசு தான் நேரடியாக வருவதாக சொல்லி கல்லூரி வந்து சேர்ந்தான்.

மறுபக்கம் பதற்றம் கூடி இருக்க வேண்டும்.ஏனெனில் அரசு பேசிய வார்த்தை ஒவ்வொன்றும் கடப்பாரை முழுங்கிய மனிதனை போன்று அவ்வளவு கணமாக வந்தது வார்த்தைகள்.

விடுதியை அடைந்த அரசு, விடுதி காப்பாளர் அறையை நோக்கி சென்று கொண்டிருந்தான்.. அப்போது எதிர்வந்தான் சிவாவின் நண்பன் கிருத்திக்.

See More  உனதன்பில் உயிர்த்தேன் - 2

“அண்ணா உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்,, நா அங்க இருக்க கிரவ்ண்டுல  காத்திட்ருக்க “என்று சுற்று முற்றிலும் பார்த்து விட்டு சென்று விட்டான்…

விடுதி காப்பாளர் அறையை அடைந்தான்.பரஸ்பரம் விசாரிப்புகள் செய்து கொண்டு இருந்த விடுதி காப்பாளர் பிரபு ” உங்க தம்பியையும் அழைச்சிட்டு வந்திருக்கீங்களா சார்,, அப்படியே அவங்க டிபார்ட்மென்ட் ஹெட்ச் ஓ டி (HOD) யை பார்த்துட்டு வந்துருங்க சார்… நீங்க வந்தா வர சொல்லி இருக்கார். “

அரசு”அதுக்கு முன்னாடி எனக்கு ஒரு விஷயம் கிளீர் பண்ணுங்க சார், என் தம்பி எங்க வீட்டுக்கு வரன்னு சொன்ன உடனே அனுப்பிடீங்களா,, வீட்ல பெர்மிஸ்ஸன்லா முன்னாடி கேப்பிங்களே “

சற்று அதிர்ந்த விடுதி காப்பாளர் ஒரு கடித உறையை குடுத்தார்.

அதை பார்த்த அரசு மேலும் அதிர்ந்தான்.
“நானே தான் கையெழுத்து போட்டு இருக்கேன், ஆனா சார் என் தம்பி எங்க வீட்டுக்கு வரவே இல்லை “என்றது தான் தாமதம் விடுதி காப்பாளர்க்கு பயம் சூழ்ந்தது…முதல் இரண்டு வருடம் மாணவர்களை கண்காணிக்க வேண்டியது விடுதி காப்பாளர் கடமை…

ஒவ்வொரு முறையும் வீட்டிற்கு செல்லும் போது வீட்டிற்கு தகவல் சொல்லி,, வீட்டினர் அனுமதி குடுத்த பின்பே மாணவர்களை அனுப்பி வைக்க வேண்டும்… ஆண் பெண் இருப்பாலாருக்கும்… ஏனெனில் அது கொஞ்சம் பொட்டல் காடான பகுதி. ஆகையால்.

அரசு தான் முதலிலேயே அதிர்ந்து மனதை திட படுத்தி கொண்டு தானே கல்லூரிக்கு வந்தான்.. ஆகையால் இப்போது அவன் கவனம் நிதானமாக காரணங்களை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தது..

“சார் நா கேட்கும் கேள்விக்கு சரியா பதில் சொல்லுங்க “

“கேளுங்க சார் “என்றார் விடுதி காப்பாளர் சற்றும் பதட்டம் குறையாமல்

“காலேஜ் ல ஏதாவது தகராறு நடந்து ப்பரேண்ட்ஸ்அ அழைச்சிட்டு வரணும்னு சொன்னாங்கள”

“உங்க தம்பி ரொம்ப சைலன்ட் டைப் சார், எந்த பிரச்சனைக்கும் போக மாட்டார் “

“ஹாஸ்டல்லா “இல்லை என்பது போல் தலையாடினார் பிரபு

“என் தம்பி எப்போ வீட்டுக்கு போறேன்னு சொன்ன “

“போன வாரம் வெள்ளி கிழமை சார் “

“நடுவுல அவனுக்கு லெட்டர் இல்லை யாராவது அவனை பார்க்க வந்தாங்களா “

பிரபு கொஞ்சம் நிதானமானர், “லெட்டர் ஏதும் வரல சார், ஆனா உங்க சொந்த காரா பையன்னு அடிக்கடி ஒரு பையன் வந்து பாத்துட்டு போவான், ஆனா அவனை பார்க்க கொஞ்சம் வேற மாறி இருக்கும் “

“வேற மாறினா”என்றான் அரசு கடினமான முகத்துடன்

“அந்த பையன் ட்ரெஸ்ஸிங் ஸ்டைல் வேற மாறி இருக்கும் சார்…. பசங்க ஜீம்முக்கு தான் நெறைய போவாங்க,,, பட் இவங்க பார்லர் போறாங்க “

“பார்லர் போறது பெரிய விஷயமா சார் “
என்றான் அரசு சலிப்போடு

“பார்லர் போறது பெரிய விஷயம் இல்லைங்க சார்,,, பொண்ணுக போற பார்லர் போறது தான் பெரிய விஷயம் “

See More  15 - லாக் டவுன்

நிமிர்ந்து அமர்ந்த அரசு பிரபுவை உற்று பார்த்தான். மேலே சொல்லுங்க என்பது போல் தலையை ஆட்டவும் பிரபு “கடைசியா உங்க பாட்டிக்கு உடம்பு முடியலன்னு சொல்லிட்டு வீட்டுக்கு போகணும்னு கேக்க வந்த அன்னைக்கு அந்த பையன் தான் உங்ககிட்டருந்து அனுமதி கடிதம் வாங்கிட்டு வந்ததாக சொன்னார் சார் உங்க தம்பி “

“அந்த பையன் பார்க்க எப்படி இருந்தான்,”அரசு

பிரபு “சொல்றனேனு தப்பா நினைக்காதீங்க  சார், பார்க்க அம்சமா இருந்தான்,, ரோஸ் கலர்ல இருக்கும் உதடு,, கண்டிப்பா பொண்ணா இருந்திருந்த, பசங்க பின்னாடியே சுத்திட்டு இருந்துருப்பாங்க” என்றார் சற்று வழிசலோடு

“சரீங்க சார் நீங்க கல்லூரி பக்கம் என்ன அடுத்து பன்னமோ பண்ணுங்க,, நா என்னோட பக்கம் என் தம்பிய தேடுற,, அப்பறம் என்கிட்ட அந்த பையன பத்தி உளறின மாறி யார் கிட்டயும் உளறாத்தீங்க “என்றான் சற்று கண்டிப்போடு

மிரட்சியாக பார்த்து கொண்டிருந்தார் விடுதி காப்பாளர்… ஒரு முறை தவறாக பேசிய விரிவுரையாளரை அரசு எப்படி கதற விட்டான் என்பதை அந்த கல்லூரியே அறியுமே.. ஆகையால் தான் அவ்வளவு மரியாதை.

யோசனையோடு வெளியே வந்த அரசு விளையாட்டு மைதானத்தில் அமர்ந்திருந்த கிருத்திக் அருகில் சென்றான்.

“எப்படி இருக்க கிருத்திக் “என்றவாரே
கிருத்திக் தோளில் கை போட்டு அமர்ந்தான்.

கிருத்திக் உண்மையில் நன்றாக இல்லை,,, எப்படியும் விடுதி காப்பாளர் ஓரளவு செய்தியை சொல்லி இருப்பார், இவர் எப்படி இவ்வளவு சாதாரணமா கேக்கறாரு என்று மனதில் உண்மையில் வேதனை பட்டான்.

“அண்ணா வார்டன் எப்படியும் எதாவது சொல்லி இருப்பாரு, எப்படின்னா இப்படி சாதாரணமா இருக்கீங்க “என்றான் உண்மையான ஆதங்கத்துடன்.

மனுசனுக்கு ஒரு கஷ்டம்னா பரவால்ல ஆனா அந்த கடவுள் என்னை புயலல புரட்டி, எரிமலைல கொதிக்க விட்டு, கடல்ல போட்டு புதச்சிட்டாரு.வாழ்க்கைல எல்லைல இருக்க கஷ்டம் என்னவோ அந்த அளவு நா அனுபவிக்கற,,,, தங்கத்தை நெருப்புல போட்டு வாடினா மட்டும் தான் அது மெருக்கேறும்… என் மனசு ரொம்ப பண்பட்டு இருக்கு, அந்த அளவு சோகம்  என்ன உழவு பண்ணி வச்சிருக்கு, நீ சின்ன பையன் உனக்கு அதெல்லாம் வேண்டாம் என்று நினைத்தவரே

“இப்போ அழுது ஆர்ப்பாட்டம் பண்ணால் மட்டும் நடந்தது மாறாது,, நீ என்ன பேசணும் அதை மட்டும் சொல்லு “என்றான் விட்டேதியாக.

கைகளில் இருந்த பொருட்களை யாரும் பார்க்கிறார்களா என்று பார்த்தவாறே அரசு கைகளில் கொடுத்தான்.

பெண்கள் பயன்படுத்தும் உதடு சாயம், கண் மை, புருவ திருத்தி, இன்னும் சில அழகு பொருட்கள்,,, கிருத்திக் ஒரு புகைப்படம் குடுத்தான்.

“வார்டன் என்ன கூப்டு சிவாவை பற்றி கேக்கும் போது,,எனக்கு தெரியாதுன்னு சொல்லிட, கொஞ்ச நாளா அவன் மேல எனக்கு சந்தேகம் இருந்தது… ஒரு நாள் புருவத்தை திருத்தி நல்லா இருக்கான்னு கேட்டான்,, நா அவனை அடிச்சிட்டா, ‘பொண்ணுக தான் டா அப்படி பண்ணுவாங்கன்னு ‘ஆனா அண்ணா இது நடந்த பின்னாடி சிவா என்னை அவொய்ட் பண்ண ஆரம்பிச்சா,
நாங்களும் பொண்ணுங்க போட்டோவதான் ரூம்ல ஒட்டி வைப்போம்,, ஆனா அவன் “

See More  உருகுதே உள்ளம் நெகிழுதே நெஞ்சம் - 3

கொஞ்சம் நிதானித்தவன் “ஹீரோ போட்டோசை ஒட்டி வச்சிருக்கான்,கொஞ்ச நாளா உங்க சொந்த காரா பையன்னு யார்கூடயோ சுத்திட்டு இருந்தா,, நீங்க இந்த பக்கத்துக்காரங்க தானே,, உங்களுக்கு விஷயம் தெரியுன்னு நா என்பாட்டுக்கு இருந்துட்ட, ஆனா நீங்க இன்னைக்கு வந்த பின்னாடி தான், உங்களுக்கே அவன் விஷயம் தெரியாதுன்னு புரியுது.”என்றான் கண்கள் பனிக்க

அவன் முதுகை தட்டி குடுத்து தன்னிடம் சொன்ன விஷயத்தை யாரிடமும் சொல்ல கூடாது என்று சத்தியம் வாங்கி கொண்டான்.

அன்றைய மாதத்தின் நிகழ்வுகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நினைவடுக்கில் பொங்கி எழுந்தது..

பதின்பருவம் முடியும் தருவாயில் இருக்கும் போது இளமதி பத்து வயது சிறுமி,,, விளையாட்டாக அவளிடம் மாமான்னு கூப்டு கூப்டு சொன்னது இப்போது வெறுப்பாக இருந்தது…

அப்படி அவளை கூப்பிட சொல்லி என்னை தூண்டிவிட்ட தன் நண்பன் மட்டும் தன் கைகளில் கிடைத்தால்,,,  அவன் என்ன செய்வான், அந்த வயதுக்கே உரிய கிண்டல் கேலியில் அவன் உரைதான் உனக்கு எங்கே போனது புத்தி என்று மனசாட்சி அவனை இடிந்துரைத்தது.

பாவைமலர் அம்மன் பக்தை, அவளுக்கு அம்மன் விருப்பம் அதோடு நன்றாக அம்மன் பாடல் பாடுவாள் ஒருமுறை அவள் பாடிய பாடல் இப்போது சம்மன் இல்லாமல் அரசு நினைவுக்கு வந்தது.

மனசால நா நெனச்ச மகாராசன் வேண்டுமம்மா…..

கை எந்தி கேட்டு நின்னேன் கண் கொண்டு பருமம்மா…

ஆச வச்சா பொண்ணு மனசு ஆத்த உனக்கு தெரியாத

ஆள கொள்ளும் ஆபத்து உன் அன்பால் தாயே விலாகாத

கொடுமைகளை வாளேடுத்து அறுத்து விடு,

அன்பிருக்கும் உள்ளத்துக்கு வந்திருக்கும் துன்பமதை அம்மா நீ மாற்றி விடு

இதை பாடி முடிக்கும் போது பாவை கண்களில் வந்த கண்ணீர் சாமியாட்டம்(கிராமத்தில் தெய்வம் ஆட்கொள்ளும் நிகழ்வு )  கொண்டு வந்தது என நினைத்து கொண்டார்கள் அனைவரும்.

காதல் மயக்கத்தில் அன்று இளமதியின்  அழகை பருகி கொண்டிருந்தான் அரசு அன்று. இன்று அந்த நிகழ்வை நினைத்து அவமானத்தில் நெக்குறுக்கி போய் விட்டான்.

இப்போது தம்பியின் மாற்றம் நிறைந்த அவனின் மறைவானது கடவுளே இன்னும் என்ன பண்ணி வைக்க நினைக்கற எங்க குடும்பத்தை என்று கத்தி அழ வேண்டும் போல் இருந்தது அரசுக்கு..

ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் கஷ்டம் வரலாம், ஆனால் கஷ்டமே வாழ்க்கையாக இருந்தால் அவன் என்ன செய்வான் மக்களே.. அரசு எப்படி இவை அனைத்தையும் சரி செய்வான்..

இப்போது வரை அவன் நிலைகுழைந்து போகாமல் இருக்க ஒரே காரணம் எல்லாம் சரி ஆகி விடும் என்ற அவனின் திடமான  நம்பிக்கை,….

நாமும் நம்புவோம்.

அரசு வருவான் 👣