🖊️துளி 24👑

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அன்று ஞாயிறு என்பதால் பொறுமையாக எழலாம் என்று தூக்கத்தை தொடர்ந்த ஸ்ராவணியை உறக்கத்திலிருந்து எழுப்பியது அவளது போன் ரிங்டோன். அவள் காதை கைகளால் மூடியவள் அதை மீறியும் சத்தம் கேட்க வெறுப்புடன் போனை எடுத்து “ஹலோ உனக்குலாம் தூக்கமே வராதாடா அண்ணா? வினி கிட்ட சொல்லி உனக்கு ரெண்டு மிதி குடுக்க சொல்லுறேன்” என்றாள் தூக்கம் கலைந்த கடுப்பில்.

மறுமுனையில் சத்தமாக நகைத்த ஸ்ரவன் “ஓ! சாரிடா வனி. பட் என்ன பண்ணுறது? கொஞ்சம் முக்கியமான விஷயம். என்னோட ஃப்ரெண்ட் ஹாரியோட சிஸ்டர் இருக்கால்ல, உனக்கு கூட நான் இன்ட்ரோ குடுத்தேனே! அவ நேம் நான்ஸி” என்க ஸ்ராவணி தூக்க கலக்கத்துடன் “அதுக்கு என்னடா இப்போ?” என்றாள் குழறலாக.

“அவ இந்தியா வர்றா. சென்னையில ஏதோ இண்டர்நேசனல் லா கான்ஃபரன்ஸாம். அதுல கலந்துக்க வர்றா. நீ மார்னிங் அவளை ஏர்ப்போர்ட்டுல போய் கூட்டிட்டு வந்து நம்ம ஃப்ளாட்டுல தங்க வச்சுக்கோ. ஒன் வீக் கழிச்சு அவ யூ.கே போயிடுவா” என்றான் விளக்கமாக.

அதன் பின் அவள் ஞாயிறு அன்றும் தன்னை வேலை வாங்குவதாக குறைபட தங்கையை தாஜா செய்து ஒத்துக்கொள்ள வைத்தான்.

ஸ்ராவணி மெதுவாக எழுந்து கூந்தலை கோதிக்கொண்டபடி அமர்ந்தவள் இன்னும் உறக்கம் கலையாமல் இருந்த மேனகாவை பார்த்து “நான் மட்டும் எழுந்திருக்கணுமாம், இவ தூங்குவாளாம். இருடி” என்றபடி ஒரு தலையணையை அவள் மீது வீச மேனகா பதறியடித்துக் கொண்டு எழுந்தாள்.

கண்ணைத் தேய்த்தபடி பக்கத்து மேஜையிலிருந்த கண்ணாடியை எடுத்து போட்டுக் கொண்டாள். பின்னர் இன்னொரு தலையணையை எறிய தயாராக இருந்த ஸ்ராவணியை கடுப்புடன் பார்த்தபடி “ஏன்டி பில்லோவ தூக்கி எறிஞ்ச?” என்று இரவுடையின் முழுநீளக்கையை மடித்து விட ஸ்ராவணி உஷாராகி விட்டாள்.

ஏனென்றால் அவள் அவ்வாறு செய்தால் சண்டைக்கு தயாராகிவிட்டாள் என்று அர்த்தம். ஸ்ராவணி மெதுவாக படுக்கையிலிருந்து எழுந்து “என்னோட பில்லோ தூசியா இருந்துச்சு மேகி! அதை தட்டி விடுறப்போ உன் மேல தெரியாம விழுந்துடுச்சு” என்று சொன்னபடி நழுவமுயல அதற்குள் மேனகா தலையணையை தூக்கி அவள் மீது எறிந்தாள்.

ஸ்ராவணி அது அவளை தாக்காவிதமாய் நகர்ந்து “மேகி! அப்புறமா சண்டை போடலாம்டி. அண்ணா நம்ம ரெண்டு பேரையும் ஏர்ப்போர்ட் போக சொல்லிருக்கான்டி. நான்ஸி இந்தியாக்கு வர்றாலாம். அவளை நம்ம கூட தங்க வச்சிக்க சொல்லுறான்” என்று விஷயத்தை சொல்ல மேனகா கண்ணாடியை சரிசெய்தபடி “ஸ்ரவன் பேரை சொன்னதால நீ இன்னைக்கு உயிர் பிழைச்ச. பட் எப்போவும் நான் இதே மாதிரி நல்லவளா இருக்க மாட்டேன்” என்று அமர்த்தலாக சொல்லிவிட்டு ஸ்ராவணியை விலக்கி விட்டு குளிக்க சென்றாள்.

அதற்கு பிறகு இருவரும் வழக்கம் போல வளவளத்தபடி தயாராகி ஏர்ப்போர்ட்டுக்கு செல்ல தயாராயினர்.

**********************************************************************************

“டேய் அச்சு! எவ்ளோ நேரம்டா ரெடியாகுவ? சீக்கிரமா வாடா. நான்ஸி பாவம்ல. அவளுக்கு வேற வெயிட் பண்ணுறது சுத்தமா பிடிக்காது” என்றபடி பரபரத்தான் அபிமன்யூ. அஸ்வின் தயாராகி வந்து நின்றவன் அபிமன்யூ வழக்கமான யூனிஃபார்மை தவிர்த்து கேஷுவலாக உடையணிந்து நின்றதை கவனித்தவாறே “என்னாச்சு இன்னைக்கு எம்.எல்.ஏவோட யூனிஃபார்முக்கு லீவா?” என்று கேட்டவாறு அவன் அருகில் வந்தான்.

அபிமன்யூ கூலர்ஸை போட்டவாறு “எனக்கு பிளாக் அண்ட் ஒயிட்ல சுத்தி போர் அடிச்சிடுச்சுடா. அதான் ஒரு சின்ன சேன்ஜ்” என்று சொல்லிவிட்டு அஸ்வினுடன் கீழே இறங்கினான்.

சுபத்ரா கீழே இறங்கியவர்களை யோசனையுடன் பார்த்துவிட்டு “சண்டே கூடவா உங்க கட்சியில வேலை இருக்கு? ரெண்டு பேரும் காலையிலேயே கிளம்பிட்டிங்க?” என்று கேட்க அஸ்வின் “ஏர்ப்போர்ட் போறோம்மா. போயிட்டு சீக்கிரமா வந்துடுவோம்” என்று சொல்லிவிட்டு அபிமன்யூவும் அதற்கு தலையாட்டினான்.

சுபத்ரா ஆராய்ச்சி பார்வையுடன் எழுந்து “ஏர்ப்போர்ட்டுக்கா? யாரு வர்றாங்கன்னு இவ்ளோ காலையிலேயே ஏர்ப்போர்ட்டுக்கு போறிங்க ரெண்டு பேரும்?” என்று கேட்க அஸ்வின் என்ன சொல்வதென்று தெரியாமல் அபிமன்யூவை பார்த்தான்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

அவன் தொண்டையை செருமியவாறு “மா! அது வந்து…என்னோட ஃப்ரெண்ட் வர்றாங்கம்மா” என்று ஒருவழியாக அந்த ஃப்ரெண்ட் ஒரு பெண் என்பதை மறைத்துவிட்டுச்  சொல்லிமுடிக்க சுபத்ரா இன்னும் சந்தேகமாகவே பார்த்தார் இருவரையும்.

இருவரும் அவரை சமாளித்துவிட்டு கிளம்ப வீட்டை விட்டு வெளியேறியதும் தான் அபிமன்யூ மூச்சுவிட்டான். டிரைவர் சீட்டில் அமர்ந்தபடி அஸ்வினிடம் “டேய் அச்சு! எங்க நீ நான்ஸி பேரை சொல்லிடுவியோனு பயந்து போயிட்டேன்டா. அம்மாக்கு நான்ஸி பத்தி தெரிஞ்சுச்சுனா அவ்ளோ தான். இந்த ஜென்மத்துக்கு என் கூட பேசாம போயிடுவாங்க” என்று சொல்லி பெருமூச்சு விட்டபடி காரை ஸ்டார்ட் செய்தான்.

அஸ்வின் அவனது டிசர்ட்டை இழுத்துவிட்டபடியே “அவங்க இந்த டிவோர்ஸ் விஷயத்தால நீ மனசு ஒடஞ்சு போயிருப்பனு நினைச்சு தான் பேச ஆரம்பிச்சிருக்காங்கடா. வீணா நான்ஸியால புது பிரச்சனை எதையும் கொண்டு வந்துடாத” என்றான் அக்கறையோடு.

அபிமன்யூ சாதாரணமாக “ப்ச்..என்னடா நீயுமா? அவ நம்ம நான்ஸிடா. அவளால எனக்கு என்னைக்குமே பிரச்சனை வராதுடா” என்க

அஸ்வின் கிண்டலாக “அஹான்! நான்ஸி பேரை சொல்லிட்டு தான் ரிப்போர்ட்டர் மேடம் உன் லைஃப்குள்ள..ஐ மீன் அந்த பப்குள்ள வந்தாங்க! இதை மறந்துடாத மகனே” என்றான்.

அபிமன்யூ “நான்ஸிக்கு அவளை தெரிஞ்சிருக்காதுடா. இவ தான் என்னை வேவு பார்த்து நான் யாரு பேரை சொன்னா கேள்வி கேக்க மாட்டேனு தெரிஞ்சு நான்ஸி பேரை யூஸ் பண்ணிகிட்டா” என்றான் அலட்சியமாக.

இருவரும் பேசிக்கொண்டே ஏர்ப்போர்ட் வந்தடைய காரை பார்க் செய்துவிட்டு உள்ளே நுழைந்து நான்ஸிக்காக காத்திருக்க அரை மணிநேர காத்திருப்புக்கு பிறகு நான்ஸி புன்னகை பூத்த முகத்துடன் வந்து சேர்ந்தாள்.

சிரித்தமுகத்துடன் வந்தவள் அஸ்வினிடம் கைகுலுக்கிவிட்டு அபிமன்யூவை அணைத்துக் கொள்ள அவன் “ஹவ் ஆர் யூ டார்லிங்?” என்று கேட்டபடி அவளை அணைத்தான்.

அதன் பின் அவளை அணைத்த கையை விலக்காமல் பேசிக்கொண்டிருந்தவன் மேனகாவும், ஸ்ராவணியும் வருவதை கவனிக்கவில்லை. மேனகா ஸ்ராவணியுடன் பேசிக்கொண்டே நடந்து வந்தவள் அபிமன்யூ ஒரு வெளிநாட்டு பெண்ணை அணைத்திருப்பதையும் பக்கத்தில் அஸ்வின் புன்னகை முகத்துடன் நிற்பதையும் கண்டு திகைப்பில் வாயை பிளந்தாள்.

ஸ்ராவணி அவளின் தலையில் தட்டி “என்னடி இப்போ எதுக்கு மண் தின்ன கிருஷ்ணன் மாதிரி வாயை ஓப்பன் பண்ணி வச்சிருக்க?” என்று கேலி செய்ய அவளது முகத்தை திருப்பி சில அடி தூர இடைவெளியில் நிற்கும் மூவரையும் காட்டஸ்ராவணி அலட்சியமாக திரும்பியவள் அங்கே நின்ற மூவரையும் கண்டு சாதாரணமாக தான் நின்றாள்.

மேனகா தான் கடுப்புடன் “ஏய் இவன் என்னடி இப்பிடி பப்ளிக்ல ஒரு பொண்ணை ஹக் பண்ணிட்டு நிக்கிறான்! கொஞ்சம் கூட வெக்கமே இல்ல” என்று சொல்ல ஸ்ராவணி அவள் தோளில் இடித்தவள் “அவங்க ரெண்டு பேரும் லண்டன்ல இருந்தவங்கடி. இதுல்லாம் இப்போ இந்தியாலயே சாதாரணம்” என்று சொல்லிவிட்டு அவள் கையை பிடித்து இழுத்து சென்றாள் அவர்கள் மூவரை நோக்கி.

அபிமன்யூ எதேச்சையாக திரும்பியவனின் கண்ணில் ஸ்ராவணி வருவது தெரிய இவள் ஏன் இங்கே வந்திருக்கிறாள் என்ற யோசனையுடன் நிற்க அஸ்வின் அவன் கையை இடித்து அவன் காதில் “நான்ஸியை விட்டு தள்ளி நில்லுடா. எனக்கு என்னவோ இன்னைக்கு பெரிய சம்பவம் நடக்கும்னு மனசுக்குள்ள பட்சி சொல்லுது அபி” என்றுச் சொல்ல அவன் யோசனையுடன் அஸ்வினைப் பார்த்தபடி நான்ஸியை விட்டு விலகி நின்றான்.

அதற்குள் நான்ஸியை நெருங்கிய ஸ்ராவணி “ஹாய் நான்ஸி!” என்றவாறு அவளை அணைத்துக் கொள்ள இப்போது குழம்பி நின்றது அபிமன்யூவும், அஸ்வினும் தான்.

நான்ஸி ஸ்ராவணியை பார்த்து “வாவ் வனி! யூ ஆர் லுக்கிங் கார்ஜியஸ். தட்ஸ் ஒய் ஹாரி இஸ் ஈகர்லி வெயிட்டிங் டு சீ யூ” என்று சொல்ல மேனகா நக்கலாக அபிமன்யூ, அஸ்வினை பார்த்தபடியே நான்ஸியிடம் “ஓ யா நான்ஸி. ஐ ஹேவ் நோட்டிஸ்ட் தட் இன் அவர் ஸ்கைப் கால். ஹவ் இஸ் ஹாரி?” என்று ஆரம்பிக்க ஸ்ராவணியும் அதை ஆமோதித்தாள்.

அபிமன்யூ இவர்களின் உரையாடலை புருவம் சுருக்கியபடி முறைத்தவாறு ஏதோ அன்று தான் ஸ்ராவணியை முதல் முறை பார்ப்பது போல் தலையிலிருந்து கால் வரை பார்த்துவைத்தான். வெள்ளை நிற டாப் மற்றும் லெகின்ஸில் காதில் மட்டும் சிறு தோடு இருக்க மற்ற அணிகலன்களைத் தியாகம் செய்திருந்தாள். புருவமத்தியில் கடுகு போல சிறிய பொட்டு, அது கூட அந்த கருநிற வானவில் புருவங்களுக்கு இடையே கருப்புநிலவை ஒட்டி  வைத்தது போல அம்சமாகவே இருந்தது. நான்ஸியிடம் பேசும் போது நட்பாய் சிரித்த செவ்விதழ்களும், அந்தச் சிரிப்பு ஏற்படுத்திய கன்னக்குழியும், முகத்தில் விழும் கூந்தல் கற்றையை விரல்களால் அவள் நாசூக்காக ஒதுக்கிவிட்ட விதமும் அவனுக்கே இன்று அவள் பேரழகாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயன்றது.

“எப்போவும் போல பார்த்த உடனே சுண்டி இழுக்கிற அழகு தான். பட் அதுக்கு ஈக்வலா ஆட்டிட்டியூடும் இருக்கு. இந்த முகத்துல எப்போவும் ஒரு கோட்டிங் திமிரைப் பூசிட்டே திரியறது தான் கொஞ்சம் இரிட்டேட்டிங்கா இருக்கு” என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். கூடவே ஹாரி என்ற பெயர் ஏற்படுத்திய எரிச்சல் வேறு. இந்த லெட்சணத்தில் அந்த முகம் தெரியாத ஹாரிக்கு இவளை நேரில் சந்திக்க அவ்வளவு ஆர்வமா என்ற கடுப்பு வேறு அவனைப் போட்டுத் தாக்கியது.

அவனது முகபாவத்தைக் கவனித்த அஸ்வின் அவன் காதுக்குள் “ஹாரி! பேரே மேன்லியா இருக்குல்ல அபி” என்று சொன்னதும் அவன் அஸ்வினை முறைக்க அஸ்வின் திரும்பிக் கொண்டான்.

அவர்களின் உரையாடலில் இடையிட்ட அபிமன்யூ எரிச்சல் மண்டிய குரலில் “நான்ஸி பை த வே ஹூ இஸ் தட் ஹாரி?” என்றுப் பொறுக்க முடியாமல் கேட்க நான்ஸி தோளை குலுக்கியபடி “ஹீ இஸ் மை பிரதர் அபி” என்று சொல்லவும் அதிருப்தியுடன் கையை கட்டிக் கொண்டான்.

ஸ்ராவணி அவனது முகத்தை பார்த்து இவனுக்கு என்னாச்சு என்று நினைத்தவாறே நான்ஸியிடம் “நான்ஸி மார்னிங் தான் ஸ்ரவன் கால் பண்ணி சொன்னான் நீ இந்தியா வர்றேனு. உனக்கு கான்ஃபரன்ஸ் எத்தனை மணிக்கு?” என்று கேட்க அபிமன்யூ இது யார் அடுத்தவன் என்று திடுக்கிட்டவனாய் மீண்டும் இடையிட்டு “ஹூ இஸ் தட் ஸ்ரவன்?” என்று கேட்டுவிட்டு ஸ்ராவணியின் புறம் திரும்பி பதிலுக்காக காத்திருந்தான்.

ஸ்ராவணி கையை கட்டிக் கொண்டு “ஹீ இஸ் மை பிரதர் அண்ட் ஹாரி’ஸ் ஃப்ரெண்ட். இஸ் தேர் எனிதிங் எல்ஸ் யூ வாண்ட்?” என்றாள் அவனை முறைத்தபடி. பின்னர் நான்ஸியை தங்களுடன் அழைத்து செல்லவிருப்பதாக கூற நான்ஸியும் தனக்கு கான்ஃபரன்சுக்கு நேரமாவதால் மாலை சந்திக்கலாம் என்று சொல்லிவிட்டு மேனகா, ஸ்ராவணியுடன் கிளம்பினாள்.

அபிமன்யூ அஸ்வினிடம் “அச்சு! நான்ஸிக்கு அண்ணன் வேற இருக்கானாடா? அவன் இந்த வனியோட அண்ணனுக்கு ஃப்ரெண்ட் வேறயாம். என்னடா நடக்குது இங்க?” என்று குழப்பத்துடன் கேட்க அஸ்வின் “என்ன நடந்தா என்ன மச்சி? இன்னும் அஞ்சு மாசம் தான். அப்புறம் தான் டிவோர்ஸ் கெடச்சிடும்ல. நீ ஏன் தேவையில்லாத விஷயத்தை பத்தி யோசிக்கிற? வா போகலாம். அம்மா வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க” என்றபடி அழைத்து சென்றான்.

**********************************************************************************

நான்ஸி கான்ஃபரன்சுக்கு சென்று விட்டு மாலையில் ஸ்ராவணியின் ஃப்ளாட்டுக்கு திரும்பும் போதே அபிமன்யூவிடம் பேசிக்கொண்டு வந்தாள். மாலையில் பப்புக்கு செல்லலாம் என்று நான்ஸி கூற அபிமன்யூ சரி என்றவன் எத்தனை மணிக்கு வர வேண்டும் என்று சொல்லிவிட்டு போனை வைத்தான்.

நான்ஸி வீட்டினுள் நுழையும் போதே “மேகி டார்லிங்! ஐயாம் சோ டயர்ட்” என்றபடி சோஃபாவில் வந்து விழுந்தாள்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

அதன் பின் ஸ்ராவணியும், மேனகாவும் அவளுடைய கான்ஃபரன்சை பற்றி விசாரிக்க அந்த பேச்சுவார்த்தை ஒரு மணிநேரத்துக்கு மேலாக நீண்டது. நான்ஸி கொஞ்சம் ரிலாக்சாக நேரம் செலவளிக்க விரும்புவதாக கூற ஸ்ராவணி அதற்கு சரியென்றதோடு சரி.

இரவு ஏழு மணி போல நான்ஸி இருவரையும் தயாராக சொல்ல இருவரும் ஒரே குரலில் “எங்கே” என்று விழிவிரித்து நின்றனர். பின்னர் இன்னும் சிறிது நேரத்தில் டின்னரை முடித்துவிட்டு உறங்கலாம் என்று எண்ணியிருந்தவர்களை தயாராகும் படி சொன்னால அவர்கள் அவ்வாறு தானே விழிப்பார்கள்?

நான்ஸி பப்புக்கு செல்லலாம் என்று சொல்ல ஸ்ராவணி மறுப்புடன் ஏதோ சொல்ல வந்தாள். அதற்குள் நான்ஸி “பிளீஸ் வனி! பிளீஸ் கம் ஃபார் மீ. யூ டூ மேகி” என்று இருவரின் கைகளையும் பிடித்து கொள்ள வேறுவழியின்றி இருவரும் சம்மதித்தனர்.

நான்ஸி ஸ்கர்ட்டுடன் தயாரானவள் மேனகாவும், ஸ்ராவணியும் டெனிம் சர்ட், ஜீன்ஸ் மற்றும் ஸ்னிக்கர்ஸ் சகிதம் தயாராகி நின்றதை கண்டதும் “சால் வீ கோ?” என்றவள் அவர்களின் உடையைக் கண்டதும் வேறு உடை மாற்றினால் கூட நன்றாக இருக்கும் என்று அவள் சொல்ல மேனகா அவசரமாக “ஓ நோ! இந்த டிரஸ் தான் எனக்கு கம்ஃபர்டபிலா இருக்கு நான்ஸி. இதுவே ஓகே” என்று சொல்லிவிட்டு கால்டாக்சிக்கு போன் செய்தாள்.

சிறிது நேரத்தில் டாக்சி வர மூவரும் அதில் ஏறிக் கொண்டனர். டாக்சி அவர்கள் முதலில் சென்ற கோல்டன் கிரவுன் பப் இருக்கும் கிழக்கு கடற்கரை சாலையை நோக்கி விரைந்தது.