முன்பே காணாதது ஏனடா(டி) – 8

அருள்மொழி அவர்களின் தோப்பின் வழி நடந்து சென்று கொண்டிருந்தாள். அந்த தோப்பு ஊரின் கடை கோடியில் உள்ளதால் யாரும் அதிகம் வரமாட்டார்கள்.  அவள் நடந்து சென்று கொண்டிருக்கும் போது ஒரு மரத்தின் பின் புறம் இருந்து வலிய கரம் ஒன்று அவளை இழுத்து இதழ்களை கவ்வி சுவைத்தது. அதிர்ச்சியில் அந்த உருவத்தை தள்ள முயற்ச்சிக்கும் போதுதான் அவளுக்கு தெரிந்தது அவன் தன்னவன் என்று. எப்பொழுதும் மென்மையை கையாலும் தன்னவனின் இந்த வன்மை அவளை சிந்தனைக்குள் ஆழ்த்தியது.

இதழ் ஒற்றல் வெகு நேரம் ஆகியும் முடிவுக்கு வந்தபாடில்லை. விலக முயற்ச்சிக்கும் போது இறுக்கம் இன்னும் கூடியது. 

சில நிமிடங்களுக்கு பிறகு அவனுக்கு மூச்சு வாங்கியதும் அவளை விடுவித்தான்.

“கரன்…  என்னாச்சு”

அவ்வளவு தான் அவளை இறுக்கி அணைத்து கொண்டான். அவளும் சிறிது நேரம் அப்படியே அமைதியாக நின்றுவிட்டாள்.

அவளைவிட்டு விலகியவன் அவளை முறைத்து பார்த்துவிட்டு மறுபுறம் திரும்பி கொண்டான்.

“உனக்கு அவன பாக்கனும்னா நான் இல்லாதப்ப பாக்க வேண்டியது தான. அப்போ எதுக்குடி அழுத “

“நான் எப்போ அழுதேன்… இல்லையே.”

“பொய் சொன்ன பல்ல கலட்டிருவேன். நான் தான் பாத்தேனே சைட் மிரர்ல.”

“பாருடா வரவர சுதாகரன் பையனுக்கு கோபமெல்லாம் வருது”

“போடி இங்க இருந்து.  என்னோட நிலமைய பத்தி உனக்கு என்னடி தெரியும் ஒரு நண்பனா அவனோட வலியவும் காதலனா உன்னோட கஷ்டத்தையும் சத்தியம பாக்க முடியல.”

“எல்லா கொஞ்ச காலம்தான் சீக்கிரம் எல்லாம் சரியாகும்னு நம்புவோம்.”

“என்ன சரியாகும். தெரியுமாடி உனக்கு அவன் நர்மதாவ காதலிக்கிறான். அதுவும் விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து.”

“என்ன…….”

இதை கேட்டதும் அவளுக்கு பெரும்  அதிர்ச்சி தாங்கள் செய்த தவறு புரிய கண்கள் கண்ணீரை சுரந்தது.

……………

இரண்டு வாரங்களுக்கு பின்

பிரியா, “மைத்ரியின் லன்ச் டைம் ஆரம்பிக்க போகுது.  இப்போ எங்க கிளம்புற. நானும் கவனிக்கிறேன் கொஞ்ச நாளா லன்ச் டைம்ல காணாம போயிடுற. “

மைத்ரி, ” ஒரு முக்கியமானவர பாக்க போறேன் அதான்.  நீங்க எல்லாரும் சாப்பிடுங்க ” என்று கூறிவிட்டு சிட்டாக பறந்துவிட்டாள்.

அந்த காய்கறி மார்க்கெட்டில் எங்கு திரும்பினாலும் ‘இது எவ்ளோமா’ ‘அநியாய விலையால இருக்கு ‘ ஏம்பா எல்லா ஃப்ரெஸ்ஸான பழம் தான ‘ ‘கொஞ்சம் கம்மி பண்ணி போடுங்கபா ‘ ‘இந்த விலைக்குதாமா கட்டுபடியாகும் சரி பத்து ரூபாய் குறச்சு வாங்கிகங்க’  இம்மாதிரியான வார்த்தைகளே காதில் விழுந்தது.

இவர்கள் அனைவரையும் கடந்து சென்ற அவளது கண்கள் நாலாபுறமும் தான் தேடிவந்தவரை துலாவியது.

அவள் தேடியவரோ அவளுக்காக தான் காத்துகொண்டிருந்தார். அவரை கண்டு கொண்டவள் அவர் அருகில் சென்றாள்.

மாரி, “வாடாமா… “

மைத்ரி, “ஹாய் அங்கிள்,  இன்னைக்கு என்ன சாப்பாடு “

மாரி, ” சாம்பார் சாதம் உருளைக்கிழங்கு வறுவல் “

“வாவ்…  அங்கிள்.  பாக்கும்போதே எச்சில் ஊறுது “

“சாப்பிடுடாமா”

ம்….  என்று ரசித்து உண்ண ஆரம்பித்தாள்.

தனது பணி மாற்றலுக்கு பிறகான முதல் ஆர்ட்டிக்கல் பாமர மக்களை பற்றி எழுத வேண்டும் என்று தோன்ற காய்கறி மார்க்கெட் வந்து ஆராய்ந்த போது கண்ணில்பட்டார் லோடு இறக்கி கொண்டிருக்கும் மாரிமுத்து.

அவரையே பேட்டி எடுத்து ஆர்ட்டிக்கலையும் முடித்துவிட்டாள்.  அதனை அவரிடம் பகிர்ந்து கொள்ள வந்தவள் மாரியிடம் நன்றாக பழகிவிட்டாள்.  அவரும் தன் மகள் போல் இருக்கும் அவளிடமும் தன் வீட்டாரிடம் போலவே பழகிவிட்டார். 

அவர்களது பழக்கம் குறுகிய நாளிலே

‘நமக்கு இன்னுமொரு மகள் கிடைத்துவிட்டாள் அவளுக்கும் சேர்த்தே உணவு கட்டிகொடு’ என்று மனைவியிடம் கேட்கும் அளவு வளர்ந்துவிட்டது.

“சரிடாமா உன்னோட வீட்டுல சொல்லிட்டையா தினமும் என்கூட வந்து சாப்பிடுறத”

“இல்ல அங்கிள்.. சொல்லல”

“ஏன்டாமா அம்மா அப்பாக்கிட்ட சொல்லிடு.  பழக்கம் இல்லாத புது மனுசன் நான். நாளைக்கு அவங்களுக்கு தெரிய வந்த நம்ம பொண்ணுமறச்சுட்டாளா எதுக்காக மறச்சா அப்படினு சந்தேகமே இல்லாத ஒரு சந்தேகம் உருவாகிரும்.”

“புரியல அன்கிள்”

“அது வந்துடாம இப்போ பொதுவா பெத்தவங்க தன்னோட பிள்ளைங்க மேல ரொம்ப நம்பிக்கை வச்சுருவாங்க. அப்படி இருக்கும் போது நீ புதுசா ஒருத்தர்கிட்ட பழகுறத நீயா சொல்லிட்டா பெருசா எடுத்துக்கமாட்டாங்க. அதே அவங்களா கண்டுபிடிச்ச நம்ம பொண்ணு எதுக்காக மறச்சா அப்படினு தோணிட்டே இருக்கும் அத நீயே சொல்லுவ சொல்லுவனு எதிர்பாப்பாங்க. உனக்கு அந்த விஷயம் பெருச இல்லனாலும் அவங்களுக்கு உருத்திட்டே இருக்கும்.” 

“இதுல இவ்ளோ விஷயம் இருக்கா அன்கிள். சரி உங்க வீட்டுலயும் இப்படிதானா.”

“எங்க வீட்டுல நான் இல்ல என்னோட மனைவி இப்படிதான் யோசிப்பா எங்கிட்ட சொல்லி புலம்புவா.”

“ஏன் நீங்க இப்படி யோசிக்கமாட்டிங்களா”

“மாட்டேன். ஏனா எம்புள்ளைங்க எங்கிட்ட இதுவர எதுவும் மறச்சது இல்ல.”

“நிஜமாவா”

“ம்…  ஒன்னு சொல்லவா எம்பொண்ணு காலேஜ்ல யாராவது லவ் லெட்டர் தந்தாகூட எங்கிட்ட சொல்லிருவா.” 

“எனக்கு பொறாமையா இருக்கு அங்கிள்.”

“உன்னோட அம்மா அப்பா எப்படி என்ன மாதிரியா இல்ல ரொம்ப கண்டிப்பா.”

“எனக்கு உங்கள மாதிரி ஃப்ரெண்டாவும் சரி, கண்டிப்பாவும் சரி, யாரும் இருந்தா தான. நான் ஒரு அநாதை. என்ன பெத்தவங்க யாருனு தெரியாது…. ஆசிரமத்துல… வளர்ந்தேன்.”

உணவு உண்டுவிட்டு கை கழுவி கொண்டிருந்தவரின் கைகள் அப்படியே நின்றுவிட்டது.

சொன்னவளோ வெகு இயல்பாகவே இருந்தாள்.  பழகிவிட்டது போல் பாவம்….

சிறிது நேரத்திலேயே தன்னை சரிபடுத்திக்கொண்டு “அப்படி இல்லமா இந்த உலகத்தில எல்லாருக்கும் துணை இருக்கு. என்ன அவங்க நம்மகிட்ட வந்துசேர நேரம் எடுக்கலாம் அவ்ளோ தாண்டாம்மா”

“சேரி அங்கிள் நான் கிளம்புறேன் திரும்ப ஆபிஸ் போகனும்.”

“சரிடாமா நானு பங்களா காவலுக்கு கிளம்பனும்.  சீக்கிரம் போனா ராவுல அடுத்த ஆள மாத்திவிட்டுட்டு வீட்டுக்கு போக முடியும்.”

பின் இருவரும் அவரவர் பணி நோக்கி புறப்பட்டனர்.

…………….

செழியா, “அண்ணி… அண்ணி.. “

மஞ்சு, “என்ன செழியா”

“இந்தாங்க அண்ணி கணக்கு நோட்டு. இந்த மாச நம்ம நிலத்தோட அப்புறம் மில்லோட வரவு செலவு சரியா இருக்கானு பாத்துக்கிடுங்க.”

“சேரி செழியா அப்புறம் தம்பிய போறப்ப பொன்னமா பாட்டி வீட்டுக்கிட்ட விட்டுட்டு போயிடு. கொஞ்ச நேரம் அவன் சோட்டு பயலுக கூட விளையாடுவான்.”

“சேரி அண்ணி… என்று அண்ணியிடம் பதில் கூறி விட்டு

“ஏலேய் பெரிய மனுசா வாட விளையாட போலாம்.” என்று அண்ணன் மகனை அழைத்தான்.

ஹரி, “ன்ன தூத்து சித்பா ” என்று முன் இரு பல் தெரிய அழகாக கூறினான் அந்த பொடிவாண்டு.

இவனும் தூக்கிகொண்டு வெளியேறினான்.

அவர்களை அனுப்பிவிட்டு அறைக்குள் வந்தவளை பிண்ணிருந்து அணைத்தான்  கதிர்.

மஞ்சு, “நீங்க எப்போ வந்திங்க நான் பாக்கவே இல்ல.”

“அது இருக்கட்டும் என்ன சின்ன மாமியார் மேல பயங்கர பாசமோ.”

“அது…  தம்பி விளையாட போனும்னு சொன்னா அதான்…”

“என்கிட்ட உன்னால பொய் சொல்ல முடியுமா..”

“என்னங்க அது…  சின்னத்தைக்கு நம்ம எல்லாரு மேலயும் தான் கோபமே தவிர அவங்க பேரன் மேல இல்லயே…”

“ம்…. என்று பெருமூச்சு விட்டவன்  “கவலப்படாதடி. மகாமா சீக்கிரம் நம்ம வீட்டுக்கு வந்துருவாங்க. எல்லாம் பழையபடி சந்தோசம மாறிடும்.”

தொடரும்…