முன்பே காணாதது ஏனடா(டி) – 35

செழியன் சென்ற திசையை வெறித்த நர்மதாவின் கண்களில் நீர் சுரந்தது. என்னவோ அவனது பாரா முகமும் மௌனமும் இவளை கொல்லாமல் கொன்றது.

வாசலில் பைக் சத்தம் கேட்டதும் வெளியே ஓடிவந்தாள் மொழி. அண்ணி மட்டும் தனியாக நிற்கவும் “அண்ணி வாங்க என்ன தனியா நிக்குறீங்க அண்ணன் பைக் சத்தம் கேட்டுச்சு”

“அது அவங்க போய்ட்டாங்க”

“போயிருச்சா! இங்க வந்தா என்ன பார்க்கமா போகாதே. என்னாச்சு அண்ணனுக்கு?”

“எதாவது வேலை இருந்து இருக்கும் மொழி. அதனால தான் போயிருப்பாங்க.”

அண்ணன் அண்ணி இருவருக்கும் இடையே நடக்கும் பூசல் பெரிய அண்ணி மஞ்சுளாவின் வாயிலாக ஏற்கனவே அறிந்தமையால் அவளிடம் அதிகம் கேள்வி கேட்காமல் வீட்டின் உள்ளே அழைத்து சென்றாள்.

“என்ன மொழி ஏதோ தோட்டம் ரெடி பண்ண போறேனு அண்ணே சொன்னாரு”

“ஆமா அண்ணி தோட்டம் ரெடி பண்ணனும் எங்க  ரூம்ல இருந்து பார்த்தா நல்ல வியூ கிடைக்கும் அண்ணி அதுமட்டும் இல்லாமா சுதாக்கு செடி கொடினா ரொம்ப பிடிக்கும்”

“நீங்க லவ் மேரேஜ்ல ரொம்ப கியூட்”

“நாங்க லவ் மேரேஜ் அப்படின்றதால கியூட்டா? இல்ல நிஜமாவே கியூட்டா?”

“ஏய் நிஜமாவே கியூட் லவ் மேரேஜ் அப்படின்றதால சொல்லல”

“ம்….. சரி அண்ணி வாங்க சில விதைகள் வேணும்  நேத்து நம்ம தோட்டத்துல வேலை பாக்குற முத்து தாத்தாகிட்ட சொல்லி வச்சேன். போய் வாங்கிட்டு வந்துடலாம்”

“சரி வா போலாம் ஆனால் வீடு தொரந்து இருக்கே”

“அத்த பக்கத்துல தான் போய் இருக்காங்க வந்துருவாங்க. நாம தாழ் மட்டும் போட்டுட்டு போகலாம்”

“ஆனாலும்…..”

“அண்ணி இது உங்க சிட்டி இல்ல பயப்பட வேண்டாம். அப்படியே கலவாணி பயளுங்க வந்தாலும் செழியன் மாப்பிளை வீட்டுக்குள்ள போகுறதுக்கு யாருக்கும் தைரியம் வராது.”

மொழியின் மறுமொழிக்கு சிறு புன்னகையை மட்டும் பதிலளித்த நர்மதா அவளுடன் சேர்ந்து தோட்டத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

ஹரிஷ் உடன் கடைக்கு வந்த சுதாகரன் கடையில் இருந்த பொன்னி பாட்டியிடம் வம்பழந்து கொண்டிருந்தான்.

அப்பொழுது ஹரிஷ் பொன்னி பாட்டியுடன் விளையாட போகிறேன் என அடம்பிடிக்க அவருடன் அவனை அனுப்பிவிட்டு வீடு நோக்கி வந்தான்.

வீட்டில் யாரும் இல்லாததை கண்டு இல்லளுக்கு அழைப்புவிடுத்தான்.

“ஹலோ…..”

“சொல்லு சுதா”

“ஏய் எங்கடி போனவ வீட்டுல யாரையும் காணோம்”

“அத்த பக்கத்து வீட்டுல உட்காந்து இருக்காங்க. நான் வரும் போது சொல்லிட்டு தான் வந்தேன்”

“சரி உன் அண்ணன்காரன் அங்க இருக்கானா”

“இல்ல அண்ணிய இறக்கிவிட்டுட்டு வீட்டுக்குள்ள கூட வராம போயிருச்சு”

“சரி… சரி… நான் பார்த்துக்கிறேன்”

“ஆ…. சரி வச்சுடுறேன்”

அவன் அழப்பை துண்டித்ததும் சற்ற தள்ளி வயலை வேடிக்கை பார்த்து கொண்டு நின்று இருந்த தன் அண்ணன் மனையாளின் அருகே சென்றாள்

“என்ன அண்ணி என்ன பார்க்குறீங்க”

“அங்க பாரேன் அந்த கோழி கூட்டம். அம்மா பேச்சு கேட்காம ஒரு கோழி குஞ்சு மட்டும் தனியா தனியா போகுது. கொஞ்ச நேரத்துல யாரும் பக்கத்துல இல்லனு தெரிஞ்சதும் சுத்திமுத்தி தேடிட்டு திரும்ப அம்மா கோழிக்கிட்ட ஓடுது. அப்புறம் திரும்ப தனியா போகுது. அம்மா சத்தம் போட்டதும் மறுபடியும் கூட்டதோட சேர்ந்துக்குது பார்க்க  ரொம்ப அழகா இருக்கு அந்த கோழி குஞ்சு செய்றதெல்லம் ரொம்ப  ரசிக்க வைக்குது”

“ம்… ஆமா அண்ணி ரொம்ப  அழகா இருக்கு. அண்ணி கேக்கனும்னு இருந்தேன்.  மறுவீட்டுக்கு எப்போ போறீங்க.”

“கல்யாணம் முடிஞ்சு இங்க வந்த மறுநாளே போக வேண்டியது. எனக்கு உடம்பு சரியில்லாம போனதுல அம்மா பயந்துட்டாங்க ஜோசியர் போய் பார்த்ததுல ஒரு மாசம் முடியட்டும் சொன்னாங்கலாம் அதனால இன்னைக்கு இல்லன நாளைக்கு  அம்மா வீட்டுல இருந்து அழைப்பு வரலாம்”

“சரி அண்ணி வாங்க. அப்படியே வேலை நடக்குற இடத்துக்கு போயிட்டு வரலாம்”

“சரி வா போலாம்”

இருவரும் கதிர் அறுக்கும் இடத்திற்கு வந்தனர். அவர்கள் பார்வையிடுவது அவர்களது வயல் கிடையாது. கிராமம் என்பதால் அனைவரும் உறவினர்களாக இருப்பார்கள். யாருடைய வயலுக்கும் யார் வேண்டுமானாலும் சென்று வரலாம். ஆனால் விளைச்சலை களாவாடினால் தோலை உரித்துவிடுவர்.

“என்னடி தங்கம் இப்போ எல்லாம் எங்க வீட்டுபக்கம் வர்ரதே இல்ல என்னவா?” என அங்கு வயலை மேற்பார்வை செய்து கொண்டிருந்த இளம்பெண்ணொருத்தியிடம் வினவினாள் மொழி.

அவளை பார்த்த புதியவள் அருகில் இருந்த நர்மதாவை பார்த்துவிட்டு முகத்தை திருப்பி கொண்டு சென்றுவிட்டாள்.

“போடி…  ரொம்ப தான்” என்று கொணட்டி கொண்டாள் மொழி.

நர்மதா மொழியால் தங்கம் என அழைக்கப்பட்ட பெண்ணின் செயல் வருத்ததை தந்தது.

“என்னாச்சு மொழி எதுக்கு அந்த பொண்ணு என்ன பார்த்து மூஞ்ச திருப்பிட்டு போகுது.”

“அது ஒன்னும் இல்ல அண்ணி அவள் எங்களுக்கு மாமன் மகள் முறை. செழியன் அண்ணாவ சின்னதுல விரும்புனாள். அண்ணனுக்கு திடீர்னு கல்யாணம் முடிவாகவும் அவங்க வீட்டுல வந்து பேசுனாங்க ஆனால் நம்ம வீட்டீல யாருக்கும் விருப்பம் இல்லாததால வேண்டாம்னு சொல்லிட்டோம் அதான் கோபமா போறாள்.”

முன்பு இருந்த நர்மதாவாக திருமணம் நிச்சயமான சமயமாக இருந்தால் நாத்தனாரின் கூற்றுக்கு அவளது மனது ‘தங்கத்தையே கல்யாணம் பண்ணி இருக்க வேண்டியது தான? யாரு வேண்டானு சொன்னா?”  என பதில் கூறி இருக்கும்.

ஆனால் தற்போது இருந்த மனநிலைக்கு வேறுமாதிரி பதில் கூறியது. “என் புருஷன் வேணுமா இவளுக்கு எவ்வளவு தைரியம்…. அவள் முடிய புடிச்சு ஆஞ்சு போடனும்” என எண்ணினாள்.

இது காதலினால் உண்டான வார்த்தைகள் என்று சொல்லிவிட முடியாது. தனக்கு சொந்தமாகியதை மற்றவருக்கு சொந்தமாக எண்ண முடியாத சாதரணநிலை தான்.  ஆனால் வருங்காலத்தில் அந்த எண்ணத்தின் அளவு அதிகரித்தால் அது காதலாக மாற வாய்ப்பு உண்டு.

அருவிகரை மடத்தின் அமர்ந்து இருந்தான் செழியன்.  அவன் அருகில் வந்து அமர்ந்தான் சுதாகரன். நண்பனின் செயலை பற்றி மனைவியிடம் கேட்டு தெரிந்து கொண்டதில் அவனது மனநிலை பற்றி அறிந்து கொண்டான்.

நண்பனை பற்றி நன்கு அறிந்தவன் அவன் எங்கு இருப்பான் என்பதையும் அறிந்து கொண்டு தேடி வந்துவிட்டான்.

“டேய் செழியா” என அவன் தோள் தொட நண்பன் புறம் திரும்பினான் செழியன்.

அவனது கலங்கிய கண்களை கண்ட சுதாகரன் பதறி போய் அவனது கண்ணீரை துடைத்து “டேய் மச்சான்.. என்னாச்சுடா…  எதுக்கு இந்த அழுக”

“அவளுக்கு என்ன புடிக்கலடா மாப்பிள்ளை.  வேற யாரோ அவள் மனசுல இருக்காங்க தப்பு பண்ணிட்டேன் அவள் விருப்பத்த கல்யாணத்துக்கு முன்னமே கேட்டு இருக்கனும். ரொம்ப துடிச்சு போயிருப்பாளடா. எவ்வளவு கனவுகள் இருந்து இருக்கும் நான் அவள் வாழ்க்கையில நுழைஞ்சு எல்லாத்தையும் கெடுத்துட்டேன்.”

“அப்போ உன்னோட காதல். எனக்கு உன்னோட காதலும் வாழ்க்கையும் தான் முக்கியம். மச்சான் நீ என்ன தப்பா நினைச்சாலும் எனக்கு கவலை இல்ல நான் சுயநலவாதி தான் எனக்கு நீ தான் எப்பவும் முக்கியம். அவள் மனசுல யாரு இருந்தாலும் அதை அழிச்சிட்டு நீ நுழையிற வழிய பாரு.”

“அது தப்புடா. இது அவளோட வாழ்க்கை முடிவ அவதான் எடுக்கனும். ஒருவேளை அவளுக்கு என்னோட வாழ புடிக்கலனு சொன்ன அவளுக்கான விடுதலைய நான் கொடுத்துடுவேன்’

“பைத்தியமாடா நீ அதுக்கு அப்புறம் உன்னோட வாழ்க்கை”

“கடைசி வர எம்மனசுல இருந்த என்னோட சின்ன வயசு அம்முவோடையே வாழ்ந்துருவேன்” என கூறி கண்ணீரை துடைத்துக் கொண்டு தன் பைக் அருகே சென்றான்.

நண்பன் சென்ற திசையை பார்த்தவன் அவனை இப்படியே விடக்கூடாது என முடிவு செய்து அவன் அருகில் ஓடினான்.

“சரி வா என்வீட்டுக்கு போலாம்”

“நான் வரலை நீ போ”

“டேய் அங்க உன் தங்கச்சி தோட்டம் வைக்க போறேனு வீட்டுக்கு பின் பகுதிய சுத்தம் பண்ணிட்டு இருப்பாள்.  மண்வெட்டிய வச்சு என்ன வித்த காட்டுறாளோ.  நர்மதா வேற அங்க தான் இருக்கு நர்மதாவ என்ன பாடுபடுத்துறாலோ பாவம் என்தங்கச்சி வா…”

செழியனை மடக்க என்ன கூற வேண்டும் எனபதை அறிந்து நர்மதாவை இழுத்து பேசினான். அதன் விளைவாக அவனும் சுதாகரன் வீட்டிற்கு வர சம்மதித்தான்.

இருவரும் சுதாகரன் இல்லம் நோக்கி சென்றனர்.  அதேநேரம் வயல்வெளியில் இருந்து நர்மதாவும் மொழியும் வீடு நோக்கி சென்றனர்.

தொடரும்…