காற்று 8

“ஹௌ டேர் யூ? என்னை என்ன
ஸ்கூல் பையன் நினைச்சீயா? அப்பாவ கூட்டிண்டு வா, ஆட்டு குட்டியா  கூட்டிண்டு வாங்கற, ஏன் என்னலாம் உன் அசிஸ்டெண்ட்டா சேர்த்துக்க மாட்டீங்களா? லாயர் ஆகிட்டா, உன் தலையில்  என்ன கொம்பு முளைச்சிடுமா? அசிஸ்டெண்ட்டா சேர்த்துக்க ரொம்ப தான் பிகு பண்ற?” என எகிறினான்.

“அதான் பிகு பண்றேன் தெரியதுல கிளம்பு, வேற நல்ல லாயரா பார்த்துக்க…” என்றாள் அவளும் அவனுக்கு சலிக்காமல்.

“அந்த வெளகெண்ணா எனக்கு தெரியாது பாரு. உன் கிட்ட அசிஸ்டெண்ட்டா சேர நேக்கு என்ன தலையெழுத்தா? உன்னோட ஹஸ்பண்ட்டாக, என்னென்ன பண்ண வேண்டியதா இருக்கு” உள்ளுக்குள்ளே முனங்கியவன்,

“முடியாது, நான் உன்கிட்ட தான் அசிஸ்டெண்ட்டா சேருவேன்…”

“அப்போ உன் தோப்பனார கூட்டிட்டு வா” அவளும் விடுவதாக இல்லை.

“என்ன நீ சும்மா சும்மா, அவரை  கூட்டிண்டு வாங்கற? அவர் வந்து என்ன பண்ண போறார்?”

“அவருக்கு தான் என்னை பிடிக்காது, இதுல நீ வேற என்கிட்ட அசிஸ்டெண்ட்டா சேரனுங்கற, அவர் பாட்டுக்கு இங்க வந்து கத்திகித்தி விட்டார்ன்னா, எனக்கு செம்மா கோவம் வரும். அது மட்டுமல்ல அவர் பாட்டுக்கு என் மேல உள்ள கோபத்துல சாபம் விட்டார்ன்னா நான் என்ன பண்றது? உங்க தோப்பனார் வாயில வேணும்ன்னா  நீர கண்டா விழுறது போல  போய் சந்தோசமா விழணும்மா? அதுக்கு தான் அவருக்கு இதுல உடன்பாடு இருக்குனு தெரிஞ்சி கிட்டு உன்னை சேர்த்துக்கிறேன். ஓ.கேவா”  எனக் கேட்க, அவனது சிந்தனை எல்லாம் நேற்று நடந்தவைகளில் சென்று விட்டது.

“ம்மா… ம்மா… ம்மா…” என்று கண்ணம்மாவின் முந்தானையை பிடித்துக் கொண்டே அவர் பின்னே சுற்றினான். ” என்ன கண்ணா,  நோக்கு வேணும்? ஏன் என் பின்னாடியே சுத்திண்டு  இருக்க?” கடுப்பாக கேட்டார்.

“மா, உன்கிட்ட ஒன்னு கேட்பேன். நீ பதில் சொல்லு”

“என்ன கேளு?”

“எதுக்கு நிழலிய பார்த்து எல்லாரும் சாக் ஆனிங்க? நிழலிய எப்படி, உங்க எல்லாருக்கும் தெரியும்? நான் இங்க ஒரு தடவ கூட அவளைக் அழைச்சுண்டு வந்ததே இல்லை  அப்றம் எப்படி அவாளை  தெரியும்…?”

“நீ கேனடா போன கொஞ்ச நாளில்லே உன்னை தேடிண்டு அந்தப் பொண்ணு வந்தாள், ஆனா என்ன காரணமோ, உன் தோப்பனார், அவளை உள்ள சேர்க்கல.வாசலிலே திட்டி அனுப்பி வச்சுண்ட்டார். பாவம் அந்த கலையான முகம் வாடி போயிடுது டா…! எனக்கே பார்க்க பாவம்மா இருந்தது.என்னால ஒண்ணும் பண்ண முடியல, ஆனால் இன்னைக்கு உன் தோப்பனாரையே வியக்க வைச்சுட்டா அந்தப் பொண்ணு… ரொம்ப அழகா இருந்தாள் டா…!” என்றார்.

“ஆமா மா,  உன் மருமக ரொம்ப அழகு தான்…” எனத் தனக்குள்ளே கூறிக் கொண்டவனின் எண்ணம் அவள் முக்கத்தில் மையல் கொள்ள, ” கண்ணா … கண்ணா..!”என்றழைக்க, நினைவுக்கு திரும்பியவன், “ஆங் … என்னமா?”

“என்ன டா யோசிக்கற?

“ஆங்.. உனக்கு உண்மை தெரிஞ்சிருக்கும்  நினைச்சு கேட்க வந்தேன்… விடு நான் அண்ணா கிட்ட கேட்டுகறேன்…” என்று அவன் செல்ல, தோளை குலுக்கி விட்டு சென்றுவிட்டார்.

“அண்ணா…!” எனக் கூவிக் கொண்டு மாடிக்கு விரைந்தான்.சங்கரனோ வெண்ணிலாவுடன் அந்தப் பொழுதை செலவழித்து கொண்டிருந்தான்… இருவரும் கைகள் கோர்த்து வண்ணம் பேசிக் கொண்டு இருந்தனர்… அதை ரசித்தவன்,  தன்னையும் நிழலியையும் வைத்து பார்த்து சிறு  முறுவல் வந்தது… அவர்களை தொந்தரவு செய்யாமல் கீழ இறங்க என்ன அதற்குள் சங்கரன் அவனைப் பார்த்து விட சாகரனை அழைத்தான், ” கண்ணா… வந்துண்டு ஏன் போற? வாடா…!”

“இல்ல நீயும் அண்ணியும்  ரொமானஸ் பண்ணிட்டு இருந்தீங்க, எதுக்கு உங்களை டிஸ்டர்ப் செய்துட்டு தான் … ” எனவும் இருவரும் அழகாய் வெட்கப்பட்டனர்.

“அதெல்லாம் இல்ல கண்ணா,  நீ சொல்லு என்ன விஷயம் ?”

“இல்லண்ணா இன்னைக்கு  நிழலிய பார்த்ததும் எதுக்கு நீ சாக் ஆன? உனக்கு 
அவளை  முன்னாடியே தெரியுமா? அப்பா ஏன் அவள, திட்டி அனுப்பினார்…?” எனக் கேட்கவும் சங்கரனும் தன் அன்னை பாடிய பல்லவியை பாட, கடுப்பானான்.

“மன்னி நோக்காது தெரியுமா?
” பாவம் போல கேட்க, ” அது வந்து கண்ணா, ஆறுவருசத்துக்கு  முன்னாடி நடந்தது நேக்கு எப்படி ஞாபகம் இருக்கும்..?” தலையை சொறிய, “ஆஆ..  நீங்க  மன்னி இல்ல மங்குனி” என்று கடிந்து விட்டு எழுந்தவனை நிறுத்தினான் சங்கரன்” டேய் நில்லுடா, எதுக்கு  இதெல்லாம்  கேட்டுண்டு இருக்க?”

“என்ன அண்ணா, என் பிரண்ட்  என்னை தேடி வந்துருக்கா, அவளை அப்பா திட்டி அனுப்பி வச்சிருக்கார் காரணம் தெரிஞ்சிக்க வேணாமா? யாரும் என்கிட்ட இத பத்தி சொல்லவும் இல்ல. சரி உங்களுக்காது தெரிஞ்சுருக்கும் நினைச்சா,  நீங்களும் தெரியாது சொல்றீங்க, எதுக்கு கோபப்பட்டார் னு தெரிஞ்சக்க வேணாமா? ” சிடுசிடுத்தான்.

“சரி கண்ணா, அந்த பொண்ணுக்கு தெரிஞ்சுருக்குமே அவா கிட்ட கேட்டீங்களா?”

“இல்ல மன்னி, இதை கேட்டு அவ மனச கஷ்டபடுத்த விரும்பல…” எனச் சொல்லி விட்டுச் சென்றவனை விசித்திரமாக பார்த்தனர் இருவரும்.

கீழ இறங்கியவனுக்கு இருப்பு கொள்ள வில்லை… “எப்படி தெரிஞ்சுக்க ? இதெல்லாம் குடும்பம் தானா?எதுக்கு அப்பா கோபப்பட்டார்னு கூடவா  தெரிஞ்சு வச்சுக்க கூடாது?  படுத்துறானுங்க…  பேசாம  சாட்சிக்காரன் கால விழுகற விட்டுட்டு சண்டைக்காரன் கால விழுக வேண்டியது தான்… எங்க ஏன் அப்பா காலு…?” எனக் அவரது வரவை எதிர்பார்க்க, அவரும் வந்து சேர்ந்தார். ஆனால் அவரோடு சேதுராமன் வர,

“போச்சு… போச்சு இவரு வேற வந்திருக்காரா, இவருக்கு இருக்கும் போது, கேட்டால், என்னமோ இவர் பொண்ணுக்கே நான் துரோகம் பண்ணது போல பேசுவார்,  பேசாம அறைக்கு நடைய கட்டுவோம்…” நகர இருந்தவனை  பிடித்துக் கொண்டார்.

“சாகரா…!”

“மாமா…!” என்று நின்றான்.

“என்ன நான் வந்திருக்கேன் பேசாம போறேள்…!”

“இல்ல மாமா, இப்ப தான் என் ரூம்ல இருந்து கீழ வந்தேன், ஃபேன்
ஆப்  பண்ணினேன்னா டவுட் அதான்  திரும்ப ரூம்முக்கே போனேன்” என்று விளக்கம் கொடுத்தான்.

“அட, அது கிடக்கது, நீர் இப்படி வந்து உட்காருமோய்…” என்றார்.

“சாகரா, இந்த சேதுராமன் உன்னை சேதுவா மாத்த போறார் நீ செத்தடா அம்பி” என்றவன் அவர் பக்கத்தில் அமர்ந்தான். அதற்குள் வெண்ணிலாவும் சங்கரனும் இறங்கி வந்தனர். குசலம் விசாரித்து அடுப்பங்கறைக்கு அவள் செல்லவும், இவன் சாகரன் பக்கத்தில் வந்தமர்ந்தான்.

“இல்ல சாகரா, நீ வந்தும் நாளாகுது, அடுத்து என்ன பண்ணலாம் இருக்கே?” வருங்கால மாமனாராக  கேட்க,

‘அதானே! இவருக்கு இவர் கவலை’ என எண்ணியவன், தனது திட்டத்தைச் செயல் படுத்த தொடங்கினான்.

“அது மாமா… நான் இன்டென்ஷிப் பண்ணலாம் இருக்கேன் லாயர் ஆக…!” என்றதும் அவருக்கு புரிய வில்லை ஆனால் சங்கரனுக்கும் வரதராஜனுக்கு புரிந்து விட அதிர்ந்தனர்.

“என்னடா அம்பி சொல்லுற நேக்கு புரியல? “

“அதாவது மாமா, நான் வக்கீல் ஆகலாம் இருக்கேன்… வக்கீல் ஆகனும் ன்னா, ஐந்து வருசம் ஒரு வக்கீல் கிட்ட அசிஸ்டெண்ட்டா இருந்துட்டு அதுக்கு அப்றம் பார் கவுன்சில்  ரெஜிஸ்டர் பண்ணின போதும் நானும் லாயர் தான்.

“ஏன்டா அம்பி, நீ இன்ஜினீயர் தானே…? இப்போ என்ன வக்கீலாகனும் சொல்லிட்டு இருக்க?”

“மாமா, எனக்கு லாயர் ஆகணும் ஆசை சின்ன வயசுல இருந்தே  இருக்கு மாமா, ஆனால் அதை நிறைவேத்த இப்போ தான் நேரம் வந்திருக்கு. அதான்  நாளைக்கே ஒரு வக்கீல் கிட்ட அசிஸ்டெண்ட்டாக சேரலாம் இருக்கேன் …!” என்றான் .

“என்ன சொல்ற  கண்ணா நீ?  இஞ்ஜீனியரிங் படிச்சிட்டு, இஞ்ஜீனியரிங் வேலையும் பார்த்துண்டு இப்போ வந்து வக்கீல் ஆகணும் ஆசங்கறேள். ஏன் இஞ்ஜீனியர் வேலைக்கு என்ன?” சங்கரன் கேட்க, ” இந்த வேலைக்கு என்ன ஒண்ணுமில்ல தான். ஆனால் மனசுக்கு பிடிச்சவேலை லாயர் தானே அண்ணா! அதான் லாயரா ஆக முடிவு பண்ணிட்டேன்.

“சரிடா அம்பி, ஆனா, வயசு போயிண்டு இருக்கே, இனி மேல் இதெல்லாம் செய்து, நீ லாயராக வயசு  ஏறிடும், செட்டிலாக யோசிப்பீயா? அதை விட்டு மனசுக்குப் பிடிச்சிருக்கு மல்லிக்கு பிடிச்சிருக்கு பேசுறேள்…!”தன் மகளை நினைத்து சுயநலமாக  கேட்டார் சேதுராமன்.

அவனுக்கு கோபம் தான் வந்தது ‘ பெத்த தந்தையும் கூட பொறந்தவனும் ஒன்னும் சொல்லாமல் இருக்கா, இருவருக்கு என்ன..? பொண்ண கட்டிக்கொடுக்கல, அதுக்குள்ள பேச்ச பாரு…’ அவரை அர்ச்சித்தான்.

“மனசுக்கு பிடிச்சதை செய்ய,  வயசு தேவை இல்லை மாமா. கேனாடாக்கு போய் ஆறு வருசமா அத தானே பண்ணிண்டு இருந்தேன். மனசுல ஒரு சந்தோசம் இல்ல.. ஆனால் இப்போ எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் பிடித்த வேலை செய்யும் போது சந்தோஷமாவும் இருக்கும்  நேரமும்  சீக்கிரமா ஓடிடும், நானும் லாயரா ஆகிடுவேன்.

“இல்ல டா அம்பி, லாயர் வேலைக்கு  என்ன கிடைச்சிட போது? இன்ஜீனியர்ன்னா மாசம் மாசமா இவ்வளவு சம்பளம் இருக்கலாம் … ஆனா, இதுல என்ன கிடைக்க போகுது, கேஸ் வந்தால் தானே கேஷ் பார்க்க முடியும் அம்பி!” விடாது பேசிக் கொண்டிருக்க, அவனோ கடுப்பானான் ,

‘சாகரா, இதுக்கு மேல பேசாத, உன் மனசையும் மாத்திடுவார், அமைதியா இரு…! ‘ தனக்குள்ளே சொல்லிக் கொண்டவன் வாய்க்கு ஜிப் போட்டு விட்டான்.

“என்ன டா அம்பி அமைதியாகிட்ட?”

‘உண்ட எல்லாம் மனுசன் பேசுவானானு தான் …!’ என எண்ணியவன்,  நாகரிகம் கருத்தி சிரித்தவன்,  மீண்டும் அமைதியாக நின்று போராடினான்.. அவருக்கு தான் அவனை பற்றி  முழுதாக தெரியாதல்லவா, மற்ற இருவருக்கும் அவனது செயலின் அர்த்தம் புரிந்திட, உள்ளுக்குள்ளே சிரித்து கொண்டனர்.

“என்னடா அம்பி, பேசிண்டு இருக்கேன் சிரிக்கற?” எனக் கேட்டவருக்கு உள்ளுக்குள் அத்தனை எரிச்சல்… அவர் சொன்னதும் இவனும் பூம் பூம் மாடாக தலையை ஆட்டனும் என எண்ணினார், அதெல்லாம் சாகாரனிடம் ஆகுமா? இது போல தான் சில பெருசுகள் அடுத்தவர்களின் வாழ்க்கையில் தன் முடிவை திணிக்க எண்ணி மூக்கு உடைந்தாலும் திருந்தா ஜென்மங்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்.

“சேதுராமா, விடு… அவனை நான் தான் கம்பெல் பண்ணி கேனாடா அனுப்பி வச்சேன்… அவன் வாழ்க்கை, அவன் பிடிச்சத செய்யட்டுமே,  என்புள்ள கண்டிப்பா ஒரு நல்ல லாயரா வருவான்…” மகனுக்கு ஆதரவானார்.

“தேங்க்ஸ் ப்பா…!” என்றான் மனம் குளிர,

“யார் கிட்ட அசிஸ்டெண்ட்டா ஜாயின் பண்ண போற…?” எனக் கேட்க, ‘ கண்டிப்பா இந்த விஷயத்துல பொய் சொல்லித்தான் ஆகணும், இல்ல நம்ம அப்பா,  எதிரணி கூட சேர  வாய்ப்புகள் அதிகமே இருக்கு… பொய் சொல்லுடா சாகரா…!”

“கார்த்திகேயன் சார் கிட்ட தான் ப்பா…”என்றான். அவர் அதற்கு ஒன்னும் சொல்லவில்லை தலையை மட்டும் அசைத்து தன் சம்மதத்தை சொன்னார். சேதுராமன் கிளம்பி விட, இதான் நேரம் என்று அவனும் அவரிடம் கேட்டான்.

“அப்பா, நிழலி என் பிரண்டுனு உங்களுக்கு முன்னாடியே தெரியுமா? ஏன் அப்பா அவளை திட்டி அனுப்புனீங்க?” மன தைரியத்தை கொண்டு வந்து கேட்க,

“அவா, உன் கிட்ட எதுவும் சொல்லலையா?”

“இல்ல…” என்றான்.

“அவாள, ஒரு நாள் ஒரு பையானோடு பார்த்தேன் …  அந்தப் பையன் ரோட்ல போறோம் எண்ணமே இல்லாம பறக்கறான்.இந்த பொண்ணும் பின்னாடி அவனை கட்டிபிடிச்சுண்டு கத்திக் கொண்டு போச்சு, எனக்கு அந்தப் பொண்ண பிடிக்கல, இதுல உன்னை தேடி வேற வந்தாள். அதான் திட்டி அனுப்பிட்டேன். நான் சொன்ன ஒரு சொல்லுக்காக, இத்தனை வருஷம் கழிச்சும்  அந்த வார்த்தைய மதித்து நின்னாள். அவளை என்னால் புருஞ்சிக்க முடியல,”என்றார்.

‘சீக்கிரமா, உங்க மருமகள நீங்க புரிஞ்சுப்பீங்கப்பா உங்களுக்கு  அவளை பிடிக்கும்ப்பா… பிடிக்கவைப்பேன்” என்றவன் சிரித்து கொண்டு நகன்றான். நேற்றைய நினைவில் இருந்தவன்அவளது உலுக்களில் வெளியே வந்தான்.

“யோவ் ஐயங்கார்… இங்க உட்கார்ந்துட்டு நீ எந்த லோகத்துக்கு போன…?”

“எந்த லோகத்துக்கும் போகல, முடிவா என்ன சொல்ற நீ?”

“முடிவை தானே சொல்லிட்டேனே…!”

“பச் …நிழலி”என்னும் போதே அங்கே வந்தாள் அர்ச்சனா. ” குட் மார்னிங்  மேடம்” என்றவள் பக்கத்தில் அமர்ந்திருந்தவனை பார்த்து, ” மேம் க்ளைண்டா ?” ஆர்வமாக கேட்க,

“சாரி மிஸ்… நான் இவங்க புது அசிஸ்டெண்ட்… ” என்றான். அவளோ பெரிதாக விழியை விரித்தவள் பதறியவள், ” மேம் அப்போ நானு?”

“உன்னை வேலை விட்டு தூக்கியாச்சு… நீ வேற நல்ல வக்கீலா பாரு…” என்றான் அமர்த்தலாக, “மேம், எனக்கு மேரேஜ் முடியற வரைக்கும் கூட இருன்னு சொன்னீங்க, இப்போ ஏன் மேம் மனசு மாறுனீங்க? அதுவும் அதுக்குள்ள வேற ஆள் அசிஸ்டெண்ட்டா சேர்த்துட்டீங்க நான் என்ன மேம் பண்ணினேன்?”

“ஓ… உனக்கு மேரேஜா? கங்கிராட்ஸ்” எனக் கையை நீட்ட, தட்டிவிட்டவள், ”  பதில் சொல்லுங்க மேம்…” அழுவது போல கேட்டாள்.

“ஹேய் அர்ச்சு, அவன நான்  அசிஸ்டெண்டா இன்னும் நான் ஆக்ஸபட் பண்ணல, அவன் உன் கிட்ட விளையடுறான்… பீல் பண்ணாத” என்றவள்,” சாகரா, முதல்ல நீ கிளம்பு, ஒர்க் நேரத்துல எங்களை டிஸ்டர்ப் பண்ணாத” என்றவளை ஏற இறங்க பார்த்தவன் சுத்தி பார்த்து விட்டு, “ஆமா, அப்படியே மேடமுக்கு வரிசையில் ஆள் நிக்கறாங்க, நாங்க வந்து உங்களை டிஸ்டர்ப் பண்றோம்… ” கேலி செய்ய இருவரும் முறைத்தனர்.

“இங்க பாரு முடிவா… “என ஆரம்பிக்க, அங்கே பெரியவர் வந்து நின்றார்.

“அம்மா, இங்க நிழலிங்கறது…?” என இழுத்தார்.

“நான் தான் சொல்லுங்கய்யா என்ன வேணும்? ” எனவும் அவர் ஒரு கடிதத்தை  நீட்டினார்.

அவளும் வாங்கிப் படித்தவள், புருவம் சுருங்க நின்றாள். சாகரனும்  வாங்கி படித்தான். இருவரும் பார்த்துக் கொண்டனர்.

“ஐயா,  எனக்கு ரெண்டு நாள் டைம் தரிங்களா யோசித்து நல்ல முடிவா சொல்றேன்.

அவரோ தயங்கி பின், ” சரிம்மா, ஆனா உங்கள விட்டா எங்களுக்கு யாருமில்லமா? சீக்கிரமா, நல்ல முடிவா சொல்லுங்க” என்றார்.

உங்க அட்ரஸ் போன் நம்பர் கொடுத்துட்டு போங்க, இது என் கார்ட் இதுல என் நம்பர் இருக்கு கால் பண்ணுங்க”என்றாள்.
அவரும் எழுந்து சென்று விட, யோசனை ஆழ்ந்தாள்.

சாகரன் அமைதியாக, நின்றான், அவனிடம் வந்த அர்ச்சனா, அவனை ஏற இறங்க பார்த்தவள்.
“உங்கள பார்த்தால் அசிஸ்டெண்ட்டா சேர வந்தது போல தெரிலயே!”

“யா யூ ஆர் ரைட்.  நான் அசிஸ்டெண்ட்டா சேர வரல…”என்றான். அவனைக் கேள்வியாகப் பார்த்தாள், ” ஹஸ்பண்ட்டாக சேர வந்திருக்கேன்” அவளுக்கு சாக்கை கொடுத்து விட்டு நிழலியின் அருகில் சென்று அமர்ந்துக் கொண்டான். அவளோ  ஆ- வென வாயை பிளந்தாள்.