நீள்வதேனடி நின் கதங்கள்(1)…

அழகான காலை வேளையில் கதிரவன் தன் கொடையான வெளிச்சத்தை உலகிற்கு பரப்பிக் கொண்டிருந்தான். இரை தேடும் பறவைகளாக மக்கள் தத்தம் வேலைகளுக்கு புறப்பட்டுக் கொண்டிருந்த அந்த நெரிசலான சாலையில் அந்த விலை உயர்ந்த காரினில் அமர்ந்திருந்தான் தஷகிரிவன். என்ன அத்தான் இன்னும் எவ்வளவு நேரம் தான் இந்த டிராபிக்லையே நேரத்தை போக்குறது ச்சை என்று சளித்துக் கொண்டவனிடம் என்ன தஷி ஐந்து வருசம் வெளிநாட்டுக்குப் போயிட்டு வந்ததால நம்ம ஊரு டிராபிக் உனக்கு கடுப்பா இருக்குதா என்றான் ரகுநந்தன். ஐயோ அப்படி இல்லை அத்தான் என்றவனிடம் சீக்கிரமே வீட்டுக்கு போயிரலாம் என்ற ரகு காரை இயக்கினான்.

அந்த பெரிய பங்களாவின் முன் அந்த பென்ஸ் கார் நின்றிட வாசலில் வந்து நின்றார் தேவகி . தன் அண்ணன் மகனிற்கு ஆரத்தி எடுத்திட என்ன அத்தை இதெல்லாம் நான் என்ன போருக்கா போயிட்டு வரேன் என்ற தஷகிரிவனை முறைத்தவர் உன்னை என்று அவனது காதை திருகி விட்டு உள்ளே வாடா என்றார். வாடா மாப்பிள்ளை என்ற வாசுதேவனிடம் மாமா என்று அவரைக் கட்டிக்கொண்டான்.

என்ன தஷி வந்துட்டியா என்று வந்தார் கதிரேசன். ஆமாம் அப்பா என்ற மகன் தஷகிரிவனைக் கட்டிக் கொண்டவர் உன் அம்மா உனக்காக கோவிலுக்கு போயிருக்காள் என்றார். மாமா என்று ஓடி வந்தாள் ஆறு வயது சிறுமி பிரனிதா. பிரனி குட்டி என்று குழந்தையை கொஞ்சியவன் மாமா வந்துட்டேன்ல இனி மாமா தான் என் செல்லக்குட்டியை ஸ்கூலுக்கு கூட்டிட்டு போவேனாம் என்ற தஷியின் கன்னத்தில் முத்தமிட்ட பிரனிதா குட் மாமா என்றாள்.

அம்மா எந்த கோவிலுக்கு போயிருக்காங்க அத்தான் என்ற தஷியிடம் வடபழநி முருகன் கோவிலுக்குத் தான். நான் பிரனிதாவை ஸ்கூல்ல விட்டுட்டு வரேன் என்ற ரகுநந்தனிடம் ஒரு பைவ் மினிட்ஸ் நானும் வந்துடுறேன் என்றான் தஷி. சரிடா என்ற ரகு தன் மகளை பள்ளிக்கு கிளப்பி விட்டான். பிரனி குட்டி சாப்பிட வா என்று அவளது பாட்டி தேவகி அவளுக்கு உணவை ஊட்டி விட அமைதியாக சாப்பிட்டாள் குழந்தை.

தஷி வரவும் அவனுக்கும் உணவு பரிமாறினார் தேவகி. அத்தை இந்த ஐந்து வருசமா உங்களோட சமையலை ரொம்ப மிஸ் பண்ணுனேன் என்ற தஷகிரிவனிடம் இனிமேல் டெய்லி அத்தையே உனக்கு சமைத்து சாப்பிட வைக்கிறேன் என்றார் தேவகி. ஏன்டா மாப்பிள்ளை எனக்கு இவ்வளவு பெரிய தண்டனையை கொடுக்கிற என்று வாசுதேவன் கூறிட தேவகி அவரை முறைத்தார். மற்ற அனைவரும் சிரித்தனர். சந்தோசமாக சாப்பிட்டு முடித்த பிறகு ரகு, தஷி, பிரனி மூவரும் கிளம்பினர்.

ஜித்து எழுந்திருடா தங்கம் என்ற ரேணுகாவிடம் மம்மி ப்ளீஸ் இன்னும் கொஞ்சநேரம் தூங்கிக்கிறேனே என்றான் நான்கரை வயது சிறுவன் இந்திரஜித். ஸ்கூல் போகனுமே பட்டு என்ற ரேணுகா மகனை கொஞ்சி, கெஞ்சி எழும்ப வைத்து அவனைக் குளிப்பாட்டி உடை மாற்றி விட்டு உணவு ஊட்டி விட்டாள். அவன் சாப்பிட்டு முடித்த பிறகு மம்மி அத்தை எங்கே என்றான். அவள் வண்டிக்கு பெட்ரோல் போட போயிருக்காள் என்ற ரேணுகா ஏன் தங்கம் அத்தை உன்னை திட்டுனாளா என்றாள். இல்லை மம்மி என்ற ஜித்துவிடம் சாரி செல்லம் அத்தைக்கு உடம்பு சரியில்லை. அதான் உன்னை திட்டுறாள் என்று கூறி விட்டு தானும் சாப்பிடும் போது அவள் வீட்டிற்குள் வந்தாள்.

அண்ணி என்று வந்தவளிடம் சாப்பாட்டு தட்டை நீட்டினாள் ரேணுகா. என்ன அண்ணி இட்லியா என்றவளிடம் இட்லிதான் ஷ்ராவி ஒழுங்கா சாப்பிடு என்று கூறிய ரேணுகா சரி நான் ஜித்துவை ஸ்கூல்ல விட்டுட்டு ஆபிஸ் போறேன். நீயும் சாப்பிட்டு லேட் பண்ணாமல் ஸ்கூலுக்கு கிளம்பு என்றாள். சரிங்க அண்ணி என்றவளின் கன்னத்தில் முத்தமிட்ட இந்திரஜித் பாய் அத்தை என்று கூறினான். அவளது கண்கள் லேசாக கலங்கியது. ஆனாலும் அவளது கல் மனமோ குழந்தையை முறைத்து விட்டு உனக்கு எத்தனை முறை சொல்லிருக்கேன் எனக்கு முத்தம் கொடுக்காதேனு என்று கூறிட ஷ்ராவி என்ற ரேணுகாவை பார்த்தவள் தன்னறைக்கு சென்று விட்டாள்.

அறையில் அழகான குடும்பமாக அவளது அப்பா தனசேகரன், அம்மா தனலட்சுமி, அண்ணன் அசோகமித்ரன், அண்ணி ரேணுகா, அவள் பனிரெண்டாம்வகுப்பு மாணவி ஷ்ராவனி என்று அந்த போட்டோவில் இருந்தனர். ஆனால் இன்று அப்பா,அம்மா, அண்ணன் மூவரும் இல்லாமல் அவளும் அவளது அண்ணி ரேணுகாவும் மட்டும் வாழ்கின்றனர். அதை நினைத்தவளின் கண்களில் கண்ணீரை விட தன்னுடைய இந்த நிலைமைக்கு காரணம் ஆன அவனின் மீது கோபம் தான் வந்தது.

அவள் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு தான் பணிபுரியும் பள்ளிக்கு கிளம்பினாள். அவளுக்கு குழந்தைகள் என்றால் ரொம்ப பிடிக்கும் ஆனால் ஏனோ இந்திரஜித் மீது மட்டும் பாசம் துளியும் இல்லை . துளியும் இல்லை என்று சொல்ல முடியாது ஆனாலும் அவன் மீது பாசத்தைக் காட்டிட ஏதோ ஒன்று அவளைத் தடுக்கிறது. அதற்கான காரணம் அவளைத் தவிற யார் அறிவார்.

என்ன ஷ்ராவனி ரொம்ப டல்லா இருக்க என்ற மலர்விழியிடம் ஒன்றும் இல்லை மலர்மிஸ் என்றவள் தன் இடத்தில் அமைதியாக அமர்ந்திருந்தாள்.

கோவிலில் தன் மகனின் பெயரில் அர்ச்சனை செய்து கொண்டிருந்தார் தெய்வானை. கடவுளே என் மகளோட ஆயுசை தான் எடுத்துகிட்ட என் மகனுக்காவது நீண்ட ஆயுளைக் கொடுப்பா என்று வேண்டிக் கொண்டார். அவரது மகனின் ஜாதகத்தில் ஏதோ தோசம் உள்ளதால் அவனுக்கு சீக்கிரம் திருமணம் நடத்திட வேண்டும் என்று ஜோதிடர் கூறி விட்டார். ஆனால் தஷகிரிவனோ ஏனோ தனக்கு திருமணம் வேண்டாம் என்ற முடிவில் உறுதியாக இருக்கிறான். அவனது அந்த முடிவை மாற்றிட இறைவனால் தான் முடியும் என்று தெய்வானை அந்த முருகனை வேண்டிக் கொண்டு இருக்கிறார்.

அம்மா எதற்காக இன்னைக்கு கோவிலுக்கு வந்திருக்கோம் என்ற இந்திரஜித்திடம் உன் அத்தைக்கு மூக்கனாங்கயிறு போடனுமே அதான் சாமிகிட்ட அப்ளிகேசன் போட வந்திருக்கோம் என்றாள் ரேணுகா. அம்மா அத்தை என்ன மாடா என்று சொல்லி சிரித்தான் சிறுவன் இந்தரஜித். ஜித்து கண்ணா அந்த ராட்சசி கிட்ட சொல்லிடாதே உன்னை கடிச்சுருவாள் என்ற ரேணுகா கடவுளே என் ஷ்ராவிக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்கனும் என்று வேண்டிக் கொண்டிருந்தாள்.

அவள் வேண்டி முடித்து கண் திறந்து பார்க்க அருகில் நின்றிருந்த அந்த பெண்மணி மயங்கி சரிய அம்மா என்று பதறியவள் அவரை தன் மடியில் சாய்த்துக் கொள்ள ஜித்து தண்ணி எடு என்றிட குழந்தை தண்ணீர் பாட்டிலை தன் தாயிடம் நீட்டினான். அதை வாங்கிய ரேணுகா தெய்வானையின் முகத்தில் தெளித்து அம்மா என்றிட மெல்ல கண்களைத் திறந்த தெய்வானையை தண்ணீர் பருகிடச் செய்தாள். என்னாச்சுமா என்றவளிடம் ஒன்றும் இல்லைம்மா என்றவர் மெல்ல எழுந்திட அவருக்கு உதவினாள்.

அந்த நேரம் சரியாக கோவிலுக்குள் வந்தனர் ரகுநந்தன், தஷகிரிவன், பிரனிதா மூவரும்.

அம்மா என்னாச்சு என்று வந்த தஷகிரிவனிடம் ஒன்றும் இல்லை லேசான மயக்கம் தான் என்றாள் ரேணுகா. ஆமாம் தஷி எனக்கு ஒன்றும் இல்லை என்ற தெய்வானை ரேணுகாவிடம் ரொம்ப நன்றிம்மா என்றார். பரவாயில்லை அம்மா என்ற ரேணுகாவை பார்த்த ரகுநந்தன் ரேணுகா நீங்களா என்றவன் ரொம்ப தாங்க்ஸ் அத்ரைக்கு உதவி செய்ததற்கு என்றான். பரவாயில்லை சார் என்றவள் கிளம்பிட யாரு அத்தான் அவங்க என்றான் தஷி.
நம்ம ஆபிஸ் ஸ்டாப் என்னோட செகரட்ரி என்ற ரகுநந்தன் அத்தை ஹாஸ்பிடல் போகலாமா என்றிட எனக்கு ஒன்றும் இல்லை ரகு என்றவர் நீ சொன்ன பொண்ணு இவள் தானா ரகு என்றார்.

ஆமாம் அத்தை ஆனால் அந்த பொண்ணுக்கு விருப்பம் இல்லை போல என்றவன் விடுங்க என்றான். என்ன அம்மா என்ற தஷியிடம் உன் அக்காவோட இடத்திற்கு இந்த பொண்ணை வர வைக்க ரகுவுக்கு விருப்பம் என்றார் ரேணுகா. புரியலை அம்மா என்ற தஷியிடம் நம்ம ரகுவுக்கு மறுமணம் பண்ண பொண்ணு பார்த்தோம். அவனோட விருப்பம் அந்த பொண்ணு ஆனால் அவளுக்கு விருப்பம் இல்லை போல என்ற தெய்வானை ரொம்ப நல்ல பொண்ணு ஐந்து நிமிசம் தான் கூட இருந்தாள். எனக்கு நம்ம நிவேதாவே கூட இருக்கிறது போல இருந்துச்சு ரகுவோட தலையெழுத்து எங்கே யார் கூட எழுதி இருக்கோ எல்லாம் அந்த முருகனுக்கு தான் வெளிச்சம் என்றார்.

என்ன தஷி அத்தை கூட வீட்டுக்கு போகலையா நீ என்ற ரகுவிடம் அம்மாவை டிரைவர் அழைச்சுட்டு போவாரு அத்தான் என்றான் தஷி. ஆமாம் அத்தான் அந்த பொண்ணு அவங்க பெயர் என்ன என்றான் தஷி. எந்த பொண்ணு என்ற ரகுவிடம் அம்மாவை கூட என்ற தஷி முடிக்கும் முன்னமே ரேணுகா என்றான் ரகு.

அவங்களை லவ் பண்ணுறிங்களா அத்தான் என்றான் தஷி. லவ் பண்ணுற வயசாடா எனக்கு இப்பவே முப்பத்திஇரண்டு வயசாச்சு என்று சிரித்தான் ரகு. அவங்களும் விடோ அவங்களுக்கு ஒரு பையன் இருக்கான். அது மட்டும் இல்லை அந்த பொண்ணு ரொம்ப நல்லவள். அவளால நம்ம குடும்பம் பிரியாமல் இப்போ மாதிரியே ஒன்னா இருக்கலாம் அவள் கண்டிப்பா நம்ம பிரனிதாவுக்கு ஒரு நல்ல அம்மாவா இருப்பாள்.அது மட்டும் இல்லை ரேணுகாவை கல்யாணம் பண்ணிகிட்டா அப்பா முகத்தையே பார்க்காத அந்த சின்ன பையனுக்கு ஒரு அப்பாவா நான் இருப்பேன் அதனால தான் என்னோட சாய்ஸ் ரேணுகாவா இருந்துச்சு. பட் அவங்களுக்கு ஒரு நாத்தனார் இருக்காங்க அவளுக்காகவும், தன்னோட பையனுக்காகவும் தான் தன்னோட வாழ்க்கைனு சொல்லிட்டாங்க அதான் விட்டுட்டேன் என்றான் ரகு. நிஜமாவே விட்டுட்டிங்களா அத்தான் என்ற தஷியைப் பார்த்து சிரித்த ரகு பிரனியோட ஸ்கூல் வந்திருச்சு என்றான்.

அந்த பள்ளியில் தான் ரேணுகாவின் மகன் இந்திரஜித்தும் படித்தான். அவள் தன் மகனுக்கு முத்தம் கொடுத்து பள்ளிக்குள் விட்டு விட்டு திரும்பிட ரகுநந்தன் தன் மகள் பிரனிதாவை பள்ளிக்குள் அனுப்பி வைத்தான்.

ரேணுகாவைப் பார்த்து நட்பாக புன்னகை புரிந்தான்.அவளும் சிரித்து விட்டு தன் ஸ்கூட்டரில் அலுவலகத்திற்கு சென்றாள். தஷி உன்னை வீட்டில் விடட்டுமா என்ற ரகுவிடம் வேண்டாம் அத்தான் உங்க கூட ஆபிஸ் வரேன் என்றான் தஷி. ஏன்டா என்ற ரகுவிடம் அங்கே தான் எனக்கு இனி நிறைய வேலை இருக்கு என்றான் தஷகிரிவன்…

…..தொடரும்…..