🖊️துளி 43👑
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
வரவேற்பில் அபிமன்யூ ஸ்ராவணியின் பின்னாடியே சுற்றிக் கொண்டிருக்க தனித்துவிடப் பட்ட அஸ்வின் ஒரு நாற்காலியில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அந்த மண்டபமெங்கும் அலைந்த அவனது பார்வை ஒரு ஊதா லெஹாங்காவிடம் நிலைபெற அந்தப் பெண்ணோ அவனுக்கு முதுகு காட்டியபடி அங்கே வைக்கப்பட்டிருந்த விதவிதமான உணவுவகைகளைக் கதம் செய்து கொண்டிருந்தாள்.
அதைக் கண்டவன் “இதுக்கு அப்புறம் இந்த உலகத்துல சாப்பாடே இல்லாம போயிடும்கிற லெவலுக்குச் சாப்பிடுதே இந்த பொண்ணு! யாரா இருக்கும்?” என்று நாற்காலியில் அமர்ந்தவாறே அவள் முகத்தைப் பார்க்க முயன்றான். அது முடியாது போகவே எழுந்து அவள் நிற்கும் இடத்துக்கு விரைந்தவன் அவள் எதிர்ப்பார்க்காத நேரத்தில் “ஹலோ!” என்று அழைக்க அவள் திடுக்கிட்டவளாய் கையிலிருந்த பிளேட்டை நழுவ விட தட்டு கீழே விழுந்து அதில் அதிலிருந்த சாப்பாடு முழுவதும் தரையில் கொட்டிவிட்டது.
அவன் அழைத்த பதற்றத்தில் அதில் கால் வைத்து வழுக்கி விழப்போக அவளை விழுவதற்குள் தாங்கினான் அஸ்வின். அவளோ விழுந்து விடுவோமோ என்ற பதற்றத்தில் கண்களை சிக்கென்று மூடிக்கொள்ள அஸ்வின் அவளது முகத்தை மறைத்திருந்த கூந்தலை விலக்க அங்கே அவன் கண்டது மேனகாவை தான்.
வழக்கம் போல அதிக ஒப்பனை இல்லாத முகம் அன்றலர்ந்த மலராய் பிரகாசிக்க மூக்குக் கண்ணாடிக்குள் இறுக்கமாக மூடிய விழிகளுடன் குழந்தைப் போல முகம் சுருக்கியிருந்தவளைக் கைகளில் தாங்கியவன் அவளை விலக்க மனமின்றி அவளின் இந்த அழகியத்தோற்றத்தை இதயத்திலும் நிரப்பிக் கொண்டான்.
மேனகாவோ இவ்வளவு நேரமாகவா தான் தரையில் விழுகிறோம் என்ற சந்தேகத்தில் கண்ணைத் திறக்க அவள் அஸ்வினின் ரசனைப்பார்வையைச் சந்திக்க நேர்ந்தது. அவனது பார்வை விழி வழியே இதயத்தைத் துளைக்க அவளுக்குமே அவன் கரங்களிலிருந்து விலகும் எண்ணமில்லை.
சுலைகாவிடமும் ரஹ்மானிடமும் ஏதோ பேசிக் கொண்டிருந்த ஸ்ராவணியைத் தன் கைகளால் இடித்த அனுராதா அங்கே நின்றிருந்த இருவரையும் சுட்டிக்காட்ட அவள் கண்ட காட்சியை அவளால் நம்ப முடியவில்லை. எப்போதும் எலியும் பூனையுமாக இருப்பவர்களா இவர்கள் என்று யோசித்தபடியே மேடையிலிருந்து இறங்கியவளை அபிமன்யூ பிடித்துக் கொள்ளவே அவளால் அவர்கள் அருகில் செல்ல இயலவில்லை.
அதற்குள் சுதாரித்துக் கொண்ட மேனகா அவனை விட்டு விலகியவள் அவன் முகத்தைப் பார்க்க இயலாது வெட்கம் பிடுங்கித் தின்ன அவனுக்கு முதுகு காட்டியபடி நிற்க அஸ்வினின் இதழில் புன்னகை மின்ன சிகையைக் கோதியவாறு அங்கிருந்து நகர ஸ்ராவணி அவனைக் கடந்து மேனகாவிடம் வந்தாள்.
அவளது முகச்சிவப்பே விஷயத்தை உணர்த்திவிட ஸ்ராவணி அவளிடம் வேறு எதுவும் கேட்கவில்லை. அதன் பிறகு வந்த நாட்களிலும் மேனகாவும் அஸ்வினும் எதேச்சையாக ஆங்காங்கே சந்தித்தவர்கள் வழக்கம் போல சண்டையிட்டுக் கொள்ளாமல் ஒருவரை ஒருவர் மௌனப்புன்னகையுடன் கடக்கப் பழகிக் கொண்டனர்.
ஸ்ராவணியும் அபிமன்யூவும் கூட வேலை விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு பேச ஆரம்பித்திருந்தனர். அவர்களின் பேச்சில் சில நேரங்கள் வாக்குவாதம் எழுந்தாலும் அபிமன்யூ பெரும்பாலான நேரங்களில் தன் காதலுக்காக விட்டுக்கொடுத்து விடுவான். சில நேரங்களில் ஸ்ராவணியின் உயர்ந்த புருவங்களே போதும் அவனது வாயை அடைப்பதற்கு.
ஸ்ராவணிக்கு விஷ்ணு கொடுத்த வேலை முடிந்துவிட அன்று அவள் தனது கேபினைச் சுத்தம் செய்து கொண்டிருக்க வர்தன் அவளைத் தன்னுடன் கட்சிக்கூட்டத்துக்கு வருமாறு கூறவே அவள் வழக்கம் போல தனக்குப் பேட்டி எடுப்பது எல்லாம் சரிவராது என்று மறுக்க வர்தன் பிடிவாதம் பிடித்து அவளை அழைத்துச் சென்றான்.
பொதுக்குழு கூட்டத்தில் அபிமன்யூவைக் கண்டதும் வர்தனிடம் “இவன் கூட்டத்துக்கா வரச் சொன்ன? இப்போ அவன் கலர் கலரா பொய் சொல்லுவானே!” என்று கடுப்புடன் வர்தனைத் திட்ட அவனோ “என்ன வனி? சாரும் நீயும் தான் ராசியாயிட்டிங்கல்ல. அப்புறம் என்ன?” என்று தாஜா செய்தான்.
“அடேய் அது பெர்சனல். அதுவும் இதுவும் ஒன்னா? இங்கே அவன் பக்கா அரசியல்வாதியா பேசுவான். எனக்கு அதைக் கேட்டுட்டுச் சும்மா போக முடியாது” என்றுச் சொல்லி பற்களை நறநறவென்று கடிக்க அந்தச் சத்தத்தில் மேடையைப் பார்த்தவன் தான் வர்தன். அதன் பின் தவறியும் ஸ்ராவணியின் புறம் திரும்பவில்லை.
ஒரு வழியாக கூட்டம் முடிந்து அபிமன்யூ கிளம்புகையில் ஒரு பெண்மணி கல்லூரிப்பிரயாயத்தில் இருக்கும் ஒரு பையனுடன் வந்து அவனை நோக்கி வணக்கம் வைக்க அதற்குள் கட்சியின் அடிபொடிகள் வந்து அவரை விலக்க முயல அவனுக்கு எரிச்சலானது.
அவரை விலக்க முயன்றவனை கண்ணால் எரித்தபடியே “அவங்க அபிமன்யூ ஐயானு தானே சொன்னாங்க. உங்க பேரை அபிமன்யூனு எப்போ மாத்தினிங்க?” என்று கேட்க அவன் மவுனமாக விலகிச் சென்ற பின் அந்த பெண்மணியிடம் என்ன விவரம் என்று கேட்க அவரோ தனது கணவர் இந்த கட்சியில் உறுப்பினராக இருந்தவர் பார்த்திபன் சிறை சென்ற போது நடந்த கலவரத்தில் நடந்த தாக்குதலால் உயிரிழந்துவிட்டார் என்று சொல்லி அவரது அருகில் நிற்கும் அவரின் மகனின் கல்விக்கு உதவுமாறு கூறவே அவன் அருகில் நின்ற அஸ்வினைப் பார்க்க அவன் அந்த பையனை அழைத்து விவரம் கேட்க முயன்றான்.
அதற்குள் சுற்றி நின்றப் பத்திரிக்கையாளர்கள் மைக்கை நீட்டியதோடு அல்லாமல் அந்தப் பையனையும் அவனது அன்னையையும் போட்டோ எடுக்க முயன்றதால் ஃபிளாஷ் மின்னத் தொடங்க அவன் அமைதியாக யாரும் புகைப்படம் எடுக்க வேண்டாமென்று கேட்டுக் கொண்டான். ஆனால் யாரும் கேட்பது போல் இல்லை. அதையும் மீறி ஃபிளாஷ் மின்ன எரிச்சலானவன் “ஏய் நோ மோர் ஃபோட்டோகிராஃப்னு சொன்னது காதுல விழல. அடுத்தவங்க கஷ்டத்தையும், கண்ணீரையும் டி.ஆர்.பியா மாத்துற இந்த புத்தியை விடுங்க. அவங்க என் கிட்ட உதவி தான் கேட்டாங்க. அதுக்கு அவங்க படத்தை இன்னைக்கு ஃபுல்லா டிவியில காட்டப் போறிங்களா? எல்லா மனுசங்களுக்கும் சுயமரியாதைனு ஒன்னு உண்டு. உங்களோட இந்தச் செய்கையால அவங்க சுயமரியாதை பாதிக்கப்படும்னு தெரியாதா?” என்று கர்ஜிக்க கேமராக்களுடன் உயர்ந்த கைகள் தானாகவே தணிந்தன.
பின்னே நின்ற அஸ்வினைப் பார்த்தவன் “இனிமே இந்த மாதிரி கூட்டத்துக்கு பிரஸ் பீப்பிள் வராமப் பார்த்துக்கோ அஸ்வின். ஐயாம் கெட்டிங் சிக் ஆஃப் தீஸ் பிரஸ் பீப்பிள்” என்றான் எரிச்சலுடன். அதன் பின் கட்சியாட்களே நிருபர்களையும் போட்டோகிராஃபர்களையும் செல்லுமாறு சொல்லிவிட அவர்கள் முணுமுணுத்தபடியே நகர்ந்தனர்.
வர்தன் ஸ்ராவணியிடம் “என்ன வனி! அவரு பிரஸ் பீப்பிளை இப்பிடி கழுவி ஊத்துறாரு?” என்று சொல்ல ஸ்ராவணி சாதாரணமாக “அது அவனோட ஒபினியன். இந்த விஷயத்துல நான் அவனுக்குச் சப்போர்ட் தான். எங்கேயும் நியூஸை மட்டுமே நம்ம எதிர்ப்பார்க்குறோம். இப்போ இந்த அம்மாவையும், அவங்க பையனையும் மட்டு அவன் போட்டோ எடுக்க அலோ பண்ணிருந்தா மீடியா என்னவோ எம்.எல்.ஏவின் உதவியுள்ளம்னு அவனைப் புகழ தான் செய்வாங்க. ஆனா அந்த அம்மாவையும் பையனையும் நினைச்சிப் பாரு. அவங்களை டிவியில பார்த்தவங்க ஒவ்வொரு தடவையும் இந்த உதவி வாங்கிப் படிச்ச விஷயத்தைச் சாதாரணமாவோ நக்கலாவோ சுட்டிக்காட்டுனா அவங்களுக்கு மனசு கஷ்டப்படுமில்லையா?” என்று அபிமன்யூவுக்கு பரிந்துப் பேச வர்தனுக்கும் அவள் கூறுவதில் உள்ள நியாயம் புரிந்தது. அவனைக் கிளம்பச் சொல்லிவிட்டு அவள் மட்டும் அபிமன்யூவை நோக்கி நடக்க கட்சியாட்கள் அவளைத் தடுத்தனர்.
“எக்ஸ்கியூஸ்மீ நான் அவரோட ஃப்ரெண்ட்” என்று அவள் எவ்வளவோ சொல்லியும் அவர்கள் மறுக்கவே ஒரு கட்டத்தில் பொறுமையிழந்தவள் “யோவ் நான் அவரோட பொண்டாட்டி. இப்போவாச்சும் விடுறிங்களா?” என்று கேட்க அவர்கள் இன்னும் அவளைச் சந்தேகமாகவே பார்த்தனர்.
அவர்களின் பார்வையை உணர்ந்தவள் “என்னை நம்பலைல! ஓகே! போய் உங்க எம்.எல்.ஏ கிட்டவே கேளுங்க” என்று அபிமன்யூவை நோக்கி கைகாட்ட அவர்களின் ஒருவன் அவனிடம் சென்று விசாரிக்க அவன் ஸ்ராவணியை அனுப்புமாறு சொல்ல அவள் அவர்களை முறைத்துக் கொண்டே நகர “மன்னிச்சிடுங்க அண்ணி” என்றான் அந்த விபரம் கேட்டுவிட்டு வந்தவன்.
அவள் செல்லும் போது அபிமன்யூ அந்தப் பையனிடமும் அவனுடைய அன்னையிடமும் படிப்புச் செலவை கட்சி ஏற்கும் என்று உறுதியளித்தவன் இடைமட்ட ஆட்களிடம் இதைப் பற்றிக் கேட்க வேண்டியதில்லை என்றும் அவரது மகன் சென்னையில் தங்கிப் படிக்கும் வரை தன்னை அவன் நேரிடையாகச் சந்தித்துப் பேசிக் கொள்ளலாம் என்றுச் சொல்லி ஒரு வணக்கத்துடன் வழியனுப்பி வைத்தான்.
இவ்வளவையும் பார்த்த ஸ்ராவணிக்கு தான் முதலில் பார்த்த அரசியலில் அனுபவமற்ற அபிமன்யூவா இவன் என்ற திகைப்பு. ஒவ்வொரு பிரச்சனையையும் எவ்வளவு லாவகமாக கையாளுகிறான் என்ற எண்ணத்துடன் அவனும் அஸ்வினும் நிற்குமிடத்துக்கு விரைந்தவள் “ஹலோ எம்,எல்.ஏ சார்” என்று தோளில் தட்டி அழைக்கத் திரும்பியவனின் இதழில் குறும்புப் புன்னகை குடிகொண்டிருந்தது.
“ரிப்போர்ட்டர் மேடம் இப்போ எங்க கட்சி ஆள் வந்து இங்கே யாரோ என்னோட பொண்டாட்டினு சொல்லிட்டு வந்துருக்காங்கனு சொன்னான். நீங்க பார்த்திங்களா?” என்று கேட்க ஸ்ராவணி நெற்றியில் தட்டிக் கொண்டவள் சமாளிக்கும் விதமாக “அது..அவங்க என்னை விட மாட்டேனு சொன்னாங்க. அதான்……” என்று இழுக்க அஸ்வினும் அபிமன்யூவும் சிரித்தனர்.
அஸ்வின் இருவரையும் பார்த்துவிட்டு கேலியாக “சரி புருசன் பொண்டாட்டிக்குள்ள ஆயிரம் இருக்கும், இல்லனா ஐநூறாவது இருக்கும். அதுல எதையும் நான் கேக்க விரும்பல. சீக்கிரம் வீட்டுக்கு வந்து சேருடா நல்லவனே” என்று சொல்லிவிட்டு ஸ்ராவணிக்கு ஒரு நமட்டுச்சிரிப்பைப் பரிசாக அளித்துவிட்டு அவர்களுக்கு தனிமை கொடுத்துவிட்டு கிளம்பினான்.
அவன் சென்றதும் அபிமன்யூ “அது தான் வாய் வரைக்கும் வந்துட்டுல்ல. அவனுக்குச் சொன்னதை ஒரு தடவை ஒரே ஒரு தடவை என் கிட்டச் சொன்னா ரிப்போர்ட்டர் மேடத்தோட சொத்து குறைஞ்சு போயிடுமோ?” என்க ஸ்ராவணிக்கு அவன் கேட்ட விதத்தில் சிரிப்பு வந்துவிட்டது.
“அதுல்லாம் சொல்ல முடியாது” என்று அவள் அமர்த்தலாகச் சொல்ல அவன் சலித்துக் கொண்டான். அவனைப் புன்னகையுடன் பார்த்தவள் “பட் என்னால ஒரு விஷயத்தைச் சொல்ல முடியும். நான் முதல்ல பார்த்ததுக்கு நீ எவ்ளோவோ மாறிட்ட! ஒரு பக்கா அரசியல்வாதியா நீ ரொம்பச் சீக்கிரமா புரமோசன் ஆயிட்ட. அப்புறம் கொஞ்சம் இவ்ளோண்டு நல்ல மனுசனாவும் சேன்ஜ் ஆயிருக்க” என்று விரல்நுனியைக் காட்டிச் சொல்ல அவளது பாராட்டை அவன் தலைகுனிந்து ஏற்றுக் கொண்டான்.
பின்னர் தலை நிமிர்ந்தவன் “அப்பிடியே ஒரு ஹஸ்பெண்டா புரமோசன்……” என்று இழுக்க ஸ்ராவணி அவன் தோளில் அடித்தவள் “அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியா நீ இதை தான் கேப்பேனு நெனைச்சேன்” என்று சொல்லிவிட்டு நகர முயன்றாள். அவளது கரம் பற்றி இழுத்தவன்
“கேப்பேனு தெரியுதுல்ல. அப்போ சொல்லிட்டுப் போறது” என்க ஸ்ராவணி அவனை ரசனையுடன் பார்த்தபடியே “இப்போ சொல்ல மாட்டேன். எதுக்கும் ஒரு டைம் வரணும் பாஸ்” என்றுச் சொல்லிவிட்டுத் தன் கரத்தை விடுவித்துக் கொண்டாள்.
பின்னர் “உன்னை நம்பி நான் வர்தனை வேற போகச் சொல்லிட்டேன். சோ என்னை ஆபிஸ்ல டிராப் பண்ணிடு” என்க அபிமன்யூ அப்போது தான் நினைவு வந்தவனாக “ஆமா இண்டர்வியூ எடுக்கிறது உன்னோட வேலை இல்லையே” என்று கேட்டுவிட்டு அவளுடன் நடக்க ஆரம்பித்தான்.
“ஆமாப்பா! பட் இந்த வர்தன் தான் என்னைக் கம்பெல் பண்ணிக் கூட்டிட்டு வந்தான். எனக்கு இங்கே வர துளி கூட இஷ்டம் இல்ல. பிகாஸ் ஐயாம் கெட்டிங் சிக் ஆஃப் தீஸ் பொலிடீசியன்ஸ்” என்று அவனைப் போலவே சொல்லிக் காட்டினாள்.
அதைக் கேட்டு நகைத்தவன் “சோ உனக்கு ஆபிஸ்ல பெருசா வேலை இல்லைனா நம்ம ரெண்டு பேரும் கொஞ்சம் டைம் ஸ்பெண்ட் பண்ணலாமே” என்றுக் கேட்க அவள் புருவத்தை உயர்த்திப் பார்த்த பார்வையில் ஜெர்க்கானவன் “அம்மா தாயே! உடனே மலை ஏறிடாத. என் கூட லஞ்ச் சாப்பிட்டிட்டு கொஞ்சம் நேரம் பேசிட்டுப் போனு சொல்ல வந்தேன்” என்க அவள் சரியேன்று தலையசைக்க அவனால் நம்பவே முடியவில்லை.
“ஏய் வனி! நிஜமாவா சொல்லுற? ஓ மை காட்! ஐ காண்ட் பிளீவ் திஸ். ஐ லவ் யூ சோ மச் டியர்” என்று அவளின் கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சியவன் அவள் அமரக் கார் கதவைத் திறந்துவிட புன்னகையுடன் அமர்ந்தாள் ஸ்ராவணி.
அபிமன்யூ சொன்னபடி அவனுடன் மதிய உணவுக்குச் சென்றவள் அதற்குப் பின் அவனது பீச் ரிசார்ட்டுக்குச் சென்று கடற்கரையில் நேரம் செலவளித்தனர். ஸ்ராவணிக்கு கடலைக் கண்டாலே பயம். ஆனால் அவன் அசாதாணமாக அலையில் விளையாட அவள் அரண்டு போய் கரையில் நின்று கொண்டு கால் நனைப்பதோடு நிறுத்திக் கொண்டாள்.
அபிமன்யூ “கம் ஆன் வனி! நல்லா இருக்கும் வா” என்று கையை நீட்ட அவள் மறுத்து தலையசைக்க அவன் கரைக்கு வந்து அவளது கையைப் பற்றி இழுத்துச் செல்லவே அவள் “எனக்குப் பயமா இருக்கு அபி. நான் வரல” என்றபடி நகர மறுக்க ஒரு கட்டத்துக்கு மேலாக அவனுடன் போட்டியிட இயலாமல் நடப்பது நடக்கட்டும் என்று அவனுடன் சேர்ந்து அலைகளுக்குள் செல்ல ஆரம்பித்தாள். முதலில் பயந்தவள் சிறிது நேரத்தில் அவன் இருக்கும் தைரியத்தில் பயமின்றி விளையாடவே அவனுக்கும் மகிழ்ச்சி. இருவரும் சிறிது நேரத்தில் களைத்துப் போய் கரையில் அமர்ந்தவர்கள் கலகலப்பாக உரையாடினர். அந்த உரையாடல் நேரம் போனதே தெரியாமல் நீள மேற்கில் மறைந்த ஆதவன் அந்திச் சாய்வதை அவர்களுக்கு அறிவிக்க இருவரும் மணலைத் தட்டிவிட்டு நடக்க ஆரம்பித்தனர். அன்றைய நாள் அவர்களின் வாழ்வில் மறக்கமுடியாத நாளாக மாற அது கொடுத்த மகிழ்ச்சியின் தித்திப்பு நெஞ்சை நிறைக்க இருவரும் மாலையில் வீடு திரும்பினர்.