முன்பே காணாதது ஏனடா(டி) – 5

சோர்வாக வீடு வந்து சேர்ந்தான் குமரன்

அறைக்கு சென்று தன்னை சுத்தப்படுத்தி கொண்டு உணவு உண்ண வந்து அமர்ந்தான்.

சுஜி , ” அம்மா அண்ணன ஒவ்வொரு பிரதோசமும் எதுக்கு கோவில் கூட்டிட்டு போற “

சுந்தரி,  ” அவனோட ஜாதக அமைப்பு படி ஒவ்வொரு பிரதோசம் அப்பவும் கோயில் போனா அவனோட எதிர்காலத்துக்கு நல்லதுனு ஜோசியர் சொன்னாறு.”

எதிர்காலம் என்றதும் அவன் முன் வந்து சென்றது கோவிலில் திருநீறு குங்குமம் பூசியபடி நின்ற நர்மதாவின் முகம். இதழ் ஓரோம் மென்புன்னகை எட்டி பார்த்தது.

சீக்கிரம்  உணவருந்திவிட்டு அறைக்குள் நுழைந்து கட்டிலில் படுத்துக் கொண்டான். அவனும் கார்த்தியும் ஒரே அறையை தான் பகிர்ந்து கொண்டனர் அவர்கள் வீட்டில் இருப்பது மொத்தம் இரண்டு அறை ஒன்றில் சகோதரர்களும் மற்றொன்றில் சுஜிதாவும் ஹாலில் தாயும் தந்தையும் படுத்துக் கொள்வர்

கட்டிலில் விட்டத்தை பார்த்து படுத்து இருந்த குமரனின் நினைவுகளோ நர்மதாவை முதன்முதலாக பார்த்த நாளை நோக்கி பயணப்பட்டது

மூன்று மாதங்களுக்கு முன்

அதிகாலை வேளையில்

“அம்மா ஆபிஸ் லேட்டாகிருச்சு நான் கிளம்புறேன். காலை சாப்பாடு கேன்டின்ல பார்த்துக்கிறேன். மதியம் வீட்டுக்கு வர முயற்சி பண்றேன் பாய் மா..” என்று கூறி விட்டு வேக வேகமாக வெளியே வந்தான்.

வெளியில் வந்து பைக்கை ஸ்டார்ட் செய்யும் போது தான் கவனித்தான் வண்டி ரிப்பேர் என்று

“சே……. இது வேறையா ஏற்கனவே லேட் ஆகுதே” என்று புலம்ப

கார்த்தி,  ” செக்கேண்ட் ஹேண்ட்  அப்படிதான் இருக்கும் பேசமா புதுசு வாங்க முயற்சி பண்ணுவோமா அண்ணா “

குமரன்,  ” முதல உங்க ரெண்டு பேரோட படிப்பு செலவு அதுக்கு அப்புறம் என்னோட பைக் பத்தி யோசிக்கலாம்.  ஆமா நீ காலேஜ் கிளம்பல “

கார்த்தி , ” இன்னும் நேரம் இருக்குணா கிளம்பனும் “

“சரிடா முடிஞ்சா பைக்க மெக்கானிக் சாப்ல விட்டுட்டு போ. இந்தா கீ”

“சரிணா நான் விட்டுறேன் நீ பார்த்து போ”

“ம் ஒகே டா பாய்”

————–

பேருந்தில் பயங்கர கூட்டம் ஒரு வழியாக படியிலிருந்து மேலேறி சேஃப் ஆக நின்று விட்டாச்சு என்று நிம்மதி பெருமூச்சு விட்டான் குமரன் .

எதாற்தமாக பார்வையை சுழல விட்ட பொழுது அவனது பார்வை வட்டத்திற்குள் விழுந்தாள் நர்மதா.  யாருடனோ போனில் சிரித்து பேசி கொண்டிருந்தாள் .

தினமும் பார்ப்போரில் ஒருவளாக கடந்து விடத்தான் நினைத்தான். அவளை விட்டு பார்வையை திருப்புகையில் தான் அவள் கையில் இருந்த ஹேர் பின் முனை அவளை உரசி கொண்டிருந்த ஒரு ஆசாமியின் தொடை பகுதியை குத்தி கிழித்துக் கொண்டிருந்தது.  நொடியில் புரிந்து விட்டது அங்கே உள்ள சூழ்நிலை.

பெண்கள் தங்களுக்கு நடக்கும் அநிதிகளுக்கு யாரோ ஒருவர் காப்பாற்ற வருவார் என்று எதிர்பார்ப்பதை காட்டிலும் தங்களது பாணியிலே பதிலடி கொடுத்துவிட வேண்டும். நர்மதாவும் அதையே தான் செய்து கொண்டிருந்தாள். அந்த இடத்தில் கத்தி கூச்சல் போட்டு தன்னை அனைவர் முன்பும் காட்சி பொருளாக ஆக்கி கொள்ள விரும்பவில்லை. மாறாக தனக்கு தெரிந்த பாணியில் பதிலடி கொடுத்தாள். அந்த ஆசாமியும் கத்தவும் முடியாமல் நகரவும் முடியாமல் வலியில் விழி பிதுங்கி நின்றிருந்தான்.

அவளது இச்செயலை ரசித்து கொண்டிருந்தான். அதற்குள் அவன் நிறுத்தம் வரவும் மனமே இன்றி இறங்கி விட்டான் ஆனால் அவனுக்கு தெரியாது அவள் அவன் பின் தான் சுற்றி கொண்டிருக்கிறாள் என்று.

அன்றைய நாள் முழுவதும் அவளது நினைவிலே வலம் வந்தான்.

வீட்டிற்கு வந்தும் அவளது நினைவு நீங்கவே இல்லை. தந்தையின் மடியில் படுத்துக் கொள்ள வேண்டும் போல் இருக்க இரவு உணவு முடித்த பின் தன் தந்தையின் அருகில் அமர்ந்து அவர் காலை அழுத்தி விட்டான்.

சுஜி, ” மாரி உன்னோட புள்ள கால் அழுத்தி விடுறத பார்த்தா உன் கிட்ட இருந்து ஏதோ காரியம் ஆகனும் போலையே. “

மாரிமுத்து, ” எம்புள்ள எப்பவும் என்னோட கால் அமுக்கி விடுவான் சும்மா அவன ஏதாவது சொல்லாத “

குமரன் ,” அப்படி சொல்லுங்க அப்பா.. “

என்று சொல்லிக் கொண்டே அவரது மடியில் படுத்துக் கொண்டான்.

சுந்தரி, “டேய் குமரா சின்ன புள்ளையாட நீ அந்த மனுசனுக்கு கால் வலிக்க போகுது “

“இதோடா என் அண்ணே படுத்து உங்க புருசனுக்கு கால் வலிக்குதாக்கும் ரொம்ப தான் ” என்று சிலுப்பிக் கொண்டாள் சுஜி.

சந்தரி,  ” ஏன்டி சின்னவளே இப்போ தானடி நீ அவன கலாய்ச்சுட்டு இருந்த இப்போ அதே நா செஞ்ச சண்டைக்கு  வாற”

சுஜி, “நாங்க அப்படி தான் “

இங்கே அவனை வைத்து ஒரு பெரிய போரே நடந்து கொண்டிருக்க அவனோ காலையில் அவனுக்கு காட்சியளித்த மகா லட்சுமியை பற்றி எண்ணிக் கொண்டிருந்தான்,  தந்தை தலை கோதும் சுகத்தில் மயங்கி.

அண்ணா…. அண்ணா என்று அவனை உலுக்கினாள் சுஜி கேள்வியாய் நோக்கியவனிடம்

“நான் சொன்னது சரிதான அண்ணா” என்றாள்.

அவனோ அவள் கேள்விக்கு பதில் அழிக்காமல் “நீ காலேஜ் போகும்போது ஹேர்பின் எடுத்துட்டு போவையா” என்று எதிர் கேள்வி கேட்டான். அவளோ அவனது கேள்வி புரியாமல் முழித்து கொண்டிருந்தாள்.

கார்த்திக், ” எனக்கு தூக்கம் வருது லைட் ஆஃப் பண்ண போரேன் நீ வரியா இல்லையா ” என்று குமரனை பார்த்துக் கேட்க

குமரன், ” நான் இன்னைக்கு அப்பா கூட தூங்க போறேன் நீ போ “

சுந்தரி, “ஏய் சின்ன கழுத, கதை அளந்தது போதும் வா நான் இன்னைக்கு உன்னோட தூங்குறேன். ” என்று அவளை இழுத்துக் கொண்டு சென்று விட்டார்.

ஹாலில் தந்தையும் மகனும் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்தவாறு உறங்கிவிட்டனர்.  அதனை இப்பொழுது நினைத்து பார்த்தவனோ தனியாக சிரித்து கொண்டிருந்தான்.

அப்பொழுது உள்ளே வந்த கார்த்திக் ‘என்ன தனியா சிரிச்சுகிட்டு இருக்கான் என்னவா இருக்கும்’ என்று நினைத்தபடி அவனை உழுக்கினான்.  நிஜ உலகத்திற்கு வந்த அவனோ தம்பி அவனை பார்த்து விழிகளை உருட்டி முழித்து விட்டு மறுபுறம் திரும்பி போர்வையை தலை வரை போர்த்தி படுத்துக்கொண்டான்.

தம்பி அவனோ “நாளைக்கு அம்மாகிட்ட சொல்லி அண்ணனுக்கு திருஷ்டி கழிக்க சொல்லனும்” என்று சத்தமாகவே புலம்பி விட்டு படுத்துவிட்டான் .

தூங்குவது போல் நடித்து கொண்டிருந்த குமரனோ தனக்குள் சிரித்துக் கொண்டான்.

………………….

நர்மதா கட்டிலில் அமர்ந்து  தன் முன்பு இருந்த லேப்டாப்பில் தனக்கு வந்த மெயிலை ஆராய்ந்து கொண்டிருந்தாள்.

அதில் நாளை அவர்களது கம்பனியின் விளம்பரம் தாயாரிக்கும் விஷயமாக முக்கியஸ்தர்களுடன் ஒரு மீட்டிங் உள்ளது என்று நாளை விரைவாக அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும் என குறிப்பிட்டு இருந்தது.

“ஓ… காலையில சீக்கிரமா எழுந்துக்கனுமா” என்று தன் தங்கை துளசியிடம் நாளை தன்னை கொஞ்சம் வேளையில் எழுப்பிவிடுமாறு கூறிவிட்டு தங்கைகளுக்கு இடத்தை விட்டு விட்டு பெட்டின் ஓரத்தில் படுத்து கண் உறங்கி விட்டாள்.

மறுநாள் காலை 5.00 மணி குமரனின் போன் இடைவிடாமல் அடித்துக் கொண்டிருந்தது.  எரிச்சலுடன் அதனை உயிர்பித்து காதில் வைத்தான்

எதிர்புறம் இருந்த தாராவோ “டேய் இன்னைக்கு ஒரு கெஸ்ட் வராங்க. ஆல்ரெடி மதுரை ரீச் ஆகிட்டேன் இன்னும் கொஞ்ச நேரத்தில ஸ்டேஷன் வந்துருவேனு சொல்லி இருந்தாங்க.  நேத்தே உங்கிட்ட சொல்லனும்னு நினச்சேன் மறந்தே போய்டேன். நீ இப்போ உடனே போய் கூட்டிட்டு வந்துருடா” என்று அவன் பதில் பேசும் தான் கூற வேண்டியதை கூறி விட்டு போனை வைத்து விட்டாள்.

எரிச்சலுடன் எழுந்து தன்னை சுத்தபடுத்தி கொண்டு இரயில்வே ஸ்டேஷன் நோக்கி கிளம்பி விட்டான்.

………….

மைத்ரி,  சுஜிக்கு மதுரை வந்து இறங்கிவிட்டதை செய்தியாக அனுப்பி விட்டு தனது உடமைகளை எடுத்துக் கொண்டு இரயிலை விட்டு இறங்கினாள்…

குமரனோ…  இரயில்வே ஸ்டேஷன் முன் தனது பைக்கை நிறுத்தி விட்டு மைத்ரி நின்று கொண்டிருக்கும் இடம் நோக்கி வந்து கொண்டிருந்தான்.

தொடரும்…….