ரணம் ஆற ❣️ நீயே மருந்தாய்

நமச்சிவாய வாழ்க..!!!
நாதன் தாள் வாழ்க..!!!
இமைப்பொழுதும்
என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க..!!!
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க..!!!
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க..!!!
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க ⁠..!!!

சிவபுராணம் பாடிய படியே வெளியே வந்தார் அந்த வீட்டின் மூத்த பெண்மணி,
“ஏலே வரது, எங்கலே  என் பேரனை காணோம் “

“உங்களுக்கு உங்க பேரனை தவற நாங்களாம்  கண்ணுக்கு தெரியமாட்டோம் “என்றாள் அவரது மருமகள் தெய்வானை

“ஆமாடி எனக்கு அவன் மட்டும் தான் கண்ணுக்கு தெரியும்….. நீ
கால காலத்துல  பேரம் பேத்தியை எடுத்திருந்தின ,, நா ஏன் என் பேரனை தேட போறேன் “என்றார் அஞ்சலையம்மாள்.

தெய்வானைக்கு முகம் சுணங்கியது,
‘மணிமணியாக நான்கு பிள்ளைகளை  பெற்றேன். யாருக்கும் எந்த துரோகமும்  செய்ததில்லை,அப்படி இருந்தும் ஒருத்திக்கு வாழ்க்கைகாண அர்த்தமே இல்லை….. இன்னொருத்தன் எங்கே போனான்னே தெரியல.,, ஒருத்தன் வாழ்க்கை அந்தரத்துல இருக்கு….. என் மூத்த மகள்  மட்டுமாவது சந்தோசமா இருக்கணும்’ என்று இரவில் தனிமையில் தன் மனைவி தன்னிடம் புலம்பி தவிப்பதை நினைத்து கொள்வார் வரது என்கிற வரதராஜன்….

அஞ்சலை ஒன்னும் கொடுமைக்காரி மாமியார் இல்லை…. அவர்களுக்கு தம் வம்சம் விருத்தி அடைய வேண்டும்… அது மட்டுமே இப்போது  அவர் மனதில் இருப்பது….

அவர் அடுத்து வாயை திறப்பதற்குள் அங்கு வந்து சேர்ந்தான் அரசு என்னும் திருநாவுக்கரசு.. அக்கா இருவர் பரிமளா, நிர்மலா…
தம்பி கார்முகிலன் இவர்களுடன் பிறந்த நம் கதாநாயகனுடன் நாமும் சேர்ந்து பயணிப்போம்…

“ஆச்சி “

“வா ராசா”

“சொல்லுங்க ஆச்சி,”
“இல்லை ராசா இந்த முறை திருவிழாக்கு தர வேண்டிய பணம், சீர் எல்லாமே நாம தரணும் இல்லை பா… அதனால தான் ஐயா, உனக்கு நியாபகம் படுத்த  கூப்பிடு இருந்தேன்  “

“இதை சொல்லனுமா ஆச்சி, நா முன்னாடியே எல்லாம் பேசிட்டேன் .. அவங்க வந்தா நீங்களே பணம் கூடுத்துடுங்க, அப்பாகிட்ட பணம் இருக்கு “

“சரிமா நா வயலுக்கு போற “

தெய்வானைக்கு இதில் மிக பெருமிதம், எங்கு சென்றாலும் தன்னிடம் சொல்லாமல் போவதில்லை.

இது தான் அரசு,,, யாரையும் குறைவாகவோ  அல்லது மிகுதியாகவோ  நடத்தாமல் அனைவரையும் ஒரே அளவு நடத்தும் மாயாவி,,,,,
அவன் வாழ்வில் இப்படி ஒரு கடினகாலம் நடப்பது, எந்த வகையில் சரி என்று, தெய்வத்திடம் முறை இட்டார் அஞ்சலையம்மாள் ,

அரசு வீடு அவ்வூரில் கோடியில் இருக்கும்…. அந்த ஊர் பிரதான சாலையில் இருந்து பிரியும் போதே அவர்கள் நிலம் தொடங்கி விடும்… இருபுறமும் நெற்வயல், கரும்பு, கம்பு, சோளம், காய்கறி, வேர்க்கடலை என்று அனைத்து பயிர் வகையை அவர்கள் விவசாயம் செய்தனர்….. அப்படியே முன்னெரி வந்தால், தென்னை தோப்பு,,, அதன் முடிவில் ஊரு தொடங்கும்…. அந்த சாலை முழுவதுமே அரசு வீட்டின் நிலங்கள் மட்டுமே….அவர்கள் ஊரே பிரிவு பிரிவாக தான் வாழ்வார்கள்….

See More  🎵 இசை 35 (Final) 🎶

முதலில் தங்கி இருப்பவர்கள், ஊரின் கடைசிநிலை மக்கள் கூலி வேலை செய்வோர்…. அடுத்த மட்டம்,, ஆவூரில் சிறிது நிலம் வைத்திருப்போர்…
அதற்கும் அடுத்து அரசுவின் சின்ன தாத்தா வழி வகைகள்…

இவர்கள் வீடு இவை அணைத்து கடந்து இருக்கும்….. கிட்டத்தட்ட அந்த காலத்து மன்னர் ஆட்சி போல் பிரிந்து வாழ்ந்தனர் அந்த ஊர் மக்கள்…

ஊரின் பெயரும் அதுவே, மந்திரியூர்..

இப்போது அரசு வெளியில் செல்ல வேண்டும் எனில்,, இவ்வளவு மக்களையும் கடந்தே செல்ல வேண்டம்…

தன் வண்டியில் சென்றால் ஒவ்வொருவராக நிறுத்தி பேச முடியாது என்று… பொடி நடையாக நடந்தே செல்லும் பழக்கம் கொண்டவன் தான்,,, அனைவரிடமும் சமமாக பழகுவான்…

தந்தை கேட்டால், அவர்கள் உழைக்காமல் நாம் நம் வீட்டில் கால் மேல் கால் போடா முடியாது என்று வியாக்யானம் பேசுவான்….. தாத்தா  சொத்து பேரனுக்கு சொந்தம் என்றாலும் ,,சோம்பேறியாக உக்காராமல் தன் திறமையை நிலை நாட்டியவன் .   தன்னால் உழைக்க முடியும் என்று நிரூபிக்க  டவுனில் பெரிய ஜவுளிக்கடை  ஒன்றும்… பல்பொருள் அங்காடி ஒன்றும் நடத்தி வருகிறான்.

எதிரே வந்த ஒருவரிடம் நலம் விசாரித்து விட்டு முன்னேறி நடந்து சென்றான் .
அப்போது அவனுக்கு எதிரில் வந்தவரை பார்த்தவுடன் முகம் கன்றி சிவந்தது .

அரசு வருவான் 👣