அவ(ன்)ள் 11

அவ(ன்)ள் 11

உடலையும் மனதையும் குளிர்விக்கும் அதிகாலை பொழுதில் மேனியை உரசிய ஈரக்காற்று அவன் மனதினையும்  குளிர்வித்து இதத்தை பரப்பியது.

பால்கனியின் நின்றிருந்தவன்  பார்வையை தொலைதூரத்தில் புள்ளியாய் தெரிந்த  ஏதோ ஒன்றின் மேல் நிலைக்க விட்டிருந்தான்.

நேற்று அஞ்சலியிடமிருந்து பிருந்தாவை பற்றி தெரிந்துக் கொண்ட அடுத்த நொடியே  அவளை தன் இதய கூட்டிற்குள் பத்திர படுத்திக்கொள்ள வேண்டும் என்று நெஞ்சம் பரபரக்க… கைகள் அவளை தன்னுள் பொதிந்து  பாதுகாக்க துடித்தது.

அனைத்தையும் கூறிய அஞ்சலி அவன் பதிலுக்காவே விழியகற்றாமல் கிருஷ்ணாவையே பார்த்திருந்தாள். 

தோழியின் கவலைபடித்த முகத்தை கண்ட  கிருஷ்ணா “உன் பிரெண்டு கதையை கேட்டதும்  தெறிச்சி ஓடிடுவேன்னு  பயந்தியா அஞ்சலி…” என்றான் குற்றம் சாட்டும் பார்வையில்… என்னை இப்படி நினைத்துவிட்டாயே என்ற அர்த்தம்   பொதிந்த பார்வை அது

அதை எதிர்கொள்ள முடியாமல்  “கிருஷ்ணா அது” என்று தயங்கியவளை பேசவிடாது நிறுத்தியவன் 

“எனக்கு கல்யாணம்னு ஒன்னு நடந்தா அது பிருந்தா கூட மட்டும் தான் அஞ்சலி… அதை யாரலையும் மாத்த முடியாது…” 

“இவ்வளவு நடந்த பிறகும், அவனை பொறுத்துக்கிட்டு போகனும்னு நினைக்காம  எதிர்த்து நின்னா பாரு அவளோட  கட்ஸூம்… தைரியமும் தான்  எனக்கு  ரொம்ப பிடிச்சிருக்கு… சொல்லபோனா  அவ மேல காதல் இன்னும் அதிகமாதான் ஆகுதே தவிர ஒரு சதவீதம் கூட குறையல…” என்றவன் விழிகள் நீரில் பளபளத்தது.  

கிருஷ்ணாவின் கரங்களை பற்றி கொண்ட அஞ்சலி,  “தெங்கஸ் கிருஷ் தெங்கீயூ சோ மச்” என்றாள் நெகிழ்ந்த குரலில். 

அதில் கீற்றாக புன்னகைத்தவன்

“அஞ்சலி இப்போதைக்கு நான் விரும்புற விஷயம் என்னோட ஏஞ்சலுக்கு தெரிய வேண்டாம்” என்றான் கோரிக்கையாக 

“ஏஞ்சலா” என்று அஞ்சலி விழி விரித்தாலும் “ஏன் கிருஷ்ணா?” என்று தன் சந்தேகத்தை கேட்டிருந்தாள்.

அவள் அதிர்வை கண்டும் காணாமல்  இருந்தவன் “நீ என்னை தரதரன்னு இழுத்துட்டு வந்து எதுக்கு இங்க நிக்க வைச்சியோ, அதே காரணமாத்தான் அவளுக்கு தெரிய வேண்டாம்னு சொன்னேன்…  அவ காயங்களுக்கு நான் மருந்தா இருக்கனும் தட்ஸ் ஆல்” 

“அவளே மனசு மாறனும் இவன் நமக்கு ஏத்தவன்னு அவளுக்கு தோனனும்… அப்போ நானே சொல்றேன்” என்றவன் அவளை வீட்டில் விட்டுவிட்டு சென்றான்.

இரவு முழுவதும் அவனுக்கு அவன் ஏஞ்சலின் நினைவாகத்தான் இருந்தது. 

மணியை பார்க்க 8 டை தாண்டவில்லை ரெஸ்டாரண்டில் தனியாக விட்டு விட்டு வந்துவிட்டோமே என மனம் அடித்துக் கொண்டது… போன் செய்ய மனம் பரப்பரத்தாலும் என்ன சொல்லி சமாளிப்பது என்று மூளை யோசிக்க விரல்கள் அதன் வேலையை செவ்வனே செய்து முடித்தது.

“ஹாய் பிருந்தா வீட்டிக்கு போயிட்டியா?” என்று வாட்சாப்பில் அனுப்பிய குறுந்தகவளை அவள் பார்த்ததாக எந்த அறிகுறியும் இல்லாததால் அவளுக்காக தன்னறையில் நடைபயின்று கொண்டிருந்தான்.

ரெஸ்டாரன்டில் இருந்து வந்தவள் அனைத்து வேலைகளையும் முடித்து அறைக்குள் வரவே மணி 9 ஐ நெருங்கி இருந்தது.  போனை எடுக்க அதில் கிருஷ்ணாவின் குறுந்தகவளை பார்த்தவள் “பதிலாக வந்துட்டேன் கிருஷ்ணா நீங்க வீட்டுக்கு போயாச்சா?” என்று அனுப்பினாள்.

மழை நாளுக்கு பிறகான சந்திப்புக்கள் அவனை பற்றி தவறாக நினைக்க விடவில்லை அதனாலேயே  பேச்சுக்கள் சரளமாய் இருந்தது பிருந்தாவிடம்.

திரையில் குறுந்தகவல் வந்ததற்கான ஒளி தென்பட சட்டென அதை திறந்தவன் உதடுகள் புன்முறுவலுடன் மென்மையாக அவளை ஏஞ்சல் என்று அழைத்தது

“பிருந்தா  கால் பண்ணவா?”

“இப்போவா ?”

“வேண்டாம்னா…  பரவாயில்லை” 

“இல்ல டையம் ஆச்சின்னு சென்னேன் நீங்க கால் பண்ணுங்க…”

அவனிடமிருந்து அழைப்பு வரவும் அதை ஏற்று காதில் வைத்தவள் “ஹலோ” என்றாள் தெளிவான குரலில்.

“ஹலோ பிருந்தா… சாரி அன் டைம்ல கால் பண்ணி டிஸ்டர்ப் பண்ணிட்டேன்…” என்று வருத்தம் தெருவிக்க

“இட்ஸ் ஓகே… பரவாயில்லை சொல்லுங்க!!…

“மறுபடியும் உன் கிட்ட சாரி கேக்கத்தான் பிருந்தா கால் பண்ணேன்”

“சாரியா!!…. இந்த சாரி எதுக்கு?”

“அஞ்சலி அவசரப்படுத்தினான்னு உன் கிட்ட சொல்லாம வந்துட்டேன்… அது கொஞ்சம் கில்டியா இருந்தது அதான் சாரி கேக்க கால் பண்ணேன்”… 

“அச்சோ… அதுக்கு ஏன் சாரி எல்லாம் கேக்குறிங்க… ஒரு உயிரை காப்பத்த போய் இருக்கும் போது இதெல்லாம்  யாரவது எதிர் பார்ப்பாங்களா… அதை விடுங்க அவங்க நல்லா இருக்காங்கல்ல?”

“யாரு?” என்றான் யோசனையாக

“நீங்க பாக்க போன பேஷண்ட்” 

“ஆஹ்… ஆமா ஆமா நல்லா இருக்காங்க பிருந்தா” 

“சூப்பர் டாக்டர்”

“என்னது டாக்டரா?”

“சாரி சாரி வாய் தவறி வந்துடுச்சி” என்று நாக்கை கடித்துக்கொண்டாள்.

“அப்போ நான் பிரெண்டா இன்னும் உன் மனசுல பதியல டாக்டரா தான் இருக்கேன்” என்றான் வம்பாய்

“இல்ல… அது ஒரு மரியாதைல வந்துடுச்சி கிருஷ்ணா” என்றாள் பாவம் போல்

“இனி இப்படி வாரம இருக்க நான் சொல்ற மாதிரி செய்” என்றான் கண்டிப்பது போல் 

“என்ன செய்யனும்??” என்று அவள் கடும் சிரத்தையாக கேட்க

“ம்… ஒரு நோட்டு பென் எடுத்துக்க… கிருஷ்ணா கிருஷ்ணான்னு ஒரு ஆயிரம் வாட்டி எழுது அப்போவாவது  என் பெயர் உன் மனசுலயும் மூளையிலும் பதியுதான்னு பாக்கலாம்” என்றான்  கேளியுடன்

“என்னது ஆயிரம் வாட்டியா??? நான் ஸ்கூல் காலேஜ்லேயே இம்போஷிஷன் எழுதினது இல்ல… இப்போ உங்க பெயரை எழுதனுமா??!” என்றாள் அதிர்ச்சி கலந்த குரலில்

“ஆமா நீ என்னை டாக்டர்னு கூப்பிட்டதுக்கு அதுதான் பணிஷ்மென்ட் அடுத்த முறை பாக்கும் போது தவறாம கொண்டு வந்துடு” என்றான் சிரியாது 

“நீங்க டாக்டரா இல்லை டீச்சரா இப்படி பணிஷ்மெண்ட் கொடுக்குறிங்க” என்றாள் சிரித்தபடியே 

“இதுலயும் சந்தேகமா” என்று அவன் கேட்டதும், “இல்ல இல்ல சந்தேகமே இல்ல நீங்க எல்லாம் சேர்ந்த கலவை தான்… நான் தான் வீணா வாயை கொடுத்து மாட்டிக்கிட்டேன் நீங்க சைலன்டுன்னு அஞ்சலி சொன்னா ஆனா இப்படி வாயடைக்கிற மாதிரி பேசுறிங்க” என்றாள் அவன் பேச்சை கண்டு வியந்தவளாக

அதில் வாய்விட்டு சிரித்தவன் ‘எனக்கு ரொம்ப  க்ளோஸினவங்க கிட்ட மட்டும் நல்ல பேசுவேன்  பிருந்தா,…நீங்க எனக்கு க்ளோஸ்  சோ உங்க கிட்டயும் நல்லா பேசுறேன்” என்றான். சாதரணமாக ஆரம்பித்தது, பேச்சு சுவரஸ்யத்தில் அரைமணி நேரம் சென்றதே தெரியாமல் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.  

அதை நினைத்தவன் மறுபடி அவளை சந்திப்பதற்கான வாய்ப்பை எப்படி ஏற்படுத்தி கொள்வது என்ற தீவிர சிந்தனையில் நின்றிருந்தான் அந்த அதிகாலை வேளையில்.

நான்கைந்து நாட்களில் அஞ்சலியே  அவனுக்கு அந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்தாள். 

…..

அன்று சதுர்த்தி என்பதால் கோவிலில் கூட்டம் கொஞ்சம் அதிகமாகத்தான் இருந்தது. கிருஷ்ணா கோவிலுக்கு வந்து பதினைந்து நிமிடங்களுக்கு மேல் ஆகியிருந்தது. அஞ்சலிக்கு இரண்டு மூன்று  முறை போன் செய்து வேறு அவள் வருவதை உறுதிபடுத்திக் கொண்டு அமர்ந்திருக்க அஞ்சலி  சொன்னது நினைவிற்கு வந்தது. 

மருத்துவமனை நிர்வாகம் ஏற்பாடு செய்த மீட்டிங்கில் இருந்தவனுக்கு குறுந்தகவல் அனுப்பியிருந்தாள் அஞ்சலி..

“கிருஷ்ணா இன்னைக்கு சதுர்த்தி… உன் ஏஞ்சல் வெற்றி விநாயகர் கோவிலுக்கு  இன்னைக்கு சாய்ந்தரம் போறாளாம்… சொல்லிட்டு இருந்தா…” என்று தகவலை கொடுக்க  மீட்டிங்கை கிரியின் தலையில் கட்டி விட்டு அவளை தேடி கோவிலுக்கு வந்தவனுக்கு, தன்னை நினைத்தே ஆச்சர்யமாக இருந்தது.

‘ ம் தேரிட்ட டா கிருஷ்ணா காதல்னு வந்தவுடனே என்னன்னமோ பண்ற…’  என்று தன்னை தானே  தட்டிக் கொண்டவன்… ‘உன் காதலுக்கு பிள்ளையாரே பச்சை கொடிய காட்டினாலும் உன் ஆளு கொடி பக்கமாச்சும் திரும்பனுமே’ என்ற பெருமூச்சி எழ மனதிற்குள் சிரித்துக் கொண்டான்.

அவனை வேகுநேரம் சோதிக்காமல் அவனுக்கு தரிசனம் கொடுத்தாள் கிருஷ்ணாவின் பிருந்தா. நல்ல மயில் கழுத்து நீல நிறத்தில் மைசூர் சில்க் புடவையில் மயிலை போல அசைந்து வந்தவளை கண்டு விழியகற்ற முடியாது நின்றான்.

அப்போதுதான் கடவுளை வணங்குவது போல சந்நிதியை நோக்கி திரும்பி நின்றிருந்தவனை அடையாளம் கண்டு ஆச்சர்யம் கொண்டாள் பிருந்தா..   

ஏதும் அறியதவன் போல கண் திறந்து தீபாராதனை ஒற்றிக்கொள்ள எதிரே இருந்த  பிருந்தாவை எதிர்பாராதது போல ஆச்சர்யத்துடன் பார்த்தவன். “ஹலோ பிருந்தா!!…. என்ன‌ இந்த பக்கம்‌?” என்று அவனே ஆரம்பித்தான்.

“ம் காபி சாப்பிட வந்தேன்” என்று அவனை வாரியவள் “கோவிலுக்கு எதுக்கு வருவாங்க”  என்றாள் குங்குமத்தை நெற்றியில் இட்டபடி

“தெரியாம கேட்டுட்டேன்… இப்படி பட்டாசா வெடிக்கிறிங்களே இத்தனை நாள் நீங்களும் சைலண்டுன்னுல நான் நினைச்சிட்டு இருந்தேன்…” என்றான் அவள் பேசுவதை கண்டு அதிர்ந்தவனாக

அப்படியெல்லாம் தப்பா நினைச்சிடாதிங்க கிருஷ்ணா…  நான் நல்லா பேசுவேன் இப்போதான் பேசுறது கம்மியாகிடுச்சி…அதை விடுங்க…  நீங்க அடிக்கடி கோவில் வருவிங்களா” என்றாள் சந்தேகமாக கேட்பது போல்

‘இவ என்னை சந்தேகப்படுறாளா?? இல்ல சாதாரணமா கேக்குறாளா??’ என்று எண்ணியவன் “அடிக்கடி வரமாட்டேன் எப்போதாவது டைம் கிடைக்கும் போது வர்றது தான்… ஒரு உயிரை‌ காப்பாத்தினாலும் எனக்கும் மேல ஒரு சக்தி இருக்கு அதை நான் நம்புறேன்” என்றான்‌ அவளுடன் நடந்தபடி.

“ம் அதுவும் கரெக்ட் தான்‌…  என்று ஒப்புக்கொண்டவள் அடுத்த சந்நிதியில் நின்று வணங்கி மறுபடி இருவரும் நடக்க ஆரம்பிக்க, “நீயும்  இங்க அடிக்கடி வருவியா பிருந்தா…” என்றான். 

” நானும் எப்பவாவது வருவேன்… வந்து எல்லாருக்கும் ஒரு அட்டணன்ஸை போட்டுட்டு போவேன் டாக்…. என்று  தன்னிச்சையாக கூற வந்தவள் சட்டென மாற்றி கிருஷ்ணா என்றாள்‌ சிரித்தபடி

அதில் சிறிதாக நகைத்தவன்  “வா பிருந்தா  அப்படி உட்கரலாம்‌” என்று கூற இருவரும் ஓரிடத்தில் அமர்ந்தனர். 

வெகு தீவிரமான முகபாவனையுடன் “நோட் எங்க பிருந்தா… எழுதிட்டியா” என்றான்.

“என்னது நோட்டா” என்று பிருந்தா திருதிருவென விழிக்க 

“ஆமா கிருஷ்ணா கிருஷ்ணான்னு எழுதி மனசுல பதிய வைக்க சென்னேனே” என்றான் சிரியாது…

“ஹலோ அதை இன்னும் நீங்க மறக்கலையா” என்று அதிர்ச்சியாக  கேட்க 

“நீ இன்னும் டாக்டரை மறக்கலையே அப்போ இது செய்து தானே ஆகனும்”  என்றான் இரு கை விரித்து.

“கடவுளே” என்று மேலே கை காட்டியவள் “அந்த கிருஷ்ணா கிட்ட இருந்தே கூட தப்பிச்சிடலாம் போல இந்த கிருஷ்ணா கிட்ட இருந்து தப்பிக்க முடியல” என்றவள் பாவமாய் அவனை பார்க்க அதில் வாய் விட்டே நகைத்தான் கிருஷ்ணா..

அவன் பேச்சில் விகல்பம் இல்லை ஒரு நல்ல நண்பனிடம் பேசுவதை போல மனம் திறந்து  அவனுக்கு சரிக்கு சமமாய் பேசியபடி வந்தாள்.… கிருஷ்ணாவின் பேச்சில் அவள்  இயல்பு தன்னையும் மீறி வெளியே வர தூரத்தில் இரண்டு இளவயது பெண்கள் அவனையே பார்ப்பதை பார்த்துவிட்டு “கிருஷ்ணா பார்த்து ஜாக்கிரதையா இருங்க உங்களை கவர்ந்து செல்ல அங்கே கோபியர்கள் வருகிறார்கள்” என்றாள் செந்தமிழில்

திரும்பி அவர்களை பார்த்தவன் அவர்களை முறைக்க அந்த இளம் பெண்கள் திரும்பிக்கொண்டனர். 

“நீ வேற, அந்த லெவலுக்கு எல்லாம் நான் இல்லமா… அவங்க ஏதோ பாக்க போய், என்னை தான் பாக்குறாங்கன்னு என்னை வைச்சி கலாய்க்கிற பத்தியா…” என்றான்  அது உண்மை இல்லை என்பது போல

“அப்போ நான் பொய் சொல்றேன்னு சொல்றிங்களா?? நீங்க அழகா இருக்க போய் தான் உங்கள பாத்தாங்க அந்த பொண்ணுங்க…  இவ்வளவு எதுக்கு கிருஷ்ணா என் தம்பி விஷ்ணுவே உங்களை சைட் அடிக்கிறான் தெரியுமா?” என்றாள். சத்தமாக

அதில் அதிர்ந்து அவளை பார்த்த கிருஷ்ணா சுற்றும் முற்றும் திரும்பி பார்த்து “நல்லவேலை யாரும் கேக்கல… இதெல்லாம் வெளியே சொல்லிடாத பிருந்தா தப்பா நினைக்க போறாங்க” என்று அவசரமாக சொல்லவும் அவன் பதற்றித்தில் இருக்கும் இடம் மறந்து சத்தமாக சிரித்தாள்.

 அவள் சிரிப்பதையே சற்று முறைப்பது போல ரசித்தவனிடம் “அய்யோ கிருஷ்ணா சாரி சாரி… உங்க ஸ்டைலு உங்க சிரிப்பு உங்க நடைன்னு எல்லாமே அவனை அட்மியர் பண்ணி உங்க பக்கம் அவனை இழுத்துடுச்சி அதை சொல்ல வந்தா முறைக்கிறிங்க” என்றாள் சிரிப்பை அடக்கியபடி

“ஆக மொத்தம் அக்கா தம்பி ரெண்டு பேருக்கும் நான் ஒரு எண்டர்டைமெண்ட் டா இருந்து இருக்கேன்” என்று நக்கலாக கேட்க

“அச்சோ இல்ல…இல்ல…” என்று பிருந்தா மறுக்க கிருஷ்ணாவின் 

மனதில் மட்டும் ‘உன் தம்பி என்னை சைட் அடிஞ்சி என்ன ப்ரோயஜனம்… பாக்க வேண்டிய நீ பாக்க மாட்டறியே’ என்று பெருமூச்சி ஒன்று எழ “ஒன்னும் சொல்றதுக்கில்ல” என்ற வார்த்தையை வாய்விட்டு சொல்லி இருந்தான்.

இது அவள் செவிகளில் சரியாய் விழாததால் “என்ன சொன்னிங்க கிருஷ்ணா?” என்றிட

‘மைண்ட் வாய்ஸ்ன்னு நினைச்சி சத்தமா பேசிட்டோமோ?’ என்று எண்ணியவன் “அது ஒன்னுமில்ல டைம் அகிடுச்சின்னு சொன்னேன்” என்றான் சமாளிப்பாக

அப்போதுதான் வாட்சை திருப்பி பார்த்தாள். “ச்சோ டையம் ரொம்ப ஆகிடுச்சி உங்களோட பேசிட்டு இருந்ததுல நேரம் போனதே தெரியல கிருஷ்ணா… நான் கிளம்புறேன் அம்மாவுக்கு டிபன் தரனும்” என்றபடி எழுந்தவள் கிளம்புவதாக கூற

‘மடையா மடையா வேற எதுவுமே கிடைக்கலையா டைமைத் தான் சொல்லனுமா பாரு இப்போ அவ போறா’ என்று உள்ளுக்குள் தன்னை திட்டிக் கொண்டவன் வெளியே சிரித்தபடி “ஓகே பிருந்தா அப்புறம் பாக்கலாம்” என்றபடி அவனும் கிளம்பினான்.