மீட்டாத வீணை தருகின்ற ராகம் -15

ருத்ரனின் கைகளை கட்டிக்கொண்ட நிலா “அண்ணா உங்க கல்யாணம் ஏற்பாடாகும் போது நா எங்க இருந்தாலும் எனக்கு தெரிவிக்கனும் சரியா”

ருத்ரன், “சரிடாமா”

புரியாமல் நின்றிருந்த யுக்தயனின் அருகில் வந்தவள்

நிலா, “என்னாச்சுங்க தலைவர் என்ன சொன்னாரு “

யுகி, “ஆ…  அது ஒத்துக்கிட்டாரு “

நிலா, “ரொம்ப சந்தோஷங்க “

அதன் பிறகு கூட்டம் கலைந்து அவர் அவர் வேலையை செய்ய தொடங்கினர். நாட்களும் மெதுவாக நகர்ந்தது.  யுக்தயனும் கிராமத்தை சுற்றி உள்ள இடங்களை படம் பிடித்துக் கொண்டான். மேலும் சற்று தொலைவில் உள்ள  அருவிக்கரையை படம் எடுக்க வேண்டும் என்ற தன் விருப்பத்தை தலைவரிடம் கூற அவரோ முற்றிலுமாக கூடாது என்றார்.

சொல்லபோனால் அங்கே படம் எடுப்பதற்கு அவர் அனுமதி தேவையில்லை ஆனாலும் தன் குடும்பத்தாராக அவரை எண்ணியதால் அவரிடம் அனுமதி கேட்டார். ஆனால் அவர் மறுத்துவிட்டார்.

அவர் மறுத்ததுக்கும் யுக்தயன் எண்ணிய அதே காரணமே.  ஆம் நிலாவை தன் சொந்த மகளாக எண்ணியவர் யுக்தயன் மீதும் இந்த குறுகிய காலத்திலேயே அதிகம் பாசம் வைத்துவிட்டார். அதனால்  தான் அருவிக்கரைக்கு செல்ல வேண்டாம் என்கின்றார்.

கிராமத்தலைவர் அவருக்கு தெரியாத அருவிக்கரையில் இருக்கும் ஆபத்து.  ஆம்  காட்டில் பெரும்பாலான  மிருகங்களின் நீர் வாழ்வாதாரமே அந்த அருவிக்கரை தான்  எந்த  நிமிடம் எந்த மிருகம் வரும் என்று எவரும் அறியமாட்டார்கள்.

மருதாணி திருவிழாவிற்கு மருதாணி பறிக்கவும் பெண் பிள்ளைகளின் விசேஷத்தகற்கான மலைத்தேனும் எடுக்க அந்த அருவிக்கரையை கடந்தே செல்ல வேண்டும்.

அக்காட்டில் வாழ்ந்த அவர்களுக்கு அது சாதாரணம். ஆனால் யுக்தயனுக்கும் நிலாவிற்கும் அசாதாரணமாயிற்றே. மேலும் கிராமவாசிகளாளே சில நேரம் சூழ்நிலையை சமாளிக்க தடுமாறி உள்ளனர். மேலும் உயிர் பலியும் ஏற்பட்டுள்ளது. அதனால் தான் ஒப்புக் கொள்ள தயங்கினார்.

ஆனால் யுக்தயன் விடுவதாக இல்லை. தொடர்ந்து அவரிடம் கோரிக்கை வைத்துக் கொண்டே உள்ளான். சாதகமான தீர்பு தான் இன்னும் வந்தபாடில்லை.

இதற்கிடையில் ருத்ரனும் யுக்தயனும் நல்ல நண்பர்கள் ஆகி விட்டனர். ஆனால் நிலாவிடம் தான் இன்னும் முறுக்கிக் கொண்டு திரிகின்றான்.

அவனது பேச்சை கேக்கவில்லை என்பது ஒருபுறம் அவளது திறமை முதலில் தன்னிடம் வெளிப்படவில்லை என்பது ஒருபுறம் என அவளிடம் மொக்கை காரணத்திற்காக முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு திரிகின்றான்.

ஒருவழியாக தலைவரும் அருவிக்கரைக்கு செல்ல ஒப்பக்கொண்டார் ஒரு நிபந்தனையுடன்.
பாதுகாப்பிற்காக ருத்ரனையும் அவசர சிகிச்சைக்காக குழலியையும் உடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்பதே அவர் நிபந்தனை.

மேலும் இரு ஆண்மகன்களுக்கு மத்தியில் நிலாவின் நிலையையும் உணர்ந்து குழலியை அனுப்புவது என்று முடிவு செய்தார் அவர்.  குழலி ஒன்றும் சலைத்தவள் இல்லை ருத்ரனுக்கு இணையாக இல்லாவிடினும் காட்டு மிருகத்திடம் இருந்து தன்னை காத்து கொள்வது எப்படி என்பதை நன்கு கற்று தேர்ந்திருந்தாள்.

இன்னும் ஒரு வாரத்தில் கிளம்புவதாக ஏற்பாடு என்ற நிலையில் கிராம மக்கள் சிலரும் அவர்களுடன் யுக்தயனும் அடிக்கடி கிராமத்தை விட்டு வெளியே சென்று வந்தனர். நாட்களும் நகர்ந்தது.

ருத்ரனின் பாரா முகம் நிலாவை வெகுவாக வாட்டியது. பல முறை முயற்ச்சித்து விட்டாள்.  அவன் சமாதானம் ஆகவில்லை.  அதைவிட முக்கியமாக எதற்காக அவனது கோபம் என்பது கூட நிலாவிற்கு தெரியவில்லை.

நிலாவின் துயரத்திற்கு காரணமானவனோ அவளது செயல்களை வெகுவாக ரசித்தான். அவனது கோபம் எவ்வளவு நாள் நீடிக்கும் சொல்லுங்கள் அதுவும் தன் காதல் மனைவியிடம். 

கோபம் எப்பொழுதோ அவனை விட்டு சென்று விட்டது.  அவள் அவனை சுற்றி சுற்றி வருவது அவனுக்கு ஒருவித போதையை உண்டாக்கியது என்றே கூறலாம். 

போதை தான் நம்மில் சிலர் கூட இதை உணர்ந்திருப்போம் கோபம் இருக்காது ஆனால் நம் பிரியத்திற்கு உரியவர் நம்மை சுற்றி வர வேண்டும் என்பதற்காக கோபத்தை இழுத்து பிடித்து வைத்திருப்போம். அது சில நேரத்தில் நமக்கு சாதகமாக அமையும் சில நேரத்தில் பாதகமாக அமையும்.

யுக்தயனுக்கு பாதகமாக அமைந்தது. சிறிது நாட்கள் பின்னோடு சுற்றி திரிந்த நிலா அதன் பிறகு அவனை கண்டு கொள்ளவில்லை.  அவனது கள்ளத்தனத்தை கண்டு கொண்டாள் என்பதே அதற்கு காரணம். இப்பொழுது கெஞ்சுவது அவன் முறையாயிற்று.

அருவிக்கரையை நோக்கி பயணத்தை தொடங்கியது ஜோடி புறாக்கள்.
நால்வரும் காட்டு வழியே பயணத்தை தொடர்ந்தனர்.  எந்த அருவிக்கரையை நோக்கி ஆவலுடன் புறப்படுகின்றானோ அந்த அருவிக்கரை தன் வாழ்வில் பெறும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அப்பொழுது அவன் அதை அறியவில்லை.

ருத்ரனோடு முன் சென்று கொண்டிருந்தவளை அழைத்தான்

யாழு.. யாழு… 

ம்ஹீம் அவள் கண்டு கொள்வதாக இல்லை. ஒரு இடத்தில் அவன் வேண்டும் என்றே  கீழே அமர்ந்துவிட அவன் உடன் நடந்து வந்த குழலியும் தன் நடையை நிறுத்தினாள்.

குழலி, “என்னாச்சு அண்ணே..  நடக்கமுடியலையா “

யுகி, “அட இல்லமா…”

குழலி, “அப்புறம் “

யுகி, “அங்க பாரு எம்பொண்டாட்டிய நா வரேனா இல்லையானு ஒரு கவலை இல்ல.  அவபாட்டுக்க போறா …”

குழலியிடம் இருந்து சிரிப்பே பதிலாக கிடைத்தது.

யுகி, “இப்போ நீ எதுக்கு சிரிக்குற. “

குழலி, “பின்ன என்ன பண்ண சொல்றீங்க அண்ணே..  இவ்ளோ நாளா நிலா உங்க பின்னாடி சுத்துனா நீங்க தான அவள கண்டும் காணாத மாதிரி இருந்திங்க “

அதற்கு பதில் ஏதும் கூறாமல் பாவமாக முகத்தை வைத்து அமர்ந்திருந்தான்.

குழலி “சரி வாங்க போகலாம்…” என்று முன்னே நடக்க முகத்தை தொங்க போட்டு கொண்டு குழலியின் பின் சென்றான்.

அவர்களை தொடர்ந்து பின் சென்றவர்களின் கண்கள் இரண்டும் பெரிதாக விரிந்தது தங்கள் முன் காட்சியாகியதில்.

“யாழு…. ” என்று கத்தினான்.
அதே நேரம் “சார்…  சார்… ” என்ற  சத்தமும் அதனை தொடர்ந்து கதவை தட்டும் சத்தமும் கேட்டதில் நிழல் உலகில் இருந்து வெளி வந்தான் யுக்தயன்.

சுற்றும் முற்றும் பார்த்தவன் தன் நிலை அறிந்து முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு நிமிர்ந்து அமர்ந்து வெளியே நின்றிருந்த பெண்ணிற்கு அனுமதி அளித்தான்.

எஸ். கம் இன். என்று ஆளுமை நிறைந்த குரலில்.

உள்ளே நுழைந்தவள் அன்றைக்கான மீட்டிங்கை பற்றி அவனிடம் கலந்துரையாடிவிட்டு வெளியே சென்று விட்டாள் .

வெளியே வந்த அந்த பெண்ணை வழி மறைத்தாள் இன்னொரு பெண்

“ஏய் சுனேனா என்ன ஆச்சு இன்னைக்காவது உன்ன திரும்பி பாத்தாரா “

சுனேனா, “இல்லடி நானும் இரண்டு வருசமா என்ன திரும்பி பாப்பாருனு வெயிட் பண்றேன் எங்க…”  என்று பெருமூச்சுவிட்டாள்.

“ஆத்தாடி மூச்செல்லாம் பலமா இருக்கு பாத்துடி… ” என்றாள் ஜனனி அந்த நிறுவனத்தின் ரிசப்சனிஸ்ட். அவளும் தான் முயன்று கொண்டிருக்கிறாள் யுக்தயனின் கடைகண் பார்வைக்கு.

இவர்கள் இவ்வாறாக பேசி கொண்டிருக்க மேனேஜிங் டேரக்டர் என்று போட்டிருந்த அந்த அறை கதவை திறந்து வெளியே வந்தான் யுக்தயன்.

“ஏய் பாய்டி நா என்னோட பிளேஸ் போரேன் ” என்று ஓடிவிட்டாள் ஜனனி.

வேக எட்டுகளில் மீட்டிங் ஹாலை நோக்கி சென்று கொண்டிருந்தவனின் பின் ஓடினாள் சுனேனா.

தொடரும்..