முன்பே காணாதது ஏனடா(டி) – 7
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அறையை திறந்து உள்ளே நுழைந்த நர்மதாவின் கண்கள் அதிர்ச்சியில் அகல விரிந்தது. தூரமாக நின்று ரசித்த தன் மனதை கவர்ந்தவன் இன்று தன் அலுவலகத்தில் பார்த்தும் மனது இறக்கையின்றி பரந்தது.
கதவை திறந்ததும் அனைவரது கவனமும் அவள் புறம் திரும்பியது.
நர்மதாவின் எம். டி பாபு “கம் அன்ட் சிட் நர்மதா” என்றார்.
அங்கே நின்றிருந்த குமரனுக்கோ இன்ப அதிர்ச்சி. ‘நர்மதா…’ என்று தனக்குள் ஒரு முறை சொல்லிபார்த்து கொண்டான்.
நர்மதா ஒரு நீண்ட பெருமூச்சுவிட்டவாரே வந்து தனது இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.
அனைவருக்கும் ஒரு புன்னகை கொடுத்துவிட்டு
“ஹலோ எவிரிஒன் என்னோட பெயர் குமரன்”
நர்மதா ,”குமரன்….. பெயர் நல்லாதா இருக்கு “
நான் தாரா குரூப்ஸ்ன் விளம்பர தாயாரிப்பு ( Advertising Production) துறையோட லீடர். இப்போ உங்களோட புது புராடக்ட்கான அட்வர்டைஸ்மென்ட் எங்களோட கம்பனிதான் பண்ணப்போகுது. அப்புறம் இவங்க ராகேஷ் இந்த பிராஜக்ட்ல இவங்களும் நம்ம கூட வொர்க் பண்ண போறாங்க என்று காலையில் தான் அவசரமாக அழைத்து வந்தவரையும் அறிமுகபடுத்தினான்.
மேலும் சில விஷயங்களை பற்றி பேச மீட்டிங் தொடர்ந்தது.
……..
சுதாகரன், “செழியா…..”
“செழியா…… “
“டேய் உன்னதான்டா”
செழியன், “சொல்டா கேக்குது”
“அந்த புள்ள பாவம்டா தினமும் வந்து நிக்குதுல ஒரு தடவ பேசுனா என்ன குறஞ்சா போயிடுவ”
“நான் எது பண்ணுனாலும் சரினு சொல்வ இப்போ என்ன சங்கதிடா உன்னோடது.”
“தினமும் அந்த புள்ள காத்துகெடக்கேனு சொன்னே”
“அதுக்காக அவளும் அவங்க அம்மாவும் பேசுனது சரினு ஆகிடுமா”
“அவளோட அம்மான உனக்கு யாருடா அவங்க, நீ முரண்டு புடிக்குறதால உறவு இல்லனு ஆகிடாது. அதுக்கப்புறம் உன்னோட இஷ்டம். என்னமோ பண்ணு.”
சுதாகரன் சென்ற பின்பும் வெகுநேரமாக எதையோ யோசித்து கொண்டிருந்துவிட்டு தனது பைக்கை ஸ்டார்ட் செய்து வீட்டை நோக்கி சென்றான்.
………..
மகா லெட்சுமி, “ஏய் நில்லுடி….. “
மொழி, “என்னமா…. “
“உனக்கு கொஞ்சம் கூட சூடு சொரனையே இல்ல”
“இப்போ என்ன ஆச்சுனு என்னோட சூடு சொரன பத்தி பேசிக்கிட்டு இருக்குற.”
“அவன்தான் உன்ன மனுசியாவே மதிக்க மாட்டேங்குறால. அப்புறம் எதுக்குடி அவன் பைக் சத்தம் கேக்குற தெசயெல்லா சுத்திக்கிட்டு இருக்க.”
“யாரு சொன்னா என்ன மதிக்கலனு? மதிக்காதவங்கதான் எனக்காக சின்ன வயசுல இருந்து பார்த்து பார்த்து செய்ராங்க. அது நம்ம மேல கோவமா இருக்கு அதான் நம்மளையும் கஷ்டபடுத்திட்டு அதுவும் கஷ்டபட்டுட்டு இருக்கு “
“அவனா கஷ்டபடுறான் நம்மளதான் வேதனையில துடிக்கவிடுறான். பொம்பளைய அழுக வைக்குறவேன்….. ” மேற்கொண்டு ஏதோ கூற வந்தவரை தடுத்தாள் மொழி.
“மா போதும்… போதும் … சாபம் கொடுத்துறாத ஆயிரம் பிரச்சனை இருந்தாலும் நீ தான் அவன பெத்த. அது இல்லனு ஆகிடாது. எனக்கு என்னோட அண்ணன பத்தி பேசுனா பயங்கர கோபம் வரும் சும்ம என் வாய கிளறாத.”
“ஆமா ஆமா அண்ணே பொல்லாத அண்ணே…”
அறையை நோக்கி நடந்தவள் திரும்பி தன் தாயை முறைத்தாள். பின் அறை கதவை டம்மென்று சாத்திவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.
…………
இரண்டு வாரம் முடிந்த நிலையில்
“என்ன மைத்ரி ஒரே பரபரப்பா டென்ஷனா இருக்கிங்க.”
“அதுவந்து பிரியா இன்னைக்கு என்னோட ஆர்டிக்கல் ரிலிஸ் ஆகுது ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கும்னு யோசிச்சுட்டு இருந்தேன்.”
“ஏங்க இவ்வளவு யோசிக்க என்ன இருக்கு இதுக்கு முன்னாடி நீங்க எழுதுன ஆர்டிகல்ஸ்மே சூப்பரா இருக்கும் நான் படிச்சு இருக்கேன். நேத்து கூட நம்ம மேனேஜர் சார் உங்கள பத்தி பாராட்டிட்டு இருந்தாரு.”
“என்னோட மனசுக்கு பிடிச்சு செய்ர வேலை. ஒவ்வொரு மொமன்ட்டும் ஹார்ட்டோட லிங் ஆகி இருக்கும். அப்படி பார்த்தா இந்த பரபரப்பு கூட ஒரு அருமையான மொமன்ட்தான்.”
மைத்ரி எழுதிய ஆர்ட்டிக்கல் அவள் பணிபுரியும் அந்த மிகப்பெரிய சேனல் மூலம் பத்திரிகை வாட்ஸ்சப் ஃபேஸ்புக் யூடியூப் இன்ஸ்டாகிராம் என அனைத்து சமுக ஊடகங்கள் மூலம் பாராட்டப்பட்டது.
……………….
சுஜி,”மா…. மா…… எங்க இருக்க “
சுந்தரி, “என்னடி.. “
“இங்க பாருமா இந்த ஆர்ட்டிக்கல நம்ம போலயே ஒரு குடும்பம் இருக்கும் போல இது சொல்லப்பட்டு இருக்குற அப்பா கேரக்டர் அப்படியே என் அப்பா மாதிரியே இருக்கு…. “
“ஆமாடி உலகத்திலேயே உன்னோட அப்பா மட்டும் தான் வேலைக்கு போறாரு. இந்த உலகத்தில இருக்குற எல்லா அப்பாமார்களும் தன்னோட பிள்ளைகளுக்காக தான் உழைக்கிறாங்க.”
“ஆனா… பாரு மா… என்னோட ஸ்கூல் பிரண்ட் ஒருத்தியோட அப்பா எப்பவும் குடுச்சிட்டு வேலைக்கு போகாம அவங்க அம்மா சம்பாத்தியத்தையும் ஆழிச்சுருவாரு பாவம் மா அவ நிதமும் அழுவா…”
“இப்படி இருக்குற அப்பாமார்களாலதான் எல்லா அப்பாக்களுக்கும் கெட்ட பெயர். அப்படி நடந்துக்குறவங்க தன்னோட அப்பாவும் தன் மகன் வயசில தன்னையும் இதுபோல நடத்துனா எப்படி இருந்துருப்போம்னு ஆழமா யோசிச்சா இந்த மாதிரி தப்பு நடக்குறதுக்கான வாய்ப்பு குறையலாம்.”
“அந்த வகையிலா நான் ரொம்ப லக்கிமா என் அப்பா போல ஹூரோ எல்லாருக்கும் கிடைக்கனும்.”
………………….
அன்னபுறத்தின் அந்த பெரிய வீட்டில் உள்ள வேலை ஆட்களுக்கெல்லாம் ஆட்டம் காட்டி கொண்டிருந்தான் அச்சிறுவன். மூன்று வயதான அக்குழந்தையின் இச்செயலால் அனைவரும் மூச்சு வாங்க ஓடி கொண்டிருந்தனர்.
“ஹரி சேட்ட பண்ணாத….
ஒரு பழம் சாப்பிட இவ்ளோ ஆட்டங்காட்டுற.”
அந்த குட்டி கண்ணனுக்கு என்ன புரிந்ததோ
“ஞ்சுளா(மஞ்சுளா) சா.. ரி” என்று தன்னுடைய மழலை மொழியில் அழகாக மன்னிப்பு கேட்டு விட்டு அங்கிருப்போர்கிட்டையும் மன்னிப்பு கேட்டு அறைக்குள் ஓடிவிட்டது.
அக்குழந்தையின் பின்னால் சென்றவள் கண்டதென்னவோ தன் தந்தையிடம் தாயை பற்றி குறை கூறி கொண்டிருப்பவனைதான்.
தாயவள் வந்ததும் தந்தையை பார்த்து அழகாக கண்களை உருட்டினான் அந்த அழகன் அதன் பொருள் தாயை திட்ட வேண்டுமாம்…
தந்தை அவனோ தன் மனைவியை பார்த்து மகனது திருப்திக்காக திட்டினான். அதை பார்த்த சில்வண்டோ தன் தாயை பார்த்து குழுங்கி சிரித்துவிட்டு வெளியே ஓடிவிட்டான்.
தவப்புதல்வன் சென்ற திசையை பார்த்திருந்த தாயவளின் கரங்களை பற்றி இழுத்தான் தந்தையானவன்.
“என்ன விடு கதிர் நீ பண்றது இப்போ எல்லாம் சரி இல்ல அவனுக்கு தப்ப சொல்லி புரியவைக்காம அவன என்கரேஜ் பண்ணுற”
“என் அறிவு பொண்டாட்டி அவன் குழந்தைடி வளர வளர கத்துப்பான்”
“இப்போ நம்ம என்ன சொல்லி கொடுக்குறோமோ அது படிதான் அவன் நாளைக்கு வளருவான்”
“எம்பொண்டாட்டி சொல்லி நான் என்னைக்காவது மறுத்து பேசி இருக்கனா. அது மாதிரி நீயும் இப்போ மறுப்பு சொல்ல கூடாது பொண்டாட்டி.”
“கதிர் நான் குளிச்சுட்டேன் விடு என்ன …”
“பரவா இல்ல மறுபடியும் சேர்ந்து குளிக்கலாம்”
“ஐயோ… பைய வந்துருவான் விடுங்க…”
ஓடி போய் தாழ் போட்டு விட்டு மனைவியவளின் மறுப்புகளை சுகமாக வாங்கி கொண்டான் கதிர்.
தொடரும்….