மீட்டாத வீணை தருகின்ற ராகம் – 31

தன் இருக்கையில் அமர்ந்து இருந்த யுக்தயனிடம் வேலை சம்மந்தமான கோப்புகளை காட்டி சந்தேகங்களை கேட்டு குறித்துக் கொண்டிருந்தாள் சுனேனா. 

வேலை குறித்து பேசிக் கொண்டிருக்க அவன் கைபேசி ஒலித்தது.  அவனது மாமியார் தான் அழைத்து இருந்தார்.

யுகி, “சுனேனா..  நாமா அப்பறம் டிஸ்கஸ் பண்ணுவோம் இப்போ நீங்க போங்க”

சுனேனா, “எஸ் சார்…” என்று கூறியவளோ வெளியே சென்று விட்டாள்.

கைபேசியை உயிர்பித்தவன் “ஹலோ…  அத்தை என்னாச்சு குட்டி என்ன தேடுறானா.” பொதுவாக அவன் மாமியர் அழைப்பது அவனின் மகனின் தேடல் காரணங்களுக்காக மடடுமே.  அதனால் தான் அவன் அழைப்பை ஏற்றதும் அவ்வாறு கூறியது.

கனகா, “ஐயோ அதெல்லாம் இல்ல மாப்பிள்ளை…  இன்னைக்கு மதியம் சாப்பாட்டுக்கு நம்ம வீட்டுக்கு வந்துருங்க…” என்று கூறிவிட்டு அவன் பதில் கூறும் முன் வைத்துவிட்டார்.

எங்கு மேற்கொண்டு பேசிவிட்டால் மருமகன் மறுத்துவிடுவாரோ என்ற பயமே அதற்கு காரணம்.

குழப்ப ரேகைகள் உடன் தனது கைபேசியை வெறித்தான்.

சில மணி நேரத்திற்கு பிறகு சுனேனா அறைக்குள் வந்து அன்றைய நிகழ்ச்சிகளைப் பற்றி கூற வருகிறேன் என்று கூறி அவளை அனுப்பி வைத்தான். பின் சிறிது நேரத்தில் அவள் கூறிச் சென்ற வேலையை கவனிக்க சென்றான்.
………..
மதியம் போல் கிளம்பி தன் மாமியார் வீட்டுக்கு செல்ல சமையல் அறையில் இருந்து வந்த உணவின் சுவையே அவனை வரவேற்றது.

ஹாலில் விளையாடிக் கொண்டிருந்த தயாளன் தந்தையை கண்டதும் ஓடி வந்து கால்களை கட்டிக் கொண்டான்.

மகனை தலைக்கு மேல் தூக்கி போட்டு கேச் பிடித்தான்.  அதில் பிள்ளை அவனோ கலகலவென சிரிக்க அவன் சிரிப்பிற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று தோன்றியது யுக்தயனுக்கு.

அப்படி தோன்றாமல் இருந்தால் தான் அதிசயம்.  எல்லா தந்தையும் அப்படி தானே தன் பிள்ளை எப்பொழுதும் சிரிக்க வேண்டும் என்று தானே எண்ணுவார்கள். 

அப்படி பார்த்தால் சில ஆண்டுகளுக்கு முன் நிலாவின் தந்தை சுரேஷ் கூட தன் மகளின் சிரிப்பிற்காக தானே அனைத்தையும் செய்தது.  என்ன அவர் செய்த காரியம் அவளுக்கு சிரிப்பை பரிசளிப்பதற்கு பதிலாக அழுகையை பரிசளித்துவிட்டது.

பின் அனைவரும் வருகை தர உணவு பறிமாரப்பட்டு அனைவரும் உண்டு முடித்தனர்.

சிறிது நேரம் மகனுடன் விளையாடி விட்டு அலுவலகத்திற்கு செல்ல தயாராகினான்.

செல்ல அனுமதிக்காமல் அடம்பிடித்த மகனிடம் ஏதேதோ காரணம் சொல்லி அறையை விட்டு வெளியே வந்தவன்
ஹாலை தாண்டும் போது சுரேஷின் “மாப்பிள்ளை” என்ற வார்த்தை அவன் நடையை தடை செய்தது.

அதிர்ச்சியுடன் திரும்பியவன் முன் கை கூப்பி நின்றிருந்தார் சுரேஷ்
வேகமாக அவர் கையை தட்டி விட்டவனோ “என்ன மாமா இது சின்னவன் ஏங்கிட்ட போய்… ” என்று பதட்டமாக கூறினான்.

சுரேஷ், “இல்ல மாப்பிள்ளை நா தப்புப் பண்ணிட்டேன். அன்னைக்கே ஆர அமர யோசிச்சு இருந்த இன்னைக்கு நீங்க எல்லாரும் இவ்வளவு கஷ்ட பட்டு இருக்க மாட்டீங்க”

யுகி, “அப்படி இல்ல மாமா நா தான் தப்பு நீங்க எந்தப்பை கண்டிக்க தான செஞ்சிங்க.
எல்லாதையும் மறந்துருவோம் மாமா
பலசு எதுவும் வேண்டாம்.”

சுரேஷ், “புரியுதுங்க மாப்பிள்ளை இனி அத பத்தி பேசுனா மனசுதா காயப்படும் முடிஞ்சது முடிஞ்சதாகவே இருகட்டும். நாளைக்குநாளள் நல்லா இருக்கு மாப்பிள்ளை.  நாளைக்கே நிலாவையும் தயாவையும் கூட்டிட்டு போங்க.”

அந்த நிமிடம் யுக்தயன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
………….

நான்கு வருடங்களுக்கு பிறகு தன் வீட்டிற்கு வரும் மருமகளை ஆரத்தி எடுத்து வரவேற்றார் கண்மணி.

தயா, “பாத்தி….. என்கு…”

கண்மணி, “உனக்கு தான்டா தங்கம்” என்றவர் மூவரையும் அருகில் நிற்க வைத்து ஆரத்தி சுற்றினார்.

இந்திரன் மனது தற்போது தான் நிம்மதி அடைந்தது. மகன் வாழ்வு இனிமேலாவது நன்றாக இருக்கட்டும் என நினைத்தார்.

தினமும் இரவு அவன் அறையில் கேட்கும் அழுகை சத்தத்தில் இவரும் எத்தனையோ இரவுகள் தூக்கத்தை தொலைத்து இருக்கிறாரே.

பெரியவர்கள் அனைவரும் ஹாலில் தயாளன் உடன் விளையாடி கொண்டிருக்க நிலா மகிழ்வுடன் தங்கள் அறை நோக்கி சென்றாள்.

திருமணம் ஆன புதிதில் வெறும் ஒரு வார காலம் மட்டுமே இருந்த அறை அது தற்போது புகைப்படங்களாக அவளது நினைவுகளை தாங்கி இருந்தது.

சுவரை நோக்கி  வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த யுக்தயனை பின்னிருந்து அணைத்தாள்.  அவள் அணைத்த ஒரு நொடி சிலிர்த்து அடங்கினான் யுக்தயன்.

நிலா, “மாமா… ” என்று அழைத்தாள்.

யுகி, “உன்னோட அப்பாவோட மனத்தாங்கல் இப்போ சரியாகிருச்சா யாழு…”

“மாமா…” என்று கூறியவள் அடுத்து பேச தயங்கினாள். தன் கணவன் தன்னை சரியாக புரிந்து கொள்வான் என்ற எண்ணம் அவன் வாய் வழி உதிர்த்த வார்த்தையில்  நிஜமாகி அவளுக்கு சந்தோசத்தை கொடுத்தது.

ஆனால் அந்த சந்தோசம் அடுத்து அவன் கேட்ட கேள்வியில் மறைந்து போனது.

யுகி, “சொல்லு யாழு…..  அதுக்காக என்னோட மனச மொத்தமா ஒடச்சுட்டேல”

அவளால் பேச முடியவில்லை. இருப்பினும் ஏதோ பேச முயற்ச்சிக்க

யுகி, “என்ன யாழு சொல்ல போற அப்படிலா இல்ல மாமானா..  நாழு வருசம் தேவபட்டதுல உனக்கு.  உன்னோட எண்ணத்த தப்பு சொல்லல.  உங்க அப்பா மேலையும் எனக்கு கோபம் இல்ல.

இது தா மாமா காரணம்னு சொல்லி இருந்த மனச ஓரளவுக்கு தேத்தி இருந்து இருப்பேல.
என்ன விட்டு போகமாட்டேனு சத்தியம் பண்ணுனியே யாழு…  ஏ..  அத மீறுன…

எல்லாரும் ஒன்னா இருந்து என்ன விலக்கி வச்சுட்டீங்கள. நா பண்ணுனத நா சரினு சொல்லமாட்டேன்.  ஆனா அன்னிக்கு இருந்த என்னோட சூழ்நிலையில கல்யாணத்தை நிறுத்த எனக்கு வேற வலி தெரியலை. அந்த அக்ரிமண்ட்ட காட்டுனா கல்யாணத்தை நிறுத்திருவனு நினச்சசேன்.

சொல்லப் போனா அன்னைக்கு உன்ன பாத்ததும் புடிச்சு போச்சு எனக்கு.  உன்ன உடனே கல்யாணம் பண்ணிக்க தோனிச்சு.  உங்கிட்ட அக்ரிமண்ட் பத்தி சொன்னா கோப படுவனு நினைச்சேன்.

நீ அப்படி எதுவுமே பண்ணல எனக்கு அது அதிக கோபத்த கொடுத்துச்சு அதனால தான் கல்யாண நாள் அன்னிக்கு ராத்திரி உங்கிட்ட அந்த மாதிரி நடந்துக்கிட்டேன்.

உன்ன ரொம்ப கஷ்டபடுத்திருக்கேன்.  வார்த்தைகளாள காயப்படுத்தி இருக்கேன்.  ஆனா அதுக்கு எனக்கு இவ்ளோ பெரிய தண்டனை அவசியம் இல்லையே யாழு..

எத்தனை நாள் ராத்திரி அழுது இருக்கேன் தெரியுமே.  அம்மாவும் நீயும் எங்கிட்ட பேசி நாழு வருசம் ஆகுது யாழு..

காதலிக்குற உன்ன பக்கத்தில வச்சுக்கிட்டே தூரமா இருக்குறது எவ்ளோ பெரிய நரக வேதனை தெரியுமா.”

அவளுக்கு தெரியாதா என்ன அவளும் அதே வலியை தானே அனுபவித்தாள்.

யுகி, “வெக்கத்த விட்டு ஒன்னு சொல்லவா யாழு..  பல நாள் எம்மனசும் உடம்பும் உன்னோட அருகாமைய தேடும் அப்போலாம் என்னோட உணர்ச்சிய கட்டுப்படுத்த எவ்ளோ போராடி இருக்கேன் தெரியுமா…… இப்ப கூட உன்ன இறுக்க கட்டிக்கனும்னு தோனுது ஆனா முடியலடி.

இந்த நாழு வருசம் நீ பக்கத்துல இருக்கும் போதுலா ‘அவ பக்கத்துல போகாத தள்ளியே இருனு’  எம்மனசுக்குள்ள சொல்லிட்டே இருந்தது இப்பயும் உம்பக்கத்துல போக வேண்டாம்னு சொல்லி தடுக்குது.

நா உன்ன கஷ்டபடுத்த இத சொல்லல யாழு…. இத்தன நாள எம்மனசுக்குள்ள போட்டு புழுகிகிட்டு இருந்தத மனசுவிட்டு சொல்லனும் தோனுச்சு சொல்லிட்டேன்.”

நிலா உடைந்தேவிட்டாள். “மாமா….. பிளீஸ் சாரி.. மாமா..  நா வேனும்னு எதுவும் பண்ணல நா உங்ககிட்ட எம்முடிவ பத்தி முன்னாடியே பேசி இருக்கனும்… சாரி மாமா…” என அவன் கைகளை பற்ற அதனை எடுத்துவிட்டவன் முகத்தை திருப்பினான்.

நிலாவுக்கு உயிரை உழுக்கும் அளவு வலித்தது.  இப்படி தானே இத்தனை நாளும் தான் அவனை ஒதுக்கினோம்.  நான் மட்டுமா எல்லாரும் தானே ஒதுக்கினோம்.  அப்போது அவன் எப்படி வலிகளை சுமந்திருப்பான் என நினைத்து கதறினாள்.

தவறு அவன் மீது தான் என்று அனைவரும் பலி சுமத்தியதால் அனைவரிடமும் சொல்லி விட்டாள் நானும் தான் காரணம்என்று.  அவர் என்னை கட்டாயப்படுத்தி திருமணம் புரியவில்லை.  என்னிடம் தெளிவாக கேட்டார் நான் தான் ஒப்பந்தத்திற்கு முதலில் ஒப்புக் கொண்டேன் என கூறி விட்டாள்.  அதனால் தான் அதன் பிறகு அவனின் காதுகளுக்கு முன்பு இருந்த குத்தல் பேச்சுகள் விலவில்லை.

முகம் திருப்பியவனின் கைகளை பற்றியவளோ  “மாமா…  தப்புதா மாமா…  அதுக்காக என்ன வெறுத்துறாதீங்த பிளீஸ்.”

யுகி, “உன்ன என்னால என்னைக்கும் வெறுக்க முடியாது யாழு…  எனக்கு கொஞ்சம் டைம் வேனும். திடிர்னு   வந்து உணர்ச்சிகளை மாத்திக்கோனு சொன்ன என்னால எப்படி முடியும் யாழு…”  என்று கூறியவன் அறையை விட்டு வெளியேறி விட்டான்.

அவன் சென்றதும் அங்கேயே மடங்கி அமர்ந்து அழுதாள் நிலா..

சிறிது நேரம் வெளியே சென்று வந்த யுகி வீட்டிற்குள் நுழைய “சாப்பிட வா யுகி” என்று அழைத்தார் கண்மணி.  விரக்தி சிரிப்பு ஒன்றை வழங்கிவிட்டு அறைக்கு சென்று கதவை அடைத்துக் கொண்டான்.

புரியாமல் பார்த்து நின்ற கண்மணியிடம் யுக்தயனின் தற்போதைய நிலையை நிலா எடுத்துக் கூற தாயாய் தான் தோற்றுப் போனதை எண்ணி மருகினார். 

அவர் தன் அண்ணன் தன் மகனுடன் பேசி விட்டார் என்பதை அறிந்தவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். தான் பேசாதிருந்தால் தன் மகன் தன் மேல் இருந்த பலியை தவறு என விரைவில் அனைவருக்கும் உணர்த்துவான் என்று அவர் எண்ணினார். 

யுக்தயன் தன் மேல் தவறு இல்லை என்பதை நிறுபிக்க அவர் எடுத்த முறை தவறாக போய்விட்டது.  எப்பொழுதும் எல்லாரின் முடிவுகளும் சரியான பாதையாக அமைவதில்லையே.

தாய் தந்தையர் தன்னை புரிந்து கொள்வர் என்று நினைத்து இருக்க தாயின் செயல் அவன் செய்யாத தப்பை செய்ததாக முத்திரை குத்திவிட்டது போல எண்ணினான்.

தாய் தன்னிடம் பேச வேண்டும் என எண்ணியவன் தற்பொழுது அவரது பேச்சு பெரிதாக படவில்லை.

தொடரும்…..