முன்பே காணாதது ஏனடா(டி) – 1

இது என்னுடைய முதல் படைப்பு தவறு ஏதேனும் இருந்தால் சுட்டி காட்டுங்கள் நண்பர்களே திருத்திக் கொள்கிறேன்.

          

இதோ ஊரெங்கும் கேட்கும் அளவு ரேடியா செட்டுகளும் ,அப்பெரிய மண்டபம் முழுவதும் மக்கள் கூட்டம் கூட்டமாய் வருவதும் போவதுமாகவும், மண்டபம் முழுவதும் மாவிலை தோரணங்களும், மலர் அலங்காரங்களும் ,ஆங்காங்கே பாலிதீன் மற்றும் பேப்பர் கப்புகளும் சிதறி கிடப்பதை பார்க்கும் போது ஏதோ ஒரு சுப நிகழ்வு நடைபெற்று கொண்டிருக்கிறது என்பதை நமக்கு உணர்த்துகிறது, ஆம்  அவ்வூர் முக்கியஸ்தர் ஒருவரின் மகனுக்கு திருமணம். 

ஒரு புறம் பந்தி நடைபெற்றுக் கொண்டிருந்தது. மறுபுறம் உறவினர்கள் அத்திருமணத்திற்கான மொய் பணத்தை செலுத்திக் கொண்டிருந்தனர். ஒரு புறம் மாப்பிள்ளையின் வீட்டாரும் மறுபுறம் பெண்ணின் வீட்டாரும் வசூலித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அவனும் அங்கே தான் தன்னுடைய முறைக்காக நின்று கொண்டிருந்தான். தன் முன் நின்று வெகுநேரம் மொய் குறிப்பு எழுதுபவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார் நடுத்தர வயது குடிமகன். அக்குடிமகனின் இச்செயலால் ஒரு வித சலிப்புடன் காத்திருந்தான்.

அப்போது தான் கேட்டான் அக்குரலை கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு பிறகு. செழியன் – நர்மதா  அன்னபுரம், மதுரை  1001 என்று பெண் வீட்டார் புறம் தனது செய்முறையை செய்து கொண்டிருந்தாள் அந்த பெண். இவனுக்கோ இன்னதென்று அறிய முடியா ஒரு உணர்வுடன் பார்த்துக்கொண்டிருந்தான் அவளை.

          அவனது கண்கள் அவளது முகத்தை தான்  அளவெடுத்துகொண்டிருந்தது. இந்த சில ஆண்டுகளில் அவளது தோற்றத்தில் நிறைய மாற்றங்கள் முன்பு மெலிந்து காணப்படுவால் ஆனால் இப்போது சற்றே பூசினாற் போல் காணபட்டாள் ஆனால் முன்பை விட இப்போது சற்று அழகு கூடி போகி இருந்தது என்றே கூறலாம். ஒரு புது வித பூரிப்பு அவளது முகத்தில். அதனை கண்ட அவனது முகத்திலும் சிறு மென்புன்னகை மற்றும் மனதில் எங்கோ ஆழ புதைந்திருந்த கேள்விக்கான பதில் கிடைத்துவிட்ட சந்தோசம்.

இப்படியாக அவன் இருக்க அவனது முறைக்கான அழைப்பு அவனது செவிக்கு எட்டவில்லை. ஒன்றுக்கு இரண்டொரு முறை அழைத்த பின்பே நிகழ் உலகிற்கு வந்தான். அவளும் அவ்விடத்தை கடந்து செல்ல முனைகையில் அவளது செவியிலும் விழுந்தது என்றோ தன் மனதில் ஆழ பதிந்த குரல். எத்தனையோ நாட்கள் இக்குரலை கேட்பதற்காகவே நாள் கணக்கில் காத்து கிடந்தது உண்டு குமரன் – மைத்ரி திருச்சி 1001  அப்படியே நின்றுவிட்டாள். சட்டென்று திரும்பி பார்க்க அவன் தான் அவளை நோக்கி வந்து கொண்டிருந்தான் .

குமரன், “ஹாய் நர்மதா மேடம்”

நர்மதா, “ஹாய் குமரன் சார்”

குமரன், “அப்புறம் ரொம்ப நாள் ஆச்சுல நாம மீட் பண்ணி”

நர்மதா, “ரொம்ப நாள் இல்ல  சார் ரொம்ப வருசம் ஆச்சு”

குமரன், “ஓ….  ஆமால…  வீட்டுல  எல்லாம் எப்படி இருக்காங்க”

நர்மதா, “ம்….  எல்லாரும் சூப்பர்
உங்க வீட்டுல…”

குமரன், “ம் நல்லா இருக்காங்க தங்கச்சிக்கு  கல்யாணம் ஆகிருச்சு இப்போ அவ  ஹஸ்பன்ட் கூட  USA ல இருக்கா. தம்பி  மெடிசன்ல மாஸ்டரேட்   படிச்சுட்டு இருக்கான்.”

நர்மதா, “ம்.. சூப்பர் சூப்பர்…”

குமரன், “அப்புறம் லைஃப் எப்படி போகுது”

நர்மதா, “ரொம்ப சந்தோசமா இருக்கேன்”

குமரன், “சரி அப்போ நா கிளம்புறேன் பாய் …”

நர்மதா, “பாய்…”

—————————–
ஐந்து வருடங்களுக்கு முன்பு

குமரன் 25 வயது 6 அடி உயரம் சிவந்த நிறம் அளவான உடல்வாகு அதற்காக  சிக்ஸ் பேக்  என்று சொல்லிவிட முடியாது. நேர்கொண்ட பார்வை எந்த கெட்ட பழக்கங்களும் இல்லாதவன் தந்தை என்றால் உயிர். பொதுவாக ஆண்பிள்ளைகள் தாயிடமே அதிக ஒட்டுதலோடு இருப்பர் ஆனால் குமரனுக்கு தந்தையே முதன்மை. தந்தையை பற்றி தாய் ஒரு வார்த்தை தவறாக கூறினாலும் பொறுத்து கொள்ள மாட்டான்

மாரிமுத்து – சுந்தரி முதல் வாரிசு குமரன் அவனுக்கு அடுத்த படியாக இருவர் தங்கை சுஜிதா தம்பி கார்த்திக் அவர்கள் இருவரும் தாயின் செல்ல பிள்ளைகள்.

இவர்கள் நடுத்தர வர்க்கத்தினருக்கும் சற்று கீழ் உள்ள குடும்பத்தினர்.  தந்தை ஒரு வாயிற்காவலர் அது போக சில சமயம் காய்கறி சந்தையில் மூட்டை தூக்கும் தொழில் செய்பவர். தாய் இல்லத்தரசி . சுஜி  பி. எஸ் சி கம்ப்யூட்டர் சயின்ஸ் கடைசி வருடம் படித்துக் கொண்டிருக்கிறாள். கார்த்தி மருத்துவம் இரண்டாம் வருடம் படித்து கொண்டிருக்கிறான்.

குமரன் விஷுவல் கம்யூனிகேஷன்   படித்து முடித்து விட்டு நான்கு ஆண்டுகளாக ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கிறான்.  சொந்தமாக ஒரு நிறுவனம் தொடங்க வேண்டும் என்பது அவனது கனவு மற்றும் அவனது தந்தையின் கனவும் கூட. எவ்வளவோ முறை அந்த அன்பு தந்தை தன் மகனிடம் சொல்லி பார்த்து விட்டார் உன் கனவை நோக்கி செல் குடும்ப தேவையை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று.

அதற்கு  அவனது பதில்
“எத்தனை நாள் நீங்களே கஷ்டபடுவிங்க பா , என்னோட கனவுகள் எனக்கு முக்கியம்தா ஆனா கடமையும் முக்கியம்பா ஒரளவுக்கு நாம முன்னேறிய பிறகு என்னோட கனவுகள பாத்துகிறேன்பா ” என்பதே.

தற்போது அவன் பணி செய்யும் நிறுவனத்தில் தரப்படும் சம்பளம் தம்பி தங்கையின் படிப்பு செலவுக்கு மிகவும் அவசியம். அவர்களது வாழ்க்கையில் அவன் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. அதே நேரம் தனது கனவு நிறுவனத்தின் வழிவகைகள் அவனது மனதில் வழு பெற்றுக் கொண்டே இருந்தது.

தம்பி தங்கை இருவருக்கும் அண்ணனின் மீது மிகுந்த பாசமும் மரியாதையும் உண்டு.

————————

ராஜாராம் – கண்மணி தம்பதியின் முதல் புதல்வி நர்மதா நடுத்தர உயரம் நீளமான கூந்தல் மாநிறம் படித்தது கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் இப்பொழுது ஒரு வளர்ந்து வரும் நிறுவனத்தில் பணி புரிந்து வரும் இளம் நங்கை. வயது 22 தந்தையின் செல்ல இளவரசி அதற்காக அவள் என்ன செய்தாலும் ஏற்றுக் கொள்ளும் பெற்றோர் அல்ல.  மிக அதிக கண்டிப்பு உடையவர்கள். 

இரண்டு தங்கை , மூத்த தங்கை கவிதா கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாள். இளையவள் துளசி பள்ளியின் இறுதி வகுப்பில் இருக்கிறாள். மூன்று பேரும் மூன்று திசை ஒற்றுமை என்றால் என்ன விலை என்பர். ஆனால் ஒருவர் மீது ஒருவர் அதிக பாசம் உள்ளவர்கள் ஆனால் வெளியே காட்டிக் கொள்ள மாட்டார்கள் பெற்றோரின் மீது பாசம் அதிகம் அதைவிட உள்ளுக்குள் அதிக பயம் உடையவர்கள்.

தொடரும்…..

நண்பர்களே கதை குறித்த தங்களின் கருத்தை கூறினால் உதவிகரமாக இருக்கும்.
தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டவும் நண்பர்களே நான் திருத்தி கொள்கிறேன்.