முன்பே காணாதது ஏனடா(டி) – 37

மைத்ரி தன் கைகளை பற்றியதும் அசையாமல் நின்றுவிட்டான் குமரன்.

“எதுக்காக என்னை அவாய்ட் பண்றீங்க குமரன்”

அவன் பதில் ஏதும் கூறாமல் அமைதி காத்தான். பற்களை கடித்தான் அதன் விளைவால் தாடை இறுகியது.

“எங்கிட்ட பேச மாட்டேன்றீங்க. நான் பறிமாருனா சாப்பிட மாட்டேன்றீங்க. என் முகத்தை நிமிர்ந்து கூட பார்க்க மாட்டேன்றீங்க. என்னாச்சு உங்களுக்கு?”

அவன அவளது கைகளை விலக்கி அவ்விடம் விட்டு அகன்றான்.

“நீங்க பண்றது என்னை ஹேர்ட் பண்ணுது உங்களுக்கு புரியுதா!” என கண்ணீரோடு அவன் சென்ற திசையை பார்த்து கத்தினாள்.

சீற்றமாக அவள் புறம் திரும்பி வந்தவன் “ஓ…  நான் பண்றது ஹேர்ட் ஆகுதா அப்போ நீங்க பண்றது மட்டும் எப்படி இருக்கு மைத்ரி.”

“நான் என்ன பண்ணுனேன்?”

“சரி நான் டேரக்ட்டாவே சொல்லிடுறேன். அந்த சிவா கூட நீங்க பழகுறது எனக்கு சுத்தாமா புடிக்கல”

“ஆனால் ஏன்? அவன் ரொம்ப நல்லவன்”

“அது எனக்கும் நல்லா தெரியும் ஜோவியலா இருப்பான் ஆனால் வரம்பு மீற மாட்டான். நான் அவன் கேரக்டர் பத்தி தப்பு சொல்ல வரல.  ஒருத்தர் பத்தி எதுவும் தெரியாம விமர்சனம் பண்றது அசிங்கம் அதை நான் எப்பவும் பண்ண மாட்டேன். ஆனால் நீங்க அவனோட பழகுறது புடிக்கல. அதுக்காக இதை பண்ணாதனு சொல்ல எனக்கு எந்த ரைட்ஸ்சும் இல்ல அதான் அமைதியா இருக்கேன்”

“இதை நான் எப்படி எடுத்துக்குறது குமரன்.  நான் உங்க மனசுல தப்பான கேரக்டர் பொண்ணா பதிஞ்சதா எடுத்துக்காட்டுமா” என்றாள்.

அவளை அடிக்க கை ஓங்கியவனை கண்டு அஞ்சியவள் ஓரடி பின்னால் நகர்ந்தாள்.  இருப்பினும் அவன் மனதில் இருப்பதை இன்றைக்கு எப்படியாவது வெளி கொணர வைத்துவிட வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தாள்.

முறைப்புடன்  தன் கைகளை கீழே இறக்கிய குமரன் “பொண்ணை அடிக்குறது பெரிய பாவம் அதை என்ன செய்ய வச்சுடாதீங்க” என்றவன் மீண்டும் கீழே இறங்க நகர்ந்தான்.

ஓடிச்சென்று அவனுக்கு முன் சென்றாள். அவசரத்தில் நிற்க முனைந்தவளின் கால்கள் தடுமாற மாடி படிகளில் இருந்து கீழே விழுக சென்றாள்.

ஒரு நிமிடத்தில் சுதாரித்த குமரன் அவளது கைகளை பற்றி நிறுத்தினான்.

இதயம் படுவேகமாக துடித்தது. மைத்ரிக்கு அல்ல குமரனுக்கு. மைத்ரி என்னவோ எதுவும் நடவாதது போல் அவனது முகத்தில் தனக்கு வேண்டிய பதிலை எதிர்நோக்கி பார்த்து இருந்தாள்.

குமரனுக்கு தான் உயிர் போய் உயிர் வந்தது. தந்தையின் விபத்திற்கு பிறகு அவனுக்குள் ஒரு சிறு பயம் இருந்து கொண்டே தான் உள்ளது.

மைத்ரியை படியின் பக்கம் இருந்து தூர அழைத்து வந்தவன் “என்ன தெரியனும்?” என முறைப்புடன் கேட்டான்.

அவனுக்கு சிறிதும் சளைக்காமல் “உங்க மனசுல எனக்கான இடம் என்னனு கேட்டேன்” என்றாள்.

“உங்க மனசுல என்ன பத்தி என்ன நினைக்குறீங்கள அதேன் எம்மனசுலையும் இருக்கு” என சொன்னவன் அவள் குழம்பி நிற்கும் நொடியை பயன்படுத்தி கீழே சென்றுவிட்டான்.

நர்மதாவின் மீது தான் கொண்ட காதல் தோல்வியடைந்த சில மாதங்களிலே இன்னொரு பெண்ணின் மீது இது போன்ற உரிமை உணர்வுகள் வருகிறதே அப்படியென்றால் தான் தவறானவனா என்ற எண்ணம் குமரனை வெகுவாக பாதிக்கிறது. 

அதன் விளைவே அவன் மைத்ரியிடம் மனம் திறந்து பேச முடியாமல் போவது. அதே நேரம் தனக்குள் தோன்றும் உணர்வுகளை வெளிகொணராமலும் இருக்க முடியவில்லை. ஆகா மொத்தம் நன்றாக குழம்பி போயுள்ளான்.

நர்மதா தங்களது அறையில் தயாராகி கொண்டிருந்தாள். அறைக்குள் வந்த செழியன் “என்னங்க ஒரு நிமிசம்” என அவளை அழைத்தான்

இத்தனை நாட்களுக்கு பிறகு கணவன் தன்னை அழைக்கிறானே என முகம் முழுவதும் புன்னகையுடன் அவன் முன் வந்தவள் “சொல்லுங்க” என்றாள்.

“அது நீங்க நாம ஊருக்கு போனதும் என்ன பிடிக்கல உங்களை ரொம்ப கொடுமபடுத்துறேன் இந்த மாதிரி ஏதாவது உங்க அப்பா அம்மாகிட்ட சொல்லுங்க”

“ஏன்?” என்றாள் ஒற்றை புருவம் தூக்கி

“அப்படி நீங்க சொன்னால் தான் உங்க அப்பா அம்மா மனசுல நான் கெட்டவனா பதிய ஆரம்பிப்பேன். நாளைக்கு நீங்க என்ன டிவோர்ஸ் பண்றேனு சொல்லும் போது அவங்களை சம்மதிக்க வைக்க கொஞ்சம் ஈஸியா இருக்கும்”

“எதுக்கு டிவோர்ஸ் பண்ணனும்”

புருவ முடிச்சுடன் நிமிர்ந்து அவளது முகம் நோக்கியவன் “அது…  நீங்க ல… ல..வ் லவ் பண்றவர கல்யாணம் பண்ணனும்னா டிவோர்ஸ் பண்ணி தான ஆகனும்”

அவனையே கூர்ந்து பார்த்தவள் எதுவும் பேசாமல் கை பையை எடுத்துக் கொண்டு வெளியே சென்றுவிட்டாள்.

அவள் சென்றதை உறுதிபடுத்தி கொண்டவன் வேகமாக அவளது பெட்டியில் இருந்து ஒரு சேலையை எடுத்து தன் பைக்குள் வைத்துக் கொண்டான். பின் இரண்டு பேரின் உடமைகளோடு வெளியே வர குடும்பம் அனைவரும் இவர்களை வழியனுப்ப காத்திருந்தது.

இருவரும் நர்மதாவின் வீட்டிற்கு செல்கின்றனர்.  நர்மதாவின் உடல்நிலையால் தள்ளிபோன மறுவீட்டு சம்பிரதாயம் இப்பொழுது நடைபெற உள்ளது.

வாயிலுக்கு வந்த செழியன் அங்கே நின்றிருந்த காரை பார்த்து “அப்பா கார் எதுக்கு இங்க இருந்து சில மணி நேர பயணம் தான பைக்ல போயிட மாட்டோமா”

சந்திரன், “டேய் நீ போயிடுவ மருமகள் புள்ள சௌகரியமா இருக்க வேண்டாமா”

மஞ்சுளா,”சின்ன மாமா கொழுந்தனாரு பொண்டாட்டியோட பைக்ல ஊர் சுத்த ஆசைபடுறாரு அதான் நாசுக்க இப்படி சொல்றாரு”

செழியன் பதில் எதுவும் சொல்லாமல் தலை குனிந்தான். அவன் எதாற்தமாக தான் சொன்னான். ஆனால் அண்ணியாரின் கிண்டலில் இப்பொழுது உண்மையில் ஆசையாகி போனது.

அடுத்த நிமிடம் நர்மதாக்கு என்னுடன் வருவது பிடிக்காது என எண்ணி மனதை கட்டுபடுத்தினான்.

கதிர், “ஏய் சும்மா இரு எப்ப பாரு அவன கிண்டல் பண்ணிட்டு” என மனைவியை அடக்கியவன் தம்பியின் புறம் திரும்பி “டேய் செழியா ரோடு கண்டிஷன் சரி இல்லடா ஏதோ கார்ப்பரேஷன் வேலை நடக்குது போல ஒரே குண்டும் குழியுமா இருக்கு பைக்னா கஷ்டம்” என்றான்

“சரி அண்ணே…”

இருவரும் காரில் ஏறியதும் அதுவரை அமைதியாக மகாவின் இடுப்பில் அமர்ந்து இருந்த ஹரிஷ் “சித்தா நானும் வரேன்” என கார் கதவை இழுத்தான்.

வள்ளி, “சித்தா சித்திக்கு ஊசி போட கூட்டி போறாங்கடா செல்லம். நீயும் கூட போனா அப்புறம் உனக்கும் ஊசி போட்டுவாங்க”

“ஆ…  எனக்கு ஊசி வேண்டாம்” என அவன் அழுக

“இல்லடா தங்கம். என் செல்லத்துக்கு ஊசி போட பாட்டி விட்டுடுவேனா வாங்க வாங்க நாம ஓடிடலாம்” என கூறி மகாவிடம் இருந்து அவனை வாங்கி கொண்டாள் வள்ளி.

பின் செழியன் நர்மதா இருவரிடமும் கண்ணால் விடைபெற்று கொண்டு வீட்டின் பின்புற வாயிலுக்கு சென்றாள்.

……

கல்லூரி வளாகத்தில் இருந்து ஸ்கூட்டியில் வெளியே வந்தாள் சுஜி.

அவள் முன் சென்று தன் பைக்கை நிறுத்தினான் சிவா.

அவனை தன்னால் முடிந்த மட்டும் முறைத்து பார்த்தாள் சுஜி. ஆனால் இதற்கெல்லாம் தான் பயம் கொள்பவன் அல்ல என்பது போல் புன்னகை முகமாக அவளை பார்த்து நின்றான் சிவா.

தொடரும்…