உருகுதே உள்ளம் நெகிழுதே நெஞ்சம் 10

அடுத்து வந்த இரண்டு நாட்கள் அவர்களின் மணித்துளிகளை அவர்களின் வேலை இழுத்துக் கொள்ள வாரயிறுதி நாட்களில் அவனிடம் பேசிக்கொள்ளலாமென மஹா முடிவெடுத்த நேரம் வந்தது அந்த மின்னஞ்சல் வாணிக்கும் வேணிக்கும்.

வாணியும் வேணியும் உறைந்து போய் பார்த்தனர் அந்த மின்னஞ்சலை.

வாணி அந்த மின்னஞ்சலை பார்த்த நொடி தன்னிடத்திலிருந்து எழுந்து வேணியின் இடத்திற்கு செல்ல, அங்கு வேணியும் அந்த மின்னஞ்சலை நோக்கிக் கொண்டிருப்பதை பார்த்தவள்,

“அம்மு உனக்கும் இந்த மெயில் வந்திருக்கா? ஏன்டி திடீர்னு இப்படி ஒரு மெயில் அனுப்பிருக்காங்க? நம்ம நல்லாதானே வேலை பார்த்தோம்” என வாணி வேணியை கேட்க,

“இருடி நம்ம மேனேஜரை போய் என்னனு கேட்போம்” என்றாள் வேணி.

அன்று அவர்களின் மேனேஜர் விடுப்பெடுத்திருக்க, அந்த மெயில் தங்கள் இருவரைத் தவிர எவருக்கும் வரவில்லை என்பதை அறிந்தவர்கள் ராஜேஷிடம் சென்று அம்மெயிலை பற்றி உரைக்க,

அந்த மெயிலைக் கண்ட ராஜேஷ், “என்னது உங்களை இந்த பிராஜக்ட்லருந்து தூக்கிட்டாங்களா? ஏதோ புது ப்ராஜக்ட்ல அசைன் செஞ்சிருக்குறதா மெயில்ல போட்டிருக்காங்கலே… அப்பறம் ஏன் கவலை படுறீங்க” எனக் கேட்க,

“அது சப்போர்ட் பிராஜக்ட் ராஜேஷ்… ஷிப்ட்ல வர்க் பண்ணனும்… அதுவுமில்லாம அதுல என்ன கரியர் டெவலப்மெண்ட் இருக்கு” என அழும் பாவனையில் கேபி சொல்ல,
“அட கேபி இதுக்கு போய் ஃபீல் பண்ணிக்கிட்டு… நம்ம டீம் லீட் கிட்ட விசாரிங்க… ஏன் திடீர்னு ப்ராஜக்ட்டை விட்டு தூக்கிட்டாங்கனு” என ராஜேஷ் கூற,
அவர்களின் டீம் லீடை பார்க்கச் சென்றனர் இருவரும்.

மீட்டிங் ரூமில் அவர்கள் இருவரையும் பேச அழைத்தவர், “இது எனக்குமே ஷாக்கிங் நியூஸ் தான் வாணி அண்ட் வேணி. இதுக்கு காரணம் ராஜேஷ்” என்றவர் கூறியதும், பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர் வாணியும் வேணியும்.

“என்னது ராஜேஷா?” எனத் தன் அதிர்ச்சியை கேட்டே விட்டாள் வாணி.
ஆமென உரைத்தவர்,

“உங்கள் வேலை க்ளைண்ட்க்கு திருப்தியா இல்லைனு புகார் வந்திருக்குறதா மேனேஜர் என்னை கூப்பிட்டு கேட்டார் போன வாரம். நீங்க நல்லா வர்க் பண்றதா தான் நான் சொன்னேன். க்ளைண்ட் எதை வச்சி அப்டி சொன்னார்னு கேட்டேன். தெரியலைனு சொல்லிட்டார்… ராஜேஷ் நல்லா செய்றதா பாராட்டு கிடைக்கிறதாகவும் சொன்னார்”

“நீங்க நியூ ஜாய்னீஸ்ங்கிறனால உங்க மூணு பேரையும் சேர்ந்து தான் நான் வேலை செய்ய சொல்லிருக்கேன்… அண்ட் ஐ நோ நீங்க இரண்டு பேரும் தான் ராஜேஷை கைட் செஞ்சி வேலை செய்றீங்கனு… ஆனா நீங்க செஞ்ச தப்பு உங்க வர்க்கை வெளில காமிக்காம இருந்தது… செய்ற வேலைக்கும் கூட ராஜேஷ் கிட்ட இருந்து மெயில் போயிருக்கு… நீங்க மூணு பேரும் ஏன் தனி தனியா போடனும்னு நீங்க அவன் மெயிலருந்து போட ஒத்துக்கிட்டு இருந்திருக்கலாம்… ஆனால் எங்கேயுமே உங்க பெயர் மெயில் கண்டன்ட்ல கூட போடல… அதான் நீங்க வேலை செய்யாம உங்களுக்கு எதுக்கு நாங்க பே பண்ணனும்ங்கிற எண்ணத்தை க்ளைண்ட்க்கு கொண்டு வந்திருக்கு” என்று விளக்கமாய் உரைத்தாரவர்.

“இது ராஜேஷ் தனக்கு பேர் வரனும்னு தெரிஞ்சு செஞ்சானா தெரியாம செஞ்சானானு நீங்க தான் சொல்லனும்… நீங்க தான அவனோட ப்ரண்ட்ஸ் உங்களுக்கு தான் அவனை தெரியும்” என்றவர் கேட்க,

தங்களுக்கு தெரியாதென இருவரும் தலையசைக்க,

“ஆஸ் எ வெல்விஷ்ஷரா ஒரு அட்வைஸ் செய்றேன். இது கார்ப்பரேட் வெர்ல்ட். இங்க நீங்க ஹார்ட் வர்க்கரா இருக்கிறதை விட ஸ்மார்ட் வர்க்கரா இருக்கிறது ரொம்ப அவசியம். நீங்க செஞ்ச வேலைய நீங்களே உலகுக்கு சொன்னா தான் தெரியும். வாயுள்ள பிள்ளை தான் பிழைக்கும் ங்கிறதும் இங்க உண்மை. ராஜேஷ் பாருங்க இங்க எல்லார் கிட்டயும் எவ்ளோ நல்லா பேசி பழகிட்டான். அவன் வேலையே செய்யலைனாலும் நான் தான் செஞ்சேன்னு அவன் மத்தவங்க கிட்ட சொன்னதை நானே கேட்டுருக்கேன். நீங்க இப்படி அமைதியா வேலை செஞ்சிட்டு இருந்தா அவன் தான் எல்லா வேலையும் செய்றான்னு நினைச்சுட்டு போய்டுவாங்க… இதுவே நீங்களும் அவங்க கிட்ட பேசி பழகி இருந்தா என்னப்பா நீ அந்த பொண்ணுங்க செஞ்ச வேலையை நீ செஞ்சேனு சொல்றனு நேரா கேட்டிருப்பாங்க… சோ ஷோ ஆஃப் வாட்எவர் யூ ஆர் டூயிங். ஓகே பெஸ்ட் ஆஃப் லக் ஃபார் யுவர் நியூ ப்ராஜக்ட்” என்றவர் மீட்டிங்கை முடித்து விட்டு செல்ல,

மனம் கொள்ளா துக்கமுடன் இருக்கையை விட்டு நகராது சிலையென சமைந்திருந்தனர் இருவரும்.

“நா வாஷ் ரூம் போய்டு வரேன் அம்மு” என வாணி எழுந்துச் செல்ல,

அவளின் பின்னோடேயே வேணியும் சென்றாள் அவளுடன்.

வாஷ் ரூம் சென்றவள் அடக்க முடியாது குலுங்கி குலுங்கி அழ, அவளை அணைத்திருந்த வேணியின் கண்களிலும் நீர் நிறைந்தது.

“ராஜேஷ் அப்படி செஞ்சிருப்பானா அம்மு… நம்ம கரியர் இனி என்ன ஆகும்… சப்போர்ட் ப்ராஜக்ட்ல என்னடி கத்துக்க முடியும்… ஷிப்ட்ல எப்படி வேலை செய்யப் போறோம்” என அழுதுக் கொண்டே வாணி உரைக்க,

“அதெல்லாம் பார்த்துக்கலாம்டி தனியா இல்லாம இரண்டு பேரா இருக்கோம்ல சமாளிக்கலாம்” என தனக்கும் சேர்த்து ஆறுதல் சொல்லிக்கொண்டாள் வேணி.

“ராஜேஷ் கிட்ட எதுவும் கேட்க வேணாம்.. இனி எப்படியும் நாம வைட்பீல்ட் ஆபீஸ்க்கு தான போகனும்னு மெயில்ல போட்டிருந்தாங்க… அவனை இனி எப்படியும் நாம சந்திக்கப் போறதில்ல… அதனால எதுவும் கேட்காம ஸ்மூத் ரிலேஷன்ஷிப்பாவே விட்டு போய்டுவோம்…. நாளைக்கு வேற அந்த ஆபிஸ்க்கு போய் ரிப்போர்ட் செய்யனும்… அதுக்கான ஏற்பாடு செய்யனும் வா ப்ளேஸ்க்கு போய்ட்டு சீக்கிரம் கிளம்புவோம்” என வேணி உரைக்க,

“ஆமா இளா அந்த ஆபிஸ் தானே… நீ இளா கிட்ட பேசி எப்படி ஆபிஸ்க்கு ரூட்னுலாம் விசாரி… கிளம்புறதுக்கு முன்னாடி ஆஷிக்கிட்ட சொல்லிட்டு போய்டலாம்” என வாணி கூறிக்கொண்டிருந்த நேரம் அவளின் மொபைல் அலறியது ஆஷிக்கின் அழைப்பினால்.

“அவன் தான்டி போன் பண்றான்… நான் அவனை கேபிடேரியா வர சொல்றேன்… நாம அவனை பார்த்து பேசிட்டே ப்ளேஸுக்கு போவோம்” என வேணியிடம் கூறிக்கொண்டே கால் அடெண்ட் செய்தவள் ஆஷிக்கை கேபிட்டேரியா வரம்படி பணித்தாள்.

ஆஷிக்கை பார்த்ததும் நடந்தது அனைத்தையும் கண் கலங்க வாணிக் கூற, “ஷிப்ட் தான் ப்ராப்ளம் கேபி… கொஞ்சம் ப்ரிபேர் பண்ணி வேற கம்பெனி அடெம்ப்ட் பண்ணி போய்டுங்க இரண்டு பேரும்” என அறிவுரை வழங்கியவன் மறந்தும் ராஜேஷை பற்றி ஏதும் கூறவில்லை.

“ராஜேஷ் இப்படி செஞ்சிருப்பானா ஆஷிக்?” என வாணி கேட்க,

“தெரியலையே கேபி.  நீங்க தான அவன் கூட ஒரே ப்ராஜக்ட்ல இருக்கீங்க உங்களுக்கு தான் தெரியனும்” என்றவன் கூற,

“டேய் நீ அவன் கூட ஒரே பிஜில இருக்க… உனக்கு தான் எங்களை விட அவனைப்பத்தி அதிகமாக தெரியும்… கூட பழகுறவனை பத்தி நீ என்னிக்கும் தப்பா பேச மாட்டனு எனக்குத் தெரியும்… ஆனா தப்பு இருந்தா தப்புனு சொல்லலாம்… தப்பில்லை” என்று வாணி கூற,

“தப்பு இருந்தா சொல்லிருப்பேனே… அண்ட் ஆல்சோ ஒருத்தங்க அபீஷியலா ஆபிஸ்ல ஃப்ரண்டா நடந்துக்குறதுக்கும் ஃப்ரண்டா பர்சனலா பழகுறதுக்கும் வித்தியாசம் இருக்கு கேபி” என்றவன் கூற,

“இனி உன்னை தினமும் பார்க்க முடியாது ஆஷிக்” என வாணி வருத்தமாய் கூற,

“ஏன்டி எவ்ளோ ப்ரச்சனை இருக்கு நமக்கு. அவனை பார்க்க முடியாதது தான் உனக்கு இப்ப பிரச்சனையா??” என கடுப்பாகி வேணி கேட்க,

“ஹே அவ என் மேல உள்ள பாசத்துல கேட்குறா… எதுக்கு அவளை திட்டுற அம்மு” என்றவன்,

“நாம வீக்கெண்ட்ஸ் ஊருக்கு போகாம ப்ரீயா இருக்கும் போது மீட் செய்யலாம் கேபி… கவலைப்படாத… நாளைக்கு போய் ரிப்போர்ட் பண்ணிட்டு என்ன சொல்றாங்கனு எனக்கு கால் செஞ்சு சொல்லு” என்றுரைத்து விடைபெற்றான்.

இளாவின் கைபேசிக்கு வேணி அழைக்க, அவன் அழைப்பெடுக்காமல் போக அன்றிரவு பேசலாமென முடிவெடுத்தாள் வேணி.

மஹாவிற்கும் விஷயத்தை உரைத்திருந்தனர் அலுவலகத்திலிருக்கும் போதே.

அன்று சீக்கிரமே தங்களின் வீட்டிற்கு வந்த வாணியும் வேணியும் நாளை எவ்வழியாக அந்த அலுவலகத்திலிருந்து செல்லலாமென திட்டமிடலானர்.

அன்றிரவு வேணி இளாவிற்கு அழைக்க, அழைப்பை ஏற்றவன், “எதுக்கு கால் பண்ண?” என்று தான் கேட்டான்.
என்னாச்சு இவனுக்கு எதுக்கு இப்படி நடந்துக்குறான் என மனதில் எண்ணிக்கொண்டவள் அன்றைய நாளின் நிகழ்வை அவனிடம் உரைத்தவள்,

“அழுகையா வந்துச்சு இளா… உன்னை தான்டா மனசு தேடுச்சு. நீ இப்படி சரியா பேசாம இருக்குறதும் மனசை ஹர்ட் பண்ணுது இளா. ஆனாலும் என்னால உன்கிட்ட கோபப்பட முடியாது. உன்கிட்ட பேசாம இருக்க முடியாது இளா.  ஐம் ரெடி டு ஹியர் யுவர் ப்ராப்ளம் அட் எனி டைம் இளா. சொல்லனும் தோணும் போது சொல்லு… நான் உன்னை டிஸ்டர்ப் செய்ய மாட்டேன்… சரி நாளைக்கு மீட் செய்யலாம்” என்றுரைத்து விட்டு கைபேசியை வைத்தாள்.

மறுநாள் புதிய ப்ராஜக்ட் மேனேஜரிடம் ரிப்போர்ட் செய்து விட்டு அந்த ஷிப்ட் ப்ராஜ்க்டில் சேர்ந்தனர் இருவரும்.

மூன்று மாதம் வேலை கற்றுக்கொள்ளும் வரை ஷிப்ட் இல்லை என்றும் அதன் பிறகு வாரம் ஒரு ஷிப்ட் என சுழற்சி முறையில் ஷிப்ட் ஒதுக்கப்படும் எனவும் அறிவித்தனர்.

இளா இறுகிய முகத்துடன் தான் இருவரையும் சந்தித்தான்.

அதன் பின் வந்த அந்த வார  நாட்களில் ஒரே அலுவலகத்தில் இருந்தும் இவர்களை சந்திக்க வரவில்லை அவன்.

உறவுகளுக்குள் எத்தகைய பிரச்சனை சண்டை வந்தாலும், அதை வளர்க்காமல் உடனே பேசி அப்பிரச்சனையை சரி செய்து விட வேண்டும். அதுவே அன்பாய் உறவுமுறையை நீடிப்பதற்கான அடித்தளம் என எண்ணுபவள் வேணி.

ஆக இளாவிடம் பேசி அவனின் கண்ணாமூச்சி ஆட்டத்திற்கு முடிவுகட்ட எண்ணினாள்.

வெள்ளி இரவு அனைவரும் தங்களின் ஊருக்கு செல்லாமல் பெங்களுரிலேயே இருக்க, வாரயிறுதி நாட்களில் எங்கே செல்லலாமென திட்டம் தீட்டத் தொடங்கினர் மூன்று பெண்களும்.

“நான் நாளைக்கு மதி பார்க்க போறேன்டி. சோ உங்களோட ஜாயின் பண்ண முடியாது” என மஹா கூற,

“நான் இளாவைப் பார்க்க போறேன்டி” என வேணி கூற,

“ஆஷிக்கும் என்னை மீட் செய்யனும்னு சொன்னான். உங்ககிட்ட கேட்டு சொல்றேனு சொன்னேன்… சரி எங்க மீட் பண்ண போறீங்க நீங்க ரெண்டு பேரும்” என வாணி கேட்க,

“ஃபோரம் மால்” என ஒரே நேரத்தில் கூறினர் வேணியும் மஹாவும்.

“சூப்பர்…. ரெண்டு பேரும் ஒரே இடத்துக்கு தான் போறீங்களா? அப்ப நானும் ஆஷிக்கை அங்கேயே வரச் சொல்றேன்” என வாணி உரைக்க,

“நான் கொஞ்சம் தனியா பேசனும்டி இளாகிட்ட” எனத் தயங்கி தயங்கி வேணி கூற,

“இதுக்கு ஏன்டி இவ்ளோ தயங்குற… ஒன்னா போவோம்… அங்கப் போய் அவங்க அவங்க ஃப்ரண்டஸை தனியா மீட் செய்வோம்…. ஆஷிக் கூட என்கிட்ட ஏதோ தனியா பேசனும்னு தான் சொன்னான்” என்றுரைத்து உறங்கப் போனாள் வாணி.
இளாவை நினைத்து கவலைத் தோய்ந்த முகத்துடன் வேணி உறங்கச்செல்ல,

பிறந்த நாளிற்குப்பின் நாளைத்தான் மதியை பார்க்கப் போவதால் ஏற்பட்ட பூரிப்பில் சந்தோஷத்துடனேயே டெடி பியரைக் கட்டிக்கண்டு உறங்கினாள் மஹா.

ஜூன் 2012

அழகுக் கண்ணாடி கட்டிடமாய் பல வணிகக் கடைகள் நிரம்பிய குளுகுளு மாலான ஃபோரம் மாலுக்குள் நுழைந்தனர் அந்த மூன்று பெண்கள்.

அங்கே இவர்களுக்காக காத்துக் கொண்டிருந்தவனிடம் இப்பெண்கள் கை அசைத்து,

“ஹாய் ஆஷிக்” என உரைத்து அவனருகில் சென்றனர்.

“ஹாய் கே.பி”

“ஹலோ மஹா”

“ஹாய் அம்மு”

என மூவரையும் வரவேற்றானவன்.

“வாங்க கேர்ள்ஸ். நானும் இந்த கேபி தனியா தான் வருது போலனு நம்பிட்டேன்” என ஆஷிக் உரைக்க,

“அவ என்னிக்கி தனியா வெளிய போயிருக்கா? சும்மா வாய் பேச்சு தான் அவளுக்கு… மேடம் சரியான பயந்தாங்கொள்ளி” என அம்சவேணி கேபியை வார,

“அவன் இப்ப உன்ன கேட்டானா?” என அடிக்குரலில் சீறினாள் கேபி.

“சரிடி வாணி, யூ கேரி ஆன்… நாங்க எங்க ப்ரண்ட பார்க்க போறோம்”
என மஹா கேபி யிடம் உரைக்க ஆஷிகிடம் தலையசைத்து நகர்ந்தனர் மஹாலட்சுமியும் அம்சவேணியும்.

“எந்த ப்ரண்ட பார்க்க போறாங்க அவங்க” எனக் கேட்டான் ஆஷிக்.

“மஹா மதியை பார்க்க போறா… அம்மு இளாவ பார்க்க போறா” என்றாள் வாணி.

“ஹோ அவங்க ஆளுங்களை பார்க்க போறாங்கனு சொல்லு” எனக் கிண்டலாய் கேட்டான் ஆஷிக்

“டேய் ப்ரண்ட்ஷிப்பை கொச்சைபடுத்தாத… அவங்க ப்ரண்ட்ஸ் தான்” என்றாள் வாணி.

“இப்படி தான் அவங்க உன்னை ஏமாத்திட்டு இருக்காங்க… நீயும் நம்பிட்டு இருக்க” என்றான் ஆஷிக்.

“ம்ப்ச்… அதை விடு… நீ என்னமோ முக்கியமான விஷயம்… நேர்ல தான் சொல்வேனு சொன்ன… என்னதது” எனக் கேட்டாள் வாணி.

“ஹம்ம்ம் … கல்யாணத்தை பத்தி பேச தான் வர சொன்னேன்” என தீவிர பாவனையில் உரைத்தான் ஆஷிக்.

“வாவ் உன் கல்யாணமா ஆஷிக்… சொல்லவே இல்லை… கங்கிராட்ஸ் டா” குதூகலமாய் வாணி கேட்க,


“ம்ப்ச் கடுப்பேத்தாத வாணி” கடுப்பாய் அவளை பார்த்து உரைத்தான் ஆஷிக்.

அவனின் கோபத்திலும் கடுப்பிலும் தான் வாணி என்றழைப்பானென தெரியுமாதலால், அவன் மேற்கொண்டு பேச அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்தாள் வாணி.

ஃபோரம் மாலின் பின் வாசலிலுள்ள காபி ஷாப்பில் அமர்ந்திருந்தனர் மதியும் மஹாவும்…

“ஐ லவ் யு மஹா” கடும் மன போராட்டத்திற்கு பிறகு இன்று கூறிவிட்டான் மதி தன் காதலை.

“பர்த்டே அன்னிக்கே சொல்லனும் நினைச்சேன்… ஆனா அவ்ளோ ஹேப்பியா இருந்த உன் மூடை ஸ்பாயில் செய்ய மனசில்லாம தான் சொல்லலை மஹா”

“உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் மஹா. ஆயுசுக்கும் உன்னை நல்லா வச்சு பாத்துப்பேன் குட்டிம்மா. டேக் யுவர் ஓன் டைம்… நான் டிஸ்டர்ப் செய்ய மாட்டேன்”
அவனை முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் மஹா.

அதே மாலில் மேல் தளத்திலுள்ள புட் கோட்டில் அமர்ந்திருந்தனர் இளாவும் வேணியும்.

“நேத்து ஏன்டா அப்படி மெசேஜ் பண்ண?.. மூளை கீள கொழம்பி போச்சா உனக்கு…. என்னடா வாழ்க்கை இதுனு இருக்குனு சொல்ற… என் நிலைமை யாருக்குமே வரக்கூடாதுனு வேற சொல்ற… நம்மல நினைச்சு நாமலே பரிதாபப்படுறது நம்ம படைத்த கடவுளுக்கு செய்ற துரோகம்…” வேணி அவனை வறுத்தெடுக்க, இளா அவளை வெறித்து நோக்க,

“என்ன பாக்குற? இது நீ அடிக்கடி சொல்லுற டயலாக் தான்… எவ்ளோ பிரச்சனை வந்தாலும் உன்னை நினைச்சி நீயே கறஞ்சி போக மாட்ட. இப்ப என்ன வந்துச்சு உனக்கு”

இளாவிடம் வேணி கோபத்தில் சீறிக்கொண்டிருக்க,

“என்னை நினைச்சு இல்ல… உன்னை நினைச்சு தான் கறஞ்சு போறேன் அம்ஸ்” இளா உரைக்க,

அவன் கூற வருவதன் அர்த்தம் விளங்காது அவனை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் வேணி.

“என்னடா இருக்கு என்னைய நினைச்சு கறஞ்சி போறதுக்கு” எனக் கேள்வியாய் வேணி அவனைப் பார்க்க,

“என்னை கல்யாணம் செய்துக்க உனக்கு சம்மதமானு கேட்டா என்ன சொல்லுவ அம்ஸ்?” எனக் கேட்டான் இளா.

— தொடரும்