காற்று 6

வியப்பில்
வீழ்த்தி
என்னை
மீட்டெடுக்கிறாய்
என்

விந்தையானவளே…!

” யாரையும் தேடி இந்த ஆத்துக்கு வராதீங்கோ… நீங்க தேடி வரவா இங்க இருக்க மாட்டா! தயவு செய்து இங்க இருந்து போயிடுங்கோ.  இந்த ஆத்து படிய என்னைக்கும் மிதிக்காதீங்கோ” அவர் கும்பிட்டு, சொன்ன வார்த்தை  இன்னமும் காதில் ஒலித்துக் கொண்டிருக்க, அவர் வீட்டு படியை மிதிக்க எப்படித் தான் மனம் வரும். உடலை இறுக்கிக் கொண்டு நின்றாள். ‘

“இந்த ஆத்து படிய மிதிக்காதீங்கோ” என்று முகத்தில் அடித்தாற் போல் சொன்ன பின்பு  எந்த முகத்தை வைத்துக் கொண்ட உள்ளே செல்வது. ‘இதற்கு தான் வீட்டிற்கு வர மாட்டேன்’ என்றும் சொன்னாள்.

உள்ளிலிருந்து வந்த சாகரன்,

“வா நிழலி, ஏன் இங்கயே நின்னுட்ட?” அவளை அழைக்க, சாரதியும் ” உள்ள வாங்க சிஸ்டர்” என்றான்.

“சாகரா, இங்க எதுவும் மண்டபம் இருக்கா, அங்க உட்காந்து பேசலாமா? மண்டபம்  எங்க இருக்கு சொல்லு நானே அவங்க கிட்ட பேசுறேன் …!” எனவும் கோபத்தில் பற்களை ஏகத்துக்கும் கடித்தவன், “வாசல் வரை வந்துட்ட, வீட்டுக்குள்ள வர என்ன? ரொம்ப பண்றடீ நீ. ஏன்

எங்க வீடு சின்னதா இருக்குனு நினைக்கறீயா? எங்க வீடு சின்னது தான், ஆனா, இங்க இருக்கறவா மனசு  ரொம்ப பெருசு… நீ வந்தால் உன்னை தாராளாம கவனிப்பாங்க… உள்ள வா டீ”  பொறுமை இழந்து பேச, ஒரு கசந்த முறுவல் அவளிடத்தில்.

“சாகரா, செத்த சும்மா இருடா!  ஏன் சிஸ்டர் உள்ள வர மாட்டீகிறீங்க? எங்க வீட்டுக்கு வந்தவங்க கிட்ட ஆச்சாரம் பார்க்க மாட்டோம் நீங்க வாங்க” மீண்டும் அழைக்க அவள் அசைந்த பாடு இல்லை.

‘இதான் சான்ஸ் உன்னை எங்க வீட்டுல இருக்க, எல்லாரோட மனசுல உட்கார வைக்கலாம் நினைச்ச, உள்ள வர மாட்டேன்னு, அதுல கட்டைய போடற டீ நீ. உள்ள இருக்கற வா என்ன நினைப்பா…?’  என எண்ணியவன் பின்னந்தலையை கோதி, கோபத்தை அடக்க முயன்றான்.

“வாசல் வரை வந்திட்டு என்ன

டீ வீம்பு

உனக்கு? இப்ப நீ வரல, உன்னை  தூக்கிட்டு போவேன் டீ” என உணர்ச்சி வசத்தில் பேச, அவளோ விழிகள்  தெறிக்க விழித்தாள். ” சாகரா என்ன பேசுற நீ?” சாரதி அவனை  அடக்கினான்.

” உண்மைய தான் சொல்றேன் அத்தி…! உள்ள என்னான்னு என்கிட்ட கேட்டால் இவ காலுல சுளுக்குனு சொல்லிக்கறேன் இவ இப்போ வரல நான் தூக்க தான் போறேன். ஏ உள்ள வா டீ…!” என்று அதட்ட,

“உள்ள வர முடியாதுடா.  எங்க தூக்கு டா பார்ப்போம் …?” அவளும் திமிராக எகிறிக் கொண்டு வர, ” ஓ உனக்கு மட்டும் தான் தில்லும் திமிரும் இருக்குனு நினைப்பா, எனக்கும் இருக்கு டீ பார்க்கறீயா” என்று வெட்டியை மடித்து கட்டினான்.

“அதையும் தான் பார்க்கலாம் டா ” அவளும் சேலையை இழுத்து சொருக, ‘ ஐயோ, இதுங்க இங்க வந்தும் சண்ட போட்டு தொலையிதுங்களே, உள்ள இருக்கறவா என்னை என்ன நினைப்பா? இதுங்களுக்கு  காலம் முழுக்க ரெஃபிரீய வேலை பார்க்கனும் போலயே… கண்ணா, என்னை காப்பாத்து’   என்று மேலே கையை உயரத்தி வேண்டிட, சங்கரன் வந்தவன்,

” வந்தவாள வெளிய நிக்க வச்சா  பேசுறது, என்ன பழக்கம்  இது கண்ணா?” என்று வந்தவன் நிழலியைக்  கண்டு வாயடைத்து போனான்.

அவன் வந்ததும் வேட்டியை கீழே இறக்கி விட, அவளை புடவை சரி செய்து நின்றாள்.

” இ… இவ …இவங்க…”  என வாய் தம்பட்டம் அடிக்க, ” இவங்க தான் நாங்க பேசினா வக்கீல். சாகரன் பிரண்ட் அத்திம்பேர் ” என்றான்.

நிழலி சங்கரனை பார்த்து வணக்கம் வைக்க, அவனுக்கு தான் தர்ம சங்கட்டமாக போனது… ” உள்ள வாமா” சுரத்தே இல்லாமல் அழைக்கவும்,

“உங்க தோப்பனார்,  நான் உள்ள வர பெர்மிஷன் குடுத்துட்டாரா?”  எனக் கேட்க, சங்கரன் தலை குனிந்தான். சாரதியும் சாகரனும் பார்த்து கொள்ள, அதற்குள் வரதராஜனும் வந்து விட்டார். நிழலியை கண்டு அதிர்ந்தவர், அவளை தன் வீட்டுவாசலில் எதிர்பார்க்க வில்லை. ஆறுவருடம் கடந்தே அவளை பார்க்கிறார்.

போன முறை கண்களில் நீருடன் நின்றவள், இன்று திமிரோடு நின்றாள். செருக்குடன்  நின்றவளை ஏறெடுத்து பார்க்க தைரியம் இல்லை.

சொன்ன ஒரு வார்த்தைக்காக வீட்டு படியை மிதிக்காமல் வாசலில் நிற்கும் அவளை அவரது மனசாட்சி மெச்சிக் கொண்டது.

அவளது பார்வை அவரை துளைக்க, வேறு வழியின்றி உள்ளே அழைத்தார்.

“உள்ள வாங்கோ…!”  எங்கோ பார்த்து சொல்ல, ” ரொம்ப நன்றி சார்…!” அவரை  வணங்கி விட்டு தன் முதல் பாதத்தை எடுத்து வைத்தாள் நிழலி.

எல்லாருமே உள்ளே செல்ல, சாகரனும் சாரதியும் ‘எதற்கு இந்த வீட்டில் தண்டமாய் இருக்கிறோம்? ‘  என்பது போல பார்த்து கொண்டனர்.

“சாகரா, இதுக்கு முன்னாடி, நிழலியை நம்மாத்துக்கு அழைச்சுண்டு   வந்துருக்கியா?”

“இல்லை, அத்தி அழைச்சுண்டு வந்தது இல்லை…” குழப்பமாக சொன்னான்.

” அப்றம் எப்படி எல்லாரும் தெரிஞ்ச மாதிரியே ரியாக்ஷன் கொடுக்கறா?”

“அதான் நேக்கும் புரியல அத்தி! வாங்கோ உள்ள போய் என்ன நடக்கதுனு பார்ப்போம்…” இருவரும் உள்ளே வந்தனர்.

உள்ளே வந்தவளுக்கு வெண்ணிலா வந்து தண்ணீர் கொடுக்க, புன்னகைத்தவள் வாங்கி பருகினாள். பின் கண்ணம்மா பூவும் குங்குமமும் கொடுக்க வாங்கி வைத்துக்கொண்டாள்.

அவளுக்கு நாற்காலி போட, “இல்ல, நான் தரையில் உக்காந்துகிறேன். பெரியவங்க அதுல உக்காரட்டும் என்றவள் தரையில் அமர, கண்ணம்மாவின் உதடுகள் லேசாக  புன்னகையில் விருந்தன.

பின் அனைவருமே தரையில் அமர்ந்தனர். அவள் கேட்ட விவரங்களை எல்லாம் சங்கரன் கொடுக்க, அதை எல்லாம் சரி பார்த்தாள். இன்னும் ரெங்கராஜன் வராததால் முன்கூட்டியே பேச ஆரம்பித்தாள்.

“ரெண்டு நிலமும் ரொம்ப பக்கத்துல இருக்கு.போதாத குறைக்கு ரெண்டு   நிலத்தோட உரிமையாளர் பேரும் ரெங்கநாயகி இருக்கறதுனால தான்,  ஒரே நிலம் எண்ணி நெனச்சு ஒரே பட்டாவா போட்டிருக்காங்க.

அத மாத்தி இரண்டு பட்டாவா போடுங்க. அப்றம் உங்களுக்கு இந்த நிலம் கண்டிப்பா வேணும்ன்னா, அவங்க இதுவரைக்கும் செலுத்தின வரி மொத்தம் இதுல இருக்கு, மேற்கொண்டு நிலத்தை பராமறிக்க வேற செஞ்சுருக்காங்க, அந்த தொகையையும் சேர்த்து கொடுத்திட்டா போதும். இல்ல நிலம் வேணாம் பணம் வேணும்ன்னா  மொத்தமா, இன்னைக்கு தேதிக்கு நிலத்தோட விலை கணிச்சு அவருகே வித்து, கொடுக்க வேண்டிய தொகையை கழிச்சிட்டு பணத்தை வாங்கனும்.  நீங்க என்ன முடிவு பண்றீங்க?”எனக் கேட்க, வரதராஜன் தன் இரு மகன்களை பார்த்தார்.

“அப்பா உங்க முடிவு தான் எங்க முடிவுப்பா.. நீங்க என்ன முடிவு எடுத்தாலும்  எங்களுக்கு சரி

தான்” என்றனர்.

“என் தாய்மாமன் எங்க அம்மாக்கு கொடுத்த நிலம். அதை விக்க எங்களுக்கு மனமில்லை.  ரெங்கா கேக்குற பணத்தை கொடுத்திடுறோம்.. எங்களுக்கு நிலம் வந்தால் போதும்…” என்றார் வரதராஜன்.

“அப்போ பேசி பார்க்கலாம், அப்போசிட் பார்ட்டி ஒத்து வந்தால், இந்தப் பிரச்சனை இங்கயே  முடிச்சிடலாம். இல்லைன்னா  கேஸ் பைல் பண்ணலாம்” என்றாள். அவளது ஒவ்வொரு  அசைவையும் பார்த்து கொண்டு தான் இருந்தார். நேர்த்தியாக திறம்பட  பேசவும்… செருக்கு இருந்தாலும் தகுந்த நேரத்தில் கடைப்பிடிப்பதையும் கண்டு வியந்தார்.

ரெங்கராஜானும் வந்து விட, அவரிடம்  வரதராஜனின் முடிவைச் சொன்னாள்  முதலில்  ஒத்துக்கொள்ள வில்லை. “கோர்ட்டில் பார்க்கலாம்” என்றார், உடன் வந்த வழக்கறிஞரின் பேச்சை கேட்டு. அந்த வழக்கறிஞரும் அவளை ஏளனமாக பார்த்தார். அதை மற்றவர்களும் பார்த்தனர். சாகரனுக்கு கோபம் வந்தது சாரதி அவனை அடக்கினான்.

” இங்க பாருங்க சார். பேசி நமக்குள்ளே  முடிக்க வேண்டிய விஷயத்தை நீங்க  நாள்கணக்கா, மாதக்கணக்காக வருஷக்கணக்காக  இழுக்க பார்க்கறீங்க,  உடனே தீர்ப்பு கிடைத்தால் பிரச்சனை இல்ல.. ஆனா, தாமதமானால், உங்களுக்கு தான் வீண் அலைச்சல், அதிக பணமும் செலவாகும், வக்கீல் பீஸ் அதிகம்” என்று அவர் அருகிலுள்ளவரை பார்த்து கூறியவள், 

வக்கீல் இல்லாம கூட,  நியாயம் கிடைக்க நீங்களே வாதாடலாம் வக்கீல் ஒருத்தர் வேணும்னு அவசியமே இல்லனு சட்டம் சொல்லுது.

அப்போ நாங்க எதுக்கு இருக்கோம் பார்க்கறீங்களா?  உங்களுக்கு வெறும் யோசனை சொல்ல ,  சட்டம் தெரியாத உங்களுக்கு எடுத்து சொல்லவும் , உங்களுக்கு வேணும்ம்ன்னா வாதாடவும்  தான் நாங்க… ஒரு நல்ல வக்கீலா, பிரச்சனை எப்படி சால்வ் பண்ணணும் தான் நினைப்பாங்க, கோர்ட்டுக்கு வீட்டுக்கும் அலைய விடனும் நினைக்க மாட்டாங்க. ரெண்டு பேரும்  கலந்து பேசி முடிவெடுக்கற விசயத்தை ஏன் கோர்ட்டுக்கு கொண்டு போய் இழுத்து அடிக்கணும்?

நட்டம் எங்களுக்கு இல்லை உங்களுக்கு தான் கோர்ட் செலவு , எங்களுக்கு பீஸ்,  பயணச் செலவு, தீர்ப்பு வர வரைக்கும் இதே செலவு தான். தீர்ப்பு வந்த பிறகு  பட்டா மாத்தறச் செலவு… உப்..

பெரிய பணக்காரர்  போல நீங்க …! செலவு பண்ண காசு இருந்தால் தாராளாம கோர்ட்டுக்கு போங்க” என்றாள் கேலியாக உதட்டை வளைத்து.

“உங்க அக்கறைக்கு நன்றி, நிலத்தை கொடுக்கறதா இருந்தால் எழுதி கொடுங்க… இல்லேன்னா நாங்க

இந்த பிரச்சினைய கோர்ட்ல பார்த்துக்கறோம் ” என்றார் உடன் வந்த வழக்கறிஞர்.

“அப்றம் உங்க இஷ்டம் ” என்பது போல தோளைக் குலுக்கினாள்.

“ரெங்கா கோர்ட் வரைக்கும் போகனுமாடா?  இப்போ என்ன நிலத்த நீயே வச்சுக்கோ. எனக்கு தொகை மட்டும் குடு… நான் வேற எங்கையாவது  நிலத்தை வாங்கிக்கறேன்… என்ன சொல்ற?”

“என்ன மன்னிச்சுடுங்கண்ணா, நிலத்த நீங்களே வச்சிக்கோங்க, எனக்கு தொகை மட்டும் கொடுங்கோண்ணா. நான் பணக்காரனெல்லாம் இல்லமா, உழைச்சி சம்பாதிக்கற வர்க்கம் தான். ஏதோ நிலம் கிடைச்சால்,  குத்தகைக்கு விட்டு காசு பார்க்கலாம் தான். வேற எந்த எண்ணமும் இல்லை…! ”  என்று அவரும் இறங்கி வர பிரச்சினை தீர்வுக்கு வந்தது. இப்போது கேலியாக இதழை வளைப்பது அவள் முறையாயிற்று… இருவரிடமும்  எழுதி வாங்கி கொண்டு இதர பணிகளை முடித்து ரெங்கனும் கிளம்பி விட்டார்.

” அப்போ, நான் கிளம்புறேன்” என்று விடைப்பெற, “இருங்கோ மா” என்றவர் கண்ணம்மாவிடம் கண்ணைக் காட்டினார்.

அவரும் உள்ளே சென்று தாம்பூள தட்டில் பட்டு புடவை,  பூ  மஞ்சள் குங்குமம், ஐயாயிரம் பணம் என எடுத்து வந்து வரதராஜனின் பக்கத்தில் நின்றார். இருவரும் சேர்ந்து  அதைக் கொடுக்க, அவர்களில்  காலில் விழுந்தாள். இருவரும் அவளை மகளாய் எண்ணி, ஆசிர்வதித்தனர்.

“எனக்கு இது மட்டும் போதும்” என்று  என்று புடவையை மட்டும் எடுக்க அவரோ ‘ஏன்’ என்பது போல பார்த்தார், “நான் பார்த்த வேலைக்கு இதுவே அதிகம், புடவை மட்டும் போதும்”  என்றாள்.

வரதராஜனை வியப்பில் வீழ்த்திக் கொண்டே இருந்தாள் நிழலி. அனைவரையும் பார்த்து “போயிட்டு வரேன்” என்றவள் சாகரனிடம் கண்களால் சொல்லிவிட்டுச் சென்றாள்.

வரதராஜனின் மனம் கணக்க, கோயிலை நோக்கிச் சென்றார்.. மற்றவர்கள் அவளை புகழ,  சாகரன் எண்ணியது நிகழ்ந்தது. அவன் இங்கு இருக்கவே இல்லை. ஏழுமலையான் புண்ணியத்தில் சொர்க்கம் சென்று வந்தான்.

“டேய் சாகரா, டேய் …” அவனை உலுக்கிய பின்பு தான் நடப்புக்கு வந்தான். ” என்னக்கா…?”

“இது உன் பிரண்டு தானே டா?” தன் சந்தேகம் தெளிய கேட்க, “ஆமாக்கா…! ஏன் கேக்கற ?”

“இவா நம்மாத்துக்கு உன்னை தேடி ஒரு நாள் வந்தாள், அப்போ நீ கேனடா போயிருந்த, அப்பா தான் இனி இந்த வீட்டு படிய மிதிக்காதீங்கோனு  சொல்லித்  திட்டி அனுப்பிட்டார். ..” என்று நடந்ததை சொல்ல, மேலே பறந்தவன் பொத்தென்று விழுந்தான்.

” என்னக்கா நெசமாவா சொல்ற…!” என மீண்டும் கேட்க, “ஆம்” என்று தலையை ஆட்டினாள்.

வேகமாக வெளியேறியவன் அலைபேசியில் அவளை அழைத்து பாதிதூரம் சென்றவளை அங்கே நிக்க, சொல்லிவிட்டு ஆட்டோவில் சென்று அங்கே இறங்கி, காரில் ஏறிக்கொண்டான்.

” என்னச்சி.. எதாவது மறந்துட்டேனா?”

அவன் வந்த வேகத்தைக் கண்டு கேட்டாள். “இல்லை ” என்றவன் சீட்டில் சாய்ந்தான். அவனுக்கு குடிக்கத் தண்ணீர் கொடுத்தாள்.

வாங்கி பருகியவன், வாயை துடைத்து விட்டு அவளைப் பார்க்க, அவளெங்கோ பார்த்தாள். அவனுக்கே புரிந்தது, அவன் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல விருப்பமில்லை என்று. அதைப் பற்றி கேட்டு இந்நேரத்தை வீண் செய்ய அவனுக்கும் விருப்பமில்லை…

“என் தோழியை ஒரு பொறுப்பான லாயரா பார்க்க பிரமிப்பா இருக்கு. அதை விட, நீ நேர்மையா நடந்துகிறது ரொம்ப பிடிச்சது. தன்னை தேடி வந்தவங்க கிட்ட ஆதாயம் தேடாம, அவா, பிரச்சனைக்கு தீர்வு  தரணும் நினைக்கற உன் எண்ணம் உன்னை மென்மேலும்  உயர்ந்தும் நிழலி. ரொம்ப சந்தோசமா இருக்கு நிழலி உன்னை இப்படி பார்க்க “என்றான் மனம் நிறைந்து.

“தேங்க யூ சாகரன்…!” என்று கண் சிமிட்டினாள். இருவரும் அமைதியாக இருக்க, சற்று அவளை சீண்ட எண்ணி” உன்னோட வெயிட் என்ன?” என்றான்

“எதுக்கு கேக்குற?”

“ம்ம்…. சொல்லு”

“52…!” என்றாள்… “பார்த்தா அப்படி தெரியலையே டீ…!” அவளை மேலிருந்து  கீழ் வரை பார்த்தான். ” யோவ்  ஐயங்கார் என்ன திமிரா…?”

“இல்ல டீ நான் பாட்டுக்கு உன்னை தூக்கறேன் சொல்லிட்டேன்… எங்க தூக்கி என் கை போயிருந்தால்? அதான் டவுட்ல கேட்டேன் …!” என்று தன் சந்தேகத்தை தீர்த்துக் கொண்டவனை மூக்கு விறைக்க கோபம் கொண்டவள்,

“உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா, என்னை தூக்குவேன் சொல்லுவ தடியா! ” அடுத்த சண்டைக்கு தயாரானாள்.

“தூக்கிறதுக்கு எதுக்கு டீ தைரியம் வேணும் தெம்பு இருந்தாலே போதாது… சொல்லு உன்னை தூக்கி காட்டட்டுமா? ” நக்கலாகவே கேட்டான். “ஹௌ டேர் யூ… ?” என்று பல்லை கடித்தவள், அவனது பிடரி முடியைப் பற்றினாள்.

“ஆ.. ஆ…  ஏய்.. ராட்ஸ்சி வலிக்கிது டீ”

“நல்லா வலிக்கட்டும் ” என்றவள், அவன் பின்னந்தலையில் விரலை விட்டு தேட ஆரம்பித்தாள்,

“என்ன டீ பண்ற?”

“எங்கடா இங்க இருந்த குடும்பிய காணோம்?” அதிர்ச்சியில் கேட்டாள். அவள் கையை எடுத்து விட்டு தனது மயிரை சரி செய்தவன், ” அதை கேசதானம் செய்துட்டேன்”என்றான்.

“என்னது கேசதானமா, அப்படின்னா?”

“முடியை கேன்சர் பேசண்டுக்கு கொடுத்துட்டேன். கேனடால,  குடும்பிய எடுத்தான் தான் வேலைனு சொன்னா, நானும் அப்பா கிட்ட கேட்டேன், முடியை விட வேலை தான் முக்கியம், குடும்பி தானே குடுத்திடு சொன்னாள் குடுத்துட்டேன்…” முன்னால் கேசத்தை சரி செய்து  விட்டு தோளைக் குலுக்க,  வாய்விட்டு சிரித்தவள், அவன் முறைப்பில் அமைதியானாள்.

“இருந்தாலும் ஐயங்கார், எனக்கு குடும்பி வச்ச ஐயங்காரைத் தான் பிடிக்கும் இவனை பிடிக்கல ” என்று காரை இயக்க, உதட்டைப் பிதுக்கினான். இருவருக்கும் அப்பயணம்  இனிமையானதாக இருந்தது.

மறுநாள் வெள்ளைச் சட்டை,  கருப்பு கால்சட்டையில் மிடுக்காக நிழலி முன் நின்றவன், தன்னை அஸ்ஸிடென்ட்டாக சேர்த்துக் கொள்ளும் படி கேட்டு அடம்பிடுத்து  நின்றான்.


காற்று வீசும்