கலைந்த ஓவியம் பார்ட் 2 … டீஸர்

சில இடங்களை பொறுத்தவரைக்கும் விதவை பெண்கள் பல சம்பிரதாயங்கள் செய்யவே மாட்டேன் என கூறிவிடுவார்கள்… அது எவர் கூறினாலும் பிடித்த பிடியிலயே இருப்பார்கள்… அதை தான் இப்போது சிவகாமியும் செய்து கொண்டிருந்தார் அவரின் மூத்த மகனின் நிச்சியம் இன்று, அவர் அதில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி அமர்ந்து கொண்டார், அவரின் மகன் நவினும், மருமகள் மகியும் பல முறை அழைத்தும் அவர் வரவில்லை.. அவர் தனியாக இருக்கிறார் என்று அவரின் மகள் நிவேதா அவருடன் அமர்ந்து கொண்டாள். இவர் இடத்தில் செய்ய வேண்டிய சம்பிரதாயங்களை மகியின் அத்தை வேணியும், தாய் மாமன் மூர்த்தியும் தான் செய்து கொண்டிருந்தனர்…

நிச்சயத்திற்கு முன் நடக்கும் சடங்கான பூ வைக்கும் படலம் நடந்து முடிந்தது.. இதோ இப்போது நிச்சியம் நடக்கும் நேரம் பார்த்து அவரின் உடல் முழுவதும் வியர்வையால் நனைய தொடங்கியது.அவரின் சுவாசக் காற்று சற்றே பின் வாங்க ஆரம்பித்தது, காற்றை சுவாசிக்க முடியாமல் வாய் வழியாக மூச்சை வாங்க நினைத்தவர் வாயை திறந்து அதன் வழியே காற்றை சுவாசிக்க முயல, அது முடியாது போகாவும், அருகில் அமர்ந்திருந்த தன் மகளின் தோளை பிடித்து இழுத்தார் சிவகாமி…

“என்னமா…” என்றப்படி திரும்பியவளின் கண்கள் இரண்டும் தன் தாய் இருந்த நிலையை கண்டதும் அப்படியே அதிர்ச்சியில் விரிந்தது… அவரின் கண்கள் உள்ளுக்குள் சொருகி வெள்ளை முழி வெளியில் தெரிய மூச்சிற்கு ஏங்கியப்படி அமர்ந்து இருந்தார்… நிச்சியம் நடக்கும் நேரம் என்பதாலும் இவர்கள் ஒதுங்கி அமர்ந்து இருந்திருந்தாலும் அனைவரின் பார்வையும் மணமக்களிடம் மட்டுமே இருந்தது இவர்களை எவரும் கண்டுகொள்ளவில்லை…”ஐயோ அம்மா என்னாச்சு…” என கத்த ,

அவளின் கத்தலில் தான் அனைவரின் பார்வையும் இவர்களின் புறம் திரும்பியது. சில நிமிடங்களில் சிவகாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்…

நான்கு மணி நேரத்திற்கு பிறகு… (80கிட்ஸ் movie ஞாபகம் வரும்)

அந்த ஐ.சி. யூ க்குள் சிவகாமி, நவின்,மகி என இவர்கள் மூவரும் மட்டுமே நின்று இருந்தனர்., அமைதியாக இருந்த அந்த அறையை சிவகாமியின் மெல்லிய குரல் கேட்டது.

“பாப்பாக், கல், யான, பண்ணி, வை, பா… நா, இல்ல னா அவ துடிசு போ..யிடுவா..” என்றார் அவர் கூறுவது முதலில் புரியவில்லை என்றாலும் அதை இரு முறைக்கு பல முறை கேட்ட பின்னே அது புரிந்தது…

அவர் கூறியதில் அத்தனை கோபம் வந்தது அவளுக்கு ஐ. சி. யூ என்றும் நினைக்கவில்லை அவர் உயிருக்கு போராடி கொண்டு இருக்கிறார் என்றும் நினைக்கவே இல்லை

“அம்மா இப்படியெல்லாம் ப்ளேக் மைல் பண்ணா நான் சரின்னு சொல்லிடுவேன் நினைச்சியா நெவர்…” என்றவள் மீண்டும் ” அண்ட் எனக்கு தெரிஞ்ச வரைக்கும் உனக்கு ஒன்னும் இல்லை, மைனர் பிராப்ளம் தான். சோ ரொம்ப சீன் போடாத, கல்யாண செலவை மிச்சம் பண்ண பாக்கறயா, இதோ பாரு நீ என்ன சொன்னாலும் நான் கேட்பேன் மட்டும் நினைக்காத நடக்கவே நடக்காது…” என்றாள் கைகளை கட்டிக் கொண்டு”சொன்…னா கே..ளு..” என்றார் சிவகாமி மூச்சு வாங்க சீரமபட்டு “முடியாது மா, நீ சாக போறேங்கறதுக்காக எல்லாம் நீ சொல்ற பையனை எல்லாம் கல்யாணம் பண்ணிக்க முடியாது… நீ என்னவோ ஹாயா செத்துடுவா, நான் தானே வாழ்க்கை முழுக்க அவன் கூட குப்பைக் கொட்டனும், விதின்னு வந்தா எல்லாரும் ஒரு நாள் சாக தான் போறாங்க, ஏன் உனக்கு முன்னாடி என் விதி முடியணு இருந்தா நானும் செத்து போயிடுவேன். சோ நீ என்ன சொன்னாலும் என்னால முடியாது…” என தீர்க்கமாக கூறினாள் நிவேதா.. அவர் மட்டும் நன்றாக இருந்திருந்தால் ‘இவளை எல்லாம் நான் தான் பெத்தெனா, நர்ஸ் குழந்தையை மாத்தி கித்தி கொடுத்துட்டாங்களோ, கொஞ்சம் கூட பாசம் இருக்கா பாரு, சாக சொல்றா…’ என திட்டி இருப்பார்.

அவள் அப்படி கூறியதும் அவரின் பார்வை நவினை நோக்கியது… பெருமூச்சுடன் நிவியின் புறம் திரும்பியவன்

“நிவி படிக்க வைச்சு இத்தனை வருஷமா வளர்த்த அவங்களுக்கு தெரியாதா எது நல்லது எது கெட்டதுன்னு, கடைசி நிமிசம் கூட உன்னை ஒருத்தன் கையில பிடிச்சு தரன்னு நினைக்கிறாங்க… புரிதா புரியலயா…” ஒரு பெரிய அதட்டல் அவனிடம்…

இதுநாள் வரையிலும் நவின் ஒரு வார்த்தை கூட அதட்டி பேசியதில்லை இப்போது அதட்டவும் அது நன்றாகவே வேலை செய்தது.. “உனக்கு நான் சொல்றது புரியல அண்ணா, எமோஷனல் பிளேக் மைல் பண்ணி எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க நினைக்கிறாங்க.., இந்த நிமிசம் அவங்க ஆசைக்காக நான் கல்யாணம் பண்ணிட்டா வாழ்க்கை முழுக்க கஷ்டம் தான். கல்யாணம் பண்ணிட்டேன்னு போன போகுதுன்னு வாழனும் அது என்னால முடியாது,…” என்றாள் தீர்க்கமாக… அவள் பிடித்த பிடியில் நின்றாள்