ஒளி 12

” காயூவிற்கு  இன்னும் மூன்றுவருடத்தில்  கல்யாணம் செய்து வைக்க போவதாக ” பாட்டி கூற அதற்கு மாலதியோ ” இன்னொரு ஆளை காவு வாங்க போகிறேளா? ” என்றுகேட்க, காயூவிற்கு அழுகை வர உள்ளே சென்றுவிட்டாள்.

” மாலதி நோக்கு அறிவு இருக்கா? இப்படி தேளாட்டம் பேசிக் கொட்டுறீயே,  ” கேசவன் கேட்க, ”  நான் உண்மையை தானே சொன்னேங்க. அவ ஜாதகம் அப்படிதானே! “

” இந்த காலத்துல ஜாதகம் மன்னாகட்டின்னு “

” அவ ஜாதகத்துல இருக்கிறது தானே நடந்துச்சு “

” இங்க பாரு மாலதி, காயூ வீட்டுகாரர் ஆக்சிடென்ட் இருந்துட்டார். ஏன் அவருக்கு கல்யாணம் ஆகலைனா கூட அங்க இருந்தாலும் இறக்கறதுக்கு வாய்ப்பிற்கு. சும்மா சும்மா பிள்ளைய குத்தி காட்டாதடி ” என்றார் கேசவன்..

” நான் அப்படி என்ன  சொல்லிட்டேன் ?”

” நீ இப்படி பேசுவன்னு தான். நான் உன்னை எங்கயும் அழைச்சுட்டு போறதே இல்லை.”

” உங்க பொண்ணுக்கு இப்படி ஒரு நிலமை வந்தா இப்படியா பேசுவீங்க? ” லட்சுமி கேட்டார்.

அவர் தலைகுனிய,

” ஏன் உங்களுக்கு இந்த நிலமைனா உங்களுக்கு எப்படி இருக்கும் ?”

” அனிதா…” என கத்தினார் மாலதி.

” சும்மா சொன்னதுக்கே கத்திறீங்க. காயூ, நம்ம வீட்டு குழந்தை அண்ணி. அத போய் இப்படி பேசுறீங்களே ” அனிதா கேட்டாள்.

” என்னமோ பண்ணுங்க, உண்மையை  சொன்னா, கோபம் தான் வரும்  ” என்று எழுந்து சென்றுவிட்டார். சூரியா மன்னிச்சிருப்பா, அவளுக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன்.

” ஐயோ!

மாமா விடுங்க. அக்கா அப்படிதானே விடுங்க ” என்றார். இருந்தும் அனைவரும் கணத்த இதயத்தோடே சென்றனர்.

மறுநாள் காலையில், அவரவர் தங்களின் வேலைக்குச் செல்ல தயாராகினர். காயூவின் முகம் வாட்டமாகவே இருந்தது.

” காயூமா, உன் அத்தை சொல்லுறத பெருசா எடுத்துக்காதடா “

” அம்மா, அத்தை சொல்லுறதும் உண்மைதானே மா. என் ராசி அப்படி தானே…?”

” நம்முடைய எதிர்காலத்த தீர்மானிக்கிறது இந்த ஜாதகம் இல்லடிமா.. நம்முடைய நல்ல எண்ணங்களும் செயல்களும் தான்.”

” அப்பறம் ஏன் பாட்டி ஜாதகம் பார்த்தீங்க அக்காவுக்கு?”

” ஜாதகம் பார்க்கிறதெல்லாம் ஒரு கணிப்புக்காக தான்டா, அப்படியே நடக்கும் சொல்லமுடியாது.இன்னும் சிலரு அதையே தான் முன்னிருத்தி எல்லாம் செயலையும் செய்றாங்க.ஜாதகத்து மேல  நம்பிக்கை மட்டும் வச்சா போதுமா ?எல்லாம் நடந்திடுமா? .நம்ம முயற்சி மட்டுமே போதும் எல்லாத்தையும் சாதிக்கலாம் ” பாட்டி கூறினார்.

இருவரும் விடைபெற்றுக்கொண்டு கல்லூரிக்கு வந்தனர்…

” அக்கா நீ அதை எல்லாம் யோசிக்காத. அதெல்லாம்  பொய் அக்கா ”  என்பதற்கு வெறும் சிரிப்பை மட்டும் பதிலாக கொடுத்து தன் இடத்திற்கு சென்றாள்.

தேவ்விற்கோ மாலதியின் மேல் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. அதை தன் தோழிகளுடன் பகிர்ந்தாள்.

” இந்தமாதிரி ஆட்கள் இருக்கிறதுனால தான் சொந்த பந்தத்தை வெறுக்கிறாங்க டி. அவங்க வரலைன்னு யாரு அழுதா ? ”  தர்ஷினி குறைபட்டாள்..

” ஆமாடி, எதாவது விஷேசம் வந்தா போதும், வந்து மூக்க முட்ட திண்ணுட்டு, நம்மலையும் குறை சொல்லிட்டு போற கேரக்டர் தான்டி அதுங்க எல்லாம்…” லத்திகா கூறினாள்.

” கரேட் டி வந்ததுக்கு நல்லா வச்சு செஞ்சுட்டு போயிருச்சு..”

” என்ன குள்ளவாத்து காலை இவ்வளவு டென்சன் என்னாச்சு ? “

” ஒன்னில்லை ஜானி..”

” அப்படி தெரியலையே ஏதோ இருக்கு. என்ன விசயம் சொல்லு? ” 

” அது ஜானி ”  என அனைத்தையும் கூறினாள். ஜானிக்குக் கோபம் சுள்ளென வந்தது,டேபிளைக் குத்தினான்.

மூவரும் அதிரந்தனர். தன்னை கட்டுப்படித்தியவன்.

” உங்க அக்காவ தான் சொல்லணும் தேவ். இன்னும் எல்லாரும் பேசுறாங்கன்னு மூலையில் உட்கார்ந்து அழுதுட்டு இருக்கா பாரு. அவளைத்தான் சொல்லணும்.

ஏன் எதிர்த்து பேச தெரியாதா?

எவ்வளவு தெளிவா மத்தவங்க கிட்ட பேசுறா, இதுல எங்க போச்சு அவ பேச்சு, தைரியம் எல்லாம்?..

சும்மா சும்மா எல்லாரும் பேசிட்டே இருக்காங்க சொல்லி அழுதுட்டே இருந்தா, அழுதிட்டே இருக்க வேண்டியது தான். அவங்களும் மாற மாட்டாங்க, நாமலும் மாறவே மாட்டோம். போய் சொல்லு உங்க அக்காகிட்ட, சமூகம் பேசுற பேச்சுக்கெல்லாம் செவி சாய்த்து வாழ்ந்தா, தினமும் கண்ணீர் தான் சிந்தணும் “

கோபத்தோடே சென்று விட்டான்.’  இவன் ஏன் இவ்வளவு கோபப் படுறான் ?’  அவனைப் பார்த்துகொண்டிருந்தாள்.

” இங்கோ ஏன்டிமா உன் முகம் இப்படி வாடிருக்கு?” சுந்தராம்பாள் கேட்டார்..

” அதெல்லாம் எதுவுமில்லை சுந்திரம். நான் நல்லாத்தான் இருக்கேன். “

” காயூ சொல்லுடி ” கௌசி கேட்க,

” ஒன்னில்ல அண்ணி…”

” தினமும் சிரிச்சு, மலர்ந்த பூ மாதிரி இருக்குமே உன் முகம். இன்னைக்கு ஏன் வாடிருக்கு ?..” ராமனும் கேட்டார்.

” அட சொல்லு தங்கச்சி.”

என்றதும் அனைத்தையும் கூறினாள்.

” லூசாடி நீ வாய் எம்முட்டு பேசுற அவங்களை பேசிவிட்டு வரவேண்டாம். ஜாதகம் மன்னாகட்டின்னு,

இதெல்லாம் இன்னமும்  அதுவும் இந்த காலத்துல பார்த்தா வேஸ்ட் டி.நம்ம வாழ்க்கையில தேலையில்லாத ஒன்னு இந்த ஜாதகம்.”

” எம்மா மாமி, நேத்து அவ்வளவு தெளிவா சொன்னீங்க, இன்னைக்குப் பேச்சைக் கேட்டுட்டு வந்து சோக கீதம் வாசுக்கிறீங்க.

பாம்புலருந்து எல்லா மிருகமும், தனக்கு ஒன்னுனா தன்னை துன்புருத்துறவங்க கிட்ட சண்டை போடுது,.நீ மனுசி தானே! அப்பறம் ஏன் பேசல.

இந்தா மாதிரி ஆட்கள் கிட்ட அவங்களமாதிரி தான் இருக்கணும்.

உன்னை எப்படி நடத்தறாங்களோ பேசுறாங்களோ, அப்படியே நீயும் பேசு அவங்களை  அப்படி

நடத்திறதுல தப்பு ஒன்னில்லை காயூ. ” சக்தி கூறினான்.

” ஆமா தேளாட்டாம் குத்திறவங்கிட்ட நாமலும் தேளாத்தான்டா இருக்கணும் இல்லைன்னா, காயம் நமக்கு தான் அதிகம் வரும்..

நீ அதையே நினைக்காதடா,க்ளாஸ் எடுக்கணும்ல அதுக்கு பாரு.வாழ்க்கையில இது மாதிரி பேசுறவங்களைக்  கடந்து போகனும் டா. ” 

” சரிப்பா ”  என்றாள்.

” ஏன்டா இங்க தனியா உட்கார்ந்து இருக்க கிளாஸ்க்கு  ஏன் வரல ” தியாகு கேட்க  ” மனசு கஷ்டமாயிருந்தது அதான்டா வர்றல” என்றான்.

” ஏன் என்னாச்சு ?” தேவ் கூறியதை கூறியவன்,”  பாவம் காயூ, ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு  விதத்துல அவளை கஷ்டபடுத்துருங்கடா.

அவங்க எதைத் தான்டா நினைச்சு வருந்துவாங்க.

சந்தோசமாவே அவ இருக்க கூடாதா? சின்ன பொண்ணு அவ,  பேசுறது கூட கம்மியாதான் பேசுவா. இதுல இப்படிவேற, எல்லாரும் ஏன்டா அவள முடக்கி போடுறாங்க?”

” நீ ஏன்டா அவங்களுக்காக பீல் பண்ற?.”

” தெரியல மச்சி, அவ கஷ்டபடுறத என்னால ஏத்துக்கவோ தாங்கிக்கவோ முடியல. அவ கூட இருந்து அவளைப் பேசுற எல்லாரையும் நல்லா நாளு வார்த்தைக் கேட்க  தோணுது.”

” டேய் என்னடா பேசுற நீ காயூவ?.” அவனை பார்த்த ஜானி, ” தெர்லடா,

ஆனா, அவ கஷ்டபடும் போது மனசு துடிக்குது.” என்றான் கண்களில் நீர் பட.

” டேய்! இதெல்லாம் நடக்கிற விசயம் இல்ல ஜானி  ”   

” நம்ம மனசு ஆசைபடுறதெல்லாம் கிடைக்காதுன்னு தெரிஞ்சது தானே!.”

” வேணாம் மச்சி, இது

பெரிய பிரச்சினைல முடிந்துடும் “

” தெரியும் டா… என்னை நானே கட்டு படுத்திட்டு இருக்கேன்.இதை காதல்ன்னு சொல்லி, அவ பின்னாடியே சுத்துறது..

நான் இருக்கேன், நான் கடைசிவர இருப்பேன் நம்பிக்கை கொடுத்து, அவளை மேலும் நான் கஷ்டபடுத்த போறதில்லை டா.

அவளுடைய  சந்தோசம் எதுவோ அதையே அவ செய்யட்டும், நான் தூரமா நின்னு பார்த்தால் போதும்டா. அவளைக் கஷ்டபடுத்திறது யாரா இருந்தாலும், அவங்களை நான் சும்மா விடமாட்டேன்.காயூ சந்தோசத்துக்காக அவளுக்கே தெரியாம என்ன வேணாலும் பண்ணுவேன்.” என்றான் தீர்க்கமாக.

” மச்சி உன் வாழ்க்கை? “

” தெரியல, இப்ப வாழற வாழ்க்கை எனக்கு சந்தோசமா தான் இருக்கு.  அவளைத் தூரமா இருந்து பார்க்குறதும் கொஞ்சம் பேசினாலும் அதுல ஒரு திருப்திகிடைக்குது மச்சி.”

” மச்சி, நீ உண்மையாவே லவ் பண்றீயா அவங்கள?  “

” இதுக்கு பெயரு லவ்ன்னு நான் பெயர் சூட்ட விரும்பலைடா.” ஆனா, ஏதோ ஒரு அழகான உணர்வு. மெலினாவை லவ் பண்ணப்போ கூட இந்தமாதிரி  உணர்ந்ததே இல்லை நான். இது வித்தியாசமா இருக்கு.”

” இப்படியே இரு ஜானி… அதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போனா, உனக்கு தான் ஆபத்து ” என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

இங்கோ வெங்கட் M.C.A ஹெச். ஓ.டி யை திட்டிக்கொண்டிருந்தார்..

” என்ன இது, கிளாஸ்க்கு ஒழுங்கா வராதவனக்கு பிரசண்ட் மட்டும் கரேட்டா போட்டுருக்கீங்க எப்படி சார்?.”

” சார் நாங்க என்ன பண்ண? அவன்  யாரோட பையன் உங்களுக்கே தெரியும். அவன் யாரையும் மதிக்கவே  மாட்டிக்கிறான் சார்.

நாங்க வயசானவங்க பசங்க முன்னாடி அவமானபட்டா நல்லாருக்குமா ?

நீங்க பிரசண்ட் போடுறீங்களா? இல்லை, நானே போடவான்னு கேட்கிறான்.. என்ன பண்ண சொல்லுங்க? கிளாஸ்க்கு வந்தா பாடம் எடுக்க விடமாட்டிகிறான் சார்.

பொண்ணுங்க பயந்து இருங்காங்க. அவனை ஏன் சார்சேர்த்தீங்க ?இப்பகூட நான் தான்  இதை சொன்னேன்னு தெரிஞ்சா என்னை எதாவது சொல்லி அசிங்க படுத்துவான் சார். “

” நீ போங்க சார், நான் பார்த்துகிறேன். இனி க்ளாஸ்க்கு வரலைன்னா ஆப்செண்ட் போடுங்க.இந்த மாதிரி பண்றவங்கள, அடிச்சு தான் சார் திருத்தணும்.. ” என்றார் வெங்கட்

” சரி சார் ”  அவர் சென்றுவிட, பியூனை விட்ட ஸ்ரவனை  அழைத்து வர சொல்லுமாறு சொன்னார் வெங்கட். அவனும் வந்தான்.மரியாதை இன்றி அவர் முன் சேரில் அமர்ந்தான்.

முதலில் வெங்கட் எதுவும் சொல்லவில்லை.” ம்ம்… கிளாஸ்க்கு போகாமலே பிரசண்ட் போட சொல்லிருக்கிங்க போல.” என்றார்.

” ஆமா அங்க எல்லாம் எவன் போவான். சும்மா அறுத்துடே இருக்காங்க.

நானெல்லாம் காலேஜ்க்கு வரனும் அவசியமே இல்லை சார்.இதேல்லாம் தேவையில்லாதது.”

” அப்பறம் ஏன்டா படிக்க வந்த?.. “

டேபிலை தட்ட பயந்து எழுந்தான்.

” படிக்க இஷ்டமில்லைனா எதுக்குடா வர்ற? உன்னையாருட வெத்தலை பாக்கு வச்சு கூப்பிட்டது.. காலேஜ்க்கு வந்தா ரூல்ஸ்ஸை மீற கூடாது. பலோவ் பண்ணணும் முடியலைனா கிளம்பிட்டே இரு. உனக்கு டிசி தர எனக்கு ரொம்ப   நேரம் ஆகாது.யாரு வருவா, ஏன் டி.சி. கொடுத்தீங்க வந்து கேட்க?

யாரும் வரமாட்டாங்க, ஏன் உங்க அப்பா கூட வரமுடியாது. ஏன்னா உன்மேல கம்பளைண்ட் வந்துருக்கு, என்னால ஆக்சன் எடுக்க முடியும்.

ஏன் உன் பெரியப்பானால கூட ஒன்னும் சொல்லமுடியாது.

அவருக்கு ஒரு போன்போட்டா போதும்..உன்னோட டி.சி, கிழிந்திடும் பார்க்கிறீயா.

நீ யாருக்கு வேணா பயப்பிடாமா இருக்கலாம். ஆனா, நீ எனக்கு பயந்துதான் ஆகனும்.

ஒழுக்கமா கிளாஸ் இருக்கிறீயா ? இல்லை காலேஜ் விட்டு போறீயா ? போனா உனக்கு தான் அசிங்கம் எப்படி வசதி? ” என்றார். இப்போது அவர் திமிராக அமர்ந்தும் அவன் நின்றான்.

தன்னால் ஒன்னும் செய்ய முடியாத நிலை நின்றான் ஷ்ரவன்.ராஜாவாக நினைத்து வலம் வந்தவனை அடக்கி விட்டது போலே உணர்ந்தான்

” நான் கிளாஸ்ல
ஒழுக்கமா இருக்கேன். எல்லாருக்கும் மரியாதை கொடுக்கிறேன்” என்றான்.

” யாருக்கிட்டையும் வம்ப பண்ணாத, கிளாஸ்க்கு போ.” என்றார்.

” ம்ம் நன்றி ” என்று சென்றான்.

” என்ன மச்சி என்னாச்சு பிரின்சி என்ன சொன்னாரு? அவரே பயந்தாரா?” என்று அவன் கூறி சிரித்து வைத்தான்…” என்னைய பயப்பிட வச்சுட்டார்டா” என்றான்.

” உன்னையேவா எப்படிடா ?” நடந்தை கூறினான். ” ஆதிசார் பையன் ஒரு பயமில்லையாடா அவருக்கு “

” விடுடா, இந்த காலேஜ் எங்க கைக்கு வரட்டும். அப்ப அந்தாளுக்கு இருக்கு” என்றான்.

” அதுக்குள்ள நான் போயிருவேனே மச்சி “

” இல்லை மச்சி, எல்லாமே நம்ம இருக்கும் போதே நடக்கும்.”

” ம்,.. பாப்போம் டா ” என்றான்.

இங்கோ நால்வரும் அமர்ந்திருந்தனர்.

” மச்சி நான் போய் தேவ்கிட்ட என் காதலைச்

சொல்லவா ? ” தியாகு கேட்டான்.

” மச்சி உண்மையாவே நீ தேவ்வை காதலிக்கிறீயா?.”

” டேய்! நான் என்னடா பொய்யா சொல்லிட்டு இருக்கேன்.  உண்மைதான்டா, நான் அவளை லவ் பண்றேன் ” என்றான்..

” டேய் ஜானி… நீ சொல்லுடா ” என்று உலுப்பவே நினைவுக்கு வந்தவன், ” என்ன மச்சி? ” என்றான்.

” டேய் எங்கடா இருந்த இவ்வளவு நேரம் ? நான் என்ன சொல்லிட்டு இருந்தேன். நீ என்ன யோசனையில இருக்க? “

” சாரி மச்சி, நீ சொல்லு இப்ப என்ன சொன்ன?…” ஜானி கேட்க

” ம்க்கும் நான் தேவ் கிட்ட காதலை சொல்லவான்னு கேட்டேன்டா  “

” அதுக்குள்ளவா..” என்று ஜானி பதறினான். ”  நீ ஏன் இப்படி பதற?”

” மச்சி. நான் உன் நல்லதுக்குதான் சொல்லுவேன், நீ கேட்பீயா? “

” எரும! நீ என் பிரண்டு. உன் பேச்ச கேட்காம இருப்பேனாடா! “

” இங்க பாரு தியாகு, அவ இப்ப தான் பர்ஸ்ட் இயர் படிக்கிறா, அவளுக்குன்னு சில கனவுகள் இருக்கும்டா. அதை காதல் சொல்லி கலைக்க வேணாம் டா…

கல்யாணம் ஆகாத வரைக்கும் தான்டா பெண்கள் ஒரு அழகான பட்டாம்பூச்சி அவங்க சுதந்திரமா பறக்கனும் தன்னோட ஆசை நிறைவேத்திகனும் நினைப்பாங்க. கனவு , லட்சியம் சுமந்து வாழவேண்டிய வயசுல தான் ஆண்கள் சிலர் காதல்ன்னு சொல்லி அவங்க வளையில விழ வச்சு. அவங்க வாழ்க்கையே நசமாக்கிடுறாங்க..

போதும் டா நம்ம கிட்டருந்தே ஒரு மாற்றத்தை கொண்டு வருவோம்.ஒவ்வொரு பொண்ணும் கல்லூரிக்கு வரதே தன்னோட லட்சியத்துக்காக தான். ஆனா, இடையில நாமதான் காதல்ன்னு சொல்லி மனசை மாத்தி அவங்க லட்சியத்த அடையவிடாம செய்து கல்யாணம் பண்ணி படிக்க விடாம அடுப்பறையில போட்டு விடுறோம்.

இந்த பெற்றோர்கள் அதுக்கு மேல ஸ்கூலுக்கு அனுப்பிறதுக்கே பயப்படுறாங்கடா.அடுத்து காலேஜ் அனுப்பாமான்னு யோசிக்கிறாங்க.

பொட்ட பிள்ளைக்கு படிப்பு எதற்குனு சொல்லி அந்த பதினெழுவயசுல ஒரு இருப்பத்தியெட்டு வயது பையன கல்யாணம் பண்ணி வைச்சு பதினேட்டு வயசல பிள்ளையகொடுத்து. அவன் ஆசை மொத்தமும் பிள்ளையா சுமந்து வலியனுபவிச்சு சாகனுமா அந்த பத்தொன்பது வயசு பிள்ளை. ஏன்டா பிள்ளைய பார்த்துகிட்டு வாழனும் அடுப்பங்கறைல ஏன்டா இருக்கணும்..

காலம் மட்டும் பெண்களுக்கு எதிரா மாறவே இல்லை காரணம் தான் மாறிருக்கு.ஆனா, விசயம் மாறவே இல்லை.நாமலும் சரி பெற்றோர்களும் சரி திருந்துவதும் இல்லைடா.

அவங்க கல்யாணம் சொல்லி திணிக்கிறாங்க.நாம காதல்னு சொல்லி திணிக்கிறோம்.

சரி எத்தனை பேர் கல்யாணம் ஆகி வேலைக்கு வந்தாலும், அவங்களால சுதந்திரமா எதாவது வாங்கமுடியுமா? இல்ல செலவு பண்ண தான் முடியுமா? கோடில இரண்டு பெர்சண்ட் பெண்கள் தாண்டா சுதந்திரமா இருக்காங்க.

ஆனா, முக்கால்வாசி பெண்களுடைய லட்சியம், காதல் ,கல்யாணம்ன்னு கருகி தான் போகுதாடா.

அவளுக்கு இப்பதான் பதினேழுவயசு ஆகுது, அவகிட்ட காதல் சொல்லுவான்னு கேட்கிறீயே!மெச்சுருட்டி ஆகாத வயசுடா.

நான் பண்ண தப்ப நீ பண்ணாத.

அவ இன்னும் குழந்தைடா. நமக்கு இப்ப இருபத்திமூனு வயசு ஆகுது.

நாமலே சின்ன பசங்க தான்டா.

நம்ம முதல்ல நல்ல ஸ்டேஜ்க்கு வருவோம் டா.

அப்புறமா காதல், கல்யாணம் வருவோம்.

பெத்தவங்க காதலை வெறுக்கிறதுக்கு காரணமே இதான்.

படிக்கிற காலத்துல படிக்காம காதலுனு சுத்திட்டு வீட்டுல தெரிஞ்சு ஒன்னு பிரிச்சுவிடுறாங்க, இல்ல பிரிச்சுவிட்டு ஒருபையனைப் பார்த்து கல்யாணம் பண்ணி வச்சுறாங்க. பையன் தாடி வளர்ந்துட்டு டிரிங்க்ஸ் பண்றான்.இல்லைன்னா ஓடிபோய் கல்யாணம் பண்ணிக்கிறது.

அப்ப முழுசா படிக்கமா சின்ன வேலை,செய்து வாழ வேண்டிவரும் அந்த பொண்ணும் கஷ்டபடுவா. நம்ம வீட்டுலை இருந்தா நல்லாருந்துருக்குமோனு நினைப்பா,அப்பறம்….?

சோ பொண்ணுங்க

அவங்க போக்குல இருக்க விடுவோமே இந்த காதல் சிறையில பூட்டி அடைக்க வேணாம்.

நாம முதல் திருந்துவோம்.அவங்க லட்சியத்த அடைய சின்ன உதவியா காதல்ன்னு சொல்லி தடுக்குகாம வழி விடுவோமே. ” என்று கூற நால்வரும் அவனை கட்டிக்கொண்டனர்.

நம்ம வீட்டுலையும் பெண்கள் இருக்காங்கடா.எல்லா பெண்கள் நம்ம வீட்டு பெண்கள் டா.முடிஞ்ச அளவுக்கு ஒரு காவலனா நின்னு பாதுகாப்போம் டா. “

” கண்டிப்பா மச்சி முதல்ல நாம மாறவோம்டா. அப்புறம் மாத்துவோம் “

” டேய் அவ படிக்கட்டும் டா.நான் காதல் சொல்லி தடைபோடமாட்டேன் டா.

அப்படியே நான் நல்ல நிலமைக்கு வந்து அவள பொண்ணுகேட்டுகிறேன் டா.அப்படியும் வேற பையன காதலித்தால் கூட நான் விட்டுகொடுக்க தயாரா இருக்கேன்டா. ” 

” மச்சி அவ உனக்கு தான். கொஞ்சம் பொறுத்துகோடா.அவ நல்லா படிக்கட்டும். உனக்கு தான் தேவ்ன்னு எழுதிருந்தா, அவ உன்னை வந்துசேர்வாடா” என்றான் ஜானி.

நன்றி மச்சான், ” பரவாயில்லடா..  ” அவங்க வழில அவங்க போக நாம ஏன் தடையா இருக்கனும் சொல்லு பாப்போம் ” ம் கரேட்டா. “

இவர்கள் பேசிக்கொள்ள அங்கே தேவ் வந்தாள்.. ” நீங்களாம் க்ளாஸ்க்கே போக மாட்டிங்களா? எப்பையும் அரட்டைதானா!.” என்றாள். இப்போது லன்ஞ் டைம் என்பதால் அவளும் தோழிகளோடு சாப்பிட வந்தாள்.

” வந்துடாங்க லெட்சரர் அம்மா கேள்வி கேட்க “என்றான் தாமஸ்,

” ஏன் கேட்க கூடாதா? நான் கேட்பேன் ஏன் கிளாஸ்க்கு போல?” 

” ஆறு கிளாஸ் எங்களுக்கு. அதுல இரண்டு ப்ரியட், யாரும் வரமாட்டாங்க லெஷ்சர் ஹார் தான்.அப்படியே வந்தாலும் மொக்கைதான் போடுவாங்க. அதுக்கு நாங்களே தனியா உட்கார்ந்து  போட்டுகிறோம் சொல்லிவந்துடோம்.” பைசல் கூறினான்.

” க்கும் வாங்க சாப்பிடலாம் ”  என்று அமர்ந்தனர்.” இந்த நேரத்துக்காக எவ்வளவு நேரம் சகிச்சுகிட்டு உட்கார்ந்து இருக்கிறது, ச்ச ரொம்ப கஷ்டம்ப்பா.. “

”  அப்ப எல்லாரும் சாப்ட, அரட்டை அடிக்க தான் வரீங்க, யாரும்  படிக்க வர்றல ?  யூஸ்லெஸ் காய்ஸ்..” .

என்றாள் தேவ்..

” ஓஓ… அப்ப மேடம் எதுக்கு வந்தீங்க?.” ஜானி கேட்டான்.

” நான் படிக்க வந்தேன். நான் படிச்சு பெரிய இன்ஜினியராகி, கவர்மெண்ட் எக்ஜாம் எழுத்தி அதுல ஸ்லெக்ட் ஆகி மக்களுக்கு தரமான கட்டிங்களைக் கட்டிகொடுப்பேன்.” என்றாள்.

” அப்ப! நீ  ஏன் சாப்பிட வந்த? போ,போய் படிக்க வேண்டியது தானே! ”  அவள் சாப்பாட்டை தன் பக்கம் இழுத்தான் ஜானி.அவனை முறைத்தாள்.

” என்ன தான் லட்சியம் இருந்தாலும் சோறு முக்கியம் அமைச்சரே!

என்ன லகுடாபாண்டிகளா உண்மைதானே?. “

  ” ஆமா மன்னா  ” என்று கோரஸ் பாடினர். அவர்களைக் கண்டு தலையில் அடித்துக்கொண்டாள் தேவ்.

” தேவ்  உன்கிட்ட ஒன்னு கேட்கவா  உன்கிட்ட யாரவது ப்ரோபோஸ் பண்ணா என்ன பண்ணுவ… “

” சாரி நான் என்னுடைய லட்சியதோடு கமிட்டாயிடேன்.சோ, நான் கமிட்டட் சொல்லி அனுப்பிவிட்டிருவேன்.”

” இதே டயலாக் எப்பையும் சொல்லுவீயா தேவ்? “

” ஆமா, ஏன் கேட்கிற ஜானி ?”

” சும்மா கேட்டேன்டா. குட் இப்படிதான் இருக்கனும் சரியா”

” ம் சரி ஜானி…” கூறியவள் சாப்பிட அமர்ந்தாள். ஜானி தியாகுவை பார்த்தான். அவனோ தலையசைத்தான்.

ஜானியின் அலைபேசி அலறியது, யாரென்று பார்க்க பாட்டி தான்…

” சொல்லு மேரி “

” டேய் நீ கவிதை எதுவும் எழுதினியாடா ? ” 

” ஆமா பாட்டி “

” அங்க இருந்து ஆள் வந்திருக்காங்கடா, உன் கவிதைக்கு, முதல் பரிசு கிடைச்சிருக்கு, பணம் கொடுக்க வந்திருக்காங்க.”

” நிஜமாவா மேரி… என் கவிதைக்கு முதலிடமா!, சரி மேரி அதை வாங்கி வச்சிடு” என்றான்.

  ” சரிடா வை  ” என்றார்.

” தியாகு, நான் எழுதன கவிதைக்கு முதல் பரிசு கிடைச்சிருக்குடா.”

” ஹேய் நிசமாவாடா! வாழ்த்துக்கள் ஜானி ” என்றனர் அவன் நண்பர்கள்.

” என்ன கவிதை ஜானி ? ” என்று தேவ் கேட்டாள். “விதவைப் பற்றி கவிதைப் போட்டி வைத்திருந்தாங்க, நான் அதுக்கு கவிதை எழுதி அனுப்பினேன். அதுக்கு தான் முதல் பரிசு போல பணம் கொடுத்திருங்காங்கலாம்.” என்றான்.

வாழ்த்துக்கள், என்றும் எல்லாரும் கூறினர். ‘ இதை காயூ படிக்க வேண்டுமே ‘  என்ற ஆவல் எழுந்தது அவனுக்குள், அதனை செயல்படுத்த வேண்டுமை என்று யோசித்தான் ஜானி..