நிறம் மாறும் வானம் -3

நிறம் 3


அன்று கேட்ட வார்த்தைகள்
இன்று இதயத்தை பிழிகின்றன.
காற்றைப் போல வந்தாய்!
கண்ணை விட்டுச் செல்லாமல்
கனவிலும் நுழைந்தாயடி!

நிலவு மேகக்கூட்டத்தினுள் மறைந்து நட்சத்திரங்களுடன் கண்ணாம்பூச்சி விளையாடிக் கொண்டிருந்தது. சென்னையில் உள்ள இர்சாத்தின் வீட்டின் அருகில் தான் அவன் மருத்துவமனையும் அருகில் இருந்தது. அது அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய சிறப்பு மருத்துவமனை.


காரில் மோதிய பெண் தன் கைகளை நீட்டியபடி மயங்கி விழுந்தவுடன் மதுபாலனும், இர்சாத்தும் அப்பெண்ணை காரின் பின்பக்கத்தில் ஏற்றினர். இர்சாத் மதுவின் கையின் மெடிக்கல் கிட்டைக் கொடுத்தவன் “நீ ஃப்ர்ஸ்ட் எய்ட் பன்னு. நான் பாஸ்ட்டா டிரைவ் பன்னுவேன் என்பதால் சீக்கிரம் நம்ம ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போயிடலாம்.”


“சரி மச்சி..சீக்கிரம் போ. நான் பார்க்கிறேன்.”


முதலுதவி செய்து கொண்டே மருத்துவமனையை நோக்கி விரைந்தனர். மருத்துவமனையை நெருங்கும் முன் இர்சாத்


“இவங்கள நார்மல் வார்ட்ல அட்மிட் பன்னலாமா? ஹாஸ்பிட்டல் வேணாம்னு சொல்லுச்சு இந்த பொண்ணு. என்ன பன்னலாம் டா மது?”

“மச்சி வி.வி.ஐ.பி வார்ட்ல கேதரீன் அப்படிங்கற பேர்ல அட்மிட் பன்னு. இந்த பொண்ணுக்கு நான் தான் கார்டியன். அந்த பொண்ணு சேவ் மீ அப்படினு சொன்னப்ப அப்படியே கேட் சொன்ன மாதிரி இருந்தது. இந்த பொண்ணு எதுக்கோ பயந்து தான் கார்ல வந்து விழுந்துட்டாங்க. ஹாஸ்பிட்டல் போக விரும்பலனா ஏதோ காரணம் இருக்கும். பேக்கேட் வழியா உள்ள கொண்டு போகலாம். செக்யூரிட்டி அண்ணாகிட்ட சொல்லிடனும். இந்த விஷயம் வெளில போகக்கூடாது. அவர்கிட்டேயும் என் ரிலேட்டிவ் பொண்ணுனு சொல்லிறலாம்.”


அதன்படியே கேதரீன் என்று தற்போது பெயர் வைக்கப்பட்ட பெண்ணை இர்சாத்தின் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பேக்கேட்டில் கார் நுழைந்தவனுடன் செக்யூரிட்டி செக்யூரிட்டி வந்ததும் சல்யூட் வைத்தார்.
மது அவரைப் பார்த்தவுடன் “அண்ணா நீங்க இன்னும் இந்த சல்யூட் வைக்கறத விடல. சரி பேசண்ட் இருக்காங்க. ஒரு ஸ்ரெட்சர் ரெடி எடுத்துட்டு வாங்க.அதுக்கப்பறம் கார்ல இருக்க பேக்கை இர்சாத் ரூமில் வைங்க.”

அவரிடம் கார் சாவியை இர்சாத் கொடுத்தான்
செக்யூரிட்டியும் அதன் படி செயல்பட கேதரீனை உள்ளே அழைத்துச் சென்றனர். அனைத்து வசதிகளும் கொண்ட மருத்துவ அறைக்கு கேட் அட்மிட் செய்யப்பட்டாள். அவளின் வைட்டலை பரிசோதித்த மது,


“இர்சாத் எம். ஆர். ஐ எடுக்கனும். பீளிடிங்க் குறைவுனாலும் இன்னும் அன்கான்சியஸ் இருக்க. வேற எங்கும் அடிபட்டிருக்கானு தெரியல. கார்த்திகா சிஸ்டர் மட்டும் வரச் சொல்லுடா. நீ இங்க இரு. செக்யூரிட்டி அண்ணா பேக் உன் ரூமில் வைச்சுருப்பாரு. நான் போய் டிரஸ் சேஞ்ச் பன்னிட்டு வந்தறேன்.”


இர்சாத் அந்தப்பெண்ணின் அருகில் நாற்காலியை இழுத்துப்போட்டு அமர்ந்தவன், “ நீ யாரு? எங்க இருந்து வந்தனு தெரியல. ஆனா மதுவோட வாழ்க்கையில் ஏதோ ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவனு தோணுது.” ஆழ்ந்த மயக்கத்தில் உள்ளவளின் முகத்தை பார்த்தவாறு கூறிக்கொண்டிருந்தான்.
கார்த்திகா சிஸ்டர் கேட் ரூமின் கதவை தட்டினார்.


“கம் இன் சிஸ்டர்.” இர்சாத் பதில் கொடுக்க அவரும் உள் நுழைந்தார்.


“சிஸ்டர் வாங்க. இவங்களுக்கு ஸ்கேன் எடுக்கனும். ரெடி பன்னுங்க.”


கார்த்திகாவும் அதன் படியே செய்தனர்.
கார்த்திக் இர்சாத்தின் அறையில் தனது சட்டையைப் பார்த்தான். இரத்தத்துளிகள் அங்காங்கே படிந்திருந்தது. அதை நோக்கியவன் கால தாமதத்தை உணர்ந்து விரைவாக தன்னைச் சுத்தப்படுத்திவிட்டு ஸ்கேன் எடுக்கும் அறைக்குச் சென்றான்.


அதே நேரத்தில் இர்சாத்தும் கார்த்திகாவும் கேத்ரீனை அழைத்து வந்தனர். உள்ளே நுழைந்தவுடன் கார்த்திகா கேட்டை உடைமாற்றும் அறைக்கு ஸ்ரெட்சரில் வைத்து கூட்டிச் சென்றார்.


அங்கு சென்றவர் சில நொடிகளில் அலறிக்கொண்டே வெளியில் ஓடி வந்தார்.

…மாறும்..