3.ரணம் ஆற ❣️நீயே மருந்தாய் 🌿

அரசு நிலைப்பாடு ,

அஞ்சலையம்மாவுக்கு சிவன் பிடித்தமான கடவுள் ,,தேவாரம் என்றால் தனி பிரியம் ,,ஆகையால் முதல் பேரனுக்கு திருநாவுக்கரசு என பெயர் வைத்தார் ..ஆனால் இரண்டாமவன் பிறக்கும் போது வீட்டில் சந்தோசம்  துள்ளி விளையாடியது ,அத்தோடு முருகன் போன்று அழகு முகம் கொண்டதாலும் ,,சிவகார்த்திகேயன் என்று பெயர் வைத்தனர் ..

அரசுவுக்கு முன் பிறந்தவள் வீட்டின் முதல் வாரிசு  மஹாலக்ஷ்மி என அதே பெயரை வைத்தனர்..அரசுக்கு பின் பிறந்தவள் அப்படியே மலர் போன்ற மலர்ந்த  முகமும்,சிறிய உதடுமாக இருப்பதால் …
பாவைமலர் என பெயரிட்டனர்..

அஞ்சலைக்கு ஒரே மகிழ்ச்சி ,,தனக்கு ஒரு மகள் மகன் மட்டும் தான் ,,ஆனால் தன் மகன், மக்கள் செல்வங்கள் பெற்று வாழ்க்கையும் வளம்பெற ,இதே போல் என்றென்றும் இருக்க வேண்டும் என ,எல்லாம்வல்ல சிவனை வேண்டி கொண்டார்……

எங்கள் சொந்தம் பார்த்தாலே

சொர்க்கம் சொக்கி போகுமே

எங்கள் வீட்டில் பூத்தாலே

பூவின் ஆயுள் கூடுமே

கிளி கூட்டம் போல்

எங்கள் கூட்டமே

இது ஆனந்த பூந்தோட்டம்

அன்பின் ஆலயம் …..

ஆனால் சிவனின் திருவிளையாடல் தான் நம்  அனைவரும் அறிந்ததே…..மஹாலக்ஷ்மி திருமணம் முடியும் வரை அனைத்தும் நன்றாக தான்  இருந்தது,அவள் திருமணம் முடியவும்  ,,,….
கடவுள் மஹாலக்ஷ்மியே  அனைத்து லஷ்மிகளையும் அழைத்து கொண்டு வனவாசம் சென்று விட்டாள்….

அரசுவின் அத்தையை தளிர்முல்லையின் சித்தப்பாவிற்கு தான் மணமுடித்து கொடுத்திருந்தனர்.ஆகையால் தளிர் முல்லை ஒருவகையில் ,மாமன் மகள் ஆகிறாள் ..

தளிர்முல்லைக்கும் ,அவள் அண்ணன் தர்மராஜுக்கும் பதினைந்து  வயது வித்யாசம் ,,,

தளிர்முல்லைக்கு ஒன்பது வயதாகும் போது ,அரசுவின் பங்காளியான உலகநாதனின் அக்கா வசுமதியை திருமணம் செய்து கொண்டார்….அது இல்லாமல் வசுமதியின் மாமியார் அவர்களின் தந்தையின் சொந்த தங்கை ,,,ஆகையால்
உலக நாதனுக்கு தளிர்,அத்தை மகள் என்றால் ,அவளின் அண்ணன் பெண் இளமதி  அக்கா பொண்ணு ,,

இளமதி ,,நம் நாயகனின் கதாநாயகி ,,உலக நாதன் அரசுவை பார்த்தால் சிலுப்பி கொள்வதற்க்கு காரணம் அதுவே ..

முதல் உரிமை இருந்தும் இளமதி தன்னை கண்டுகொள்ளவில்லை ,,இவனை விரும்புகிறாள் என்று அவள் மேலும் ,என்னுடைய முறை பெண் என்றும் தெரிந்தும் அவளை நேசித்தது அரசு தவறு என்றும் அரசுவின்  மேலும்  கோபம் …

தன்னை கண்டால் கடுக்காய் பொரியும்  தன்னுடைய அத்தை பெண்ணான தளிர் இவனுக்கு நெருங்கிய தோழி ,,என்று அவள் மேல்  இன்னும் புகைச்சல்….

ஆனால் உண்மை காரணம் உலகநாதன் தளிரை விரும்பினான்…

See More  என் நித்திய சுவாசம் நீ! – 3

உலகநாதன் முரடன் தான் ,,,சட்டு சட்டு என கோபம் கொள்வான் ….அக்கா மேல் அதீத பாசம் கொண்டவன் ….யாராவது அக்கா வீட்டின் மீது பஞ்சாயத்து வைத்தால் தப்பு யார் மேல் என்றெல்லாம் பார்க்க மாட்டான் ….அக்கா குடும்பத்திற்கு தான் பரிந்து பேசுவான்.

தளிர் மேல் கொள்ளை பிரியம் ..தளிர்க்கும் இவன் மேலும் ஏதேனும் எண்ணம் இருக்குமோ என்று அரசு நினைப்பதுண்டு …..உலகநாதனுக்கும் அதில் கொஞ்சம் கடுப்பு தான் …பார்க்கும் போது சிலுப்பி கொள்வாள் ..ஆனால் இவன் பல்சரில் போனால் மட்டும் விழுங்குவது போல் பார்ப்பாள் …அவளுக்கு அந்த வண்டி பிடிக்கும் என்று ஒருமுறை திருவிழாவில் சொல்ல கேட்டு அடுத்த வாரமே வாங்கினான்.

அரசுவும் ,உலகநாதனும் நல்ல நண்பர்களாக இருந்தவர்கள்.ஆனால் இளமதி ஆடிய சதுரங்க விளையாட்டில் அனைவருமே பாதிக்கப்பட்டனர்..முக்கியமாக அரசு …

வசுமதி ,தான் பிடித்த முயலுக்கு மூணு கால் என்று வாதாடும் வகை ….தன் தம்பி தான் என்ன  சொன்னாலும்,நம்பி தனக்கு மட்டுமே பரிந்து பேசும் ரகம் ,,கணவன் அமைதி பேர்வழி ..ஆகையால் தான் வைத்தது சட்டம் என்று இருந்தாள் …

தன் மகள் அரசுவை காதலிப்பது தெரிந்து,தன் சாம்ராஜ்யம் சரிந்து விடும் என்று அவனை தடுக்க திட்டம் போட்டவள் தன் தம்பியை உருவேற்றினாள் ,,முதலில் தன் மச்சினன் மனைவி ,அரசுவின் அத்தையை காரணமே இல்லாமல் சண்டைக்கு அழைத்தாள் ..

கிராமம் என்றால் எதையும் மனதில் வைக்காமல் பழகும் மக்கள்,அவர்களுக்கு வேண்டப்பட்டவர்கள் என்றால் கொலை செய்தால் கூட தவறில்லை ,,ஆனால் பிடிக்கவில்லை என்றால்   ஏதேனும் ஒரு சண்டை என்றால் அவர்கள் ஆதியில் இருந்து,அவர்கள் செய்த சிறு சிறு தவறை கூட பூதகரமாக்கி அவர்கள் பரம்பரையையே படுத்தி எடுத்து விடுவார்கள் …

வசுமதி அப்படி செய்து தான் அரசுவை பஞ்சாயத்து இழுத்தாள்.பஞ்சாயத்தில் இளமதி சொல்லிய வாக்குமூலம் அனைவரையும் அதிர வைத்தது,,’அரசு, தன்னை பயமுறுத்தி கட்டாயப்படுத்தி தான் காதலிக்க வைத்தார் ‘என்று சொல்லி விட்டாள் ,,அவள் சொல்லும் போது யாரையும் பார்க்க வில்லை ..அதற்கு பின்பு இளமதியை பார்க்கவே முடியவில்லை.

உள்ளத்தில் காதலை சுமந்துக் கொண்டு

உதட்டில் மறைச்சால் மறையாதே

உறவின் நிழலில் நின்றுக் கொண்டு

வெயிலில் காதலை வீசாதே

மனதில் ஆசையை புதைத்து விட்டு

மறைஞ்சு மறைஞ்சு வாழாதே

என்னை மறக்க நினைத்து விட்டு

உன்னை நீயே இழக்காதே

ஆரம்பத்தில் இருந்தே அரசுவின் அத்தையும் ,வசுமதியின் மச்சினன் மனைவியுமான சரோஜாவை(தாமரை மறுபெயர் ) பிடிக்காது ..ஏனென்றால் அந்த ஊரில் எந்த  நல்லது கேட்டது நடந்தாலும் சரோஜாவை கட்டாயம் உடன் இருந்து அழைத்து செல்வர் ,,காரணம் எவ்வளவு வேலை என்றாலும் முகம் சுளிக்காமல் சிரித்த முகமாக தான் அவர்களுக்கு உதவி செய்வார் .

See More  ஆருயிர் ஆதிரையாள் - 13

ஆனால் வசுமதிக்கு ,,ஏதேனும் வேளை செய்து கொடுத்தால் நல்லவர்கள் ,,,அதே நேரம் யாராவது உதவி கேட்டால் முகத்தை திருப்பி கொள்வதும் ,,இல்லை என்றால் கஷ்டபடுத்துவது போல் பேசி விடுவாள்..

அரசு -இளமதி பஞ்சாயத்து நடந்து ஒரு வாரம் ஆனா நிலையில் இன்று தான் உலகநாதனை பார்க்கிறான் அரசு.

கண்களில் ஆர்ப்பரிக்கும் கடல் போல் வேதனை மையம் கொண்டு இருந்தது, கூடவே தாத்தளிக்கும் தோணிக்கு சிறு துடுப்பு கிடைத்தது போல் இருக்குமே அந்த நிம்மதி பரவியது “எலே நாதா எங்களே போன,, உன் கிட்ட ரொம்ப முக்கியமான விஷயம் பேசணும்ல,”என்றான் கண்கள் மின்ன,

“ஏன் என் அக்கா பொண்ணு வாழ்க்கையை அழிச்சது பத்தலையாலே உனக்கு , இன்னும் எத்தனை பேர் வாழ்க்கையை அழிக்கலாம்னு நெனைக்க,  இதோ பாரு தளிர் மேல நா உயிரையே வச்சிருக்க, அவளுக்கு மட்டும் நீ எதாவது பண்ணனும்னு நெனச்ச, நெனச்சன்னு தெரிஞ்சமாத்திரமே உன்ன கொன்னு போட்ருவாலே “
என்றான் ஆத்திரம் அடங்காமல்.

உண்மையில் நொறுங்கி போய்விட்டான் அரசு,உலகநாதன் பாசம் என்றாலும் சரி, கோபம் என்றாலும் சரி கண்முடிதனமாக தான் வைப்பான்..
அதுவும் அக்கா என்று வரும் போது அவன் பெற்றவர்களையே பார்க்க மாட்டான். அந்த அளவு காட்டு தனமாக நடந்து கொள்வான்.. ஆனால் செய்தது தவறு என தெரிய வரும் நேரம், நமக்கே மனம் வருந்தி விடும்,அந்த அளவு  கஷ்டப்படுவான்.

உலகநாதனை  பற்றி முழுதாக தெரிந்த இரு ஜீவன்கள், தளிர் மற்றும் அரசு மட்டுமே.

உலக நாதன், தளிரை விரும்புவது அரசுக்கு நன்றாகவே தெரியும். அரசும் பல தடவை தளிரை கிண்டல் கேலி செய்தும் இருக்கிறான். தளிர் அறிந்த விஷயம் என்பதால், அரசு கிண்டல் செய்யும் போதெல்லாம் சிரித்து மழுப்பிவிடுவாள்.

தளிர்க்கு, அரசுவை பற்றி நன்றாக தெரியும்… விலகி போன அரசுவை, தன் அண்ணன் மகள் தானே வற்புறுத்தி காதல் கொள்ள செய்தாள். இப்போது நல்லவள் போல் வேடம் போட்டுக்கொண்டு அரசுவை கெட்டவன் ஆக்கி விட்டாள். இவ்வளவு தெரிந்து என்ன பயன்,, அண்ணி வசுமதி பேச்சை தன் குடும்பத்தில் யாரும் மீறியதில்லை.. தன் தாய் தந்தை குடும்பம் கௌரவம் காப்பாற்ற வேண்டும் என்பதால்,தவறு என்று தெரிந்தும் வாய் மூடி மௌனியாக இருந்தனர்.

தன் அண்ணனோ வாய் இல்லா  பூச்சி,, கடவுளே இது எங்கே போகும் என்று மனதில் பல நாள் தனிமையில் மறுகி இருக்கிறாள் தளிர். இது இப்படி தான் போகும் என்பது  தெரிந்ததால் தான்  ஆரம்பத்தில் இருந்தே வேண்டாம் என்று அரசுவுக்கு அறிவுறுத்தி இருந்தாள்.

See More  9 - லாக் டவுன்

ஆனால் என்ன செய்ய முடியும், எல்லாம் காதல் படுத்தும் பாடு,,வலிமையான ஆண் மகனாகாவும், அறிவுடைய அழகாவும் இருந்து என்ன பயன், பெண்ணின் வலையில் விழுந்தால்  எல்லாமே தலைகீழ் ஆகிவிடும்.

இப்போது இப்படி தானே ஆகி விட்டது… ஆனால் ஊரில் பாதி பேருக்கு இந்த விஷயம் தெரியும், வசுமதிக்கு பயந்து யாரும் வாயை திறக்கவில்லை.

உலகநாதன், அரசுவை ஏசி விட்டு அங்கிருந்து சென்று விட்டான். இவ்வளவும் மனம் எனும் மாயகுதிரையில் ஓடி கொண்டிருந்தது.

இவ்வளவுக்கும் காரணம் ஒரே ஒருவன் தான்,, அவன் மட்டும் அன்று அது போல் பேசவில்லை எனில் இன்று இந்த நிலைக்கு நான் இருக்க தேவை இல்லை,,,

அவன் சொல்லிஇருந்தாலும் தனக்கு எங்கே போனது புத்தி என இன்னும் நெய்ந்து நூலானான். ஒரு வழியாக கரும்பு கொல்லைக்கு நீர் பாச்ச சொல்லி விட்டு, நெல் வயலில் களை எடுக்க சொல்லிவிட்டு,, தந்தை வரவே அவரிடம் மீதி பொறுப்பை விட்டு விட்டு வீட்டிற்கு வந்தான்.

குளித்து முடித்து உணவு உண்ணும் நேரம் வந்தாள் அவனின் தங்கை பாவைமலர் அவனுக்கு பரிமாறினாள்..

சுட சுட இட்லியும், அதற்கு தோதாக தேங்காய் சட்னி தாளித்த வாசனையுடன் இருக்க, சாம்பார் ஊற்றி கொண்டிருக்கும் தங்கை முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை.. தன்னை விட ஐந்து வயது சிறியவள்.. ஆனால் திருமணமாக வேண்டிய வயது….

தங்கையை பார்த்தாவது தான் இவ்வாறு செய்திருக்க கூடாது… அவளுக்கு இருக்கும் வலி இந்த உலகில் யாருக்குமே வர கூடாது. கடவுளே நான் ஏன் இவளை கவனிக்க தவறினேன் என்று மனதில் ஊமை அழுகை நடத்தி கொண்டிருந்தான் அரசு…

பத்து வருடத்திற்க்கு மேலாக தெய்வானை வடிக்கும் ரத்த கண்ணீர்…
வரதட்சணை எவ்வளவு வேண்டும் ஆனாலும் குடுக்கலாம்…. ஆனால் இன்னும் வளர்ந்த குழந்தையாகவே இருக்கும் இவளை யார் மணப்பார்கள்.

பூங்காற்று மெதுவாகபட்டாலும் போதும்

பொன்மேனி நெருப்பாககொதிகின்றது

நீரூற்று பாயாதநிலம்போல நாலும்

என் மேனி தரிசாககி டக்கின்றது

தனிமையிலும் தனிமை

கொடுமையிலும் கொடுமை

இனிமை இல்லை வாழ்வில்

எதற்கு இந்த இளமை

ஆம் பாவைமலர் இன்னும் மலரவில்லை..

மொட்டு மலராகாமல் இப்போதும் மொட்டாகவே உள்ளது..

இந்த வலியை, ரணத்தை எதை கொண்டு மாற்றுவது…

அரசு வருவான் 👣