சிந்தையில் பதிந்த சித்திரமே – 19 Precap

“உனக்கு இஷ்டம் இல்லைனா வேண்டாம். ஆனா இனி நான் யார்கிட்ட போய் ஹெல்ப் கேட்பதுன்னு தான் தெரியலை. மத்த சில ஃபிரண்ட்ஸ் இருந்தாலும் அவங்களை எல்லாம் கூப்பிட யோசனையா இருக்கு.

யாராவது என் அப்பா காதில் விஷயத்தைப் போட்டுட்டால் அப்புறம் என் லவ்வை மறந்துட வேண்டியது. அவள் இல்லைனா என்னால் வாழவே முடியாது…” என்று சோகமாகச் சொன்னவனை வருத்தமாகப் பார்த்தாள்.

‘அவன் காதல் கைகூட ஒரு சின்னக் கையெழுத்து தானே?’ என்று நினைத்தாள்.

“கவலைப்படாதீங்க அரவிந்த். நான் கையெழுத்து போட வர்றேன். என்னைக்கு வரணும்?”
💠💠
“நிறைய வலிகளை வாங்கிப் பழகி பழகி ஒரு கட்டத்தில் என்னை நானே ஒளிச்சு வச்சுக்கப் பழகிட்டேன். அடுத்தவங்ககிட்ட பழகினால் தானே இந்த வலியும் வேதனையும்?

ஒரு கை தான் இருக்குன்னு வெளியே சொல்ல எனக்கு இருக்குற தைரியம் அதைச் சரியான முறையில் கேட்டுக் கொள்ளும், ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை தான் பல பேருக்கு இல்லை…” என்றான்.