முன்பே காணாதது ஏனடா(டி) – 12

அருள்மொழிக்கு வரன் பார்ப்பதாக சொல்லி சென்றார் சந்திரன்.

இதை எதுவும் அறியாத மொழி சுதாகரன் மடியில் படுத்து சுகமாக உறங்கி கொண்டிருந்தாள்.

அவனோ அவளை கடுப்பாக நோக்கியபடி கைகளில் அடிக்க விழிகளை அசைத்தவளோ திரும்பி நன்றாக படுத்து அவனின் வயிறை கட்டிக் கொண்டு விட்டத் தூக்கத்தை தொடர்ந்தாள்.

அதில் மேலும் கடுப்பாகியவன் அவளை உழுக்க ம்ஹும்…  அசைந்தாள் இல்லை.

கடைசியில் சுதாகரனின் கைபேசியின் ஒலி தான் அவளின் தூக்கத்தை கலைத்தது.

செழியன் அழைத்திருந்தான்.

“ஏய்….  எந்திரிடி உங்க அண்ணே தான் கூப்பிடுறான்.” என்று தன் மீதிருந்தவளை நகர்த்தினான்.

“ஹலோ…. சொல்லு செழியா….”

“டேய்…  எங்கன இருக்க……”

“என்ன விஷயம் டா…. “

“சந்தைக்கு போகனும் வா…”

“இதோ…  வரேன்டா….”

என்று அழைப்பை முடித்துக் கொண்டு அவசரமாக எழ அவனின் கைகளை பற்றி தடுத்தாள் மொழி.

“டேய் சுதா…. நீ போய்டா நான் எப்படி தூங்குறது….”

அவளை வெறியாக முறைத்தவன் அடிக்க கை ஓங்க பின் அருகில் நெருங்கி கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு சென்றுவிட்டான்.

……….

மதிய உணவை ரசித்து உண்டு கொண்டிருந்த மைத்ரியிடம் மெல்ல பேச்சை ஆரம்பித்தனர் மாரிமுத்து சுந்தரி தம்பதியினர்.

சுந்தரி, “மைத்ரிமா…. “

“சொல்லுங்க ஆன்டி…..”

“அது…..  நான் நேரவே விஷயத்துக்கு வரேன்மா…  என்னோட பையன கட்டிக்குறியா…. “

உண்டு கொண்டிருந்தவளின் கைகள் அந்தரத்தில் நின்றது.

நிமிர்ந்து பார்த்தவளிடம் அவசரமாக

“கண்ணு….  நான் இந்த எண்ணத்துனால தான் உம்மேல பாசமா இருக்கேனு நினைக்காதடா….  உம்மேல உள்ள பாசத்துல தான் இவ கேட்டதும் சரினு சொன்னேன்” என்றார் மாரிமுத்து.

“எனக்கு புரியுது அன்கிள் ஆனால் நீங்கே திடீர்னு கேட்கவும் என்ன சொல்றதுனு தெரியல…. “

“ஒன்னும் பிரச்சினை இல்லமா…  நீ யோசிச்சு சொல்லு…  இந்த கல்யாணம் நடந்த நீ எப்பவும் எங்களோடவே இருப்ப எங்களுக்கு அது ரொம்ப சந்தோசத்த கொடுக்கும்.”

அவர்களிடம் தலையாட்டியவள் அலுவலகத்தை நோக்கி புறப்பட்டாள்.

……..

அன்னபுறம் செல்லும் பேருந்தில் அமர்ந்திருந்தார் சந்திரன். பக்கத்தில் அமர்ந்திருந்த தரகர் அவரிடம் “என்ன யோசனை சந்திரன்…”  என கேட்க

“மொழி கல்யாணத்த பத்தி தான்.”

“அதுதா…  மாப்பிள்ளை வீடு நல்லபடியா தெரியுதே அப்றம் என்ன….”

“அண்ணா அண்ணி இல்லாம எப்படி அண்ணே… அன்னைக்கு மகா நாங்க சொல்றத கேக்குற நிலமையில இல்ல.  பொண்டாட்டி புள்ளையா தனியா விட மனசு வரல அதனால தான் நானும் அவங்களோட வீட்ட விட்டு வெளியேறுனேன்.  அதை அண்ணா அண்ணி புரிஞ்சுப்பாங்க. ஆனா அவங்க பாத்து எம்பொண்ணுக்கு கல்யாணம் பண்ற மாதிரி இடாகாது இல்ல”

“அதனால என்ன…..  சந்திரன் போய் உங்க அண்ணா அண்ணி கூட பேசு. நீ கூப்பிட்ட வராமா போய்டுவாங்களா என்ன?”

“நான் கூப்பிடலனாலும் வருவாங்க….. “

“அப்றம் என்ன “

“ஏதோ சரி இல்லாத மாதிரி மனசு உறுத்துது…”

………

சந்தைக்கு சென்ற செழியனும் சுதாகரனும் திரும்பி வருகையில் வழியில் அவர்களது வயதொத்த ஒருவன் அவர்களுக்காக காத்திருந்தான்.

சுதாகரன், “என்னடா காசி இங்க நிக்குற… “

“அது…  செழியன பாக்க காத்துட்டு இருந்தேன்… “

செழியன், “என்னையா….  என்ன விஷயம்…”

“செழியா உங்க அப்பா…

உன்னோட தங்கச்சிக்கு வரன் பாத்துருக்கார்டா…”

“என்னடா சொல்ற…..”

“ஆமாடா இன்னைக்கு பஸ்ல எனக்கு முன்னாடி தான் உட்காந்து இருந்தாரு.  அப்போ….”  என்று நடந்தவைகளை கூறினான்.

“நீயும் ஒருக்கா…  மாப்பிள்ளைய பத்தி நல்லா விசாரிடா…. “

“சரிடா…  நான் பாத்துக்குறேன்…”

அவன் அங்கிருந்து சென்றதும் சைட் மிரர் வழியாக பின்னாடி பார்க்க சுதாகரனின் முகம் எங்கே தன் காதலை இழந்து விடுவோமோ என்ற பயத்தை அப்பட்டமாக காட்டியது.  அதே நேரம் அவனது உணர்ச்சிகளை கட்டுபடுத்த முயல்வதும் தெரிந்தது.

‘இன்னும் எவ்வளவு நாள் மறைக்குறேனு பாக்குறேன்டா…’ என மனதுள் நினைத்துக் கொண்டான் செழியன்.

………

குமரனும் நர்மதாவும் அவளின் கேபினில் அமர்ந்திருந்தனர்.

“நர்மதா மேடம்……. “

“சொல்லுங்க சார்….. “

“அது நாளைக்கு நீங்க ஃபிரியா…”

“நாளைக்கு ஆபிஸ் சார் மறந்துட்டிங்களா…. “

“ஓ… ஆமால” என்றவன் ‘குமரா…  ஏன்டா சொதப்புற…’ என்று மனதினுள் தன்னை தானே காரி துப்பிக் கொண்டான்.

ஏதோ டவுட் கேட்க நிமிர்ந்தவள் அவனது கவனம் வேறெங்கோ இருப்பதை கவனித்தவள் ‘என்னாச்சு இவருக்கு’ என்று புலம்பிக் கொண்டே அவனை உழுப்ப

“ஆ….  என்ன நர்மதா” என்று கேட்டான்.

முதன்முறையாக நர்மதா மேடம் என்றில்லாமல் நர்மதா என அழைத்தது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.

“சொல்லுங்க குமரன் என்னாச்சு” என அவளும் ஒருமையில் அழைக்க அவனுள்ளும் ஒரு பிடித்தம்.

“அது….  நாளைக்கு லன்ச்கு வெளிய போலாமா.. “

அந்த ஒரு நொடியில் மனதில் ஆயிரம் முறை பட்டிமன்றம் நடத்தியவள் சரி என்பதாக தலை அசைத்தாள்.

அதில் உற்சாகமுற்றவன் தன் வேலையை கவனிக்க ஆரம்பித்தான்.

அவளும் ஒரு சிரிப்புடன் அவனை அடிக்கொரு முறை பார்த்தவாரே தன் வேலையை கவனித்தாள்.

ஆனால் நாளைய நாள் தான் இருவரும் கடைசியாக சந்திக்கும் நாள் என்று அப்பொழுது அவர்களுக்கு தெரியவில்லை.

……….

இரவு அறைக்கு வந்த சுமி கலைப்பின் காரணமாக படுக்கையில் விழுந்தாள். சற்று நேரம் தூங்கி எழுந்தாள் நன்றாக இருக்கும் என்று தோன்ற அப்படியே படுத்துக் கொண்டாள்.

அவளை தொந்தரவு செய்யும் விதமாக அவளது கைபேசி ஒலி எழுப்ப தன் வலக்கையில் இருந்த கைபேசியை நோக்கி தலையை திருப்பினாள்.

மைத்ரி என பெயரை கண்டதும் அதை அட்டன் செய்து காதில் வைத்தாள்.

“ஹலோ…  என்ன மைத்ரி மேடம்…  இப்போலா…  என்ன மறந்து போயிட்டீங்க….  ஒரு போன் கூட பண்றது இல்ல…”  என்று அவள் பாட்டுக்க புலம்ப எதிர்புறம் பலத்த அமைதி.

‘என்னாச்சு போன் கால் கட்டாகிருச்சா…’  என சந்தேகம் உற்றவள் காதில் இருந்து போனை எடுத்து பார்த்தாள்.

அதில் தொடர்பில் இருப்பதற்கு சாட்சியாக நிமிடங்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்க மீண்டும் காதில் வைத்தவள் “ஹலோ…  மைத்ரி லைன்ல இருக்கியா” என்றாள்.

எதிர்புறம் லேசாக விசும்பல் சத்தம் கேட்க சோர்வு கலைந்து எழுந்து அமர்ந்தாள்.

“ஹலோ…  மைத்ரி என்னாச்சு எதுக்கு அழுவுற…. “

எதிர்புறம் இப்பொழுது அழுகை பெரிதாக வெடித்தது.

தொடரும்…