முன்பே காணாதது ஏனடா(டி) – 16

சுதாகரன் – அருள்மொழி காதலை பற்றி சொல்லியவுடன் மகாவிற்கு பெரிய அதிர்ச்சி. தன்னுடைய மகளா என்று அதிர்ச்சி உற்றார்.

மஞ்சுளா, “சுதாகரன் ரொம்ப நல்ல பையன் எந்த கெட்ட பழக்கமும் கிடையாது விவசாயம் பண்றான். அதோட அவங்க அப்பாவோட எண்ணெய் செக்கு இப்ப அவனோட மேற்பார்வைல தான் நடந்துட்டு இருக்கு.”

அதன் பிறகும் அவர் எதுவும் பதில் சொல்லாமல் இருக்கவும் “இன்னும் என்ன பிரச்சனை உங்களுக்கு” என்று கதிர் கேட்டுக் கொண்டிருக்க அப்பொழுது வீட்டின் உள் நுழைந்தார் சந்திரன்.

“என்ன பிரச்சனை” என்று மனைவியின் புறம் திரும்பி கேட்க அவரோ கதிரை பார்த்தார்.

நடந்தவைகளை கதிர் மீண்டும் ஒரு முறை கூற அவருக்கும் மகளின் காதலில் பெரிதாக எந்த எதிர்ப்பும் இல்லை.

தற்சமயம் அவர் பார்த்த சம்பந்தத்தை பேசி முடிக்கலாம் என எண்ணும் போது ஏதோ தவறாக பட்டதே அது தனது மகளின் விருப்பத்தை அறிவுருத்த தானோ என்று நினைத்துக் கெண்டார்.

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது அருள்மொழி சுதர்சனை அழைத்துக் கொண்டு செழியனும் அவ்விடம் வந்து சேர்ந்தான்.

மகா, “எனக்கு யோசிக்கனும் சட்டுட்டுனு எப்படி ஒத்துக்க முடியும் அந்த பையன்…. ” என்று இழுக்க

“அவனுக்கு என்ன குறைச்சல்” என கேட்டுக் கொண்டே அங்கு வந்து நின்றான் செழியன்.

……….

பிணவறை என்ற வார்த்தையை பார்த்ததும் திடுக்கிட்ட குமரனின் மனது கார்த்தி அதனை கடந்து சென்ற உடன் நிம்மதி அடைந்தது.

தம்பியுடன் சென்று கொண்டிருந்தவனின் மனம் தாய் மற்றும் தங்கையின் கண்ணீர் காட்சியை கண்ட உடன் மீண்டும் படபடக்க தொடங்கியது.

அதுவரை நடந்து கொண்டிருந்தவன் இப்பொழுது வேகமாக ஓடிச் சென்று தாயின் அருகே சென்றான்.

தனது தந்தைக்கு தான் ஏதோ என அவன் அனுமானிக்க பெரிதாக ஒன்றும் நேரம் எடுக்கவில்லை அவனுக்கு.

குமரனை பார்த்ததும் சுஜி அதிகமாக அழுக ஆரம்பித்தாள். அண்ணன் அவனை கட்டிக் கொண்டு அப்பா என்று ஏங்கி ஏங்கி அழுக குமரனின் இதயம் வெளியே குதித்து விடும் போல் இருந்தது.

எவரிடமும் எந்த கேள்வியும் கேட்கவில்லை அவன். என்ன நேர்ந்திருந்தாலும் சரி தனது தந்தை நல்லபடியாக திரும்பி வர வேண்டும் என இறைவனிடம் வேண்டுதல் வைத்தான்.

…….

தனது நண்பனுக்கு என்ன குறைச்சல் என்று கேட்ட செழியன் அவனை தனக்கு அருகே இழுத்து நிற்க வைத்து தன்னை பெற்றவரை நோக்கி

“சொல்லுங்க என் நண்பனுக்கு என்ன குறைச்சல்…  அவன போல ஒருத்தன நீங்க எங்க போய் தேடுனாலும் கிடைக்கிறது கஷ்டம்.”

“யோசிங்க சரியான முடிவ எடுப்பீங்கனு நம்புறேன்” என்றவன் மஞ்சுளாவை பார்த்து “முறையா அழைக்காதவங்க வீட்டுக்கு எதுக்கு வந்தீங்க அண்ணி.”

“மொழி நம்ம வீட்டு பொண்ணு அவ வாழ்க்கை எனக்கு ரொம்ப முக்கியம்.”  என்று பதில் கூறியவள் அவனோடு சேர்ந்து வெளியே நடக்கலானாள்.

அவர்கள் சென்றதும் மகாவின் அருகில் சென்ற சுதர்சன் “எனக்கு இப்போ என்ன பேசுறதுனு தெரியல அ.. த்.. தை ஆனா அப்பா அம்மாவ கூட்டிட்டு முறைப்படி வரேன்” என்று கூறி அவனும் அவர்கள் பின் சென்றான்.

மௌனமாக நின்றிருந்த மகாவின் அருகில் நெருங்கிய கதிர் தம்பி வெளியேறி விட்டான் என்பதை உறுதி செய்து கொண்டு “இந்த காதலையாவது சேர்த்து வைங்க” என்று கூறி வெளியேறி விட்டான்.

……..

அவசர பிரிவில் இருந்து வெளி வந்தார் மருத்துவர். அவர்கள் அருகில் ஓடினார்கள்  அனைவரும்.

“பயப்பட வேண்டியது இல்ல. அவரு சேஃப் ஆனா கொஞ்ச நாள் அவர ஸ்டெயின் பண்ண விடாம கவனமா பாத்துக்கோங்க.”

அப்பொழுது தான் அனைவருக்கும் நிம்மதியே வந்தது.

“அப்றம் ரொம்ப முக்கியமான விஷயம் என்னனா அவரோட கால்ல ஒரு ஆபிரேஷன் பண்ண வேண்டியது இருக்கு “

“ஆப்ரேஷனா… “

“ஆமா…மா.. உடனே பண்ணனும் அப்டினு இல்ல. ஒரு வாரத்துல பண்ணுனா போதும்…  ஆனா பண்ணாம விட்டுட்டா இனி வாழ்க்கை முழுக்க அவர் வீல் சேர்ல இருக்க வேண்டிய நிலை உண்டாக வாய்ப்பு இருக்கு”

“ஐயோ…  டாக்டர்…”

“என்ன பண்ணலாம்னு முடிவு பண்ணுங்க எப்ப ஆப்ரேஷன் வச்சுக்கலாம்னு டிசைட் பண்ணனும் சீக்கிரம் உங்க முடிவ சொல்லிருங்க”

குமரன், “டாக்டர் ஆப்ரேஷனுக்கு எவ்வளவு பணம் ஆகும் “

“நாழு லட்சம்….”  என்று கூறி அவர் அவ்விடத்தை விட்டு நகர்ந்து விட்டார்.

என்ன…  அவ்ளோ பணத்துக்கு நாங்க எங்க போவம்… கடவுளே… 

இவர்களது அழுகையை கண்ணீரோடு பார்த்துக் கொண்டிருந்த சுமி மைத்ரியின் நிலையை எண்ணி கலக்கமுற்றாள்.

அதே நேரம் சரியாக மைத்ரியை பரிசோதித்து கொண்டிருந்த டாக்டர் அறையை விட்டு வெளியே வர இப்பொழுது சுந்தரியின் கவனம் அப்புறம் திரும்பியது.

சுமி டாக்டரின் அருகில் சென்று கண்ணீரோடு மைத்ரியின் நிலை குறித்து வினவினாள்.

“சாரி மிஸ்…  அவங்க கிரிட்டிக்கல் கன்டிசன்ல இருக்காங்க இன்னைக்கு நைட்டுக்குள்ள கண்ணு முழிக்கலனா எங்களால ஒன்னும் பண்ண முடியாது”

சுந்தரிக்கும் சுமிக்கும் பேச்சு எழவில்லை.

கார்த்திக் தாயை கவனித்து அவர்களின் அருகில் வரும் பொழுது டாக்டர் கூறியவற்றை கேட்க நேர்ந்தது.

முகம் தெரியா பெண்ணின் மீது பரிதாபம் ஏற்பட்டது.

அம்மா…  என்று தாயின் தோளை தொட திரும்பினார். “கார்த்தி…  உங்க அப்பா எழுந்து வந்து கேட்டா நான் என்னடா சொல்லுவேன்” என்று அழுதவர் கண்ணாடியின் வழியே உள்ளே பார்க்க பல வயர்களின் நடுவே கசங்கிய நாராக மைத்ரி காணப்பட்டாள்.

தாயை புரியாது நோக்கினான் மகன் அவன்.

……

இந்த காதலையாவது சேர்த்து வைங்க அப்படினா என்ன அர்த்தம் என்று குழம்பினார் மகா.

அதனை கணவரிடமும் மகளிடமும் கேட்கவும் செய்தார்.

சந்திரன் தனக்கு தெரியாது என்று கூறினார். அருள்மொழி பதில் எதுவும் கூறாமல் கண்களை நாலாபுறம் திருப்பி உருட்டி கொண்டிருந்தாள்.

மகள் தன்னிடம் ஏதோ ஒன்றை மறைக்கிறாள் என்பதை கண்டு கொண்டார்.  அதே நேரம் அவளது மூளை ஒன்று அல்ல இன்னும் எத்தனை விஷயங்களை மறைக்கிறாளே என்றது.

அதனை அடக்கியவர் மகளின் புறம் திரும்பி அவளை அழுத்தமாக பார்க்க “அம்மா…  அது….”

என்று அவள் திணற

“உங்கிட்ட பேசவே கூடாதுனு நினச்சேன். ஆனா இப்போ எனக்கு உங்கிட்ட பேச வேண்டியது அவசியம்னு தோணுது. சொல்லு கதிர் சொன்னதுக்கு அர்த்தம் என்னனு தெரியும்ல உனக்கு…. “

அவளே முதலில் அதிர்ச்சியில் இருந்தாள். ‘கதிர் அண்ணனுக்கு செழியன் அண்ணாவின் காதல் தெரியுமா…  ஆனால் சுதா அதை பற்றி தன்னிடத்தில் எதுவும் கூறவில்லையே’ என சற்று நொடி வரை தன் காதலை பற்றிய எண்ணத்தில் இருந்தவள் தற்போது அண்ணனின் காதலை பற்றி எண்ணினாள்.

தன் கேள்விக்கு பதில் சொல்லாத மகளை உழுக்கிய மகா அவளிடம் தொடர்ந்து தன் கேள்வி கணைகளை விடுத்தார்.

இதற்கு மேல் உண்மையை மறைக்க கூடாது தமயனின் வாழ்விற்கு தீர்வு கிட்ட வேண்டும் என்று எண்ணி செழியனின் காதலைப் பற்றி மகாவிடம் தெரிவித்தாள் மொழி.

தொடரும்…