கலைந்த ஓவியம் 17 (நிறைவு)

கோவிலில் இருந்து வீட்டிற்கு வந்ததில் இருந்தே மனம் முழுவதும் இறக்கை இல்லாமல் பறந்தது.

மனம் முழுக்க அவளின் உரிமையான பேச்சும், செயலும், கிண்டலும் தான் நினைவிற்கு வந்தது… இதோ இப்போதும் ஆள் உயர கண்ணாடி முன் தான் நின்று கொண்டிருக்கிறான். இறுகிய முகத்துடன் அல்ல வெட்கங்கள் நிறைந்த முகத்துடன். இவனின் வெட்கத்தை கண்டு கண்ணாடி கூட வெட்க பூக்களை சிந்துவது போல் ஓர் பிரம்மை தோன்றியது நவினுக்கு., கண்ணாடியை பார்த்து சிரித்து கொண்டிருந்தவனின் பார்வை இப்போது அலைபேசியில் பதிந்தது.. சட்டென அலைபேசியை கையில் எடுத்தவன் கண்டெக்ட் லிஸ்ட்டில் இருந்த மை வருங்காலம் என்ற பெயரை பார்த்தான்.

மகியை முதன் முதலில் அழைக்கும் போது பதிவு செய்து வைத்த பெயர் தான் அவள் வேண்டாம் என கூறிய பிறகும் கூட அதை அழிக்கவில்லை, பதிவு செய்த பெயரை மாற்றவும் இல்லை அப்படியே வைத்திருந்தான்… என்னவோ ஒரு நம்பிக்கை மீண்டும் அவள் வருவாள் என்று… அவளுக்கு அழைப்போமா என நினைத்தவன் நெற்றியில் போனை வைத்து தட்டியப்படி யோசனையில் ஆழ்ந்து இருக்க அவனின் போன் அலறியது…

வெண்மதி வெண்மதியே நில்லு – நீவானுக்கா மேகத்துக்கா சொல்லு வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால்மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம் – உன்னைஇன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே –

ஏனோ அன்றைய மனநிலையில் வைத்த பாட்டு இப்போது அதை கேட்க சிரிப்பாக இருந்தது… மெல்லிய புன்னகை அரும்ப அலைபேசியின் அழைப்பை ஏற்று காதில் வைத்தான்.. “ஹலோ…” என மெல்லிய விசும்பல் அவளின் குரலி”ஹலோ, மகி, என்னமா ஆச்சு, மகி…” என பதட்டமாக கேட்டான்

“ஹ்ம்ம்…” என்றாள்..உடனே அவளின் அழைப்பை துண்டித்து வீடியோ கால் செய்தான்… சில நிமிடங்களில் வீடியோ காலில் வந்தாள்.. கண்களில் நீர் முழுவதும் நிறைந்திருக்க அவளின் மூக்கு, காது கன்னம் என அனைத்தும் நன்றாகவே சிவந்திருந்தது..

“ஏய் மகி, கூல் மா…” என்றான் பதட்டத்தை மறைத்து, தோளில் கண்ணீரை துடைத்துக் கொண்டவள் அவனை பார்த்தான்… அலையலையான கேசம் அவனின் பிறை நெற்றியில் நார்த்தனம் ஆட, இமைக்காது அவனையே பார்த்தாள்… அவனின் இதழ்கள் கூட பன்னீர் ரோஜாவை போல் மெல்லிய ரோஸ் நிறத்தில் இருந்தது.. அவனின் மேல் இதழ்களை மீசை முடிகள் மறைக்க, அவன் கண்களின் அழகை மேலும் அழகாய் காட்டியது அவனின் கண் கண்ணாடி, அவனின் முக வடிவத்திற்கு ஏற்றது போல் கண்ணாடி அணிந்து இருந்தான்.. அவளின் கண் இமைகளில் மெல்லிய அரும்புகளாய் நீர் துளிகள் வீற்றிருந்தாலும் அவளின் விழிகள் அசையாது இவனையே பார்த்தபடி இருந்தது…கலைந்த ஓவியம் போல் இருந்தான் மகியின் நவின். அவளின் பார்வையில் வெட்கம் வரும் போல் இருந்தது நவினுக்கு “மகி., மகா…” என இரண்டு முறை அழைத்த பின்னே அவனின் மேல் இருந்த பார்வையை விலக்கி குனிந்து கொண்டாள் “என்னாச்சு ம்மா…” என்றான்

“ஹ்ம்ம்…” என்றவளுக்கு எதற்கு அழைத்தோம் என மறந்தே விட்டது… “என்னாச்சு, எதுக்கு இந்த அழுகை, முதல்ல கண்ணை துடை,..” என்றான் மெல்லிய புன்னகையோடு, உள்ளங்கையில் கண்களை அழுத்தி துடைத்து கொண்டவள்

“அது அண்ணா வீட்டுக்கு வந்து பேசறன்னு சொல்லிட்டான்…” என்றதும் அவனின் மெல்லிய புன்னகை மெல்ல மெல்ல பெரியதாக விரிந்தது…

“ஹ்ம்ம்… இதுக்கா இவ்வளவு அழுகை” என்றான்

“ஒரு கெட்ட கனவு,அதை நினைக்க நினைக்க அழுகையா வருது. என்றவள் மீண்டும் “முதல்ல நான் உங்களை பாக்கவே இல்லை, அண்ணா சொன்னதுனால சரின்னு சொன்னே, நா சரின்னு சொன்னதும் அண்ணா என்னை இங்கேயே வர சொல்லிட்டான். அப்படி வரும் வீட்டுக்கு வரும் போது நீங்க கால் பண்ணிருந்தீங்க… நீங்க கால் பண்ணும் போது தான் அண்ணா சொன்ன விசயமே ஞாபகத்துக்கு வந்துச்சு, அப்பவே உங்க கிட்ட உண்மையை சொல்ல நினைச்சேன் ஆனா உங்க பதட்டம், உங்க குரல்ல இருந்த ஏதோ ஒன்னு என்னை சரின்னு சொல்ல வைச்சது… அதுக்கு அப்புறம் நானும் உங்களை பாக்க வேணும்னு எண்ணமே இல்லாம தான் இருந்தேன்..உங்க குரல் என் காதுல கேட்டுட்டே இருந்துச்சு, மனசுல பூ வாசம் வீசற போல இருந்துச்சு, உங்க போட்டோவை பாக்க வேணும்னு எனக்கு தோணவே இல்லை, வீட்டுக்கு வந்தும் அதே நிலை தான் அதுக்கு அப்பறம் தான் கிருஷ்ணா அண்ணா தங்கச்சி கொடியும் அண்ணாவும் விரும்பறதா கொடி என்கிட்ட சொன்னா, நீ கிருஷ்ணாவை கல்யாணம் பண்ண சரின்னு சொன்னா தான் நான் உன் அண்ணனை மேரேஜ் பண்ணிப்பண்ணு சொன்னா அதனால் தான் உங்களை வேண்டாம்னு சொன்னேன்… அப்ப உடனே நீங்க எனக்கு கால் பண்ணி பேசனீங்க, உங்க கிட்ட ஹார்ஸா சொன்னா நீங்களும் என்னை வேண்டாம்னு சொல்லிடுவீங்க தான் அப்படி பேசனேன்… வேணும்னு பேசல, இப்ப உங்களை பாக்கும் போது கூட எனக்கு உங்க குறை கண்ணு எதுவும் தெரியல, மனசுக்குள்ள பேசின உங்களோட இனி காலம் முழுக்க இருக்க போறேன் தான் என் எண்ணமா இருந்துச்சு, பாக்காம ஈர்ப்பு தான் உங்க மேல இருந்துச்சு, எப்ப கோவில்ல வைச்சு என் மனசுல இருக்கற வாய்ஸ்க்கு சொந்தக்காரர் நீங்கண்ணு தெரிஞ்சுதோ அப்பவே உங்க மேல இருந்த ஈர்ப்பு காதலா மாறியிருச்சு, இதுக்கு மேலயும் நீங்க பாத்து லவ் பண்ணாத தான் லவ், இல்லைன்னா அது லவ் இல்லைன்னு சொன்னா முதல்ல லவ் பண்ணிட்டு கல்யாணம் பண்ணிக்கலாம் சாதுமா…”என மூச்சு விடாது பேசியவள் அவனை பார்த்தாள்.. அவனோ அப்போது இருந்த அதே புன்னகையை இதழ்களில் தவழ விட்டபடி அமர்ந்து இருந்தான்.

“உங்களுக்கு என் மேல கோபம் வரலையா…” என கேட்க இல்லையென தலையாட்டியவன் “எனக்கும் உன் மேல காதல் வர காரணம் உன் குரல்ல தான், அம்மா பொண்ணு போட்டோ காட்டும் போது வெறும் ஈர்ப்பு தான் உன்மேல, சரின்னு உடனே சொல்லிட்டேன்… ஆனா உன் மேல காதல் வந்தது உன் குரலை கேட்டது தான் இப்பவும் ஞாபகம் இருக்கு, என் வாய்ஸ் கேட்டதும் உன் குரல்ல இருந்த சின்ன அமைதி அப்புறம் ஏதோ படபடப்பு, அப்புறம் ஆமா உங்களை எனக்கு பிடிச்சு இருக்குன்னு சொல்ற வார்த்தையை விட உன்னோட அந்த படபடப்பும், அந்த ம்ம் சொன்ன விதமும் அப்படியே பக்குண்ணு எனக்குள்ள வந்துட்ட, அப்பறம் தான் நீ மறுபடியும் வேண்டாம்னு சொல்லிட்டாத அம்மா சொல்லியும் அதை நம்பாம உனக்கு கூப்பிட்டேன்.. அப்புறம் தான் நீ அப்படி பேசன, அப்ப உன் மேல கோபம் தான் வந்துச்சு, அப்படி என்ன குறைஞ்சு போயிட்டேன் நான் ஒரு எண்ணம், சரி தான் போடின்னு விட்டாச்சு அம்மாகிட்ட கூட வேற பொண்ணு பாருங்கன்னு சொல்லிட்டேன்… நீ என்னை பாதிக்கவே இல்லைன்னு தான் நினைச்சேன் உன்னை மறுபடியும் ஆபிஸ்ல ப்பாக்கற வரைக்கும்… எப்ப உன்னை ஆபிஸ்ல பாத்தனோ அப்பவே முடிஞ்சு போச்சு, அது மட்டும் இல்லாமல் நீ வேற என்னை யாரோ போல பார்த்தியா சொல்லவே வேண்டாம் மனசு ஒரு மாதிரி ஆயிருச்சு, நீ பாசிங் கிளவுட் நினைச்சேன் ஆனா அது இல்லைன்னு திரும்ப திரும்ப சொல்ற போல என் மனசில ஆழமா போயிட்ட மா நீ…” என்றான் ஆழ்ந்த குரலில் “கோவில் சன்னதியில் நீ பார்த்த பார்வைக்கும், என்னை உன் அண்ணாகிட்ட இன்றோ பண்ணும் போது நீ பார்த்த பார்வைக்கும் எத்தனை வித்தியாசம்… அது நீ அழுதுட்டே முறைச்ச தெரியுமா… ப்பா,..” என்றான் இதயத்தை தடவி கொண்டே.. அவன் சொல்ல சொல்ல அவனையே விடாது பார்த்தவள்

“லவ் யூ பிரசாத்…” மெல்லிய குரலில் கூறினாள்”ஹான் என்னமா என்ன சொன்ன..” என்றான்.

“ஒரு தடவை தான் சொல்ல முடியும்.. கேட்காம இருந்தது உங்க தப்பு…” என்றாள் சிறு சிரிப்போடு”நானும் சொல்லுவேன்… நீ திரும்ப கேட்கும் போது சொல்ல மாட்டேன்…” என சிரிப்போடு கூறினான்”அதையும் பாக்கலாம்…” என அவர்களின் பேச்சு அப்படியே தொடர்ந்தது.

****இரண்டு வாரங்களுக்கு பிறகு… கோவிலில் பரபரப்பு குறையாது வளம் வந்து கொண்டிருந்தான் சரவணன். அவன் இருக்கும் இடத்தில் ஒரு நாற்காலியை போட்டு அமர்ந்தவள் கால் மேல் காலை போட்டுக் கொண்டு தட்டிபாத்தேன் கொட்டாங்குச்சி தாளம் வந்தது பாட்ட வெச்சிதட்டிபாத்தேன் கொட்டாங்குச்சி தாளம் வந்தது பாட்ட வெச்சிதூக்கி வளத்த அன்பு தங்கச்சிதூக்கி வளத்த அன்பு தங்கச்சிதூக்கி எறிஞ்சா கண்ணு கொலம்மாச்சிதூக்கி. என நாற்காலியின் கை பிடியில் தளம் தட்டியப்படி பாடினாள் நிவேதா…

அவளின் பாடல் தனக்கு தான் என உணர்ந்தாலும் அவளை சிறிதேனும் கண்டு கொள்ளவில்லை அவன்… “நீ பாடு டி இப்ப விலகி போறேன்.. ஆனா கண்டிப்பா இருக்கு உனக்கு..” மனதில் அவளிடம் பேசினான்.. இங்கு இவளோ போனை எடுத்து காதில் வைத்தவள்

“என்னமோ பெரிய இவன் மாதிரி டயலாக் எல்லாம் பேசன, எங்க இப்ப பேசு., இப்ப பேசு..” என வடிவேல் போல் பேசினாள்.. அவள் பேசுவது அவனை தான் என புரிந்து கொண்டாலும் துளியும் கண்டுகொள்ளவில்லை அவன்

‘இவன் இப்படி அமைதியா இருக்கற ஆள் இல்லையே, என்னவா இருக்கும், எதுவா இருந்தாலும் எங்க போயிட போறான் சின்ன பையன், என் அண்ணனுக்கு அப்பறம் என்னோட அடுத்த எதிரி நீ தான் டா,…’ என்றபடி பார்த்தவள் கோவிலில் கூட்டத்தில் அமர்ந்திருந்த தன் அன்னையிடம் சென்று அமர்ந்து கொண்டாள். நிச்சியதிற்கு முன்பு மாப்பிள்ளை வீட்டில் இருந்து பெண்ணுக்கு பூ வைக்கும் படலம் நடைபெறும். மகிக்கு இப்போது அது தான் நடைந்து கொண்டிருந்தது… அழகு சிலையாய் அவள் அமர்ந்து இருக்க ஓவியமாய் அவள் அருகில் அவன் அமர்ந்து இருந்தான்.

அவள் தன்னை பார்க்கும் நேரத்திற்கு காத்திருந்தான் அவன். நினைத்தது போலவே

அவள் ஒர விழிகளில் பார்க்க “லவ் யூ..” என வாயசைத்தான். சட்டென கண்களை விரித்து அவனை பார்த்து என்ன என கேட்க “ஒரு தடவை தான் சொல்ல முடியும்..” அவளை போலவே கூறினான்.. மெல்லிய முறைப்புடன் திரும்பி கொண்டாள்..

மற்ற விசயங்கள் அனைத்தும் மூர்த்தி உட்பட அனைவரும் பேச இளையவர்கள் வேடிக்கை பார்த்தனர்.. கிருஷ்ணா கூறியதை போல ஒரு வாரத்திலேயே பூங்கொடியை சிங்கப்பூர் அழைத்து சென்று விட்டான் அவன் அதனால் அவர்கள் இருவரும் இங்கு வரவில்லை… மகளும், மகனும் தன்னை விட்டு விலகியதுமே வேணி அடங்கி விட்டார்.. ஆனால் நவினையும் மகியையும் பார்த்து உள்ளுக்குள் பொரிந்து கொண்டு தான் இருக்கிறார் என்பது வேறு கதை.. இருந்தும் அதை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை, ஏனென்றால் சரவணன் அதிகம் இவர்களிடம் பேசவில்லை அதனால் மூர்த்தி சிறிது அடக்கி வைத்திருந்தார்…

பூ வைக்கும் படலம் முடிந்தவுடன் “முறைக்காக பெண்ணையும், பையனும் பேசறதா இருந்தா பேச சொல்லுங்கப்பா, கடைசி வரைக்கும் இவங்க பேசனத விட இவங்களை சுத்தி இருக்கறவங்க பேசறது தான் அதிகமா இருக்கு, ஒரு நாலு வார்த்தை பேச வைங்க பாக்கலாம் கூட்டத்தில் இருந்த வெள்ளாடு கத்த, சாரி பெரியவர் சொல்ல…” நவின், நிவேதா முதற்கொண்டு அனைவரின் இதழ்களிலும் சிறு புன்னகை மலர்ந்தது… இவர்களின் சிரிப்பு எப்போதும் மலர இறவனை வேண்டி (இப்ப போகலாம்.) முற்றும்… (இங்கு முடிந்ததில் அங்கு தொடரும்)) Thread ‘குட்டி டீஸர்…’ https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AE%B0%E0%AF%8D.3975/ **** இந்த கதை இடையில் விட்டது போல் தான் இருக்கும் சிரமத்திற்கு மன்னிக்கவும். இதன் தொடர்ச்சிக்கு மேலே லிங்க் இருக்கு. குறிப்பிட்ட கால அளவில் முடிக்க சற்றே சிரமம் அதனால் வந்த குழம்பம் கதையும் கலைந்த ஓவியமாய் மாறி விட்டது போல்… தொடர்ச்சியான பாகத்தில் உங்களின் பல கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் என நம்புகிறேன்… முக்கிய குறிப்பு நிச்சியம் எழுத்து பிழைகள் இருக்கும் என்னையும் அறியாமல் வந்து விடுகிறது