2.ரணம் ஆற ❣️நீயே மருந்தாய் 🌿

தளிர்முல்லை ,திருநாவுக்கரசின் சிறுவயது தோழி ,அரசுவை விட இரு வயது சிறியவள் ,,

அவனின் அத்தனை விஷயத்திலும் ,அத்தனை குறும்பிலும் தளிர் அவனுடன்  இருப்பாள்….இப்போதும் அவனுக்காக யோசிப்பவள்.

ஒரு விதத்தில் அத்தை மகன் ,,மாமன் மகள் ,,இப்போது தன்னுடைய மனம் ரணமாக இருக்க காரணமானவளின் நெருங்கிய உறவு ,தளிரின் அண்ணன் மகள் தான் அரசுவின் இதயத்தை குத்தி ரணம் பண்ணவள் .

என் பேச்சை கேக்காமல் இப்படி செய்து விட்டாயே என்று குற்றம் சாற்றும் பார்வை இருந்தது தளிரிடம் .

பேசும் வார்த்தையில்
உன் உள்ளம் அறிந்த என்னால்

உன் உள்ளத்தில் இருந்தவளின்
உள்ளம் அறியா பிழை செய்தேன் 

வலி மிகு நேரத்தில் ரணமாற்றும் மருந்தாக!!!!!

வலிக்கும் தருணமே உன்னால் எனும் போது,,?

அதை ஆற்றும் மருந்தே நீயாக என் காதலா!!!!!

அமைதியாக கடந்து சென்றனர் இருவரும் ,,தளிர் பற்றி நாம் அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்…

வாருங்கள் நாம் அரசுடன் ஒரு நடை போயிட்டு வருவோம்..

ஏர் கலப்பைகள் தோளில் ஏற்றி கொண்டு ,ஒரு முதியவர் சென்று கொண்டிருந்தார் ..அவரை கடந்து சென்ற அரசு ஏன் அவருக்கு உதவவில்லை என்று நீங்கள் கேக்கலாம் ,,,

அப்படி மட்டும் கேட்டாள் அவளோ தான் சண்டைக்கு வந்து விடுவார்கள் அந்த கிராமத்து வாசிகள் ……மண்வெட்டி பிடித்த கையும் ,,,ஏர் சுமந்த தோளும் என அவர்கள் உடல் இன்னும் வலுவடைந்து உள்ளது ,,”என்ன சித்தப்பா நாத்தங்கள்(இளம் நாற்று வயல் ) உழுவரீரோ”

“ஆமலே அரசு ,,,இப்போவே போன தான் சூரியன் மேல ஏறதுக்குள்ள ஏத்தம் (ஏற்றம் இறைத்தல் )இறைக்க முடியும் “

“பின்னாலே உம்மட பொஞ்சாதியும் நீர் ஆகாரத்தோட வருது ,,நீ வேற கதை சோல்றீரே “என்றான் சிரிப்புடன்

“போக்கிரி பயலே போய் சோலியா பாருலே ,,காலம் போன கடைசில எனக்கு இது தேவையா  ,,அடுத்த வாரம் என் மகளோட மகளுக்கு  பூவைக்கற ஆளுக வராக ,,பேசறான் பாரு பேச்சி” என்றார் அந்த முதியவர் ஆனாலும் தன் மனையாளை திரும்பி பார்த்தவர் நரைமீசையை   முறுக்கி கொண்டார்

இதை பார்த்த அந்த கிழவி “இளமை திரும்புதாக்கும்   சோலிய பாருமோய்”என்றவாரே முகவாயை இடித்தார் ..

“போதுமாலே  “என்று அரசுவை அவர் பார்த்து வைக்க எனக்கு வேலை இருக்குன்னு ஓடி போய்விட்டான் ,அந்த பக்கம் .

“ஏம்லே யாரது இநேரத்துல கறவை மாடை வயல்ல கற்றவ”
வயல் காட்டினை பார்த்து கொண்டே வந்த அரசின் கண்ணில் பட்டான் உலகநாதன் ,,,அரசுவின் ஒன்று விட்ட சித்தப்பா பையன் ,,தளிரின் நேரடியான அத்தை பையன் .

See More  நிறம் மாறும் வானம் - 6

அரசு வருவான் ..👣

மக்களே அடுத்த ud கண்டிப்பா பெருசா போற்ற ,,,,இன்னைக்கு உங்கள ஏமாத்த கூடாதுன்னு சின்னதா போட்டுட்டேன்  சரி சரி ரொம்ப சின்னதா

மன்னிச்சிக்கோங்கபா 🙏