4.ரணம் ஆற ❣️நீயே மருந்தாய் 🌿

தமயன் தேடல்.

ஒருவழியாக டவுனில் இருக்கும் தனது ஜவுளிக்கடையை நோக்கி பயணமான அரசு, வழியில் அன்றைய நாளின் வேதனை கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது.

சிவசக்தி ரெடிமேட் &சில்க்ஸ் என்ற கடையின் முன் வண்டியை நிறுத்தினான்.. கடை பெயரும் அரசுவின் செல்ல பாட்டி தான் தேர்வு செய்தது.
ஏன் என்று யாராவது கேட்டால் சிவன் இல்லையேல் சக்தி இல்லை சக்தி இல்லையேல் சிவன் இல்லை என சித்தாந்தம் பேசுவார்.

கடையின் ஊழியர்கள் ஏற்கனவே கல்லா அருகில் இருந்த சாமி படத்திற்கு பூவிட்டு விளக்கேற்றி வைத்திருந்தனர்.
எப்போதும் போல சாமியை சேவித்த அரசு, கணக்கர் முத்துவை அழைத்து முந்தைய நாள்  வரவு என்ன செலவு என்ன என்பதை பார்த்து கொண்டிருந்தார்.

அப்போது அரசுவுடன் படித்த நண்பன் வரவே அவனை தன்னுடைய அலுவலக அறையில் இருக்க சொல்லி, கடை ஊழியரிடம் அவருக்கு பருக ஏதேனும் வாங்கி வர சொல்லியவரே வேலையில் ஆழ்ந்தான்  அரசு..

ஒரு வேலை செய்தால் முழு மனதும் அதில் இருக்க வேண்டும் என்று கொள்கை கொண்ட குணசீலன்,,தான் நம்ம அரசு,,,, அதனாலே குறுகிய காலத்தில் அந்த ஊரின் செல்வாக்கு மற்றும் கைராசி பெற்ற கடையாக செழித்து நிற்கிறது….

முத்துவிடன் புதிய சேலை வகைகான கண்ணக்கீட்டை தயார் செய்ய சொல்லிவிட்டு முன்னேறி நடந்தான் அலுவலக அறை நோக்கி..

அந்த கடை மூன்றடுக்கு கொண்ட கட்டிடம்.தரைத்தளத்தில் புடவை பிரிவும்… முதல் தளத்தில் குழந்தைகள் மற்றும் ஆண்கள்  பிரிவும்… இரண்டாம் தளத்தில் பெண்கள் பிரிவும் இருந்தது..அரசுவின் அலுவலகம் முதல் தளத்தில் ஆண்கள் பிரிவின் அருகில் இருந்தது.

கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள், அரசுவின் கனவு பெரிய பொறியாளன் ஆக வேண்டும் என்பதே,,, நாளடைவில் அதை தரத்திற்கு மட்டும் பயன்படுத்துவத்தை உணர்ந்த அவன் மனது எதிலும் லயிக்காமல் படித்து பட்டம்
பெற்றால் போதும் என்ற நிலையில் இருந்தான்…

அப்போது தான் அவன் மனதில் உதித்தது, அவன் பாட்டி புலம்புவது,, ‘எல்லாரும் நல்லா சொகுசா இருக்க பெரிய நகரத்துக்கு போறாங்க,,, என்னத்த சாம்பாரிச்சாலும் சாப்பாடு விவசாயம் பண்ணாத்தேன் வரும்டா அரசு ‘, அப்போதே முடிவு செய்தது தான்.

வரதராஜன் நெல் மட்டுமே சாகுபடி செய்து வந்தார்.. அரசு தான் அனைத்து விதமான பணப்பயிர், மற்றும் அந்தந்த காலத்திற்குரிய மண் சுழற்சி செய்யும் காய்கறிகளை நடவு செய்து,, மண் வளத்தை மேம்பத்தினான்..

ஆரம்பத்தில் திணறினாலும் அனுபவ கிராமவாசிகளின் வார்த்தைகளும் அவனின் பட்டறிவும் ஒன்று சேர அனைத்தையும் விளையும் வயலாக மாற்றினான்,,,

தரிசு என்றால் எதுமே முளைக்காது… மழை காலங்களில் மட்டும் ஏதேனும் கொள்ளு போன்ற பயிர் வளரும்,,, ஆனால் அது கூட ஒழுங்காக வளராது.. அந்த மாறியான புன்செய் (வளமற்ற, மழை நீரால் மட்டுமே விவசாயம் செய்ய முடியும்  நிலம் )நிலத்தை கூட நன்செய் (வளமான நிலம் )நிலமாக மாற்றினான் அரசு.

See More  வஞ்சிக்கொடியின் வசீகரனே - 18

இப்போது வந்திருப்பது  அவனுடைய நண்பன் முகில் வேந்தன் தான்.

முகில் வேந்தன் நாகரிக பணக்கார குடும்பத்தின் வாரிசு…. அள்ள அள்ள குறையாத அக்ஷயபாத்திரம் போல் அவன் குடும்பம் சொத்து…. அவர்கள் குடும்பம் மொத்தமும் கால் பதிக்காத துறையே இல்லை எனலாம்.

ஒரு துறை வீழ்ந்தாலும் இன்னொரு துறை தூக்கி கொடுக்கும், அப்படிப்பட்டவனுக்கு பாசம் எட்டா கனியாக இருந்தது… அப்போது விடுதியை பகிர்ந்து கொண்ட திருநாவுக்கரசு தான் அவனுக்கு பாசத்தையும் பகிர்ந்தான். முகிலுக்கு அரசுவின் ஊரும் குடும்பமும் மிக பிடிக்கும்..

ஒரு முறை அவனுக்கு மிக பயங்கரமாக விபத்து நடந்த பொது அவன் குடும்பம் பணம் நோக்கி ஓடியது,, வசதி நன்றாக உள்ள மருத்துவமை தான்,, என்ன கேட்டாலும் உடனே செய்வார்கள் தான்,, ஆனால் அனைத்தும் கடமை பண்புடையது. அப்போது அரசு குடும்பம் தான் அவனை தாங்கியது.

அதுவும் பாவை மலர் மிக பாசமாக இருந்தாள்.. அண்ணனின் நண்பன் தனக்கும் அண்ணன் என்று சொல்லும் போதெல்லாம், பெயர் சொல்லி அழிக்க சொல்லும் முகிலை விசித்திரமாக பார்ப்பாள் பாவைமலர்.

அவள் தான் இன்னும் பருவம் பூக்கள் மொட்டாக இருக்காளே,, எப்படி அவளால் அவன் உணர்வை புரிந்து கொள்ள முடியும். முகில் இன்னும் அரசுவின் உடன் பேசி கொண்டிருக்க காரணம் பாவைமலர் ஒரு காரணம்..

ஆனால் இவர்கள் இருவருக்கும் இருக்கும் பிரச்சனை ஒருவருக்கொருவட் அறியாமல் இருப்பது காலம் செய்த கோலம்.

அரசு “அப்புறம் மச்சி எப்படி இருக்க, என்ன பண்ற “

முகில் “எப்போவும் போல தான்டா, வாரம் முழுசும் வேலை, வார கடைசி ஜாலியோ ஜிம்கனா”என்று கண்ணாடித்தான்.

முகில் இந்த மாறி மது, மாதுவை நாடுப்பவன் இல்லை, ஆனால் முகில்
இப்படி மாற காரணம் மிக பெரிதானா ஒன்று. அரசு மட்டுமே அறிந்த உண்மை…
அரசுவுக்கு அடிக்கடி ஒரு யோசனை வரும் ஆனால் அதை யாரிடமும் பகிர அவன் விரும்பவில்லை. காரணம் தன்னுடைய வாழ்க்கை இருக்கும் நிலையில் மேலும் மேலும் பிரச்சனை ஏற்படுத்த விரும்பவில்லை.

தாகம் தீர கானல் நீரை

காதல் இன்று காட்டுதே

தேக்கி தேக்கி சேர்த்த கண்ணீர்

ஊரின் தாகம் தீர்க்குதே

கண்கள் ஈரத்தை

காணும் நேரத்தில்

விழி வழி உயிர் போகுதே

அந்தி நேரத்தில்

அன்பின் ஏக்கத்தில்

உயிரேனை மனம் தேடுதே

இவை அனைத்தையும் அசை போட்ட அரசு மேலும் தொடர்ந்தான்.

“என்னடா இந்த பக்கம் “

முகில் “அரசு என் நண்பன் ஒருத்தன் பேஷன் ஷோ நடத்தி கொண்டிருக்கும் கம்பெனில நிகழ்ச்சி ஒருங்கமைப்பாளர் ஆஹ் இருக்கான்., நீ கூட இன்னும் கடைய பெருசா மாத்தணும்னு சொல்லிட்டு இருந்த இல்ல,, புது புது வகை துணிகள், தினுசு தினுசா டிசைன் என அவங்க நெறைய மாற்றம், புதுமைகளை செய்ற ஒரு அலுவலக பனிக்காக அவன் வேலை செய்ய போறான்.. உனக்கு நேரம் இருந்தா சொல்லு அவகிட்ட பேசி உனக்கு என்டரிங் பாஸ் அரெஞ்சு பண்ற “

See More  🎵 இசை 29 🎶

அரசுவுக்கும் புது இடம், புது மனிதர்களை சந்திக்க வேண்டும் போல இருந்தது.. ஏனெனில் இந்த இரு வாரமும் அவனுக்கு மூச்சு முட்டுவது போல் இருந்தது.

“எப்போ எங்க பேஷன் ஷோ நடக்குது,, என்றான் சுரத்தை இல்லாமல் அரசு

“சென்னைல, நெஸ்ட் மந்த்”துப்பாக்கியில் இருந்து விடுபட்ட குண்டு போல வந்தது அவன் பதில்.

நண்பர்கள் இருவரும் பொதுவாக பேசி விட்டு அவரவர் வேளைகளில் மூழ்கி போனார்கள்..

முகிலின்  கார் மந்திரிவூர் எல்லையை நோக்கி நகர்ந்தது.அரசு தன் அலுவல அறையின் கண்ணாடி  ஜன்னல் மூலம் பார்த்து புன்னகைத்து கொண்டிருந்தான்.

பாவை மலர் சிறு வயதில் இருந்தே ஊர் எல்லையில் இருக்கும் மாரியம்மன் கோவிலுக்கு தினமும் செல்வாள். தெய்வானையும் அஞ்சலையம்மாள் கூட புலம்புவார்கள்.

“தினமும் போய் பாக்கிற அந்த ஆத்தாக்கு கூடவா உன் நிலைமை புரியல,, அவ வெறும் கல்லு, தினமும் பூஜை பண்ற உனக்கே அவள் மனம்  இறங்கி வரலைனா, அந்த அம்மன் என்ன சக்தி வாய்ந்தது.”

பாவை அனைத்திற்கும் சிறு புன்னகையை மட்டும் சிந்திவிட்டு கடந்து விடுவாள்.. பாவைமலர் அதிகம் வாயாடாமல் அமைதியாக இருக்கும் பிள்ளை,,, ஒரு காலத்தில் அவளுக்கும் அவளுக்கு அடுத்து இருக்கும் சிவகார்த்திகேயனுக்கும் நடக்கும் சண்டையை பஞ்சாயத்து பண்ணவே வீட்டில் இருக்கும் நபர்களுக்கு நேரம் போதாது.

பேனாலிருந்து பயன்படுத்தும் பள்ளி பை வரை அனைத்திலும் இருவருக்கும் சண்டையே…

பதின்மன் வயது முடிந்து இருக்கும் ஒரு நாளில் வசுமதியின் கண்ணில் பட்ட பாவை மலர்,, குரங்கு கையில் கிடைத்த பூமலையானாள்..
அன்றே அஞ்சலையம்மாள் வசுமதியை கிழித்து தோராணம் கட்டி விட்டார்.. வசுமதி பயப்படும் ஒரு ஆள் என்றால் அது அஞ்சலையம்மாள் மட்டும் தான்.
அன்றைய நாள் நினைவில் வைத்து கொண்டு அரசுவின் வாழ்க்கையில் பரமபதம் விளையாடினாள் வசுமதி.
அதன் பிறகு நத்தை கூட்டு போல் தன் உலக நடப்பை வீட்டின் அறையில் மற்றும் ஊர் எல்லை அம்மன் கோவில் என்று சுருக்கி கொண்டாள்.

அவள் அவளாக இருப்பது அங்கு மட்டும் தான்.

சரி இப்போதும் நம் பாவை கோவில் நோக்கி சென்று கொண்டிருக்கிறாள்.. அது காலையில் இல்லாமல் நண்பகலும் இல்லாமல் இருக்கும் நேரம்… தென்னை கீற்று நிழல் மேனி எங்கும் பட  தாவணி கட்டி இருந்தாள்.

ஈரமான தலை சற்று தளர்வாக பின்னி நெருக்கி கட்டிய மல்லிகை சரம் தோளில் புரள, கைகளில் ஒரு பக்கம் தண்ணீர் குடமும்.. மறு பக்கம் பூஜை கூடையுமாக நடந்து சென்று கொண்டிருந்தாள்.அவர்கள் வீட்டின் பின் புறம் இருக்கும் குறுக்கு வழியில்..

See More  உருகுதே உள்ளம் நெகிழுதே நெஞ்சம் - 15

வழக்கம் போலவே தெய்வானை கண்ணீர் சிந்த, அஞ்சலையம்மாள் பெருமூச்சு விட்டு கொண்டு,, சிவபுராணம் பாட ஆரம்பித்து விட்டார்.

தூரத்தில் பாவை வருவதை பார்த்து விட்ட முகில் சற்று தள்ளி காரை நிறுத்தி விட்டு வழக்கம் போல் மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டான்.

அந்த மரம் கோவிலின் முன் புறம் இருப்பதால் கோவில் உட்பிரகாரம் வரை நன்றாக தெரியும்.

கோவில் சிறிது தான்,, முன்னாடி மண்டபம் இருக்கும். அனைத்தையும் பெருக்கி தள்ளிவிட்டு கோலம் போட்டு,,,
அம்மனை குளிப்பாட்டி புது வஷ்தரம் அணிவித்து, எடுத்து வந்த மாலையை பூக்களை போட்டு பாட ஆரம்பித்தாள், இதற்கு தானே இவ்வளவு நேரம் காத்து கொண்டிருந்தான் முகில்.

விழியுண்டு ஒளியில்லை இருளுண்டு விளக்கில்லை
வழிகாட்ட நீ வருவாய்
விதியுண்டு கதியில்லை மருளுண்டு தெளிவில்லை
மருள்நீக்க நீ வருவாய்
நதியுண்டு நீரில்லை நிலமுண்டு பயிரில்லை
வளம்சேர்க்க நீ வருவாய்
சதிசெய்யும் மதியுண்டு மதிசெய்யும் வலியுண்டு
வலிதீர்க்க நீ வருவாய்
கதியென்று யாருண்டு உனையன்றி எவருண்டு
காப்பாற்ற நீ வருவாய்
அன்னையே சிவகாமி அம்மையே எனை ஈன்ற
ஆதிசிவ சக்தி தாயே!!!!!

பாவையின் வலியை இதை விட தெளிவாக யாரும் கூற இயலாது.
கண்களில் கண்ணீர்வழிய நின்றவளை அள்ளி அணைக்க வேண்டும் போல் இருந்தது முகிலுக்கு.

பாவை வைத்து விட்டு சென்ற பிரசாதத்தை  எறும்புகள் தானதாக்கி கொண்டன.

இங்கு இப்படி இருக்க, அரசுவின் கைபேசிக்கு சிவாவின் கல்லூரியில் இருந்து அழைப்பு வந்து இருந்தது.

வீட்டிலிருந்து ஒரு மணி நேர பயணம் தான் என்றாலும் சிவகார்த்திகேயன் விடுதியில் தங்கி கொள்வேன் என்று சொல்லி விட்டதால் இந்த ஏற்பாடு.
அழைப்பை ஏற்றவன் அதிர்ந்தான்.

எங்க எப்போ என்று என்னென்னவோ கேட்டு கொண்டு காரை நோக்கி ஓடினான்.. அவன் பயன்பாட்டுக்கு எப்போதுமே ஒரு கார்,கடையில் இருக்கும்.

இந்த அரசு குடும்பத்திற்கு மட்டும் ஏன் கடவுள் இவளோ கஷ்டம் தராருனு தெரியல மக்களே.. நீங்கள் கொஞ்சம் அவனுக்காக வேண்டிக்கோங்க..

அரசு வருவான் 👣

பொங்கல் விடுமுறையில் ஊர் சுற்றிய விளைவு குடும்பமே சளியில் துவண்டு இருக்கு… என்னால யார கவனிக்கணும் தெரில… முதல்ல என்னாயே கவனிக்க முடில… இப்போ தான் என் அம்மா கஷ்டம் எனக்கு புரியுது 😭😭😭😭