முன்பே காணாதது ஏனடா(டி) – 6

 மைத்ரி நடை பாதையில் உள்ள மேசையில் தனது பேக்கை வைத்து தன்னை சுற்றிலும் பார்த்து கொண்டிருந்தாள் பலதரப்பட்ட மக்கள் ஆங்காங்கே நடந்து சென்றும் டிரெயினில் ஏறியும் இறங்கியும் கொண்டிருந்தனர்.

அந்த காலை வேலையும் கூட இவ்வளவு பரபரப்பாக இருக்கிறதே சென்னைய போல இங்கையும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது போல.

இவ்வாறு ஏதேதோ சிந்தனையில் இருந்தவளின் இமைகளின் நடுவில் வந்து விழுந்தான் குமரன்.

தாரா அனுப்பிய புகைபடத்தை பார்த்துக் கொண்டே தனக்கு எதிரில் இருந்த ஒவ்வொரு கம்பாட்மண்ட்டையும் யாரையோ தீவிரமாக தேடி கொண்டிருந்தான்.

அவ்வளவு பரபரப்பிலும் ஒரு புன்சிரிப்போடும் நிதானத்தோடும் காணப்பட்டான். எதிர்படும் பெண்களின் மேல் மோதும் சூழ்நிலையை உருவாக்கி கொள்ளும் ஆண்களை அதிகம் எதிர்கொண்டு பழகியவள், தான் யார் மீதும் மோதிவிடாமல் அலைபாயும் தன் கேசத்தை ஒரு கையால் கோதிவிட்டு கொண்டே நடந்து வந்து கொண்டிருந்தவனை பார்த்து மெய் மறந்து நின்றுவிட்டாள்.

வாழ்கையில் எவ்வளவு நபர்களை சந்தித்தும் பழகியும் இருந்தாலும் ஏன் அவர்கள் மிக அழகுடையவராக இருப்பினும் அவர்களை வெகுவாக ரசித்திருந்தாலும் அவர்களிடம் தோன்றாத ஒரு உணர்வு நமக்காக படைக்கப்பட்டவரை பார்க்கும் பொழுது அவர் எப்படி இருந்தாலும் அவர்களை ரசிக்க ஆரம்பித்துவிடுவோம்.

சிலருக்கு அவர்களுடன் பழகிய பின் தோன்றும் சிலருக்கு பார்த்த மாத்திரத்திலேயே அவர்களின்பால் ஈர்க்கப்பட்டுவிடுவோம். சிலருக்கு அவர் தனக்கானவர் என தெரிந்த பின் தோன்றும்.  மைத்ரியின் மனது அவன் தனக்கானவன் என்று கூறியதோ என்னவோ இப்படி மெய் மறந்து நின்றுவிட்டாள்.

இதோ அவளின் அருகில் வந்துவிட்டான். அவனை நோக்கி செல்ல உந்திய கால்களின் நடையை நிறுத்த முயன்றாள் முடியவில்லை.

கால்களை ஒரு அடி எடுத்து வைத்து மற்றொரு காலை எடுக்க முயற்சிக்கும் பொழுது தன்னுடைய பேக்கின் கைப்பிடியில் சிக்கிக்கொண்டு அவன் மீதே சாய்ந்தாள்.

தன் மீது சாய போகும் பெண்ணை தன் மீது விழுகாமல் இருக்க அவளது கைகளை பற்ற முயல வேகமாக சென்று கொண்டிருந்த ஒருவர் அவர்களை இடித்துவிட்டு சென்றுவிட்டார்.

ஏற்கனவே தடுமாறி கொண்டிருந்தவர்கள் அவரின் இச்செயலால் கீழே விழுந்துவிட்டனர். மைத்ரி கீழே இருக்க அவளுக்கு மேலே குமரன்.

எதிர்காலத்தில் தான் அணிவிக்க போகும்  தாலிக்கு முன் பதிவாக அவள் கழுத்தில் பற்களால் முத்திரை பதித்துவிட்டான்.

அதிர்ச்சியில் கண்களை அகல விரித்தாள் மைத்ரி. தன்னுடைய இதழ்களுக்கு இடையில்  மலரவளின் மிருதுவான ஸ்பரிசம் பட்டவுடன் தான் இருக்கும் நிலை புரிந்து அவசரமாக அவள் மேல் இருந்தது எழுந்து கொண்டு அவளையும் எழுப்பிவிட்டான் .

குமரன், ” சாரிங்க சாரிங்க நான்…  தெரியாம…. மேல வி..ழு…ந்து…  தயவு செஞ்சு மன்னிச்சுருங்க.”

மைத்ரி எல்லா பக்கமும் தலையை ஆட்டினாள். 

இவனும் சங்கட்டமாக தலையை அசைத்துவிட்டு அவ்விடத்தில் இருந்து முன்னோக்கி நகர்ந்துவிட்டான்.

இவளோ அசையாது நின்றிருந்தால் இதயத்தின் லப்டப் ஓசை பலமாக கேட்டது  அந்நிய ஆடவன் தொட்டால் அருவருக்கும் உணர்வு துளியும் வரவில்லை.  அன்று தனது மேனேஜர் தன்னிடம் நடந்து கொண்ட முறைக்கு அவன் கன்னம் பழுக்கும் அளவு அடித்த தான் இன்று இவன் உதடுகள் என் கழுத்தில் பதிந்தும் ஏன் தனக்கு கோபம் வரவில்லை என்று வெகுவாக குழம்பி போனாள்.

காது ஓரம் சூடேறுவது போல் இருந்தது கீழே விழும் போது தன் இடையில் பட்ட அவனது கை இன்னமும் அங்கேயே இருப்பது போல் ஒரு உணர்வு. அவனது மூச்சுக்காற்று கழுத்தில் இருந்து கீழ் இறங்குவது போன்ற உணர்வு தன் கை கொண்டு துப்பட்டாவை இருக்க பிடித்து கொண்டவள் நாலாபுறமும் அவனை தேடினாள். அந்த மாய கண்ணனோ எப்பொழுதோ அங்கிருந்து சென்றுவிட்டான்.

நெற்றியில் இருந்து காது ஓரம் வலிந்த வியர்வை துடைத்தபடி பக்கத்தில் இருந்த கழிப்பறைக்குள் நழைந்தாள்.  கண்ணாடியில் தெரிந்த தன்னுடைய பிம்பத்தை உற்று நோக்கினாள்.  கழுத்தில் அழுத்தமாக பதிந்திருந்தது அவனது முன் இரு பல்லின் தடம்.

முகத்தை நன்றாக கழுவிவிட்டு துப்பட்டாவை கழுத்தை சுற்றி போட்டுக் கொண்டாள்.

…….

குமரனோ தன்னை தானே திட்டிக்கொண்டு நடைபாதையில் நடந்து கொண்டிருந்தான்.  அப்பொழுது அவன் தேடி கொண்டிருந்தவர் எதிர்பட்டார்.

மற்ற சிந்தனைகளை ஓரம்கட்டிவிட்டு அவரை வரவேற்று அழைத்து சென்றான்.

…………………

அன்னபுறம் (கற்பனை ஊர் )

நீண்ட நெடுஞ்சாலை இருபுறமும் வேப்பமரமும் புளியமரமும் ஆங்காங்கே அரசமரமும்  மாறி மாறி  வளர்ந்து செழித்து சாலையை நிழலால் மறைத்து இருந்தது.  மரங்களை தாண்டி வயல் வெளிகள் பச்சபசேலேன்று கண்ணுக்கு குளிர்ச்சியாக காட்சி அழித்தது.

அந்த வயல் வெளியின் நடுவே கொழுசு ஒலி சலசலக்க ஒரு பெண் ஓடி வந்து கொண்டிருந்தாள் அவளை பின் தொடர்ந்து மற்றவளும் ஓடிவந்தாள்.

“ஏய்…  மொழி நில்லுடி….”

அவளோ ஓடிப் போய் மரத்தின் பின்புறம் மறைந்து நின்று எதிரில் புல்லட்டில் வருபவனை தான் பார்த்து கொண்டிருந்தாள்.

சிவப்பு நிற சட்டை அணிந்து கரு கரு மீசையை முறுக்கிவிட்டு சுருண்ட கேசம் காற்றில் அலைபாய காட்டு வேலைகள் செய்து முறுக்கேறி போன புஜங்கள் அவனது சட்டையை மீறி வெளிவர துடித்தது.

அவன் பின்புறம் அமர்ந்திருந்த சுதாகரன்

“ஏலே செழியா மொழி புள்ள மரத்துக்கு பின்னால நிக்குதுலே உன்ன தான் பாக்க வந்துருக்குனு நினைக்கேன்”

மொழி ஆவலோடு அவனது முகத்தை பார்த்திருக்க அவனோ அவள் நின்றிருந்த  மரத்தின் அருகே வந்ததும் வண்டியின் வேகத்தை கூட்டி அவள் நின்றிருந்த திசையை கூட பார்க்காமல் சென்றுவிட்டான்.

………..

நர்மதா இன்று நடக்க இருக்கும் மீட்டிங்கிற்கான ஆயத்த பணிகளை தன்னுடைய டீம் மெம்பர்ஸ் உடன் மிகவும் நேர்த்தியாக செய்து கொண்டிருந்தாள்.

மீட்டிங் ஆரம்பிக்க சில நிமிடங்களே இருந்த வேளையில் முக்கியமான பென்ட்ரைவ் எம். டி யின் அறையில் இருப்பதால் அதை எடுப்பதற்காக சென்றுவிட்டாள்.

மீட்டிங் ஆரம்பம் ஆனது நர்மதா பென்ட்ரைவ் எடுத்துக் கொண்டு அந்த அறைக்குள் நுழைந்தாள்.

“ஹலோ எவ்ரிபடி இவர் தான் நம்ம கம்பனியோட புது புராஜெக்ட்ல நம்மளோட சேர்ந்து ஒர்க் பண்ண போறாரு.”

அவர் காட்டிய திசையில் நின்றிருந்தவனை கண்டு நர்மதா வெகுவாக அதிர்ந்துவிட்டாள்.

தொடரும்…