ஒளியாய் பாய்ந்தாயே 1

மேள தாளங்கள் முழங்க,  அவ்வீட்டின் சுவருகளோ வண்ணப்பூக்களால் அலங்கரித்து,  வீடே கல்யாணக்கலை கொண்டிருந்தது. சேலை கட்டும் பெண்கள் அழகுதான் அதிலும் மடிசார்
கட்டிய பெண்கள் பேரழகு. அந்த வீடு முழுவதும்  வயது வித்தியாசமின்றி மடிசார் கட்டிய பெண்களே இருந்தனர். ஆண்களும் வெற்றுடம்பில் குறுக்கே அணிந்த பூணூலுடையோறே.

ஐயர்  மந்திரங்களை ஓதி,  ” நாழியகிறது பெண்ணை அழைச்சுட்டு வாங்கோ…” என்றழைக்க மணப்பெண்ணும் வந்தாள்.

கார்கூந்தலை மல்லிகைச் சரம் அலங்கரித்திருந்தது. அழுகுநெற்றியில் நாமம் திலகமிட்டு கண்ணிலோ மையிட்டு எவ்வித ஒப்பனையின்றி,  நகைகள் பல இட்டு மடிசார் புடவையில் பேரழகொன்று புகுந்திருக்க அங்கே யாருடையக் கண்ணும் அவள் மேல்
படவில்லை என்று கூறவே முடியாது.

தன் தந்தையின் மடியில் அமர மாப்பிள்ளைத் தாலியை மேலே தூக்கி காண்பித்து அவ்வளழகு கழுத்தில் காட்டினான்.

கீழே அணைபோலிட்ட மையை தாண்டியும்
அவளது கண்களும் கண்ணீர் விட்டது. தாலிகட்டும் பொழுதில் மேளதாளங்கள் கொட்டபடுவதே புதியதாய்
வாழ்க்கை தொடங்கும் மணமகனும் மணமகளும் எந்த வித குறைகளையும் கேட்க கூடாதென்று தான். அதே போல் இங்கே மேளதாளங்கள் இட்டும் சிலரின் பேச்சு செவியில் எட்டாமாளில்லை,

” ம்.. என்ன பண்ணி என்ன பிரோஜனம் மாப்பிள்ளை தான் இறந்துவிடப் போறானே. ” என்றார் கூட்டத்தில் ஒரு பெண்.

” என்ன அக்கா சொல்லுறேள்?” முகவாயில் கைவைத்து ஆச்சர்யமாய் கேட்டாள் இன்னோரு பெண்.

“நோக்கு விசயம் தெரியாதாடி. இந்த பெண்ணோட ஜாகத்தில, கல்யாணம் பண்ணினா மாப்பிள்ளை செத்துருவான் இருக்கு டி”

” ஐயோ! அப்புறம் ஏன் அக்கா இந்த கல்யாணம் ? “

” நீ வேற, மாப்பிள்ளை பொண்ணை எங்கோ பார்த்து பிடித்திடுத்துன்னு, கட்டுனா இவளைத்தான் கட்டுவேன் என்று பிடிவாதம் பிடித்திட்டான். நான் பல தடவ சொல்லிடேன் பிடிகொடுக்கல. இவனை நினைத்தால் தான்
கஷ்டமா இருக்கு. அவ அம்மா அப்பா என்ன பண்ண போறாளோ…!” என்று தலையில் அடித்துக் கொண்டாள்.

இதர சடங்குகள் முடிய பெண் தன் புகுந்த வீட்டிற்கு செல்லவேண்டுமல்லவா.தன் தந்தையைக் கட்டிபிடித்து அழுதாள் தாய் , பாட்டி , தங்கை என்று தன் இரத்த உறவுகளை கட்டியணைத்து விட்டுச் சென்றாள். போகும் வழியெங்கும் கனத்த மனதோடு இருந்தாள்.

அவள் கையை எடுத்து தன் கைக்குள் வைத்தவன்….” காயூ நீ அழுவது இது தான் கடைசியாக இருக்கட்டும். இனி நான் தான் உனக்கெல்லாமே. நாம நல்ல நண்பர்களா இருக்கலாம். அப்பறம் கணவன் மனைவியா வாழலாம் உனக்கு விசா கிடைத்ததும் உன்னை அமேரிக்கா கூட்டிப்போகிறேன். நாம் புது வாழ்க்கை  வாழலாம். ”  என்றவனுக்கு தலை மட்டும் அசைத்துவைத்தாள்.

அவளின் நாணம் அவனுக்கு பிடித்தது. சடங்குகள் முடிந்தது உள்ளே அழைத்து வந்தார்கள் அவளை.

என்ன தான் மருமகள் வந்தாலும் தன் மகனை விழுங்கும் ராசிகொண்டவல்லவா கொஞ்சம் கோபம் தயக்கம் வேற அவளிடத்தில்.

பாலும் பழமும் கொடுத்தனர்.பின் இரவும் வந்தது, ஏனோ அவள் ஜாதகத்தில் அப்படி ஒரு விசயம் இருப்பதால் பரிகாரங்கள் கேட்டு மூன்றுமாதம் தாம்பத்தியம் இல்லாது, கடவுளுக்கு விளக்கிட வேண்டும் என்று கூறியதால் மாப்பிள்ளை, பெண்ணையும் பிரித்து வைத்தார் மாப்பிள்ளையின் தாயார். இருவரும் வேற வேற அறைக்குள் செல்லும் பொழுது
மெல்லியதாய் சிரித்துவிட்டு உள்ளே சென்றனர்.

காலை அழகாய் விடிந்தது, மாட்டு பொண்ணாச்சே வாசல்தெளித்து கோலமிட்டு பல மந்திரங்களை ஓதி வீட்டையே கோயிலாக மாற்றிய தன் மருமகளை எண்ணி மெச்சிக்கொண்டாளும் வெளியில் காட்டாது விறைப்பாக நின்றார்.
சந்தோஷ்ஷூம் காயூவும் கோயிலுக்கு சென்று வந்தனர்  இருவரும் சகஜாமாகினர்.

விதி வலியதல்லவா ஆர்டர் என்ற பெயரில் தன் விளையாட்டை தொடங்கிய அவ்விதி. சந்தோஷ்ஷின் உதவி பெரிதும் தேவைப்படுவதால் வேலைக்கு கண்டிப்பாக வரவேண்டும  என்ற கட்டாயத்தில் வேறு வழியின்றி மனமின்றி அமேரிக்கா செல்ல தயாரானான் சந்தோஷ்.

அவளோ அவனுக்கு உதவிட அவளை அமரவைத்து ”  சாரி காயூ உன்னைவிட்டு இவ்வளவு சீக்கிரம் பிரிவேன் நினைக்கல” என்றதும்  அவனது வாயடைத்தாள். ”  ஏற்கனவே கஷ்டமா இருக்கு ஒரே வீட்டுல தனி தனி அறையில் இருக்கிறது. இப்ப இதுவேற மன்னிச்சிருமா.உன்கூட வாழ அசைப்பட்டேன் ஆனால்,….”

” உங்களுக்காக காத்திட்டு இருப்பேண்ணா. நீங்க பத்திரமா போய்டுவாங்கோ ” என்றாள்

அவள் நெற்றியில் மெல்லிதாய் முத்தமிட்டவன், அவளைப் பார்க்க அவளது பார்வை புரிந்து” உன்னை பிரிய மாட்டேன். அப்படியே எனக்கு எதாவது ஆச்சுனாலும் உனக்காக சாகறதுல சந்தோசம் தான்டா ” என்றான். மீண்டும் அவனது வாயை அடைத்தாள்.

அவனை வழியனுப்பிவைத்தனர்.பின் நாட்கள் சென்றது.போனிலே  இருவரும் பேசிக் கொண்டனர்.

தொலைகாட்சியில் வந்த செய்தி ஒன்றில் அமேரிக்கா நாட்டில்  தீவிபத்து என்று. தீடிரென்று அலறல் சத்தத்தை கேட்டவள் ஓடிவந்து காண அச்செய்தியைக் கேட்டு ஸ்தம்பித்து போனாள்..

சிறிது நேரத்திற்கு பின் போன் வந்தது அதில் தங்கள்மகன் இறந்ததாகவும் வீட்டுற்கு அவரது உடல் கொண்டுவர போவதாகவும் கூற கல்யாணம் கலை கொண்ட வீடு துக்கக்கலை கொள்ள அவளோ பெரும் வார்த்தை உதிர்காதவள் வெடித்து அழுதாள்.

அவனது உடலும் வர எல்லாரும் அழுதனர்.பொதுவாக வீட்டில் நேரம் சரியில்லை என்றால் கூட பெண்களை தான் சாடுவர். இது எக்காலத்துக்கும் மாறாது. இங்கோ சாவே விழுந்தது சாடலில்லாமல் இருக்குமா அவளை மறைமுகமாக திட்டித்தீர்த்தனர்.

அவனுக்கான ஈமச்சடங்குகள் முடிந்திட, அவள் மேல் இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதை,  மதிப்பு , அன்பு வற்றிபோய் கோபம் வெறுப்பே வந்தது.  அவளை திட்டித்தீர்த்து மீண்டும் தன் பிறந்த வீட்டிற்கே அனுப்பி வைத்தார் அவளது மாமியார். வாழ்க்கை தொடங்கிய ஒருமாதமே முடிந்து வீட்டிற்கு வந்துவிட்டாள்.

விதிகள் ஆட மதிகளும் மனங்களும் அதில்  மாய்வது விதிவிலக்கல்ல.

அழகிய காலை
விடுமுறையன்று
இக்கதிருவனுக்கும் மட்டும்
விடுமுறைநாளன்று ஞாயிறு காலை.

“அப்பாலே போ சாத்தானே, அப்பாலே போ சாத்தானே…..”
என்று தண்ணீரால்  தூங்கிக்கொண்டிருக்கும் தன் நண்பனை கோபமாக அடித்து  எழுப்பிக்கொண்டிருந்தான் தியாகு.

ஆமாங்க பெயர்
தியாகிவரன். தியாகு தியாகு கூப்பிடுவாங்க உண்மையிலே அவன் நண்பனுக்காக தியாகம் பண்ணவன் தான்.

“சனியனே சனியனே !
ஏன்டா இப்படி காலங்காத்தாலே தண்ணிய மூஞ்சில அடிக்கிற ,  தூங்கிட்டு இருக்கிறவங்கள எழுப்பின பெரிய பாவம் டா, அந்த பாவத்த சேர்த்துக்காத…” என்றான் அவன்.

” உன்னை என் வீட்டுகுள்ள சேர்த்ததே பெரிய பாவம் டா உன்னை எழுப்பி வேற சேர்த்துக்கணுமா.எல்லாம் என்  தலையெழுத்துடா” தியாகு குறைப்பட்டுக் கொண்டான்

” ஆமா அதென்ன என் தலையெழுத்து,  என் தலையெழுத்து சொல்லுறீங்க, அப்படி என்ன தான் எழுத்து நானும் பார்க்காத எழுத்து படிக்காத எழுத்து?”  எனக் கேள்வி கேட்க,

” அடிங்கு இவர் பெரிய திருவள்ளுவர் எழுதி கிழிச்சுட்டாரு. டேய் டேய் நல்ல வாய்ல வந்துடும் டா” என்றான் தியாகு.

” சரி சரி ஏன் இவ்வளவு கோபம்? நான்  என்னடா பண்ணினேன்? ” 

” நீ என்ன பண்ணல?” என்றவனை பார்த்தவன்,
” அதான்டா நான் என்ன பண்ணினேன்?”
மேலே பார்த்தவன்”கொசுபத்தி சுருள் தெரியுதா…”  அவனும் மேலே பார்த்து
” ஆமாடா, எதுக்குடா அது? ” என்று வினவினான். ” பிளாஸ் பேக் டா”

” ஓ சரிடா சரிடா,மேல சொல்லு  ” என்றான்.

“இன்னகி சனிக்கிழமை,  நாளைக்கு ஞாயிறு தூங்கிற நாள். அப்ப இன்னகி குடிக்கிற நாளாச்சே. ஐய்யோ இது கடைசி வாரமாச்சே கையில காசுமில்லையே. தியாகு உனக்காக பணத்தை தியாகம் பண்ண ஒரு ஜீவனில்லையா.பெருமாளே! ” கடவுளிடம் பெரும் பிராத்தனை வைத்தான். அவனுக்காகவே காலிங் பெல் ஒலித்தது.

” ஆத்தி பிராத்தனை  நிறைவேறிருத்து போலையே !” என்று பெரும் ஆர்வமாய் கதவை திறந்தான் தியாகு.

கதவை திறக்க ” மச்சான்ன்ன்” என்று கைகளில் பெரிய பெரிய கவருகளுடன்  நின்றான் ஜானி.

‘ கடவுள கூப்பிட்டா சைத்தான் வருது’ என்று எண்ணி, ” வாடா நல்லவனே என்னவாம் இந்த பக்கம்?” என்று கேட்டு சலித்துக் கொண்டான்.

” உள்ள விடு என்னை….. ” என்றவன் அவனை தள்ளிக்கொண்டு உள்ளே சென்றான். உள்ளே வந்தவன் கவருகளை கீழே வைக்க பாட்டில் சத்தம் கேட்டது. ” என்ன மச்சி இதெல்லாம்? ” என்று அதையெல்லாம் பிரிக்க ஆர்வமானான்.” மச்சி உனக்கு தான்டா எடுத்துகோ, என் உயிரும் உனக்கு தான்டா எடுத்துகோ” என்றான்.

” இப்படி நீ பேசுறத பார்த்தா, என் உயிர எடுக்க போறீயோ!” என்று சந்தேகமாக கேட்டான்.
” மச்சி இன்னாடா இப்படி பேசுற? நான் உன் தோழன் மச்சான்”

” ஐ நோ மச்சான், எதுக்குடா இவ்வளவு பீர்? வச்சு வச்சு குடிக்கபோறோமா” தியாகு கேட்டான்.

“ஆமாடா இன்னகி வச்சு வச்சு குடிப்போம்” என்றான்.

” ஏன்டா எதுவும் குட் நியூஸ் ஆ?”

” ஆமா மச்சி மெலினாவை ப்ரேகப் பண்ணிடேன் ” என்றவன் கூற எந்த ரியாக்சன் இல்லாமல் தன் நண்பனை பார்த்தான் தியாகு.

” என்னாடா எம்முட்டு சந்தோசமா சொல்லுறேன் ஒரு ரியாக்சனுமில்லை.”

” இதோட, பதினெழுவது முறை சொல்லிட்ட நீ,  அவளை ப்ரேகப் பண்ணிடேன்னு… போதும் டா” என்றான்.

” மச்சி இந்த தடவ ட்ரூ டா.மொத்தமா முடிச்சு அனுப்பிடேன் ” என்றான் குதூகலத்தோடு

” உண்மையாவா டா! ” தியாகு கேட்க.
” ஆமாடா இப்பதான் சந்தோசமா இருக்கேன்”

” ஏன்டா பிரச்சினை யா எதுவும்? “

” பெண்கள் எப்பையும் ஆணுக்கு படிந்து போக கூடாதுன்னு நினைக்கிறவன் நான். திமிர் இருந்தாலும் அதுல ஒரு கண்ணியம் இருக்கணும் நினைப்பேன். பெண்களை பார்த்தால் நம்மளையறியாமலே கையெடுத்து கும்பிடனும். இந்த உலகத்துல எல்லா பெண்களை போற்றனும் நினைக்கிற நான் மெலினா மாதிரி சில பெண்கள் கூட்டம் இருக்கிறதினால தான்டா பெண்வர்க்கம் அவமான படுது!” என்று வசனங்கள் பேச,

” எப்பா டேய் பெரியாரே! முதல்ல விசயத்த சொல்லு..”

” அவள எவ்வளவு லவ் பண்ணினேன் உனக்கே தெரியும்ல,  நான் பைபில் படிக்கிறத விட்டதே அவளால தான். அந்தளவு பைத்தியமானேன் என்னதான் சொல்லு எவ்வளவு பாசம் அன்பு வை பணம் கண்ணை மறைச்சிரும் போல டா. அதான் இங்க நடந்திச்சு. அவளோட கசின் பெரிய பிஸ்னஸ்மேனாம்,  அவ அழக பார்த்து பிடிச்சு காதலிக்கிறேன் சொன்னானாம். இவளும்  அவனுக்கு ஒகே சொல்லிட்டு,  நம்ம ப்ரெகப் பண்ணிக்கலாம்  எங்கிட்ட வந்து சொல்றா. நீ என்னடி என்ன பண்றது நானே பண்றேன்டி அவளோட எல்லாத்தை முடிச்சிட்டு வந்துடேன் டா…” என்றான்.
ஜானி ஆர்வமாக கூற அவன் ஆர்வமோ  மொத்தமும் பாட்டிலில் இருந்தது.” சனியனே ! நான் சொல்லுறத கேட்காம என்னடா பாட்டில பார்க்கிற? ” 

” எப்படா ஓபன் பண்ணுவ…?”

” த்தூ வந்து தொலை ” என்றவன், வாங்கிய ஆறு பாட்டுலையும் தானே குடித்து தானே அனைத்து சினேக்ஸையும் சாப்பிட்டு வேறும் புலம்பலை மட்டும் கொடுத்தான்.” மச்சி உனக்கு மூனு எனக்கு மூனு” என்றான் முதலில்,

” சூப்பர் மச்சி…!”

” இல்ல இல்ல எனக்குதானே ப்ரேகப் ஆச்சு சோ நாலு எனக்கு இரண்டு உனக்கு” என்றான்.

” ம்ம் சரிடா…”

” மச்சி, நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன்  “

” அதுக்கு என்னடா….”

” ஐந்து எனக்கு ஒன்னு உனக்கு ” என்றவனை முறைத்தான் தியாகு.

” மச்சி லவ் பெயிலியர் எனக்கு சோ ஆறுமே எனக்கு ” என்று மடக்கென்று ஆறையும் குடித்தான் கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை என்பதே தியாகுக்கு பொருந்தியது.  பிளாஸ்பேக்கும் முடிந்தது

” உனக்கு கொடுக்கலையாடா…”

” இல்லைடா…”

” காசு இருந்தா கொடுடா வாங்கிதரேன்… ” என்றான். கை எடுத்து கும்பிட்டவன்” இன்னைக்கு நீ ஜர்ஜ்க்கு போகனும் போ ராசா போ…”

” நேத்தோட எல்லாம் போச்சு நைவ் ஐயம் சிங்கில்  ” என்று பால்கனிக்கு வந்தவன். அக்காலை குளிர்க்காற்றை சுவாசித்து விட்டு ” நைவ் ஐ யம் தி ஹாப்பியஸ்ட் மேன் தி வோர்ல்ட் ” என்று கத்தினான். ஆறு பாட்டில போதை இறங்குமா தலையில் அடித்துக்கொண்டான் தியாகு.

” அடேய் ஜானி, என்ன காலையிலே வா” எதிர் வீட்டு ஆண்ட்டி கேட்டார்.

” ஆண்ட்டி நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன்”

” ஏன்டா என்னாச்சு… ?”

” அந்த மெலினா ப்ரேகப் பண்ணிட்டு போயிடா” என்றான்.

” என்ன லவ் பெயிலியரா ? “

” என் லவ் இல்ல, அவ லவ் தான் .” என்று தன் முன் எதிரே துணி உலர்த்திக் கொண்டிருந்த ஆண்ட்டியிடம் கூறினான் ஜானிபிரிட்டோ நம் கதையின் கதாநாயகன்.

இருவரது வாழ்க்கைப் பயணம் எவ்வாறு இணைக்கிறது பார்ப்போம்.