மீட்டாத வீணை தருகின்ற ராகம் – 6

மாலை நேரம் தன் அறையில் அமர்ந்து மொபைலில் பாடல் கேட்டு கொண்டிருந்தாள் யாழ்நிலா

அவள் அருகில் வந்து அமர்ந்தான் யுக்தயன்.  அவன் அமர்ந்ததை கூட அறியாமல் பாடலில் மூழ்கிவிட்டாள் நிலா.

யுகியும் சத்தம் ஏதும் இல்லாமல் கண் மூடி அமர்ந்திருந்த அவளை தான் ரசித்துக் கொண்டிருந்தான். பின் மெதுவாக அவளது காதில் இருந்த இயர் போனை எடுத்தான்.

பாடல் ஒலி நின்றதும் கண்களை திறந்தாள்.  அவளது பக்கத்தில் மிக நெருக்கமாக அமர்ந்திருந்தான்.  அதில் திடுக்கிட்டு பின் புறம் சாய்ந்தவள் தன்னை நிலைபடுத்தி கொண்டு அவனை என்ன என்பது போல் பார்த்தாள்.

யுகி, “மேடம் என்ன செய்றீங்க “

நிலா, “பா.. பாட்டு கேட்டுட்டு இருக்கேன் “

யுகி, “இது இப்போ ரொம்ப முக்கியம்.  நாளைக்கு நாம கிளம்புறோம் அதுக்கு கொஞ்சம் பிரிப்பேர் ஆகலாம்ல என்று கோபமாக கேட்டான். “

நிலா, “அது அ.. து நா எல்லாத்தையும் பேக் பண்ணிட்டேன் “

யுகி, “சரி உனக்கு டென்ட் கட்ட தெரியுமா”

ம்கும்.. என இடவலமாக தலை அசைத்தாள்

யுகி, “சரி எதாவது தற்காப்பு கலை “

அதற்கும் அதே பதிலையே அளித்தாள்.

பல்லை கடித்தவன் “சரி நாம இப்போ காட்டுக்குள்ள மிருகங்களை படம் எடுக்கும் போது சப்போஸ் ஒரு காட்டு யானை நம்மள பாத்துருச்சு அப்போ அதுகிட்ட இருந்து எப்படி தப்பிப்ப “

நிலா, “அதா நீங்க ஏ கூடவே இருப்பிங்களே நீங்க என்ன சேவ் பண்ணீடுவிங்க” என்று வேகமாக பதில் கூறினாள்.

அவள் பதிலில் மேலும் கோபமுற்றவன் அவளது தலையில் நறுக்கென கொட்டி “மரமண்ட மரமண்ட ஒருவேள யானை என்ன மிதிச்சு கொண்ணுடுச்சு அப்ப என்ன பண்..  “அவனது வார்த்தையில் பதறியவள் அவனது வாயை தன் கைகளால் மூடி அவனது பேச்சிற்கு தடை விதித்தாள்.  சற்று நேரத்தில் கண்ணெல்லாம் கலங்கிவிட்டது.

அவளது கைகளை நிதானமாக எடுத்துவிட்டவனோ “என்ன இம்ப்ரஸ் பண்ண டிரை பண்றியா”

அவன் இப்படி கூறவும் அவனிடம் சண்டை போடவோ முறைக்கவோ முடியவில்லை மாறாக கண்ணீர் தான் அதிகரித்தது.  தன் சூழ்நிலையை எண்ணி தன் மீதே கழிவிரக்கம் ஏற்பட்டது.

அவனுக்கு வருத்தமாக இருந்தது சவாலான காரியம் மேற்கொள்ளும் போது சிறிதேனும் பய உணர்வும் முன்னெச்சரிக்கையும் இருக்க வேண்டும் என்று எண்ணுவான்.  எதற்கும் பயம் கொள்ள கூடாது என்று கூறுபவன் அல்ல. எவ்விடத்தில் பயம் கொள்ள வேண்டுமோ அவ்விடத்தில் பயம் கொள்ள வேண்டும். அப்படி இருந்தால் தான் அதிலிருந்து வெளிவர வேண்டும் என்ற துடிப்பு இருக்கும் என்பது அவனது நம்பிக்கை.

ஒரு சிங்கத்திடம் மாட்டிக் கொண்டோம் எனக்கு பயமே இல்லை என்று வெட்டி வீரம் பேசுவதுவிடுத்து அதனிடம் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என சமார்த்தியமாக செயல்பட வேண்டும். அதுவே அவனது எண்ணம். குருட்டு நம்பிக்கை கூடாது என்பான்.

அப்படி எண்ணுபவன் தன் மனைவியும் அவ்வாறே இருக்க வேண்டும் என எண்ணுகிறான் தன் மனைவி மட்டுமல்ல யாராக இருந்தாலும் பிறர் மீது நம்பிக்கை வைப்பதை விட தன் மீதே வைக்க வேண்டும். ஆனால் தன் மனைவி தன்னை சார்ந்திருப்பது காதல் கொண்ட மனது கணவனாக சந்தோஷம் அடைந்தாலும்,  அவளின் பாதுகாவலனாக தன்னை எண்ணுபவனுக்கு கோபமே உண்டானது.

யுகி, “உடனே அழுது டிராமா பண்ணிரு நிதமும் எல்லாரையும் இப்படி கண்ணீர் வடிச்சுதான ஏமாத்துறா உனக்கு அழுக சொல்லித் தரணுமா என்ன உனக்குனு உருப்படியா எதாவது தெரியுமா தண்டம்.. எதுவுமே தெரியாம என்ன நம்பிக்கையில ஏங்கூட வர ரெடியான”

நிலா,  “உங்களுக்கு நா உங்க கூடவரது புடிக்கலனா சொல்லிருங்க அத விட்டுட்டு எதுக்கு இப்படி தேவை இல்லாத கேள்வியெல்லாம் கேட்டுட்டு என்ன திட்டுறீங்க”

யுகி, “மனைவியின் தைரியமான பேச்சில் மென்புன்னகை தோன்றியது.  அதே சமயம் தான் அவளது பாதுகாப்பு பற்றி கூறினால் தேவை இல்லாதது என்கிறாளே என்று கோபமும் உண்டானது. “

இவன் இவ்வாறாக எண்ணிக் கொண்டிருக்க அவனது அம்மா கண்மணி அறைக்கு வெளியில் இருந்து நிலாவை அழைத்துக் கொண்டிருந்தார்.

கண்களை அழுந்த துடைத்து கொண்டவள் “இதோ வரேன் அத்தை” என்றாள்.

யுகி, “இங்க பாரு எங்க அம்மா முன்னாடி அழுது சீன் போட்ட அவ்வளவு தா என்ன பண்ணுவே தெரியும்ல அக்ரிமெண்ட் நியாபகம் இருக்குல அது படி இன்னைக்கு நடக்கும்”

அவன் கூறிய அனைத்திற்கும் மண்டையை ஆட்டியவளிடம் நெருங்கி தன் கைகுட்டையால் அவள் முகத்தை துடைத்துவிட்டான்.

அவளால் அவனை புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு சமயம் அவனது வார்த்தையால் நெஞ்சை கத்தியால் கீறும் ரணத்தைக் கொடுக்கிறான். மறுசமயம் இதயத்தை மயிலிறகால் வருடும் சுகம் தருகிறான்.

குழம்பிய மனதுடன் அவனை பார்த்து கொண்டே வெளியே சென்றாள்.

இரவு உணவு முடித்து அவன் கூறியது போல் நடந்து கொள்வானோ என்ற பயததோடு அறைக்குள் நுழைந்தவளின் கைகளை பற்றி இழுத்து தன் மடியில் அமர்த்திக் கொண்டான். திமிறியவளின் இடுப்பை மேலும் அழுத்தி தன்னிடமே வைத்துக்கொண்டான்.  அவள் விடுபட முயற்சிக்க முயற்சிக்க பிடி இறுகியது.

யுகி, “அமைதியா உட்காருடி “

தன் முயற்சியை கைவிட்டவள் பார்வையை வேறு புறம் திருப்பி  அமர்ந்தாள்.

யுகி, “என்ன பாருடி “என்றான். அவன் குரலில் இருந்த அழுத்தம் அவனை காண செய்தது.

அவள் தன்னை நோக்கி திரும்பியதும் அவனது முகம் இதுவரை இருந்த இறுக்கம் கலைந்து இலகுவானது.

யுகி, “யாழு நாம போக போற இடத்துல உனக்கோ எனக்கோ எதுவேணா நடக்கலாம். நா உனக்கு எப்பவும் துணையா இருப்பேன். ஆனா நீ உன்னோட பக்கத்துல இருந்து எப்பவும் ஜாக்கிரதையா இருக்கனும். சரியா”

நிலா, “ம்… “

யுகி, “சரி உனக்கு வேண்டிய திங்க்ஸ் எல்லாம் எடுத்து வச்சுக்கிட்டயா “

நிலா, “ம்..  எடுத்து வச்சுட்டேன். “

“செரி கொஞ்ச இரு” என்று கூறியவன் கைகளை எட்டி மறுமுனையில் இருந்த ஒரு பையை எடுத்தான்.

அது சிறிய அளவிலான கேண்ட் பேக் அதனுள் ஒரு டார்ச் லைட் , சில பேட்டரிகள் சிறிய அளவிலான கத்தி , பெப்பர்ஸ் ஸ்பிரே, நாப்கின் ,சிறிய அளவிலான கண்ணாடி, சன் கிளாஸ் என அனைத்தும் அடங்கி இருந்தது.

நாப்கின் எடுத்து வைக்க வேண்டும் என்பதை அவள் கூட மறந்துவிட்டாள்.  ஆனால் அவன் அனைத்தை பற்றியும் யோசிக்கின்றானே என்று ஆச்சரியம் கொண்டது.

சில மணி நேரங்களுக்கு முன்பு அவன் தன்னை எவ்வளவு கேவலமாக பேசினான் என்பதெல்லாம் நினைவில் இல்லை.  அவன்பால் மனம் சரிந்து கொண்டே இருந்தது.

இமைக்க மறந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவனும் அவளை தான் பார்த்து கொண்டிருந்தான். பார்வை வீச்சின் தாக்கத்தால் இதழ்கள் நான்கும் இணைந்து கொண்டது. கைகள் நான்கும் பிண்ணிக் கொண்டது.

இருவரும் ஒருவரை ஒருவர் நேசிக்க ஆரம்பித்துவிட்டனர். ஆனால் ஒப்புக்கொள்ளதான் இருவருக்கும் மனம் வரவில்லை. 

தங்களுக்குள் ஏற்படும் உணர்வு காதலா காமமா என்று அந்த உணர்விற்கு பெயர் கொடுக்க விரும்பவில்லை இருவரும்.

சிறிது நேரத்திற்கு பிறகு அவளைவிட்டு பிரிந்தவன்.  “அம்மா அப்பா காத்துட்டு இருப்பாங்க நமக்காக, மொட்டை மாடில தூங்குறதுக்கான செட்டப்லா பண்ணியாச்சு.  திரும்பி எப்ப வருவோம்னு தெரியாது அதனால இன்னைக்கு நைட் அவங்களோட ஸ்பெண்ட் பண்ணலாம்.”
என்று கூறி அவளை தன் மீதிருந்து கீழே இறக்கிவிட்டான்.

பின் இருவரும் மொட்டை மாடிக்கு சென்றனர். அங்கே இந்திரனும் கண்மணியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருந்தனர்.

இந்திரன், “மணிமா…  அதா உம்புள்ளைக்கு கல்யாணம் ஆகிருச்சுல அவன தனியா அவன் பொண்டாட்டி கூட படுக்க சொல்லு. “

கண்மணி, “எம்புள்ள நாளைக்கு ஊருக்கு போய்ருவான் அவன் என்ன ரொம்ப மிஸ் பண்ணுவான். தனியா படுக்க சொன்ன கவலை படுவான் அதனால அவன் என் பக்கத்துல தா தூங்குவான். “

இந்திரன், “இல்ல நாந்தா உம்பக்கத்தில தூங்குவேன்.”

இவ்வாறாக அவர்கள் இருக்க இருவருக்கும் இடையே வந்து படுத்துக்கொண்டான் யுக்தயன்.

இந்திரன், “டேய் தடியா எழுந்திருச்சு அந்த பக்கம் போடா “

யுகி, “முடியாது நா எங்க அம்மா பக்கத்துளதா தூங்குவேன்” என்று நகர மறுத்தான். சரி கண்மணியின் மறுபுறம் செல்லலாம் என்றால் நிலா வேகமாக வந்து அவ்விடத்தில் படுத்துக்கொண்டாள்.

இந்திரன், “நிலாமா நீயும்மா …”

நிலா, “மாமா நானும் தா அத்தைய மிஸ் பண்ணுவேன் “

இந்திரன், “அதுக்கு… “

நிலா, “நீங்க போய் உங்க புள்ள பக்கத்துல படுத்துக்கோங்க. “

யுகி, “அப்பா..  இங்க வாங்க எனக்கு லெப்ட்டுல நிறைய இடம் இருக்கு பாருங்க”

“தடியா.. ” என்று திட்டிக்கொண்டே அவன் அருகில் வந்து படுத்துக் கொண்டார் இந்திரன்.

தொடரும்…