ஒளி 9

கம்யூட்டர் சார்(மதிராஜன்) வகுப்பறைக்கு வருவதுமில்லை பாடம்  எடுப்பதுவுமில்லை. அதனால் இன்டர்னல் செம்மிற்கு பயந்த மாணவர்கள் வேறு வழியின்று பிரஜனிடம் கம்பளைண்ட் செய்தனர்.

அவனும் அவரிடம் கெஞ்ச அவர் மசிவதாக இல்லை  ” உங்கள் மேல் கம்பளைண்ட் வருது சார் வாங்க  வந்து ஒழுங்க எடுங்க சார் ” என்றான். பிரஜன் அழைத்ததும் வராது, அவனை திட்டி அனுப்பினார்.

பின் முதலாம் ஆண்டு மாணவர்களிடம் வந்து”  யார் என்மேல் கம்பளைண்ட் செய்தது ?” என்று கேட்க அமைதியாக இருந்தனர்.. இன்டர்னல் மார்க் யாருக்கும் போடுவதாகயில்லை என்று கூற தேவ் எழுந்தாள்.

” நீதான் என்மேல கம்பளைண்ட் கொடுத்ததா ?”  என்றார்.

” ஆம்…” என்று அவளும் தலையாட்டினாள். ”  உன் பெயர் தேவதர்ஷ்னி தானே, பார்த்துக்கிறேன் எப்படி நீ செம் பாஸ் பண்றன்னு

எம் மேலையே கம்பளைண்ட் கொடுக்கறீயா ?உன்னை என்ன பண்றேன் பார் ? ” என்று அவளைக் கத்த தர்ஷினி எழுந்தாள்.

” சார், நானும் தான் கம்பளைண்ட் கொடுத்தேன் “

” நீயுமா ? ”  அவர் முறைக்க,

” ஆமா நானும் தான். ” லத்திகா எழுந்தாள்.

” நீ…” என்றிட ஒவ்வொருவராக எந்திருத்தனர். எல்லோரும் எழுந்து நின்றனர்.

அவரே பயந்து அனைவரையும் பார்க்க, ” நாங்க எல்லாரும் தான் கம்பளைண்ட் கொடுத்தோம்.மார்க்ல கைவைங்க சார். ” என்றாள் தர்ஷினி.

அவளை தொடர்ந்து மார்க்கை குறைங்க மார்க்கை குறைங்க என்று மாணவர்கள் கத்தவே, பயந்து ஓடியே போய்விட்டார்.

எல்லாரும் அமைதியானார்கள். ஆனால், தேவ் மட்டும் அழுதுக்கொண்டிருந்தாள், அவளால் அடக்க முடியவில்லை வெளியே வந்துவிட்டாள்.

அங்கே ஜானி,  தியாகு அமர்ந்து பாடத்தை பத்தி பேசிக்கொண்டிருந்தனர்,.

அவர்களைப் பார்த்தவள் கண்களைத் துடைத்துக்கொண்டு வேகமாக கடந்தாள். இருந்தும் ஜானி அவளைப் பார்த்தவன்,

” ஹேய் குள்ளவாத்து என்ன எங்க கிட்ட பேசாம போற? ” 

” இல்ல ரெஸ்ட் ரூம் போறேன் ” என்று திரும்பாது நின்று கூறினாள் அவளின் குரல் தழுதழுத்தது.

தியாகுக்கோ வித்தியாசமாக தெரிய, அவள் மீண்டும் செல்ல எத்தனிக்கையில் தியாகு மீண்டும் அழைத்தான் அவளை, ”  தேவ்  திரும்பு ”  என்றான்.

அவள் திரும்பாது நின்றாள்.”தேவ் திரும்பு ” என்று மீண்டும் கூறவே,

அவள் திரும்ப அவள்

அழுதது நன்றாக தெரிந்தது உதடுகள் நடுங்கிக்கொண்டிருக்க இருவரும் அதிர்ந்தனர்.

” தேவ் என்னாச்சு உனக்கு ? ”  என்று அவள் அருகில் வந்தனர்.தேவ் அழுதுகொண்டே அனைத்தையும் கூறினாள். ஜானிக்கு கோபம் வர தியாகுவிடம் புக்கை கொடுத்தவன் அவளை இழுத்துச்சென்றான். கம்யூட்டர் டிப்பார்மெண்டிற்கு.

அங்கே மறுபடியும் தூங்கிக்கொண்டிருந்தார்.” இந்த மனுசனுக்கு பேருல தான் மதி இருக்கு. ஆனா, இவர்கிட்ட அது இல்லை. எப்பபாரு தூங்கிட்டே இருக்கார் ”  இன்னோரு ஆசிரியர் தலையில் அடித்துக்கொண்டு கூற

” என்ன பண்ண நாம கம்பளைண்ட் பண்ணலாம். ஆனா, இவர் ஆதிசார் கட்சி நாம என்ன பண்ண ? “

” இப்படியே பயந்தா சரிவருமா நாம தான் கம்பளைண்ட் கொடுக்கனும்..” என்று இன்னொருவர் கூற ”  நமக்கு எதுக்குபா பிரச்சனை”  என்று மற்றோருவர் பேசிக்கொள்ள ஜானியும் தேவ் அங்கே வந்தனர்

” வா ஜானி ” என்று ஒருவர் அழைத்தார். எல்லாருக்கும் சேர்த்து அவன்  வணக்கம் வைத்துவிட்டு.மதிராஜனை காண அவரோ  டேபிளில் தலைவைத்து தூங்கிக்கொண்டிருந்தார்,.

டேபிளை கோபத்தில் தட்டினான். அதிர்ந்து பதறியடித்து எழுந்தார்.

” என்ன பண்ற நீ ? “

” நீங்க என்ன சார் பண்றீங்க இங்க ?  ” 

” நான் என்ன பண்ணா உனக்கென்ன டா ?”

” நீங்க எதுக்கு சார் இங்க வரீங்க ? வீட்டுலயே இருக்க வேண்டியது தானே.”

“நீ ஒரு ஆசிரியருகிட்ட பேசுற, பார்த்து பேசு…”

” சார் நீங்க ஒரு ஆசிரியராகவே நடந்துக்கல. இதுல எப்படி சார் ஆசிரியருன்னு பார்த்து பேச…?  ஒழுங்க வகுப்புக்கும் போகாம இங்க வந்து தூக்கிட்டு இருக்கீங்க, உங்க டிப்பார்ட்மெண்ட் கூட போகமாட்டிங்களா ? “

” அத கேட்க நீ யாருடா ?”  என்றவர் அருகில் நின்ற தேவ்வை பார்த்தவர்.

” பொம்பலபிள்ளை சொல்லுச்சுன்னு கிளம்பி வந்துடிங்களோ பெரிய ஹீரோவாட்டம். என்னடா அவ முன்னாடி சீன் போடுறீயா. அவன் அழுகிறது தாங்களையோ என்ன காதலா ?

என்ன கொடுத்து மயக்கினாள்? நீ என்னத சொல்லி மயக்கின?” இதை கேட்ட தேவ்  முகத்தை சுளித்தாள்.

” நீங்க எல்லாம் ஆசிரியருன்னு வெளிய சொல்லாதீங்க கேவலமா இருக்கு.. ச்ச அவ எனக்கு தங்கச்சி மாதிரி ஒரு அண்ணா நான் கேட்பேன்.நாங்க ஒழுங்க ஆண்,பெண் வித்தியாசம் இல்லமா கண்ணியமா பழகினாலும் உங்க பார்வையில தப்பா தான் படுத்து. ச்ச மதியே இல்லாத உங்களுக்கு மதிராஜன் பெயர் வேற.

நீங்க வந்து கிளாஸ் எடுக்க வேண்டாம் உங்களை எப்படி  வரவைக்க எனக்கு தெரியும்?”

மீண்டும் தேவ்வின் கைகளைப் பிடித்து இழுத்து வந்தான்.முதலாம் ஆண்டு வகுப்பில் வேறொரு ஆசிரியர் பாடம் எடுத்துக்கொண்டிருந்தார்.அங்கே செல்லாமல் வெளியே தேவ் ஜானி அமர்ந்தனர்.

” அழுதா எல்லாம் சரியாகிடுமா சொல்லு தேவ் மா.. நீ எவ்வளவு தையரியமான பொண்ணு உன்கிட்ட  பேசும் போது தான் தெரிஞ்சுகிட்டேன். ஆனா இப்ப ஏன் பயப்படுற ?

மார்க் தான் உன் வாழ்க்கைய நிர்ணயம் செய்ய போதா? நீ எவ்வளவு தைரியமா இருக்கியோ நீ  நிலையா நிப்ப. இல்லைனா உடஞ்சு போயிருவ. திரும்பி உன்னை சேர்கிறது ரொம்ப கஷ்டம் உங்க அக்கா காயூ எவ்வளவு தைரியமானவங்க. நீ அவங்க தங்கச்சி தானே

தைரியமா இரு” அறிவுரை வழங்கினான்.


அந்த ஆளால உன்னை ஒன்னும் பண்ணமுடியாது. மார்க் கைவச்சா எந்த கல்வி நிர்வாகம் கேட்காதுன்னு, அவர் உன்னை மிரட்டி பணியவைக்கிறார் பயப்பிடாத சரியா ”  என்று கண்களில் வடிந்த கண்ணீரைத் துடைத்தான்.

பின் வகுப்பு முடிய, தன் வகுப்பு பொறுப்பாளரிடம்  சொல்லியவன்.

இங்கே உள்ளே வந்தான்.

” நானே உங்களுக்கு கம்ப்யூட்டர் கிளாஸ் எடுக்கறேன்”  என்றவன் எடுக்க ஆரம்பித்தான்.

இங்கே பிரஜன் காயூவிடம் எல்லாத்தையும் கூற, தன் தங்கையை காண வந்தாள்.

ஜானி கிளாஸ் எடுக்க மாணவர்கள் கவனித்து கொண்டிருந்தனர்.

வாசலில் வந்து நின்றாள் காயூ.

அவளைப் பார்த்து பாடம் எடுப்பதை நிருத்தினான்.

உள்ளே வந்தவள் தேவ்விடம் சென்றாள்

” அக்கா”  என்று அவளை கட்டிபிடித்து அழுதாள்.” எதுக்குடா அழுகிற ? நீ எந்த தப்பும் பண்ணலயே அழ கூடாது டா. எதையும் தைரியமா பேஸ் பண்ணணும் நான் இருக்கேன்ல” என்று

கண்ணீரைத் துடைத்தாள். ஜானியிடம் ஏதோ பேச வர அங்கே வெங்கட் வந்தார். அவர்களைப் பார்த்து உள்ளே வந்தார்.

” என்னாச்சு தேவதர்ஷினி ஏன் அழுகுறீங்க? ஜானி நீ இங்க என்ன பண்ற ? “

” சார் ” என்று எல்லாத்தையும் கூறினான் ஜானி. ” இவ்வளவு நடந்துருக்கு ஏன் என்கிட்ட யாரும் சொல்லவே இல்ல?நான் இப்பவே இதுக்கு ஒரு முடிவுகட்டுறேன். நான் இதுக்கு ஆக்சன் எடுக்கிறேன் ” என்று விட்டு சென்றவர்,

மதிராஜனை அழைத்து வர சொன்னார். இங்கே காயூ , ஜானி , தேவ் , பிரஜன் உடன் சக்தியும் நின்றான்.

மதிராஜனும் அங்கே வந்தார்.

” என்ன சார் வீட்டுல எதுவும் தனியா பிஸ்னஸ் வச்சு நடத்துறீங்களா ?அதைப் பார்த்துட்டு இங்க வந்து தூக்கிறீங்களா. ” என்றார் வெங்கட் நக்கலாக.

” சார் நான் தூங்கமாட்டேன். யார் சார் சொன்னது நான் தூங்குவேன்னு?”

” ஏன் அவங்களுடைய இன்டரனல் மார்க்கை குறைக்குவா ?” என்றார் மீண்டும் நக்கலாக.

” நான் அப்படி கிடையாது சார் “

” நானும் அப்படிதான் நினைச்சேன் ராஜன் சார். ஆனா, நீங்க அதுக்குமேல பண்றீங்க.

காலேஜ்க்கு எதுக்கு சார் வர்றீங்க ? இதென்ன வீடா சார் உங்களுக்கு, வர்ற இஷ்டமில்லைன்னா ரிசைன் பண்ணிட்டு போங்க. அதுக்கு ஏன் இங்க வந்து தூங்கிறீங்க? வெட்கமா இல்லை உங்களுக்கு. உங்களால தான் காலேஜ் பெயரே கெடுது. யாரவது போய் வெளிய சொல்லமாட்டாங்களா.

எங்க பிரோபசர் தூங்குவாங்க.

எங்க போச்சு உங்க மதிசார்? ச்ச… ஏன் இப்படி பண்றீங்கன்னு கேட்க வந்ததால் மார்க்கை குறைப்பேன் சொல்லி,  அந்த பொண்ண வேற திட்டிருங்கீங்க அதுமட்டுமில்ல தப்பாவேற பேசிருக்கீங்க. இதுக்கு உங்கள என்ன பண்றது?”

” சார் மன்னிச்சுருங்க சார் இனி இப்படி பண்ணமாட்டேன்”

” காலேஜ் ரூல்ஸ் ஒன்னுதான் மாணவர்கள் தப்பு பண்ணாலும் , ஆசிரியர் தப்பு பண்ணாலும் ஒரே பனிஸ்மெண்ட்.

இத ஈசியா விட்டால் மத்த ஆசிரியரும்,இப்படியே  பண்ணுவாங்க. பனிஸ்மெண்ட் கொடுக்கிறதே அவங்கள தப்பு பண்ணதுக்கு இல்ல இனி பண்ணகூடாது தான்…”

” சோ, உங்களுக்கு பனிஸ்மெண்ட் இருக்கு மதி சார். உங்களை இரண்டுநாள் சஸ்பெண்ட் பண்றேன். முதல் நீங்க தேவதர்ஷினி கிட்டையும் ஜானி கிட்டையும் மன்னிப்பு கேளுங்க. ” என்றார்

” சார் அதெல்லாம் வேணாம் சார்.” என்றாள் தேவ்.

” இல்லைமா இது தப்பு இப்படியே போச்சுனா எல்லாரும் பேசுவாங்க ஆண் , பெண் பேதமில்லாமல் நட்பா பழகுறாங்க இங்க எல்லாரும். அத தப்பா பேசி

கலங்கம் பண்ணி அவங்களே தப்பா நடந்ததுக்க தூண்டி விடுறது மாதிரி இருக்கு இவங்க பேச்சு.. சோ அதுக்கு தண்டனை கொடுத்து  தான் ஆகனும், மன்னிப்பு கேளுங்க மதிராஜன் சார்..”

இருவரும் முன் வந்து நின்று கைகூப்பி நின்றவர்…” ஜானி , தேவ் மன்னிச்சுருங்க”  என்று கேட்டார்.

” உங்கள சஸ்பெண்ட் பண்றேன் இரண்டுநாள் நல்லா தூங்கி எழுந்துவாங்க. இனியாவது ஒழுங்கா இருங்க” என்றார் மனதில் நிறையா வஞ்சகத்தை கொண்டு வெளியெறினார் மதிராஜன்.

” சக்தி நீ அந்த கிளாஸ் இன்சார்ஜ் எடுத்துக்கோ…” 

” ஒ.கே சார்…. ஏன் சார் சஷ்பண்ட் பண்ற அளவுக்காக போகனும்…? ” சக்தி கேட்டான்.

” இல்லபா இப்படியே விட்டா எல்லாரும் இதே போல தான் பண்ணுவாங்க மரியாதையா கூப்பிட்டும் வரல,  ஏன்  வரலைன்னு கேட்ட இவங்களையும் தப்பா பேசிருக்காரு. இது  தான் சரி” 

” ம்ம் சரிதான் சார் ஆசிரியருனா இரண்டாவது அன்னை, தந்தை சொல்லுவாங்க. அவங்க அப்படி நடக்கலைனாலும் மாணவர்களை மதிக்கவாது இப்படி புழு மாதிரி நடத்தி அடிமைப் படுத்தின்னா,

அவங்களும் எவ்வளவு தான் அமைதியா இருப்பாங்க. நாம சொல்லுற வார்த்தைகள் தான் பொறுத்து தான்  வாங்க வாழ்க்கை இருக்கு. சோ அவங்கள உயர்த்தி விடுற ஏணியாதான் இருக்கனும் கால பிடிச்சு தள்ளுற சகதியா இருக்க கூடாது.” காயூ கூற

” சரியா சொன்னமா. இவருக்கு இது தேவைதான் அதான் இப்படி பண்ணினேன். சாரி தேவ் இப்படி நடந்ததுக்கு” அவளிடம் மன்னிப்பு  கேட்டார்

” நீங்க போய் சாரி கேட்டுட்டு?”

” ஏன்மா நானாலாம் கேட்க கூடாத…?”

” நீங்க பெரியவங்க என்கிட்ட போய் சாரி கேட்டுட்டு”

” இப்படி பெரியவங்க சின்னவங்க பார்க்கிறனால, மன்னிப்பு கேட்காம இருக்கிறதுனால தான் பெரியவங்க பண்ற தப்பு கேட்கபடுறதும் இல்ல அவங்க செய்கிற தப்பு தெரியிறதும் இல்ல. யாரா இருந்தாலும் தப்பு பண்ணா மன்னிப்பு கேட்கனும் ” என்றார்.

“சரி சார் ..”என்றாள்

” ஜானி , பிரஜன், மை பாய்ஸ்..

எனக்கு என் படிப்புதான் முக்கியம் இல்லாம மாணவர்களுக்காக பேசினீங்களே! யூ டூ  ஆர் கிரேட்”  என்றார்.

” இட்ஸ் ஆவர் டூயூட்டி சார்…” பிரஜன் கூற..” சார் தப்ப தட்டி கேட்கிறதும் எங்க கடமை தான் சார்? ” என்றான் ஜானி.

” ஒகே எல்லாரும் கிளாஸ்க்கு போங்க,” என்றார். ஐவரும் வளாகத்தில் நடந்துவர. தேவ் அமைதியாக வந்தாள்.இன்னும் அவள், அதிலிருந்து மீண்டு வராமலிருக்க, காயூ அவளை பார்த்துக்கொண்டே வந்தாள் ‘என்ன பேச? ‘ என்று தெரியவில்லை அவளுக்கு.

” டேய் பிரஜன்…”

” என்ன அண்ணா ?”

” நம்ம காலேஜ்ல ஜூனியரா வந்த ஒருத்தவங்க எனக்கா பயமா கேட்டு தைரியமா பேசுனாங்க, அவங்க யாருனு தெரியுமா உனக்கு..”

” ம் தெரியல அண்ணா, யாருண்ணா அது?”

” அதான்டா குள்ளவாத்து கத்திக்கிட்டே அங்கிட்டு இங்குட்டு சுத்திட்டே இருக்குமே அவ தாண்டா” என்றவனிடம்

‘குள்ள வாத்தா ?’ என முறைத்தவள்,

” நான் ஒன்னும் குள்ளவாத்து இல்லை ” வேகமாக கூற.” பார்ரா குள்ளவாத்து நீ இங்க தான் இருக்கியா? நான் வேற யாரோனு நிக்கிறாங்க நினைச்சுடேன்”  ஜானி கிண்டல் செய்ய, அவனை முறைத்தாள்,

” அம்மோ பயமா இருக்கு ” என்று அவளை போல் அழுதுகாட்டினான். “உன்னை…” அவனை அடிக்க துரத்தினாள் அவனும் அவள் கையில் சிக்காமல் விளையாட்டு காட்டினான்.

” என்னாச்சு மாமி அவங்களையே பார்க்கிறீங்க? “

“என்ன தான் சொல்லுங்க சாமி ஆண் ,பெண் பழகினா அது காதல்ன்னு சொல்லி தவறு தப்புன்னே வந்து நிக்கிதே இந்த சமூகம். ஏன் அவங்களுக்குள்ள இருக்கிற நட்போ அண்ணன் தங்கை உறவு இருக்குமோன்னு ஏன் நினைக்கிறதில்லை….?”

” ஆண் பெண் வெவ்வேறு பாலினம்.. சம்பந்தமே இல்லாத ஆட்கள் எ

கிட்ட பேசும் போது,மத்தவங்க பார்க்கும் விதம் அப்படித்தான் இருக்கும். அவங்க நமக்கு சொந்தமில்லாத போது தான், அவங்க ஆண் , பெண் என்று பாலினத்தை பார்க்கிறாங்க அதில் காதல் மட்டுமே இருக்கும் என்ற முடிவையும் எடுக்குறாங்க.  காலம் மாறியனாலும் மக்களோட மனசுல அதையே பதிய வைச்சிட்டாங்க,  சினிமாவில், ஆண் பெண் உறவை அவ்வாறே காட்டி மக்கள் மனுசுல பதிய வைச்சுட்டாங்க மாமி. நீ என்ன நினைக்கிற இவங்கள பத்தி…?”

” தேவ் அப்படிபட்டவ கிடையாது, ஜானி பத்தி எனக்கு தெரியாது. ஆனா,  அவங்களுக்குள்ள  ஒரு நல்ல உறவு இருக்கு,  எனக்கு எதுவும் தவறாக தெரியல…

காலேஜ்ல இப்படி சில உறவுகள் கிடைக்கும், அத தப்பா நினைச்சி அழிக்க வேண்டாமே!”  காயூ கூற ‘அதுவும் சரியென ‘ ஒத்துக் கொண்டான் சக்தி.

“தேவ்மா…” 

“என்ன ஜானி ?

” பயப்படுறதுனால எந்தப் பிரச்சினையும் தீர்வுக்கு வராது.பிரச்சனையை துணிந்து நீ எதிர்கொண்டால் தான் சீக்கிரமா சரியாகும். அழுகிறதுனால எதையும் சாதிக்க முடியாது.. உங்க கண்ணீரெல்லாம் பொக்கிஷமானது அதை தேவையில்லாதவர்களுக்காக வீணாக்காத. நிறையா பிரச்சினைகள் வரும் அதுக்கெல்லாம் யாரோ கூட வருவாங்க நினைக்க கூடாது, யாரும் சரி பண்ணுவாங்க எதிர்பார்க்க கூடாது நீயா பேஸ் பண்ணனும் சரியா…? ”  தலையை ஆட்டிகேட்க,

அவளும் தலையை ஆட்டி, ” நன்றி ஜானி” என்றாள்.

“நன்றிலாம் சொல்லகூடாது குள்ளவாத்து ” அவள் மூக்கை பிடித்து ஆட்டினான். “சரி வா போலாம்”  என்றான். இருவரும் சிரித்துகொண்டே வந்தனர். தேவைக் கண்ட காயூக்கோ நிம்மதி வந்தது.

” நன்றி ஜானி” அவனை பார்த்து காயூ கூற,  அவனோ ஆச்சரியமாக அவளை பார்த்தான்.. பின் தன்னை நிதானித்துகொண்டு.” என் தங்க(தங்கச்சி) என்ற வார்த்தையை சொல்ல நினைத்தவன் மாற்றி, “எங்க வீட்டு பெண்ணுக்கு ஒன்னுனா நான் செய்யமாட்டேனா, அதுபோல இதுவும் ” என்று சமாளிக்க,  ‘அவன் என்ன சொல்ல வந்தான் ‘என்ற சந்தேகமாய் பார்த்து விட்டு  மெல்லிதாய்  சிரித்தாள் காயூ.