ஒளி 2

காயத்திரி, நம்ம கதையின் நாயகி வயது 21.அப்பா சூர்ய நாராயணன் ஆடிட்டர், அம்மா தேய்வநாயகி இல்லத்தரசி.

சூர்யநாராயணனின் தாய் சரஸ்வதி(பாட்டி) காயத்திரியின்  தங்கை தேவதர்ஷினி.

காயத்தி பொறியியல் படித்திருக்கிறாள். அவளது கனவு M.E படித்து பொறியியல் கல்லூரியில் ஆசிரியர் ஆகவே வேண்டும்.

வீட்டார் விட்டாலும் அக்கப்பக்கத்தினர் அதாவது சமூகம் என்று சொல்லிக்கொண்டு திரியும் பக்கத்தாத்து வீட்டுமக்களே, “வரன்பார்க்க வில்லையா , பெண்கள் இவ்வளவு படித்தாலே போதும் , இன்னும் ஏன் மாப்பிள்ளை பார்க்காமா இருக்கீங்க?”என்று பெண்பிள்ளை பெத்தவர்களை விட  கூடுதலாக நெருப்பை கட்டி அழுகிறவர்கள் (வயித்தெரிச்சல்) இவர்கள் அல்லவா.

இன்னோரு சமூகம் என்று சொல்ல படும் பெண் வீட்டாரின் சொந்த பந்தங்கள், வீட்டில் பெண் இருந்தாலே போதும். அவர்கள் வாழ்க்கை சீர்கேடாக்க அவை கூட்டும் அமைச்சர்கள் அவர்கள் தான்.சரி மேலும் படிப்பை தொடங்க நினைத்தவளுக்கு கிடைத்தது கல்யாணப் பேச்சுகளும் புகுந்த வீட்டிற்கு அனுப்பிவைக்க வேண்டும் என்ற தீர்மானமே.

அவளின் ஜாகத்தில் கட்டிய தாலி கழுத்தில் நிலைக்காது இறங்கிவிடும் என்றிருந்தது.

சில நேரங்களில் ஜாகத்தில் கூறியதை போல் நடந்திட்டால், பல நேரங்களில் அவ்வாறே நடந்திடும் என்ற நம்பிக்கையே அவர்களுக்கு.

அதில் வைத்த நம்பிக்கை பலரும் தன்பிள்ளைகள் மேல் வைப்பதில்லை.  ஜாகதம் இப்படி என்றால் அதற்கு பரிகாரம் என அது ஒரு வியாபாரமாக கோவில் கோவிலாய் சுத்துவது.

கடைசியில் அவ்வாறு சுத்தியத்துக்கு பயனாய், சந்தோஷ் நாராயணன், அவளுக்கு மணமகனான். அமேரிக்காவில் சாப்ட்வேர் கம்பேனியில் வேலை பார்க்கும் தமிழ.

எங்கோ அவளை பார்த்துப் பிடித்து போனது. ஜாதகத்தை எடுத்துகூற மாப்பிள்ளை வீட்டார் தடுத்தாலும் இவளை தான் கட்டுவேன் என்று வந்தவனும் விதியின் சதியால் இறக்கப்பட்டான்.

அவளது ராசியே உண்மையாக்கப்பட்டத்தால். அவளை சபிக்காதவறென்று யாருமில்லை கோயில் குளம் என்றும் வெளியே சென்றாலும் ஏதோ கொலைகுத்தம் பண்ணியவாறு அவளை சாட பெண்மாதர் சங்கமே வைத்திருப்பார்கள் போல.

இருந்தும் அப்பேதை அப்போது மட்டும் தன்னை ஒரு கண்பார்வையற்றவளாய், காதுகேளாதவளாய்,

வாய்பேசாதவளாய் நினைத்துக்கொள்வாள்.

ஜாகத்தின் மேல் அவளுக்கு பெரிதும் ஈடுபாடே இல்லை தன் தந்தை , தாய் வாக்கே வேதம், அவர்களுடன் இருப்பதே நல்ல நேரம். அவர்களே தெய்வம் என்றே வாழ்பவள்.

முட்கள் நிறைந்த ரோஜா இவள், அழகிலும் பார்ப்பவரை ரசிக்கவைத்திடும்.தீண்டி பார்க்கும் மக்களுக்கு அவளது பதில் முட்களானது. தன் கணவருடன் வாழாது ஒருவாரத்திலே வீட்டிற்கு விதவை என்று வந்துவிட்டாள்.

கதையின் நாயகன்.ஜானிபிரிட்டோ…

இருபத்தி மூன்று வயது இளமைக்கு  சொந்தகாரன்.பார்பவரை கவரும் அழகு, கோதுமை நிறமுடையவன். அவனின் தேக அழகைவிட அவனின் பேச்சழகே பிறரை ஈர்த்துவிடும். அப்பா ஜேம்ஸ் பிரிட்டோ வளர்ந்து வரும் பிஸ்னஷ்மேன். அம்மா ஜெனிப்பர் ஜேம்ஸ்பிரிட்டோ அரசுபள்ளி ஆசிரியர். பாட்டி மேரி ஆல்வின் பிரிட்டோ. ஒரே தங்கை ஜெர்ஸி பிரிட்டோ.

பொறியியல் முடித்து அதே கல்லுரியில், M.B.A படிப்பை தொடர காத்திருக்கும் வாலிபன்.

தன் நண்பர்கள் தியாகிவரன் தாமஸ்,பைசல் இவர்களே. ரொம்ப நல்லவன் பெண்களை மதிப்பவன்.

வீட்டில் இருந்தால் பெரும் பத்திமானாகிடுவான். வேத வசனத்தை வாசிக்க ஜெபங்கள் செய்ய என்றே இறங்கிடுவான்.

வெளியே நேர்மாராக தன் நண்பர்களுடன் ஜாலியாக இருப்பான்.. நண்பர்களை தவிர்த்து இவன் வாழ்க்கையில் வந்தவள் தான் மெலினா,

பள்ளியிலுருந்து காதல் வலைக்குள் சிக்கியவர்கள். ஆறுவருட காதல் இதில் நான்கு வருடம் சின்சியராக சென்ற காதல் அவளின் கசின் வந்ததும். சின்சியர் குறைந்தது.சண்டைகள் சமாதானமின்றி தொடர ஆரம்பித்தது.

அவளின் கசினோ தன்பக்கம் அவளை ஈர்க்க பணத்தை ஆயுதமாக்க, அது அவனுக்கே சாதகமும் ஆனது.

ஜானியின் காதலை தூக்கி எறிந்து வந்தவன் பின் சென்றாள். பணம் இவளை மாற்றியதை நினைத்து சிரிப்பதா அழுவதா என்ற மனநிலை அவனுக்கு.

வருத்தங்கள் பல இருந்தும் தன் வீட்டில் இப்படி ஒரு மருமகள் வந்தால் தன் வீடு என்ன ஆகும்.

தலைக்கு வந்தது தலைப்பாவோடு போனது என்று நினைத்து தான் அன்று அவ்வாறு கொண்டாட்டம்.

இனி தன் வாழ்க்கையில் அவளுக்கு இடமே இல்லை என்று தீர்மானித்தவன் தன்னக்கென்று அழகிய குடும்பம் நட்பு படிப்பேன்று இருக்க எதற்கு சோகம் குடி என்று வாழவேண்டும் மற்ற ஆண்களை போன்று தாடி வைப்பதென்றால் அவன் முகத்திற்கு செட்டாகவில்லையாம்.

ஆமா,இனி

காதலும் அப்படிதான் செட்டாகாது நமக்கெதற்கு என்று, டேக் இட் இஸி பாலிசி ஆனது அவனுக்கு.

” அக்கா அக்கா… சீக்கிரமா வாக்கா ” தன் தமக்கையை அழைத்தாள்  தேவ்.

” நான் எதுக்கடி?  நீ அம்மா கிட்ட சொல்லிட்டு கிளம்பேன்” என்றாள் காயூ.

” அது நேக்கு தெரியும் இப்போ நீ வரப்போறீயா ? இல்லையா ?”

” சொன்னா கேளு தேவ் மா, அக்கா வரக்கூடாது டி”

” அதெல்லாம் தெரியாது. நான் முதல் நாள் கல்லூரிக்குப் போறேன். உன்னை பார்த்துட்டு தான் போவேன் வெளியவா “

என்றாள் சன்னமாக, ” வேணாம், நீ முதல் நாள் கல்லூரிக்குப் போற. நான் வந்து நின்னா அபசகுணமாகும் செல்லம்” 

” என்ன அபசகுணமாகும் அக்கா ? இதுக்கு முன்னாடி நான் பரீட்சை எழுதபோகும் போது  கூட உன்னை தானே பார்த்துட்டு போவேன். நீ பண்றது சரியில்லைக்கா ஒழுங்க வா என் முன்னாடி. ” என்று தன் அக்கா அறையின் முன்னின்று கத்திக்கொண்டிருந்தாள்.

இதுவரை கல்லூரிக்குச் செல்ல அவளை அலங்கரித்தவள், கல்லூரியில் எப்படி இருக்க வேண்டும் என்று அவளுக்கு அறிவுரை கூறியவள்,  கிளம்பும் தருவாயில் கதவை சாதிக்கொண்டு உள்ளே இருக்கிறாள்.

தன்னை ஒர் அமங்கலி எனவும் தான் முன்னே வருது ஓர் அபசகுணம் என்றும் எண்ணும் நிலையில் அவளை நிருத்திவிட்டனர் அக்கம்பக்கத்தினர்.

” சரி நீ வரமாட்டேல, அப்ப நான் காலேஜ்ஜூக்கு போகலை ” என்று அடம்பிடித்தாள். தங்கையின் இச்செயலே அவளை வெளியே கொண்டு வந்தது.

கதவை திறந்துகொண்டு வெளியே வந்தாள்.ஒப்பனை இல்லை நெற்றியில் சிறு திருநீறு,  காதுகளை ஒட்டிய சிறு தோடு.மெல்லியதாய் கழுத்தில் ஒர் செயின். ஒப்பனையின்றி அழகாக இருந்தாள்.

” என்னடி வேணும் உனக்கு…? “

” நீ தான் வேணும்…”

” நான் ஒரு அமங்கலி. நீ கல்லூரிக்குப் போக போற முதல் நாள். இப்படி நான் வந்து நிக்கிறது தப்புடி” மீண்டும் அதே சொல்ல கடுப்பானவள், ” லூசுக்கா நீ! நான் இப்பவும் சொல்லுறேன் தாலி மட்டும் தான் உன் கணவர் கட்டினது.

பூவும் பொட்டும் நம்ம அம்மா உனக்கு கொடுத்தது. புருசன் போனதும், அதெல்லாம் வைக்கக் கூடாதுன்னு சொல்ற உரிமையாருக்கும் கிடைக்காது.”

” அப்படி  எல்லாம் பேசமுடியாது தேவ்மா..

அதெல்லாம் ஏத்துக்காது இந்த சமூகம்”

” போ அக்கா, அந்த சமூகம் என்ன நம்ம மாமான மச்சானா. அவங்க பேச்ச கேட்க. நான் நம்ம மாமா பேச்சையே கேட்க மாட்டேன். அக்கா, எனக்கு  நீ இதை பேசுற பாரு அதான் வருத்தமா இருக்கு.

சரி சரி விட்டு தள்ளு இங்க வா ”  என்று அவளை வாசலில் நிருத்தியவள்,

சற்று தள்ளி போய் நின்றுகொண்டாள்.

” வாக்கா  ” என்று அவள் கூற அவளின் நினைப்புகளை பொய்யாக்கியது தங்கையின் பாசம். அவளே எதிரே வந்து தங்கையை அணைத்து முத்தமிட்டாள்.

” வர்றேன் கா ”  என்று கூறி சென்றுவிட்டாள்.

இதை எல்லாம் பார்க்க தவறவில்லை தன் முன்னே உள்ள கிருஷ்ணனின் பெரும் அறிவுரைகள் கூறும் அந்த கீதையின்  மொழியை படித்துக்கொண்டிருந்த சரஸ் பாட்டி.

அதை படித்து முடித்தவர். அதற்கே உண்டான இடத்தில் வைத்துவிட்டு அவளருகில் வந்து செல்ல அடியொன்றை வைத்தவர்.

” ஆ… சரஸ், ஏன் அடிக்கிற?” என்றாள்.

” காலம் இப்போ அப்டேட் ஆயிருத்துடி. புருசனோட முழுசா  தாம்பத்தியம் காதல்ன்னு வாழ்ந்து,   பிள்ளைகள், பேர பிள்ளைகள் பார்த்து சந்தோசமா வாழ்ந்து  ம


மு

டிக்கும் போது கணவர் இறந்தாருன்னா தாலியோட சேர்ந்து அவர் நினைவா அவர் கொடுத்த பொட்டும் அவர் வாங்கி தந்த பூவையும் எடுத்து போட்டாங்க.

அதுக்காக நீ ஏன் அப்படி இருக்கனும்? ஒருவாரம் கூட முழுமையாகல அதுக்கு உள்ள நீ அமங்கலியாம்.

போடி இந்தகாலத்து பெண்களைப் பார், பழைய பஞ்சாகத்தை எங்களை மாதிரி பேசித்திரியல காலம் மாற்றதுக்கு ஏற்று மாறிட்டுருக்கா. ஆனா, நீ இன்னமும் பழைய பஞ்சாகம் பேசுற. நியாயபடி பார்த்தா நான் தான் இத பேசிட்டு திரியனும். ஆனால், நான் அத ஏத்துகிட்டேன்.நீயும் ஏத்துட்டு

வாழு, வாழ பழகு” என்றவரை  ” ஆ- வென  ” பார்த்தாள் காயூ.

” அம்மா சொல்லுறது சரிதான். உன்னை இன்னமும் எங்கவீட்டு மகாலட்சுமி தான் நாங்க பார்க்கிறோம். நீ அமங்கலி இல்லை எங்க வீட்டு குலதெய்வம் காயூ மா.. ” என்று கூறியவாறு  அறையில் இருந்து வெளியே வந்தார் சூரிய நாரயணன்.

” அப்பா! ஆனா… ” தயங்கி நின்றாள்.

” ஏன் நம்ம வீட்குள்ள, அவங்களைச் சேர்க்கிற அபச்சாரமா இல்ல.நீயும் சமூகத்துல ஒருத்தி தான் உனக்கு எல்லா உரிமை இருக்கு வெளியே போக,இனி இப்படி நினைக்க கூடாது அப்பாகாக  ” என்று கெஞ்சினார்.

” ம்ம் சரிபா…” என்றாள்.

இங்கோ கல்லூரி முதல் நாள் தேவ்விற்கு கொஞ்சம் பதற்றம் ,பயம் , எதிர்பார்ப்பு , சந்தோசம்  என எல்லா உணர்வுகளும் அவளுக்குள் தோன்றியது.

தன்னோடு சேர்ந்து மூன்று தோழிகள் அவளோடு கல்லூரியில் வந்து சேர்ந்தார்கள். பள்ளியில் படித்த தோழிகள் என்பதால் கொஞ்சம் தைரியமும் இருந்தது.

தன் பிளாக் எங்கே உள்ளது என்று மூவரும் ஆராய்ந்து போதுதான் அங்கே கல்லூரியின் மூன்றாமாண்டு  மாணவிகள் அவர்களை அழைத்தனர்.

” நீங்க எல்லோரும்  பிரஸ்சர்ஸ் ஆ?”

” ஆமாம் ” என்று தலையாட்டினர்.

” எந்த டிப்பார்ட் மெண்ட்? ”  

” சிவில் ” என்றனர் கோரஸ்ஸாக.

” ம்ம் அப்படியா, நாங்க எல்லாரும் உங்க சீனியர்ஸ் எங்களை விஷ் பண்ணுங்க…” என்றனர்.

” சரி சீனியர். குட்மார்னிங் சீனியர்ஸ் ”  மூவரும் கோரஸ்ஸாக, பள்ளியில் போட்ட அதே டூயூனை இங்கயும் போட்டனர்.

“பள்ளியில இருந்த நேரா இங்க வந்துடாளுங்க போலடி…” இன்னோருத்தி கூற  அங்கே அனைவரும் சிரித்தனர்.

மூவரும் திரு திரு என முழிக்க..

ஒருத்தி மட்டும் ஓடிவந்து மூச்சு வாங்கி நின்றவள். ” ஹேய் விசயம் தெரியுமா ஜானிக்கு ப்ரேகப் ஆச்சாம் டி…”

” என்னடி சொல்லுற நிசமாவ? “

” ஆமா அவன் தான் ப்ரேகப் பண்ணானாம். அப்பாடா நம்ம ரூட் கிளியராச்சு

மெல்லினாவாம் மெல்லினா,  என்னா மினுக்கு மினிக்கிட்டு இருந்தா, நான் ஜானி காதலின்னு இப்ப வச்சானா ஆப்பு அதான் என் ஜானி…” என்று சிலாகித்து கொள்ள,

” ஆஹான் அது என் ஜானி…”

” அப்ப எனக்கு?”

” அடச்சி.. சண்டபோடாதீங்க ஜானி எனக்கு மட்டும் தான்…”  நாலுவரும் அவனுக்காய் சண்டை போட்டனர். ஆனால் அவனுக்கோ இவர்கள் யாரென்றே தெரியாது,. இங்கே நால்வரின் சண்டை பார்த்து தேவிற்கோ சிரிப்பே வந்தது.

” தேவ் சிரிக்காத, பார்த்தாளுங்க வச்சு செய்ய போறாளுக  ” அவளின் ஒரு தோழி “லத்திகா கூறினாள். ”  இவளுக சண்டயை பார்த்து  சிரிப்ப அடக்க முடியலை டி…” மேலும் சிரித்தாள்.

” வாய மூடிட்டு சிரிடி…” என்றாள் இன்னொருவள் தர்ஷனி.

  ” ஹேய் ஜானி வரான்டி அமைதியா இருங்க..” என்று நால்வரும் அமைதியாக அவன் வந்ததும் அவனுக்கு விஸ் பண்ணினார்கள்.

” குட்மார்னிங்  ஜானி சீனியர்…” என்று சற்றுமுன் அவர்களைபோட்ட கோரஸை, இவர்கள் பாட தேவ் வாய்விட்டே சிரித்துவிட்டாள். அதை பார்த்துவிட்டான் ஜானி.

” கிளாஸ்க்கு போங்க எல்லாரும்,.. ” என்றான்” சரி சீனியர் ”  என்று நகரந்தனர்.

”  ஹேய் நீ இரு ”  என்று அவர்களுடன் சென்ற தேவ்விடம் சொன்னான்.

” எதுக்கு சிரிச்ச ?”

” சும்மா தான் சீனியர்.” 

” இல்ல உண்மை சொல்லு…. “

” அதுவந்து சீனியர். எங்களை விஷ் பண்ண சொன்னாங்க. நாங்க விஷ் பண்ணோம். பள்ளில இருந்து அப்பிடியே வந்துட்டியா கேட்டாங்க. இப்ப அவங்களே அப்படிதான்  சொன்னாங்களா சிரிப்பு வந்திடுத்து ” என்றாள்.

”  ஓ… அதுக்கா, சரி எந்த டிபார்ட்மேண்ட் ?  “

” சிவில் சீனியர்….”

” இங்க ராக்கிங் யாரும் பண்ணமாட்டாங்க. அப்படி யாராவது பண்ணா என்கிட்ட சொல்லுங்க,  பயப்பிடாதீங்க ”  தன்மையாக அவன் கூறினான்.

” ராக்கிங்க்கு போய் யாரவது பயப்படுவாங்களா சீனியர்? ” என்று கெத்தாக தேவ் கூறினாள்.

” ஒ… மேடமுக்கு பயமில்லையா ? அப்ப வாங்க எங்க கேங்,  ராக் பண்ண வெயிட் பண்ணிட்டு இருக்காங்க வாங்களேன் போவோம்  ” ஜானி கூற, மூவரும் அதிர்ந்து அவனை பார்த்து பயத்தில் இளித்து வைத்தனர்.